Tuesday, 3 May 2016

நீர் -- நீர் -- நீராதாரம்

உலகுக்கே மொழி பிச்சை போட்ட இனம் தண்ணீர்க்காக பிச்சை எடுக்கும் காலம் தூரமில்லை போல!

ஒன்றில் முக்கால் பாகம் நீர் நிலை கொண்ட இவ் உலகில் இன்றும் தண்ணீர் பஞ்சத்தால் நடக்கும் சாலை மறியல்களும் சண்டைகளும் மன்னார்குடி துவங்கி மெக்சிகோ வரை ஒரே மாதிரி தான் உள்ளது!  இங்கே சாலை மறியல்கள் அங்கே ஆங்கிலத்தில் கெட்ட வார்த்தைகளும், புகார்களும் அவ்வளவே வித்தியாசம்!    ஆயினும் பிரச்சனை ஒன்றே!

   தற்போது உலகம் பயன் படுத்தும் மொத்த நீர் தேவையில் 35% அதிகமாக தேவைப்படும் இன்னும் பத்தே வருடங்களில் அதாவது 2025 ம் வருடம் அதுவே 2050 ல் 78 % மாக மாறிவிடும்!

உங்களுக்கு புரியும் படி சொன்னால், நீங்கள் இன்று ஒருநாள் மட்டும் 200 லிட்டர் தண்ணீர் செலவு செய்கிறீர்கள் என வைத்துக் கொண்டால் அது 2025 ல் - 270 லிட்டராகவும், 2050ல் 534 லிட்டராகவும் இருக்கும்!

 சரி இவ்வளவு தண்ணீரை நாம் சாகும் வரை பயன் படுத்திவிட்டு பூமியை வறண்ட காடாக ஆக்கி விட்டு  விட்டு போய் சேர்ந்து விடுவோம்!

நாளை நம் பிள்ளைகள் எங்கிருந்து தண்ணீர் கொண்டு வருவார்கள்!

ஆற்றை கட்டிடங்களாலும், நட்சத்திர விடுதிகளின் கழிவு நீர்களாலும் சாக்கடையாக்கி  விட்டோம்!

இந் நாட்களில் எவை எல்லாம் நம் முன்னால் நீர் ஆதாரங்களை சீரழிக்கிறது என்று பார்த்தால் முதலில் வருவது நிலத்தடிநீர் கொள்ளை தான்!
உலகம் முழுதும் 454 Billion கன மீட்டர் (M^3) அளவுக்கு Corporate களாலும் பெரு வணிகர்களாலும் திருடப்படுவதாக 2013 ஆண்டு எடுக்கப் பட்ட ஆய்வு தெரிவிக்கிறது.  ஒரு கன மீட்டர் என்பது 1000 லிட்டர்.  அப்படி எனில் மற்றதை நீங்களே கணித்துக் கொள்ளுங்கள்!

      இன்றைய தினத்தில் நம் தமிழகத்தில் வாணியம்பாடி - ஆம்பூர் மற்றும் அரியலூர் போன்ற பகுதிகள் நிலத்தடிநீர் உபயோகப் படுத்த லாயக்கற்ற அருகதை அற்ற தன்மையை அடைந்து விட்டதாக நண்பர் ஒருவருடன் பேசும் போது கூற,  கேட்டதும் பேரதிர்ச்சியின் உச்சத்திற்க்கே சென்றிருந்தேன்!

     உலகில் ஒவ்வொரு 19 நொடிக்கும் ஒரு குழந்தை மாசு பட்ட நீரை அருந்துவதால் இறக்கிறது!  என gio-life இணையத்தளம் ஆதாரம் கொடுத்துள்ளது!

இதை எந்த அளவுக்கு நம் அரசு முக்கியமாக கருதி வேலையில் இறங்கியுள்ளது என்பது கொஞ்சம் அச்சமாக பார்க்க வேண்டிய நிலை நமக்கு!

  தினம் தினம் அவரவர் வேலை, அவரவர் வாழ்க்கை என கடந்து செல்லும் நீங்களும் நானும் செய்யும் நீரியல் மாசு பாடுகள் தான் நம் பையன், பேரன் தலைமுறையை நோய், நொடியில் தள்ளும் முதற்படி என்ற கசக்கும் உண்மையை நம்ப ஏனோ மனம் மறுக்கிறது!

       தமிழர்கள் போல் நீர் மேலாண்மையை மேற்கொண்டோரும் பயன் படுத்தியவர்களும் எவருமிலர் .

  ஆனால் இன்று குடிநீர் விற்பனையில் நாம் குதிரை பாய்ச்சலில் எதிர் கால சந்ததிகளின் உரிமையை ஆழ் துளை குழாய் போட்டு உறிஞ்சித் தள்ளுகின்றோம்!

    2013 November படி உலகில் மிகக் குறைந்த விலைக்கு குடிநீர் விற்பனை செய்யும் நாடு இந்தியா தான் . 20₹ 1.5 லிட்டர் பாட்டில் அதிக விலை விற்பனையில் முதலிடம் வகிப்பபது நார்வே 206 ₹ … இத்தனைக்கும் அதுதான் மக்கள் மகிழ்ச்சியாக வாழும் நாடுகள் பட்டியலில் முதல் இடத்தை பெற்றுள்ளதாக ஐ.நா குறிப்பிடுகிறது!

    இந்தியா, பங்களாதேஷ் உள்ளிட்ட ஏழு நாடுகளில் மட்டுமே இதுவரை நம் அடுத்த தலைமுறை பயன் படுத்த வேண்டிய நிலத்தடி நீரினை உறிஞ்சி நாம் வீணாக்கி கொண்டு இருக்கின்றோம்!

   நீரை உறிஞ்சும் முன்  ஒவ்வொரு முறையும் நாம் ஆடம்பரமாக வாங்கும் பொருட்களுக்கும் எத்தனை லிட்டர் தண்ணீர் செலவு ஆகிறது என்பதை கவனியுங்கள்.
Apr 25
 piraikannan
 இதோ :-

   T.Shirt.           -        1,760 litters

   Jeans pant.     -        7,920 litters

   Car                  -   1,71,600 litters

   A4 size  Paper -               2.6 litters

ஒவ்வொரு அமெரிக்கனும் ஒரு நாளைக்கு 370 லிட்டர் நீரை பயன் படுத்துவதாக அந்த நாடு பதறுகின்றது!  இத்தனைக்கும் அவர்களுக்கு எந்த அபாய எச்சரிக்கையும் விடும் அளவுக்கு நிலமை மோசமில்லை!

ஆனால் நாம் அப்படி இல்லை உலகின் நீர் பற்றாக்குறை வர வாய்ப்புள்ள நாடுகளில் இந்திய, பாக்,ஆப்கான் நாடுகள் முதலிடத்தில் உள்ளன!

சரி, நாம் திருடுவது நம் பேரன் பேத்திகளுக்கு சொந்தமான நீர் தான் போனது போகட்டும் இனி என்ன செய்ய இயலும் வாருங்கள் பார்ப்போம்!




Water Water every where nor a drop to Drink
       - சாமுவேல் டைலர்

மேற்கண்ட வாசகம் எங்கள் Plumbing துறையில் பல நேரங்களில்  விவாத பொருளாக இடம் பிடிக்கும்.

        பொதுவாக நாம் வீடு வாங்கும் போது அல்லது கட்டும் போது இட வசதி , சுவரின் நிறம் சமையல் அறை வடிவம் எத்தனையோ பார்க்கின்றோம் . அவ்வளவு ஏன்  Bathroom Fittings என்ன என்ன Design ல இருக்கணும்னு எல்லாம் பார்க்கிறோம்.
   எல்லாம் சரி ஆனால் நம் வீட்டு மொட்டை மாடியில் விழும் மழை நீர் எங்கே சென்று கடைசியாக சேர்கிறது. அதை எவ்வாறு வெளியேற்றுகிறார்கள் என 10 ல் 2 பேர் கூட யோசிப்பார்களா தெரியவில்லை !

           கிட்டத்தட்ட Plumbing Department  தொடக்க காலங்களில் ஒரு பொருட்டாகவே பல இடங்களில் கையாளப்படுவதில்லை என்பதை பல இடங்களில் உணர்ந்துள்ளேன். அப்போது எல்லாம் கடுமையாக எரிச்சலாக இருக்கும் , என்ன செய்ய கொடுத்த வேலை செய்தால் போதும் என்றே ஒதுங்கி விடுவேன். நாள் ஆக,ஆக இப்போது இதன் அவசியத்தை பல நிறுவனங்கள் உணர துவங்கி உள்ளன !
  ஏதோ என் field என்பதால் நான் பொங்குவதாக என்ன வேண்டாம். ய்தார்த்தம் இது தான்.

       நம்ம வீட்டு மொட்டை மாடில விழுற மழை நீர் - Rain water.   அதுவே தரையை தொட்டு விட்டால் அதன் பெயர்   Storm water .

  இதை சொல்லித் தான் அரசை குத்தம் சொல்வதும்  நம்மை அப்பாவியாக காட்டி கொள்வதும் நடக்கிறது ! " தண்ணி என் வீட்டு வாசல்ல இருக்கும் வரைதான் என் பொறுப்பு மண்ண தொட்டுட்டா அது அரசு பொறுப்பு என்ற மன நிலை தான்  பலருக்கு !

   Strom Water drainage என்பது இழுவிசை (Gravity Force)ல் நீரை கொண்டு செல்லும் தன்மை கொண்டது it's not a Pressure pump  Force (உந்து விசை அல்ல )   .

 உதாரணமாக ஓர் சிறிய குச்சி கால்வாயின்  நடுவில் சிக்கி நிற்பதாக கொள்வோம் .
அதில் நாம் வேண்டாம் என்று தூக்கி எறியும் பாலித்தின் பை சென்று சிக்கும். அடுத்து காய்ந்த இலை , நீங்கள் தூக்கி எறியும் Pepsi tin இப்படி பல அங்கே தேங்க துவங்கி நிச்சயம் ஓர் அடைப்பை ஏற்படுத்தவே செய்யும்.

இதற்க்கு நாம் எல்லோருமே தான் பொறுப்பு !
அவர்அவர் சுயஒழுக்கம் சமூக அக்கறை  பொருத்தது இந்த விடயம். நீங்கள் ,நான் ஏன் எல்லோருமே இந்த தவறை கூச்ச படாமல் செய்துவிடுகின்றோம். அதே போல் ஒருவன் திருந்தி மட்டும் நாட்டின் குப்பையை குறைத்து விட முடியுமா என்ன ???

   சரி குப்பை மட்டும் தான் இவ்வளவு நீர் தடத்தை அடைத்து விடுகின்றதா.... !
நிச்சயம் இல்லை....!

நாம் வாங்கும் அல்லது கட்டும் வீடுகளும் தான்.

ஓர் நிலத்தினை வாங்கும் போது Civil Court il  நமக்கு தெரிந்த Lawyer ரிடம் கொடுத்து அந்த இடத்தின் மீது ஏதும் பழய பிரச்சனைகள் ,வழக்குகள் உள்ளதா என பார்ப்பது வழக்கம் . அதர்க்கு பெயர் "வில்லங்கம் போட்டு பார்ப்பது" என ஊர் வழக்கில் சொல்வோம். அதே வக்கிலிடம் இது Flat போடும் முன்  குளமா ,ஏரியா என கேட்டால் அவரே சொல்லிவிட்டிருந்திருப்பார்.    
   அதை எல்லாம் கேட்க கூட நேரம் இல்லாதவர்களா நாம் ?????

 சரி கருமம் போனது போச்சு இனி எதுவும் செய்ய முடியாதா என்று கேட்டால் ....,முடியும்.........!
  வாருங்கள் பார்ப்போம்

   உண்மையில் நாம் செய்ய வேண்டியது என்ன வீடு கட்டும் போதோ அல்லது வாங்கும் போதோ...!

It's about only Water & Drainage Related activities while your Home constructions.

 உங்கள் தெருவின் கடந்த 35 வருடத்தில் வந்த அதிக பட்ச மழை அளவின் சாராசரி P.W.D யிடம் கிடைக்கும். தமிழகத்தின் எந்த மூலையாக இருந்தாலும் சரி !  அந்த அளவில் இருந்து உங்கள் வீட்டின் வயிற்படி குறைந்தது  3 to 4 அடியாவது உயரமாக இருக்கட்டும்.       It will avoid the excess storm water enter in to your house.

 நீங்கள் அடுக்கு மாடி குடியிருப் பில் வீடு வாங்கும் போது அதை சுற்றி மழை நீர் சேகரிப்பு தொட்டி அமைத்துள்ளார்களா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். இது ஏதோ கடைமையே என்று செய்யாமல் நம் அடுத்த சந்ததிக்கு நாம் செய்ய வேண்டிய கடைமை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
   இந்த மழை நீர் சேகரிப்பு தொட்டிக்கு என அமைக்கும் முறைகள் , அளவுகள் என முக்கியமான சில விடயங்களில் அரசே வழி காட்டுகின்றது !
 இதை  கிட்டதட்ட ஒரு பெரிய கிணறு வடிவில் அமைக்கவே அரசு வழியுறுத்துகின்றது.

 நீங்கள் வீடு தனியாக காட்ட முடிவு செய்து இருந்தால் அதற்கென நிலத்தடி நீர் வல்லுநர்கள் கீழ் கண்டவாறு RWH (Rain water harvesting) அமைக்கவே வேண்டுகோள் வைக்கின்றார்கள்.

      2" அங்குல அளவில் 50 அடி ஆழத்தில் ஓர் துளை அமைத்து அதில் கரி, கப்பி,மணல் போன்ற வற்றால் நிரப்பி விட்டால் போதும் அடுத்த 10 , 15 ஆண்டுகளுக்கு நிலத்தடி நீர் அளவில் பிரச்னையே வராது என்கிறனர்.

   ஏன் இந்த வேறுபாடுகள் ??? ஓர் இடம் திறந்த பெரிய  கிணறு போல ! ஓர் இடம் ஆழ்துளை கிணறு போல    

காரணம் ,

        அரசு சொல்லும் முறை மக்கள் எல்லோரும் இதை செயல் படுத்த வேண்டும் என்பதை மனத்தில் கொண்டு 18,20 அடி ஆழம் போதும் என்று முடிவு செய்து விட்டனர். உண்மையில் 50 அடி ஆழத்திற்க்கு பின்னர் தான் பூமிக்கு கீழானா நீரோட்ட பாதை கிடைக்க பெறும்.
 ஒரு தனி villa போன்ற வீட்டிற்க்கு 2 அல்லது 3 இடங்களில் அமைத்தல் அவசியமாகின்றது ! இது ஒரு Bore well  Drilling  மாதிரி தான். செலவை பார்த்தால் எதிர்கால சந்ததிக்கு நாம் கொடுக்க ஒன்றுமே இல்லாமல் போய் விடும்.

 உங்கள் வீட்டு Rain water pipe , வீட்டில் இருந்து தூரமாக நீரை வெளியேற்றும் படி அமைத்தால் உங்கள் வீட்டை சுற்றி நீரும் தேங்காது ! கொசுவும் வராது டெங்கு பயமும் இல்லை. ஆனால் நீங்கள் மழை நீரை வெளியேற்றும் இடத்தை பஞ்சாயத்து அழுவலரிடம் காட்டி ஒரு முறை உறுதி செய்து கொள்ளுங்கள். அந்த இடம் நீரை ஊருக்கு வெளியே தான் கொண்டு சென்று விடுமா என்பதை !

   மேற்கண்டவை பெரும்பாலும் செலவு கணிசமாக பிடிக்கும் என்பதை ஒப்பு கொள்கின்றேன்.

இந்த பதிவு தற்போது மழையால் பதிக்க பட்ட சென்னைக்கு மட்டும் அல்ல ! வீடு கட்ட , வாங்க போகும் அனைவருக்கும் தான்.

#