Friday, 22 December 2017

விவசாயிகளும்,WTO-வின் பல ஆண்டு கொலைகளும் ...!

இன்று நடக்கும் விவசாய தற்கொலைகள் அனைத்திற்கும் WTO தான் என காரணம் நம்மால் உறுதியாக கூற முடியும்!
ஆம், இன்று நடக்கும் விவசாய தற்கொலைகளை அன்றே தடுக்க வேண்டி ஒருவர் தன் உயிரையே மாய்த்துக் கொண்டார்!
தென் கொரியாவின் தேசிய முற்போக்கு 
விவசாயிகள் சங்கத்தின் தலைவர் இவர். உலகில் எந்த விவசாயி -யின் வாழ்வாதாரத்திற்கு பிரச்சனை என்றாலும் முதல் ஆளாய் நின்றவர்!
1990 உருகுவே நாட்டு விவசாயிகளுக்காக ஜெனீவா - வில் உருகுவே WTO வில் விவசாய உரிமைகளில் கை வைக்கப் போகிறது எனத் தெரிந்ததும் அம் மக்களுக்காக போராடியவர்.
அவர், கொரியா வை சார்ந்த விவசாயிகள் சங்கத் தலைவர் Lee Kuyng - hae (லீ க்யூன் கை) .
நிற்க, 2002 ம் ஆண்டுக்கு பிறகு தான் இந்தியாவில் விவசாயிகள் தற்கொலை அதிகரித்ததாக ஆய்வுகள்உண்மையை வெளிச்சம் போடுகின்றன!
சமீபத்தில்,
2014 - ல் விவசாயிகள் தற்கொலை எண்ணிக்கை - 5,650
2015 ல் 8ஆயிரத்தை தாண்டியது!
2016 ஏப்ரல் வரை மஹாராஷ்ட்ரா வில் 400 க்கும் அதிகமான தற்கொலைகள்! அடுத்ததாக தெலுங்கானா , 100க்கும் அதிகமான தற்கொலைகளை மத்திய பிரதேசமும் சட்டீஸ்கரும் பதிவு செய்துள்ளது!


அந்த குறிப்பிட்ட காலங்களில் தமிழக விவசாயிகள் தற்கொலை வடஇந்திய ஊடகங்களில் பெரிதாக இடம் பெற வில்லை என்றே தோன்றுகின்றது! ஒருவேளை இப்போது கணக்கெடுத்தால் மிகவும் மோசமான எண்ணிக்கையை கிடைக்கப் பெறலாம்!
2002 ற்கு பிறகு தான் மத்திய பிரதேசத்தின் விவசாயிகள் தற்கொலை அதிகரித்ததாகவும் அதற்கு காரணமாக பருத்தியில் BT விதைகளை இந்திய அரசு திணித்து மேற்குலகிற்கு தரகு வேலை பார்த்தது என்பததன் விளைவு அது!
சரியாக அதே கால கட்டத்தில், பிப்ரவரி - 2003 ல் WTO தலைமை செயலகத்தின் முன்புறம் தன் உண்ணாவிரதத்தை துவங்கினார் லீ மூன்றாம் உலக நாடுகளின் மீது உணவு உற்பத்தி கட்டுப்பாட்டை சர்வதேசம் திணிக்க முயல்வதை எதிர்த்து!
இரண்டு மாதம் தொடர்ந்தது அப் போராட்டம்!
2003 ம் ஆண்டு விவசாயத்தை WTO வின் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கான ஒப்பந்தத்தில் கையொப்பம் இடப் போகிறார்கள் என தெரிந்ததும் பல நாடுகளின் விவசாயிகளை திரட்டி போராடத் துவங்கினார் லீ!
ஜப்பான், இத்தாலி என பல நாடுகளை சேர்ந்த விவசாயிகளும் Mexico வின் கான்கூன் -ல் WTO கூட்டம் நடக்கும் அரங்கம் முன்பு குவிந்தனர்.
ஒப்பந்தத்திற்கான நாள் நெருங்க நெருங்க போராட்டம் தீவிரம் அடைந்தது! வன்முறை எப்போதும் வெடிக்கலாம் என்ற கொதி நிலை!
ஆனால், கையொப்பம் இடுவதில் அரசுகள் மும்மரமாக இருந்தது!
போராட்டம் வன்முறையாக வெடித்தே விட்டது!
போலீஸ்க்கும் விவசாயிகளுக்கும் தடியடி, கண்ணீர் புகை குண்டு என வரம்பு மீறி சென்றே விட்டது!
தடைகளை தாண்டி உள்ளே குதித்த "லீ " தன் கையில் இருந்த கத்தியை கையில் எடுத்தார்
" என்னை பற்றி கவலைப் படாதீர்கள்! தொடர்ந்து உங்களால் முடிந்த வரை போராடுங்கள் " என்று கூறியவாரே தன் நெஞ்சில் கத்தியை பாய்ச்சினார்!
எத்தனையோ போராடியும் மூன்று மணி நேரத்திற்கு பின் அவரின் உயிர் பிரிந்தது!



இன்று நாம் காணும் எத்தனையோ விவசாய தற்கொலைகளுக்கு முற்றுப்புள்ளி வேண்டி தான் அவர் தன் உயிரை மாய்த்தார்! அன்றே நாம் விழித்திருந்தால் இன்று இத்தனை உயிர்களை இழந்திருக்க மாட்டோம்!
பாஜக - காங் என இரு அரசுகளும் தன் மக்களுக்கு இழைத்த மாபெரும் துரோகம் என்பது TFA ல் கையொப்பம் இட்டது தான்!
எனவே இந்த கட்சி / அந்த கட்சி என எதையும் நம்பி பிரயோஜனம் இல்லை!
போராட்டத்தை தவிர நம்மை காக்க வேறு வழி இல்லை!