Thursday, 11 August 2016

Brazil

மூன்று வாரம் முன்னரே நான் எழுத துவங்கிய கட்டுரை இது.  அப்போது இதை ஏனோ சோம்பேறித் தனத்தால் அப்படியே விட்டு விட்டேன். 

ஆனால் இரண்டு நாள் முன்பு பார்த்த ஓர் காணொளியும் என் அலுவலகத்தில் அது பற்றிய ஓர் விமர்சனமும் வந்த பின் தான் இதை தொடர்ந்து உடனே முடித்தேன்.


பிரேசில் ஒலிம்பிக் போட்டிகளை சீர் குலைக்க முயன்றதாக  10 பேர் கைது
          - போட்டிகள் துவங்க  ஒரு வார முந்தைய செய்தி இது
 
இது மற்றவர்களுக்கு ஓர் வெளிநாட்டு செய்தி அவ்வளவே!
 
ஆனால், நான் இதை அவ்வாறு பார்க்கவில்லை!
சில முந்தைய  நிகழ்வுகளை இணைத்து பார்க்க வேண்டிய அவசியம் உள்ளது!





2014 ஜுன் :-
    Football  உலக கோப்பை துவங்கும் முதல் நாள் வரை நாடு முழுதும்  பொது மக்களுக்கும் அரசுக்கும் நடந்த போராட்டத்தை மறக்க இயலாது!
லத்தீன் அமெரிக்க நாடுகளில் முக்கியமான ஓர் நாடு பிரேசில்!
  உலகோப்பைக்காக மைதானத்தையும் சுற்று வட்டார பகுதிகளையும் மேம் படுத்துவதாக கூறி அப் பகுதியில் குடியிருந்த மக்களை வெளியேற்றியது அரசு!
மீண்டும் உங்கள் பகுதி உங்களுக்கே என்ற வாக்குறுதியோடு!
அடுத்த சில நாட்களில், போட்டிகள் முடிவுற்ற பின்னர் வல்லரசு நாடுகள் அப் பகுதியை வணிக ரீதியில் பயன் படுத்த போகிறார்கள் என அறிந்ததும் போராட்டம் பெரிய அளவில் வெடித்தது!
போராட்டம் ஓர் நாள் இரு நாள் இல்லை!  மே 14 - 2014 துவங்கிய போராட்டம் ஜூலை வரை தொடர்ந்தது!
Sao Paulo, Brasilia, மரக்காணா என அனைத்து மைதானங்களையும் முற்றுகையிட்டனர் மக்கள்!
    சுவர் ஓவியம்,
     இணையம்
          தொலைக் காட்சி என மக்களை திரட்டியது போராட்ட குழு!

   ( இந்தியாவா இருந்திருந்தா முதல் மூணு மேட்ச்சுல தோத்து அடுத்த நாலு மேட்சுல ஜெயிச்சு Final கொண்டு போக வச்சி "தேச பற்று எனும் நாக்கு பூச்சியை  உடல் முழுக்க ஓட விட்டிருப்பார்கள்.!
   பாவம் பயிற்சி பத்தலை போல பிரதமருக்கு)


      இவ்வளவு பெரிய மக்கள் எதிர்ப்பை மீறி  கால்பந்தாட்டத்தை எப்படி நடத்தப் போகிறார்கள் என நானெல்லாம் கண்கள் விரிய காத்திருந்த போது தான் ..... மெல்ல அமெரிக்காவின் பாரம்பரிய மொள்ளமாரித்தனத்தை தானும் பயன் படுத்துவது என களத்தில் இறங்கியது பிரேசில்..!
காவல் துறையை வைத்து போராட்ட பேரணிக்குள் கலவரத்தை ஏற்படுத்தினார் பிரதமர். அடுத்து அதை அடக்குவதாக கூறி
இராணுவத்தை வைத்து பலரை கைது செய்தது அரசு!
   அப் போராட்டக்காரர்கள்  108 பேர் கைது செய்துள்ளதாகவும் 500 க்கும் மேற் பட்டோர் படுகாயம் அடைந்ததாகவும் தங்கள் பக்கத்தில் பதிவு செய்துள்ளனர் அந்த தோழர்கள்!
     லத்தீன் அமெரிக்க நாடுகளான பிரேசில், அர்ஜெண்டினா, பராகுவே போன்ற வற்றின் நீர்வளம் அமெரிக்காவுக்கு தேவை!
காரணம் அப்போது தான் அழிந்து வரும் தன் நாட்டின் பல நீர்நிலைகளை காக்கவும் பாதுகாத்து தன் சந்ததிக்கு அடுத்த 50 ஆண்டுகளுக்கும் வைத்திருக்க முடியும் என தெளிவாக இருந்தது! (That அடுத்தவன் எக்கேடு கெட்டா நமக்கென்னா Moment)
   அதற்க்கு அவர்கள் எடுத்த முதல் படி தான் தென் அமெரிக்காவின் மிகப் பெரிய பொழுது போக்கு மையமான கால்பந்து போட்டிகள் .
   World Cup, Confidential Cup's அடுத்ததாக இப்போது Olympic., 
   இப் பெயர்களில் நாட்டை சுத்தம் செய்கிறோம் முன்னேற்றுகிறோம் நவீனமயமாக்குகிறோம் என பழங்குடி மக்களையும், பூர்வீக குடிகளையும் சொந்த மண்ணை விட்டு புலம் பெயரச் செய்தது!
   இத்தனை அரசியலை எல்லாம் நாம் எங்கே கவனித்திருக்க வாய்ப்பில்லை!
நாடு முழுதும் ஏற்கனவே வறுமை, கல்வி என நொடித்து போயிருந்த நிலையில் World Cup போட்டிகளுக்கு மட்டுமே மொத்த நாட்டின் நிதியில் இருந்து 30% இதற்காக மட்டுமே செலவிடப் பட்டது!
   இந்த பொருட்செலவு கணக்கு இதுவரை நாடு கண்டிறாத மிகப் பெரும் கொள்ளை "Big Theft in History " என பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் கால்பந்து வீரருமான "ரொமாரியோ " கதறினார்.




   யாரும் எதையும் கண்டு கொள்ளவில்லை!
அடுத்து வந்த Panama Papers ன் அலை அர்ஜெண்டினாவின் மக்களை வீதிக்கு அழைத்து வந்தது!
Brasilia - வின் நகர தெருவை 2500 மக்கள் முற்றுகை இட்டு  போராடிய போது கலைத்த இராணுவம்,
இம்முறை கதிகலங்கி போனது!
சுமார் 3.5 பில்லியன்  மக்கள் 300 நகரங்களை நிலை குலைய செய்தனர். இது மொத்த பிரேசிலின் மக்கள் தொகையில் 5 ல் ஒரு பங்கு!
ஆடிப் போனர் முன்னாள் இன்னாள் பிரதமர்கள். காரணம் இருவரும் சிறை செல்லுங்கள், எங்கள் நாடு எங்களுக்கே என களம் புகுந்தனர் சாமானியர்கள்.
பெண்கள், குழந்தைகள், யுவதிகள் என அல்லோகலப் பட்டது பிரேசில்! 

 இப்போதும் ஒலிம்பிக்கு எதிரான போராட்டம் தொடர்ந்து கொண்டு தான் உள்ளது !



ஆனால் சர்வதேச ஊடகங்கள் அத்தனை முற்றிலுமாக மறைக்கும் வேலையை செய்து வருகின்றது 

   
   அத் தெருக்களில் வரைந்திருக்கும் ஓவியங்களையும், வீதிகளில் இறங்கி நிற்க்கும் பெண்கயும் பாருங்கள் .!
    இது தான் புரட்சியின் விதை!
Facebook ம், What's up ம் தகவலை தான் தெரிவிக்கும் நாம் தான் செயலில் துவங்க வேண்டும்.
இதை எல்லாம் ஏன் இப்போது எழுதுகிறேன் .....? அதுவும் De - activate செய்த கணக்கை மீண்டும் உயிர்பித்து .....!





நேற்று ஓர் காணொளியை காண நேர்ந்தது.! 
  பிரேசிலின் ஒலிம்பிக் மைதானத்தை சுற்றி இருக்கும் பகுதியில் வெளி நாட்டு சுற்றுலா பயணிகளிடம்,  அப்பகுதி இளைஞர்கள் வழிப்பறி செய்வது போலவும், அடித்து பிடுங்குவது போலவும் ஓர் படத் தொகுப்பு அது!
    வாழ்வாதாரத்தையும் வாழ்விடத்தையும் இழந்தவன்
   இதை சாதாரணமாக கடந்து செல்லும் ஓர் நிகழ்வாக என்னால் பார்க்க இயலவில்லை!
   மிகத் தெளிவாக பல சம்பவங்களை இணைத்து அம் மக்கள் மீது ஓர் வெறுப்பு உணர்வையும், திருடர்கள் என்ற ஒரு மாயையும் பார்ப்பவர் மனதில் பதிய வைக்க அந் நாட்டு அரசே தான் செய்திருக்க வேண்டும்.
   தன் மக்களையே யாராவது காட்டி கொடுப்பார்களா என நீங்கள் கேட்கலாம்.
  ஆனால், Corporate களுக்கும் அமெரிக்காவுக்கும் சொம்பு தூக்கும் போது கிடைக்கும் வசதியையும் பதவியையும் நினைக்கும் போது இதெல்லாம் பெருசாக தெரியாதே!
   இப்போதே அம் மக்கள் மீது தவறான ஓர் பார்வையை பதித்து விட்டால் போதும்.  இனி அவர்களை எப்போது வேண்டுமானாலும் கைது செய்யலாம் அவர்களின் போராட்டத்தை ஒடுக்கலாம்.  (இங்கே பழங்குடிகளை மாவோயிஸ்ட் என கூறி குருவியை போல சுடுமே Corporate தரகு இந்திய அரசு அப்படி)

    இதற்க்கும் நமக்கும் என்ன சம்பந்தம் ஏன் அம் மக்களின் துயரை நாம் பகிற வேண்டும் .....!??
   கடந்த டிசம்பரில் பெய்த மழையை சாக்காக வைத்து பல குடிசை வாழ் மக்கள் இடம் பெயர செய்யப் பட்டனர். சைதாபேட்டை மற்றும் சென்னையின் முக்கிய பகுதியில் வசித்த  பலர்,
செம்மஞ்சேரி, குமரன் நகர், கண்ணகி நகர் என!
    இன்று அப் பகுதிகள் கிட்ட தட்ட ஓர் தீண்ட தகாக பகுதிகள் போல காவல்துறையாலும் பகட்டு வாழ்க்கை பண்ணாடைகளாலும் சித்தரிக்கப் பட்டுள்ளது! அங்கே தான் திருட்டு, களவு என பலரும் தொடர்பானவர்கள் இருப்பது போல!  உண்மையில் இவர்கள் தான் மனதளவில் "தாழ்த்தப் படும் " மக்கள்.
  சமீபத்தில் செம்மஞ்சேரி பகுதியிலிருந்து,  ஓர் செயின் பறிப்பு வழக்கில் வீட்டில் தூங்கி கொண்டிருந்தவனை அழைத்து சென்று கண் மண் தெரியாமல் போலீஸ் அடித்ததில் அவனின் செவித் திறன் பறி போனது! 
மறு நாள் அவனை தவறாக அழைத்து சென்று விட்டோம் எனக் கூறி ரோட்டில் இறக்கி விட்டு சென்றது காவல் துறை!
இதையெல்லாம் கவனிக்க வேண்டிய முதல்வரோ இன்னும் தூக்கத்தில் இருந்து எழ வில்லை போல!
    அங்குள்ள என் நண்பனை நான் சந்திக்க சென்றாலும் இங்கெல்லாம் உனக்கு நட்பா என ஏதோ ஏலியன்ஸை போல பார்க்கிறார்கள்.
   இன்றும் அம் மக்களின் பூர்வீக பகுதிகளை ஆக்கிரமித்து கட்டப்பட்ட Five star விடுதிகளும் Multinational நிறுவனங்களையும் இந்த அரசு கிஞ்சித்தும் கேள்வி கேட்காது!  கேட்டில் இந்தியா கொடுக்கும் நிதியையும் நிறுத்தி விடுமே!    
World Bank சென்னையை ஓர் வணிக பூங்காவாக மாற்ற எத்தனை கோடியை வேண்டுமானாலும் செலவழிக்க தயாராக உள்ளது!  காரணம், ஆசியாவிலேயே குறைந்த செலவில் மேற்குலக நாடுகள் லாபம் ஈட்டும் இடம் தற்போதைக்கு தமிழ் நாடு தான்.
   அதன் துவக்க குறியீடுகள் தான் கெயில், மீத்தேன், நியூட்ரினோ போன்றவை! அடுத்த பத்தே ஆண்டில் நீங்களும் நானும் அடுத்த இனப்படுகொலையை தரிசிக்க வேண்டிவரும் என்பதை நினைவில் வையுங்கள்.


     மரக்காணாவுக்குள்ளும் மெட்ராஸூக்குள்ளும் நடப்பவை ஒன்று தான்.

    இன்னும் உலக அரசியலை நாம் உற்று நோக்காத வரை நாம் இப்படியே ஜெ. கருணா. சண்டை தான் வேடிக்கை பார்த்து பொழுது போக்குவோம்!!!

Saturday, 16 July 2016

மணி ரத்னம் - A Elite கை கூலி

மணிரத்னம் - A Elite கை கூலி

   இன்றைக்கு பல இளைஞர்களின் Role Model ஆக சித்தரிக்கப் படும் இவருக்கும் காஷ்மீரில் இன்று நடக்கும் இராணுவ அராஜகத்துக்கும் மிக நெருங்கிய தொடர்பு உள்ளது .....!

எப்படி,  வாருங்கள் பார்ப்போம்.

   1991 பிப்ரவரி 11 - வடக்கு காஷ்மீரின் 'குப்வாரா ' மாவட்டம் போஷ்பாரா - Kunan கிராமங்கள்.

   "Mob Militants " என்ற ஆபரேசனுக்காக மேற்கண்ட இரு ஊர்களை இராணுவம் சுற்றி வளைக்கிறது!

   இரவு ஆனதும் ஆண்கள் அனைவரையும் ஓர் இடத்தில் சிறை வைக்கிறது இராணுவம்!

   அதன் பின் ஒவ்வொரு வீடாக இருக்கும் பெண்களை இராணுவ முகாமுக்கு இழுத்து செல்கிறது இந்திய இராணுவம்! 
   கதறல், கூக்குரல் எதையும் பொருட்படுத்தவில்லை!
உட் பக்கம் தாழ் போட பட்ட வீட்டு கதவுகள் துப்பாக்கிகளின் பின் புறத்தால் உடைத்து திறக்கப் பட்டது!

   கிடைத்த பெண்கள் அனைவரும் இந்திய இராணுவ முகாமுக்கு கொண்டு செல்லப் பட்டனர்.

   அங்கே இருக்கும் ஆண்களுக்கோ நடப்பதே புரியவில்லை!

மறுநாள் சீரழிக்கப் பட்ட பெண்கள் குப்பையை போல ஊருக்குள் வீசி விட்டு சென்றது இந்திய இராணுவம்!

   மொத்தமாக பாதிக்கப்பட்டதாக வெளியில் தெரிந்தது 31 பேர் தெரியாது பலர்.!
   
   இச் சம்பவம் நாடு முழுதும் பரவவே சில நாட்கள் பிடித்தது! 
   இராணுவத்தின் உண்மை முகம் வெளிவரத் துவங்கியது!!!

         அப்போது தான் பாதுகாப்பு துறையில் அந்நிய முதலீட்டை உள்ளே விட ஆரம்பித்திருந்தது இந்தியா!!! 

   இந் நிலையில் இச் சம்பவம் பெரிய சிக்கலை  இராணுவத்திற்க்கு கொடுக்கும் என அஞ்சியது இந்தியம்!

கைய பிசைந்து நின்ற நிலையில்,

அடுத்து அடுத்து  நடந்தது தான் Behind the Screen அயோக்கியத்தனங்கள்!

      அதற்க்கு சரியாக கை கொடுத்தார் மணி ரத்னம்.

   காஷ்மீர் போராளிகள் எல்லாம் தீவிரவாதிகளாகவே இருப்பார்கள் என்றும், ஈவு இரக்கம் அற்றவர்கள் என்ற ரேஞ்சில்  தேச பற்றை ஊற்றி பிசைஞ்சி ஓர் தட்டு நிறைய நமக்கு கொடுக்கப் பட்ட அல்வா தான் 'ரோஜா'!

    இதில் அந்த படத்தில்

'தமிழா தமிழா நாளை உன் நாடே ன்னு பாட்டு "

   எரியும் இந்திய கொடியை உருண்டு பொரண்டு" தன் உடலால் அணைப்பது

      போன்ற எழுச்சி மிகு காட்சி எல்லாம் உண்டு!

       இதில் தான் பலருக்கு இந்திய நாட்டு பற்று பீறிட்டு வெளிவந்தது!  நான் உட்பட!

     படம் வெளியான நான்கு மாதங்களில் மேலும் சில நான்கைந்து மொழிகளில் மொழி மாற்றம் செய்தது இந்திய அரசு!

    அதே வருடம்  ஆகஸ்ட்டு 15ல் வேக வேகமாக Door Dharshan ல் ஒளிபரப்பு செய்தனர்.

    நான்கைந்து மொழிகளில் அடுத்து வந்த ஞாயிறுபோதும் மாதம் இரு முறையாவது ஒளிபரப்பு ஆகியிருக்கும் படம்.

     ---- ம் ம் என்ன பாஸ்,  அந்த தமிழா தமிழா பாட்டா???

  ஹ ஹா ஹ ஹா, அட போங்க பாஸ் அவிங்களே மொள்ள மாரித்தனம் பண்ணானுக இதுல Logic பாக்குறீங்களே!!!

     இப்படி, மாதாமாதம் ஒளிபரப்பு ஆனதில் பத்தில் 7 பேருக்கு காஷ்மீர் மீதும்,  இஸ்லாமியர்கள் மீதும் தானாகவே ஓர் வெறுப்பையும், தீவிரவாதிகள் பிம்பத்தையும் விதைத்தது இந்திய அரசு!

     இதற்க்கு பின்னர் - கிட்ட தட்ட  30% FDI ஐ பாதுகாப்பு துறையில் அன்னிய முதலீட்டை அழைத்து வந்தனர்.
   அதற்க்கு சொல்லப் பட்ட காரணம் தீவிரவாதிகளிடமிருந்தும் பாக்.  கிடம் இருந்தும் நம்மை காக்க!
    
    அப்பறம் என்ன!!!
     புது புதுசா விமானம், ஜெட் எல்லாம் வந்தது!

  அதன் பின் சிறு சிறு கலவரங்கள், மத சண்டைகள் இவை அனைத்தும் சர்வதேச சந்தையை மட்டும் மகிழ்வுறச் செய்தது!

மக்களுக்கோ பயத்தை மட்டுமே ஊட்டி வந்தனர்.

1992 - டிசம்பர் -
      பாபர் மசூதி இடிப்பு இதற்க்கு பெரிய அளவில் எதிர்ப்பு மாற்று சமூகத்திடம் இருந்து வராததே ரோஜா படத்தின் நோக்கத்தினை கிட்ட தட்ட நிறைவேற்றியிருந்தது! 

     இப்போது நடக்கும் விடுதலை போராட்டத்தை பற்றி "அல்லு சில்லு " எல்லாம் ஒரு புண்ணாக்கும் தெரியாமல் காஷ்மீரிகள் தீவிரவாதிகள் என்று முடிவுக்கு வர இப் படம் ஓர் வகையில் விதை!

       மணிரத்னம் செய்த துரோகம் காஷ்மீகளுக்கு மட்டும் அல்ல! 
    நமக்கும் தான், 

2002 ம் ஆண்டு -

     சில நாட்களில் மிக வேகமாக எடுத்து வெளியிடப் பட்ட படம் 'கன்னத்தில் முத்தமிட்டால் "

   அதில் 'விடுதலை புலிகள் ' இயக்கத்தினை தவறாக சித்தரித்து "குழந்தை போராளிகளை " பயன் படுத்துவதாக காட்டி இருப்பார் மணி ரத்னம்!

     இதில் இருக்கும் அரசியலை புரிந்து கொள்ளுங்கள்,  2000 - 01 தொடக்கத்தில் தான் குறிப்பிட்ட வயதுக்கு உட்பட்டோரை போர் களத்தில் நிறுத்துவது தவறு என ஐ.நா தீர்மானம் கொண்டு வருகிறது!  அடுத்த ஒரே வருடத்தில் இத் திரைப்படம் வெளி வருகிறது!

        சில அறிவுஜீவி நொண்ணைகள் புலிகளின் ஆரம்ப கட்ட காலத்தில் 85,90 களில் இளம் வயதினர் பயிற்சி மேற்கொண்ட படங்களை வைத்துக் கொண்டு ' குழந்தை போராளிகளை ' நீங்க பயன் படுத்திய ஆதாரத்தை பாருங்க ' என நம்மிடம் மணிக் கணக்கில் மூச்சை போட்டு பேசுபவருக்கு,  2001 க்கு பிறகு தான் இச் சட்ட விதிமுறை வந்தது தெரியாது!

    ஒருமுறை பாரதி ராஜ தேசிய தலைவரை சந்திக்க சென்ற போது, இது குறித்து கடுமையா சொல்லி அனுப்பியிருந்தார் தலைவர். எங்கள் கட்டமைப்பு பற்றி அவருக்கு என்ன தெரியும்??? 
   எங்கள் போராட்டத்தை எப்படி அவர் கொச்சை படுத்தலாம் என்று! 

    அதை பாரதி ராஜாவும் 2006 - ஜூலை மாத ஆனந்த விகடனில் வெளிப்படையாகவே சொல்லியிருந்தார். இப்போது வரை மணி ரத்னம் எனும் ஓர் 'உயர் தர கருத்து திணிப்பு கை கூலியிடம் " இருந்து  இதுவரை எந்த பதிலும் இதற்க்கு இல்லை!

     இது மட்டுமா????

   உயிரே படத்தில் இஸ்லாமியர்கள் கிட்ட தட்ட எல்லோருமே தீவிரவாதிகள் என்ற ரேஞ்சுக்கு தான் சித்தரிப்பு இருக்கும்!

       
     உண்மையில் ஊரில் நடக்கும் பல மத கலவரத்துக்கும்  இவரின் கீழ்த்தரமான சிந்தனைகள் மிக முக்கிய பங்கு வகிப்பதை பலர் கவனிக்க தவறி விட்டோம்!

Monday, 27 June 2016

மகளுக்கு அப்பாவாக .....

வினோதினியில் துவங்கி வினுப் பிரியாவில் வந்து நிறுத்தியிருக்கிறது நமது So called அறிவியல் வளர்ச்சி .

   நிர்பயா துவங்கி சுவாதி வரை தாங்கள் படித்த பாட புத்தகங்களும் C ++, MBBS எல்லாம் தனக்கு ஆபத்து வரும் போது எப்படி காத்து கொள்வது என்ற அடிப்படை அறிவை கூட ஆரம்ப கல்வியிலேயே வழங்காமல் போனது யார் தவறு???

    நம்மவர்களுக்கோ மகன் / மகள் வளர்ந்ததும் கை நிறைய சம்பாதிக்கனும்.  கழுத்து நிறைய நகையும் காரும் வீடும் வாங்கனும் அதுக்கு என்ன வேண்டுமானாலும் படிக்க வைக்கலாம்! இந் நாட்களில் இது தான் So Called "settled in life "
  
   அது அலுவலகத்தை விட்டு வெளியே வந்ததும் ஒத்த பைசாவுக்கு கூட பிரயோஜனம் இருக்காது என்று தெரிந்தும் சேர்க்கிறோம் கல்வி நிறுவனங்களில்.

     தனக்கு நேரும் தனிப்பட்ட பிரச்சினைகளை தன் குடும்பத்தாரிடம் கூட பகிறுவதை அந்த பெண்ணுக்கு ஒரு வித மோசமான அனுபவமாக மாற்றி வைத்திருக்கிறோம்.

   சாதாரணமாகவே பெண்கள் தன் சார்ந்த விடயங்களை அம்மாவை விட அப்பாவிடம் அளவளாவுதல் அதிகம் காணலாம். அவள் பருவம் அடைந்த உடனேயே அது தலை கீழாக மாற்றி விடப் பட்டிருக்கும்.
    அங்கே துவங்குகிறது வீட்டிற்க்கும் அவள் பிரச்சினையின் தீர்வுக்குமான இடை வெளி தூரம்.

   #பூமலர் தன் விடயங்களை என்னிடமே முதலில் பகிர வேண்டும் என்றே காத்திருக்கிறேன். மகளின் தேவைகளை பூர்த்தி செய்வதில் மட்டுமல்ல பிரச்சினைகளை தீர்க்கவும் அப்பாவை விட வேறு யாரால் சிறப்பாக செயல் பட முடியும். 

அம்மாக்கள் ஆறுதலோ அடியோ கொஞ்சம் அதிகம் காட்டி நிறுத்தி விடுவார்கள். அவர்களுக்கு தெரிந்தது எல்லாம் கலாச்சாரம் என்ற பெயரில் குடும்ப கௌரவத்தை காக்கிறேன் என பிரச்சனைகளை மூடி மறைப்பது தான்.
  
   நிர்பயா வின் டெல்லியும் தினம் தினம் கற்பழிப்புகள் அரங்கேறும் வட கிழக்கின் "இரோம் சர்மிளாவும் " இங்கே தான் இருக்கிறார்கள்.
அருந்ததிராயும் நந்திதாஸ்ஸும் நடைமுறைக்கும் வேலு நாச்சியாரும் ராணி மங்கம்மாளையும் வரலாற்றிலும் காட்டி வளர்ப்பேன்.

உடனே, 
பொண்ண பையன் மாதிரி வளர்க்க போறியான்னு கேட்காதீங்க . பெண்ணாகவே தான் வளர்வாள் தன் சுற்றத்தையும், சுற்றி நப்பதையும் பகுத்தறிபவளாக .....!

Friday, 24 June 2016

Why we should avoid America ..!

   நம்ம ஊர் பக்கத்துல அப்பப்போ ஆலமரத்துக்கு கீழ பஞ்சயத்து நடக்குமே பாத்திருக்கீங்களா!!!!?
   சுத்தி இருக்குற பத்து இருபது ஊர்ல பண பலம் ஆள் பலம் கொண்ட பெருசுங்க நாங்க தான் பதினெட்டு பட்டிக்கும் எதாவது பிரச்சினைனா முதல் ஆளாளநிற்போம்!  எங்களை கேட்காமல் அனுவும் அசையாதுன்னு சீன் போடுவாய்ங்களே பாத்திருக்கீங்களா!!! 
                அதையே கொஞ்சம் பெரிய லெவல்ல செஞ்சா அதுவும் ரெண்டு நாட்டுக்கு நடுவுல அதுக்கு பேரு தான் அமெரிக்கா!
    ஆலமரத்துக்கு பதில் ஐ.நா மன்றம், ஆள் பலத்துக்கு ISI,  அல்கொய்தா!
அதிகார பலத்துக்கும் ஒற்று வேலைக்கும் CIA, மொசாட்.

இரண்டரை நூற்றாண்டு கால அமெரிக்க சுதந்திர ஆட்சியில் இந் நாடு பகைத்துக் கொள்ளாத தேசமே இல்லை எனலாம். 
      இன்று இங்கிலாந்துடன் ஒட்டி உறவாடும் இவர்கள் 1814 ல் நடை பெற்ற இரு நாட்டு இரானுவத்திற்க்கும் இடையேயான சண்டையில் வெள்ளை மாளிகையையே கொளுத்தி எரிய விட்டனர் பிரிட்டிஷ் வீரர்கள்! ஆனால் தன் வர்த்தக நலனுக்காக அதே நாட்டுடன் இணைந்து 20 ம் நூற்றாண்டில் இவர்கள் நிகழ்த்திய படுகொலைகளும், இன அழிப்புகளும் எண்ணில் அடங்காதவை.

    இப்படி ரஷ்யா, சீனா, வியட்நாம் என இவர்களின் எதிரி Cum நண்பர்களை அடுக்கி கொண்டே போகலாம்.
          இதில் அமெரிக்காவின் விழித்திரையில் விழுந்த தூசி என வர்ணிக்கப் படும் கியூபா வும் குறிப்பிடத்தக்க  ஓர் தேசம்.

     வெளியே  இருந்து பார்ப்பவர்களுக்கும் அங்கே சென்று வந்தவர்கள் கூறும் நலம் சார்ந்த விடயங்களும், படாடோப வசதிகளும் அனைவரையும் வாழ்வில் ஒருமுறையேனும் அந்த வல்லரசு தேசத்தை சந்தித்து விட மாட்டோமா என ஏங்க வைக்கும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை!
   இங்கே நாம் காண போவது அந்த உல்லாச வாழ்க்கையை பற்றி அல்ல!

    அவர்கள் உல்லாச மாக வாழ நம்மை போல வளரும் நாடுகளிலும், மூன்றாம் உலக நாடுகளிலும்,
அந் நாட்டு மக்களின் கண் முன்னாலேயே அவர்களின் வாழ்வாதாரம் பறி போகும் கொடூரத்தை   தான் நாம் இனி  பார்க்கப் போகின்றோம் .  .................!

      நம்மில் பலர் அமெரிக்கா பற்றி பேசும் போது,  1990 களுக்கு பிறகு அமெரிக்கா போன்ற மேற்குலக  நாடுகள் தங்கள் தொழிலை இங்கே  தொடங்கியதால் தானே நம்மில் பலரின் வாழ்க்கை தரம் பொருளாதார வழியில் முன்னேறியுள்ளது, முன்னேறிக் கொண்டிருக்கின்றது....!

      அந்த தேசத்தை  எப்படி நீங்கள் தவறாகவோ திரித்தோ  கூற முடியும் என்ற கேள்வியை நான் பல முறை எதிர் கொண்டுள்ளேன்.  
       அதற்க்கான பதிலை விவரமாக கூறினால் என்ன என்று நினைத்ததன் விளைவு தான் இதை எழுதவது என்ற நிலைக்கு கொண்டு வந்துள்ளது!
              - தொடரும்

Tuesday, 21 June 2016

இயக்குனர் ஷங்கருக்கு .....

திரு.ஷங்கர் அவர்களுக்கு,
   ஓர் சாதாரண பாமர சினிமா ரசிகன் எழுதும் கடிதம் .

       உங்களின் முதல் படமான ஜென்டில் மேன் பார்த்து விட்டு ,
  நாட்டில் அரசியல் வாதிகளை எதிர்த்து கேள்வி கேட்க முடியாவிட்டால் அவர்கள் உயிரை நம் உயிரால் கொன்றொழித்து இந் நாட்டின் மக்களை காப்பற வேண்டும் என என் பள்ளிக்கூட நாட்களில்  எங்களுக்கு  சொல்லி கொடுத்தவர் நீங்கள் ! 

ச்சே!  படம் எடுத்தா இவரை மாதிரி எடுக்கனும்டா.!  மொத்த நாடும் என்றேனும் ஓர் நாள் உங்க பட கிளைமேக்ஸ் போல மாறி விடாதா என ஏங்கி கொண்டிருந்த அப்பிராணிகளில் நானும் ஒருவன்!

அவ்வளவு பாதிப்பு மனதில் ....!

தங்களின் இந்தியன் படம் வந்த பிறகு தான் தங்களை பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வம் வந்தது! 
 
   தங்களின் படங்கள்  தெருவில் தினசரி நடக்கும் அவலங்களை தட்டிக் கேட்க்கும் கதாபாத்திரங்களும், ஒரே நாளில் நாட்டையே மாற்ற முடியும் என்று எங்களுக்கு நம்பிக்கை ஊட்டி  அதே வளர்ச்சி பாதை என்ற கனவிற்க்கு விதை போட்டது நீங்களே!
அப்துல் கலாமே பின்னர் தான்! 

இப்படி ஓர் சிறந்த சமூகத்தை நம் பிள்ளைகளுக்கு வழங்கி விட மாட்டோமா என தங்களின் பல படங்கள் மூலம் என்னை போன்றவர்களை ஏங்க வைத்து இருப்பீர்கள்.

   சரி,  இப்போது விடயத்துக்கு வருவோம்.

   21 ம் நூற்றாண்டின் வலாற்றில் மறைக்க இயலாத இனப்படுகொலை செய்து முடித்தது இலங்கை அரசு . அதற்க்கு இந்தியாவும் துணை தான் என்பதை நீங்களும் நானும் நன்றாகவே அறிவோம், இருந்தாலும் இப்போது இந்தியாவை பற்றி பேச வேண்டாம். காரணம் இதை எழுதி முடித்து நீங்கள் படிக்கும் போது என்னை பாக்கிஸ்தானுக்கு நாடு கடத்த சொல்லி இந்திய தேசிய வா(வியா)தி கள் கொடி பிடிக்க கூடும். 

      இதை ஏன் உங்களிடம் சொல்கிறேன் என கேட்கிறீர்களா , அவ்வளவு பெரிய இனப்படுகொலைக்கு துணை போன ஓர் Corporate நிறுவனமான LYCA விற்க்கு தங்களை போன்றோர் தமிழ் நாட்டினுள் ஆழமாக வேரூன்ற சிகப்பு கம்பள வரவேற்பு அளிப்பது எவ்வகையில் நியாயம்???

ஏற்கனவே அதிமுக அரசை வளைத்து கத்தி பட எதிர்ப்பை சமாளித்தது LYCA.

   கத்தி படத்தின் போது நாங்கள் இது இனப்படுகொலை நிறுவனம் படத்தை வெளியிடாதீர்கள் என்று போராடிய போது விஜயை பிடிக்காதவர்கள் செய்கிறீர்கள் என்றனர்.  அடுத்து, ஈழத்தை ஆதரிப்பதாக சொல்லிக்கொள்ளும் போலி தமிழ் தேசிய வாதிகளை கொண்டே நற் சான்றிதழ் வாங்கியது LYCA!
 
அப்போதே தெரியும் இவர்கள் பின்னாளில் சமயம் பார்த்து கழுத்தை அறுப்பார்கள் என்று.  இப்போது அதை சரியாக செய்து வருகிறார்கள். 

108 முன்னாள் போராளிகள் மர்மான நோயினால் இறந்ததாக இங்கே தமிழ் அமைப்புகள் போராட்டத்தில் இறங்க அவர்களோ ஆளையே காணோம்!

( அவர் எப்போதோ விலை போய் விட்டது தெரியாமல் பாவம் அந்த தோழர்கள் இன்னும் உயிரை கொடுத்து அண்ணன் வாழ்க கோசம் போட்டு திரிகிறார்கள்)

    தமிழ் பிள்ளை ஒருவரின் வளர்ச்சி பொறுக்காமல் என்னை போன்றோர் வயித்தெறிச்சல் படுகின்றோம் என்றனர்.  அவருக்கும் எங்களுக்கும் என்ன பங்காளி அங்காளி சண்டையா???

     இன்னும் சிலர், LYCA ஈழ கோரிக்கையையும் புலிகளையும் ஆதரித்தனர் என்று நியாயம் வேறு கற்பித்தனர்.

   அப்படி சிலர் நம்பிக் கொண்டு இருப்பின்,  இங்கே அதை பற்றிய  ஓர் வரலாற்று நிகழ்வை பேச வேண்டிய கடமை எமக்குள்ளது!

1) 2006 ஏப்ரலில் விடுதலை புலிகள் அமைப்பை இங்கிலாந்து அரசு தடை செய்கிறது!

2) அதே ஆண்டு செப்.- அக்டோபரில் LYCA தனது புதிய தொழிலை துவங்க பிரிட்டன் அனுமதி தருகிறது!

3) 2005 ல் புலிகளை காட்டி கொடுத்தவர் என கூறப் படும் "கருணா "விற்க்கு இங்கிலாந்து தஞ்சம் அளிக்கிறது!

     இதிலேயே புரிய வேண்டாமா தமிழன் கையை வைத்தே அவன் கண்ணை குத்துகிறது சர்வதேசம் என்று!

இனப்படுகொலை க்கு பின்னான LYCA வின் பிரவேசம்  தமிழ் சினிமாவினுல் மெல்ல மெல்ல ஆரம்பித்தது!
    முதலில் திரு.A.R முருகதாஸ் அவர்களால் அரங்கேறியது!  அடுத்து தனுஷ் தனது தயாரிப்பு படங்களின் ஊடாக LYCA வை உள்ளே கொண்டு வந்தார்! 

இன்னும் சிலர் கேட்கலாம் ஏன் தனுஷை எதிர்க்கவில்லை!  ஏன் விசாரணை படத்தை எதிர்க்க வில்லை என கேட்டு வருவார்கள் அதுவும் தெரிந்ததே!  

   எமக்கான எதிர்ப்பாயுதம் இன்று "கருத்தியலும், எழுத்தும் "தான்!

பேனா முனை கத்தியை விட கூர்மையானது என்பதை காலம் நிரூபிக்கும்!

எமக்கு மாநாடு போடும் அளவுக்கு தோழர்கள் இல்லை!  ஆனால் மனதளவில் திடமான சில தோழர்கள் தோழ் கொடுக்க உண்டு. 

ஈழ விடுதலைக்காக தெருவில் இறங்கிய பலர் இன்று சம்பந்தமே இல்லாத திசையில் நின்று கொண்டிருப்பது காலத்தின் சாபம்! 

  

     தமிழன் என்ற ஒரே காரணத்திற்க்காக எரியும் தனலில் தூக்கி வீசப்பட்ட அந்த 3, 4 வயது குழந்தைகளுக்கு தெரிய போகிறதா என்ன நம் சொந்த காரன் ஒருத்தன் நம் இனத்தையே அழிக்க துடித்த ஓர் Corporate நிறுவனத்துடன் தான் தொழில் கூட்டு வைத்துள்ளார் என்பது!

    அடுத்து, ஆட்டை கடித்து மாட்டை கடித்து கடைசியில் மனிதனை கடித்த கதையாக சிறு சிறு நிறுவனங்களில் நுழைந்தவர்கள் இப்போது நேரடியாக தங்களை போன்ற பிரபலங்களை வளைத்துள்ளார்கள். 

    இது எங்கே போய் முடியும் என்பது எங்களுக்கு நன்றாகவே தெரியும். இவர்கள் மெல்ல மெல்ல எல்லா பெரு நிறுவனங்களுடனும் பங்குதாரராக முதலில் மாறுவார்கள். அடுத்து பெரிய பெரிய நடிகர்களையும் இயக்குனர்களையும் மொத்த மாதக் கணக்கில் ஒப்பந்தம் செய்து விடுவர். இது நாளடைவில் சார்லி சாப்ளின் காலத்து  Hollywood போல கலைஞர்களை விலைக்கு வாங்கி விடுவர். அதன் பின் திரையுலகம் முழுதும் ஓர் ஆக்டோபஸ் மாதிரி இவர்களின் ஆளுமை படர்ந்து விடும்!

    நாளை மற்றும் வரும் காலங்களில் ஈழ விடுதலை தொடர்பான முக்கிய சமயத்தில் தமிழ் திரையுலகம் மக்களை திரட்ட வழக்கமாக முன்னெடுக்கும் சாதரண கூட்டங்களை கூட நடத்த விடாமல் செய்து விடும் LYCA. 

    ஈழ விடுதலை பற்றியும் இனப்படுகொலை நிகழ்ந்த அந்த தேதி பற்றியும் தன் படத்தில் காட்சி அமைத்த ஒரே காரணத்திற்க்காக உப்பு சப்பு இல்லாத பொய் காரணத்தை கூறி ஓர் இயக்குனரை 'தடை ' விதிக்கிறது தயாரிப்பாளர்கள் சங்கம்!
   அதை தங்களை போன்றோர் ஏன் என்று கூட எட்டிப்பார்க்கவில்லை! 
   உங்களுக்கு ரோட்டு ஓரமா ஒண்ணுக்கு அடிக்கிறவன் தானே மிக கொடூரமான  சமூக விரோதி! 

    நீங்க கையெழுத்து போடுங்க சார்!  அங்கே கொன்று குவிக்கப் பட்ட அப்பாவிகள் ஒன்றும் நம் வீட்டை சேர்ந்தவன் அல்லவே!

      நீங்க, எந்திரன் 2.0 வேலையை பாருங்க சார்!   அங்கே ஏவுகணை தாங்கி சிதைந்து போனது நம் தந்தையின் முகம் இல்லையே!

    அப்டியே ரஜினி சாருக்கும் சொல்லிடுங்க!  தமிழன் மேல் அக்கறை இருப்பது போல் நடித்தாலே போதும் நாங்க அவரோட ஒரு துளி வியர்வைக்கே ஒரு பவுன் தங்கம் கொடுப்போம் என்று!  காரணம் ஈழத்தில் கொல்லப் பட்ட தமிழனும் எங்களை போல வே அவரையும் தலை.........வா என சத்தமாக கூச்சல்  போட்டு குதூகலம் அடைந்தவன் என்று!

  சினிமா துறையை சார்ந்த நண்பர்கள் இருப்பின் தங்களால் முடிந்தால் "ஷங்கரிடம் " இதை சேர்ப்பிக்கவும்!

திராவிட நாடு

திராவிட நாடு என்ற கோரிக்கையில் இருந்த ஆந்திரம், கேரளம் மற்றும் மைசூர் ஏன் தமிழகத்தை போல
சுயாட்சி கோர வில்லை???

பதில் இதோ :-

1918 துவக்கத்திலேயே இங்கே மக்களாட்சி துவங்கி விட்டது அதாவது நீதி கட்சி, காங்கிரஸ் போன்றவையும் மறைமலை அடிகளாரின் தனித்தமிழ் இயக்கமும் மக்களுக்கு சுயமரியாதை எண்ணத்தை விதைத்து விட்டனர்.

ஆனால், மற்ற மாகாணாங்கள் திருவிதாங்கூர், மைசூர், விஜயநகரம் என மன்னர் ஆட்சியாகவே இருந்தது! அதாவது முடியாட்சி

அந்த மக்களுக்கு சுயாட்சி என்பதோ , மக்களாட்சியோ,  அனைத்தும் புதியதே!

ஆனால் இங்கே நிலமை வேறு,

    சட்ட புத்தகம் வெளியான உடனேயே இது முற்றிலும் தேசிய இனங்களின் உரிமைக்கு எதிரானது முழுக்க இந்துத்துவமும், முதலாளித்துவமும் மட்டுமே பேசுகிறது என சொல்லி முதன் முதலில் அந்த புத்தகத்தை எரித்தவர் பெரியார் தான்!

அந்த புத்தகத்தை எரித்தால் என்ன தண்டனை கொடுப்பது என்று தெரியாமல் இந்தியா திண்டாடியது தனி கதை!

அதனால் தான் இன்றும், பார்ப்பனர்களுக்கு பெரியார் பெயரை கேட்டாலே பதறுகின்றது!

இந்தியாவின் ஒட்டு மொத்த தேசிய இனங்களுக்காகவும் முதன் முதலில் குரல் கொடுத்தவர் அவர் தான்!

  இன்றும், அவர் பெயரை வட மாநிலங்களிலும்  பல பழ்கலை. மாணவ அமைப்பு சுமந்து உறுதியாக  நிற்க காரணம் இதுவே!