Wednesday, 18 January 2017

Constitution belongs to Whom

தேர்தல் கட்சிகளை நம்ப கூடாது என நாம் ஏன் தொடர்ந்து சொல்லி வருகிறோம் ………?

சுதந்திரத்துக்கு முன்னர் இது 59 சமஸ்தானங்களை கொண்ட நாடு!
சுதந்திரத்துக்கு முன்னர் இந்தியா என்ற நாட்டுக்கான அரசியலமைப்பு சட்டம் நிறைவேற்றும் வேலை துவங்கியது!

அதில் அப்போதைய உயர் பதவியில் இருந்தவர்களும் காங். இந்துமகா சபா போன்றவற்றை தங்கள் கையில் வைத்திருக்கும் பெரு வணிக பனியாக்களுமே இதில் அதிகாரம் செலுத்தினர்!

அதாவது, தங்களின் விருப்பப் படி சட்டத்தை அப்போ நிறைவேற்றிக் கொள்ளும் வண்ணம் மாற்றி எழுத அல்லது வளைத்துக் கொள்ள முடிவு செய்தனர்.

இதில் உயர் பதவி என்பது ICS படித்தவர்கள் அதில் படிக்க சில நிபந்தனைகளை அரசு வைத்திருந்தது!
   1.பணக்காரனாக இருக்க வேண்டும்
  2. வீட்டில் அனைவரும் படித்திருக்க வேண்டும்!
   3.சிவப்பாக இருக்க வேண்டும் (சிரிக்காதீங்க மெய்யாலுமே இப்டி தான் வச்சிருந்திருக்கானுக)

   மேற்கண்ட மூன்று தகுதியும் அன்றைய தேதியில் யாரு சிலருக்கு மட்டுமே இருந்திருக்கும் என்பதை நீங்களே யூகித்து கொள்ளுங்கள்!

. அடுத்தது பெருவணிக நிறுவனங்கள் அடங்கிய டாடா, பிர்லா போன்ற பணக்கார பிரிவு!

  இவர்கள் யாரிடம் எழுத சொன்னார்களோ அவரின் பெயர் " அல்லாடி கிருஷ்ணய்யர் " .
ஆம் பார்ப்பனர் தான் .,!
இவர் எழுதினால் நமக்கு ஓரளவுக்கு சாதகமாக இருக்கும் என இவரை எழுதச் சொல்லியிருந்தனர்!

அவரும் சில பல மாதங்கள் கடந்தும் எழுதி கொண்டு வந்து சமர்ப்பித்தார்!

   படித்து பார்த்த இவர்கள் அதிர்ச்சியின் உச்சத்துக்கே போனார்கள்! காரணம் இவர் எழுதி கொண்டு வந்து கொடுத்தது சட்ட வரையறை இல்லை!
வர்ணாசிரமத்தை திணிக்கும் மனுஷ்மிரிதியை ஆங்காங்கு பெயர் மாற்றம் செய்து கொண்டு வந்து  கொடுத்திருந்தார்!

' அய்யய்யோ இதை கொடுத்தால் நாட்டில் கலவரம் தான் வரும் ' வேண்டாம் மாற்றுங்கள் என்றனர் அப் பெரு முதலாளிகளே!

   நன்றாக கவனியுங்கள் தன் நலனுக்காக ஓர் நாட்டின் எதிர் காலத்தையே தங்கள் விருப்பப் படி எழுதும் கூட்டத்தில் இருந்தே எதிர்ப்பு குரல் வருகிறது என்றால் அது எவ்வளவு கேவலமாக ஒரு பக்க சார்பாக எழுத பட்டிருக்க வேண்டும்!!!?

அதன் பின்னர் தான் அம்பேத்கரை அழைத்து இதனை சரி செய்து கொடுக்க சொன்னார்கள் இந்துத்துவா கும்பல்!
  
   சில இட ஒதுக்கீடுகள், பெண்கள் உரிமை போன்றவற்றை அவரால் சில இடங்களில் சொருக முடிந்ததே தவிர முழுமையாக மாற்ற இயலவில்லை!
ஓர் பாமரனை வைத்து சட்டம் இயற்றினோம் என பேருக்கு சொல்லிக் கொள்ளத்தான் அவரை பயன் படுத்தினர்!  அவரால் முடிந்த வரை சில நல்லதை நமக்கு அதனுள்ளே வைத்து விட்டு போய் விட்டார்!

    அவரையும் தாண்டி சில கேவலமான அரசியலமைப்பு விதியறைகள் இங்கே :-

  1. மண்ணுக்கு கீழே இருக்கும் அனைத்தும் இந்திய அரசிற்க்கு சொந்தம்! அதை யாருக்கு வேண்டுமானாலும் கொடுப்போம்!
  
        அதாவது 500 வருசமா நம்ம முன்னோர்கள், பாட்டன் முப்பாட்டன் எல்லாம் ஆண்ட நிலத்தின் கீழே இருக்கும் கனிம வளத்தை அவன் இஷ்டத்துக்கு திருடி கொள்வான்! வேண்டியவனுக்கு கொடுப்பான்.

   அப்படித்தான் குஜராத்தி அம்பாணி க்கு டெல்லியில் இருக்கும் அரசு தமிழக டெல்டா வில் பெட்ரோல் எடுக்கும் உரிமையை கொடுத்திருக்கிறது நம்மை கேட்காமலேயே!

2. கிருஸ்தவன், முஸ்லீம் அல்லாத அனைவரும் இந்துக்கள் என அழைக்கப் படுவர்!
 
     அப்படித்தான் தமிழன் இந்துவாக திரிக்கப் பட்டான்!   இன்னும் சீக்கியர்கள் தான் இதில் மிகப் பாவம்!  அப்படி ஒரு மதமே இல்லை என்கின்றது பார்ப்பனியம் எழுதிய இந்திய அரசியலமைப்பு சட்டம்!

3. பல தேசிய இனங்களை கொண்ட நாட்டில் ஒரு குறிப்பிட்ட இனத்திற்கு என ஓர் மாற்று சட்டம் கொண்டு வர வேண்டும் எனில் பாராளுமன்றத்தில் உள்ள 543 பேரில் 272 பேர் வாக்களிக்க வேண்டும்!

   ஆனால், தமிழகத்துக்கு ஒதுக்க பட்டதே 39 MP க்கள் தான்!

  மீதி இருப்பவனுக்கு தமிழனின் பாரம்பரியம் எப்புடி புரியும்??? 
ஒன்று தன் கட்சி சொல்லும் சட்டத்தை ஆதரிப்பான் அல்லது பணம் கொடுப்பவனுக்கு வாக்களிப்பார்கள் இதுதான் நடந்து கொண்டுள்ளது!

   (இதுவே பிரேசில் நாடாளுமன்றத்தில் அந்தந்த மாகாணங்களுக்கான சட்டதிருத்தங்களை அந்த MP களே தேர்வும் ஓட்டெடுப்பும் நடத்தி கொள்ளலாம்!  மற்ற மாநில MP க்கள் தலையிட முடியாது!)

அடுத்தது :-

   IAS
இதுதான் பெரிய வேடிக்கையே, பெயரை கவனியுங்கள், .... Indian Administrative Service

Not Peoples Administrative Service அரசும் விதிகளும் என்ன சொல்கிறதோ அதை கண் என கடமையாய் நிறைவேற்றுவதே இவர்கள் கடமை!

  அதைத் தாண்டி அவர்களால் எதுவுமே செய்ய இயலாது!  ஆனால், இங்கே இந்தியா என்பது இந்திய அரசியலமைப்பு சட்டம், அந்த சட்டத்தை எழுதியவன் பெரு வணிக பணியா கும்பலும் பார்ப்பனர் கூட்டமும் தான்!

   ஒரு தொகுதி இல்லை 234 லும் 30 மாவட்டங்களிலும் கக்கனும், காமராசரும் சட்டமன்ற உறுப்பினர்களாகவும் உதயச் சந்திரனும் சகாயம்ங்களும் கலெக்டராகவே வந்தாலும் இந்தியம் சொல்வதை செய்ய மட்டுமே இவர்களால் முடியும்!

தேர்தல் கட்சிகளும் அப்படித்தான் ,. பணியா கும்பல் இயற்றிய சட்டத்துக்கு அடி பணிந்து தான் கையொப்பம் இட்டு கட்சி தொடங்கி உள்ளார்கள்!

   எதிர்த்து கேள்வி கேட்டால் அவர்களையே இல்லாமல் செய்து விடும் இந்த சட்டம்!

   எங்கே………… ,  நேற்றில் இருந்து "தனித் தமிழ் நாடே தீர்வு " என முழக்கம் இடும் மாணவர்களை போல ஒரே ஒரு வார்த்தை இந்த தேர்தல் கட்சிகளை பேருக்காவது சொல்ல சொல்லுங்களேன் பார்ப்போம்!  அவர்கள் சொல்கிறார்களோ இல்லையோ …!
அத்தோடு உங்களை கட்சியிலிருந்து தூரம் வைத்து விடுவார்கள்! 

      இதற்கான ஒரே தீர்வு உலகின் முதல் தேசிய இனம் தனக்கான தனித்துவமான இறையாண்மையை பெறுவதே ஆகும்!  அதாவது
சமீபத்தில் ஸ்பெயின் -ல் இருந்து CATALONIA தனித்த சுய ஆட்சி பெற்றதோடு ஸ்பெயின் நாட்டுடனே இணைந்து இருப்பது போலவும்!

          இந்திய இறையாண்மையையும் நாம் தொந்தரவு செய்ய வேண்டியதில்லை நமக்கான உரிமைக்காக எவன் பதிலுக்கும் காத்திருக்கவும் தேவை இல்லை!

      அதற்கு நம் போராட்ட களம் மட்டுமே வழி வகுக்கும்! மக்கள் போராட்டம் ஒன்றே எல்லாவற்றிற்கும் தீர்வு …………!

  

Friday, 13 January 2017

Facist Hinduthuva Vs Tamil People's

பொன்னார் மன்னிப்பு கேட்டாராம் ………!

யோவ், இதுக்கெல்லாம் இந்த பீஸை எல்லாம் மன்னிச்சு நல்லவரா மாத்தீடாதீங்க!  அந்த மாட்டோட சாணி கூட நம்மளை மன்னிக்காது!

   ஆரியத்துக்கு நேரெதிர் அல்லது அதனின் பொய்யையும் புரட்டையும் முகத்திரையை கிழிக்கும் ஒரே தேசிய இனம் தமிழினம் தான்!
எனவே இந்தியாவின் ஒவ்வொரு நகர்வும் தமிழனின் வாழ்வையும் வளத்தையும் சிதைக்கும் வேலையாக மட்டுமே இருக்கும்!

2014 மே  துவங்கி இன்றுவரை எந்த ஓர் நாசக்கார திட்டம் வந்தாலும் அது தமிழகத்துக்கே தள்ளப் பட்டுள்ளது! 
ஒரே நல்ல காரியம் என நினைத்த AIMS மருத்துவமனையையும் பறித்து விட்டனர்! 
      ஒரு பேப்பரை எடுத்து BJP ஆட்சிக்கு வந்த பின் தமிழகத்துக்கு செய்த நல்லது என்னென்ன என்று ஒரு பட்டியல் போடுங்களேன் உறுப்படியாக ஒன்னு ரெண்டு கூட தேராது!
  
அதே நேரம் தமிழகத்திற்குள் திணிக்கப் பட்ட, அநீதி இழைக்கப் பட்ட நிகழ்வுகளையும் பட்டியல் போட்டு பாருங்களேன் ……!  அப்போது புரியும் தமிழன் எவ்வளவு கீழ்த்தரமாக நடத்தப் படுகிறான் என்று!

   இவர் மன்னிப்பு கேட்பது ஒன்றும் மனசாட்சி உறுத்தி எல்லாம் இல்லை!

2013 க்கு பிறகு மாணவர்களின் எழுச்சி இந்தியாவை திரும்பி பார்க்க வைத்துள்ளது! 

பாஜகவின் சுயரூபத்தை ஒவ்வொரு பேரணியிலும் ஒன்று கூடலிலும் மாணவர்கள் தோலுரித்து காட்டியிருக்கிறார்கள்!
   அதை எப்படி சமாளிப்பது என தெரியாமல் மன்னிப்பு கேட்பதாக ஜகா வாங்கியிருக்கிறார் ராதா!  இது போன வருசத்துக்கான Script என்பதை மறந்து விட்டார் போல!  வரும் வருடம் (2017) ல் ஜல்லிக்கட்டு நடந்தே தீரும் இந்த வருசம் மட்டும் (2016)  சகித்துக் கொள்ளுங்கள் என்று கேட்ட அதே வாய் தான் இன்று மன்னிப்பு கேட்பதாக மாற்றி பேசுகிறது!
    
     இவற்றையெல்லாம் தாண்டி நாம் கவனிக்க வேண்டியது! பாதுகாக்க வேண்டியது மாணவர்களின் எழுச்சியைத் தான்!

    ஜல்லிக்கட்டு டன் இந்த எழுச்சி நீர்த்து போகாமல்  விவசாயிகளின் தற்கொலை, மீத்தேன், கெயில், கூடங்குளம், Pepsi, Coke, என அனைத்து சமூக சீரழிவு திட்டங்களிலும் மாணவர்கள் இதே தீவிரத்தை காட்டினால் மட்டுமே நம் சந்ததியினரின் எதிர்காலம் கேள்விக்குறியாகுவதை தடுக்க இயலும்!

எல்லாவற்றுக்கும் முன்னதாக பாஜக கொண்டு வர துடிக்கும் மாணவ சமுதாயத்தின் வாழ்வை மீண்டும் வர்ணாசிரம அடிப்படைக்கே கொண்டு செல்லும் "புதிய கல்வி கொள்கையை " எதிர்த்து நிற்பது முக்கியமான ஒன்று!

   மேலும்,
2015 ல் டிச.16,17,18&19 தேதிகளில் கென்ய தலைநகர் நைரோபியில் நடந்த WTO வின் கல்வியை வணிக மயமாக்கும் ஒப்பந்தத்தில் கையொப்பம் இட்டு ஒட்டு மொத்த இந்திய மாணவ சமுதாயத்தின் உயர்கல்வி -யில் மண்ணை போட்டது பாஜக என்பதே இந்த நிமிசம் வரை தமிழக மாணவர்கள் பலருக்கும் தெரியாது!

   இதை எதிர்த்து ஓர் முழு பல்கலைக்கழகமே போராட்டத்தில் அன்றே குதித்ததது!
ஆனால், அடுத்த சில நாட்களில் அவர்கள் தீவிரவாதிகளாக சித்தரிக்கப் பட்டது குறிப்பிட்ட தக்கது!
அந்த கல்லூரி டெல்லி JNU ………!

இத்தனை விடயங்களையும் மாணவர்ளிடம் பொது சமூகத்திடமும் கொண்டு போய் சேர்ப்பதே நம் ஒவ்வொருவரின்  கடமை!

2013 ல் எழுந்த மாணவர் எழுச்சியை தேர்தல் அரசியலில் நிறுத்தியதால் தான் அடுத்த வருடமே (2014) ல் ஏன் என்று கேட்க கூட நாதியில்லாமல் வெறும் நூறு பேர் மட்டுமே ஈழத்துக்காக தெருவில் நின்றோம் என்பதை மறவாதீர்கள்! 

போராட்டம் மட்டுமே நமக்கான உரிமையை பெற்றுத் தரும் .! மாறாக எந்த பதவியும் அல்ல! 
பதிவியை வைத்து காரியம் சாதிக்க நாம் ஒன்றும் நமக்கான தனி இறையாண்மையை வாங்கி விட வில்லை என்பதை உணருங்கள்!

Assam Youth Festival ம் பாஜக வின் பயமும் 13/01/17

தமிழ்நாடு மட்டும் தான்  தனியாக பிரியும் என  நாம் உற்று நோக்கினால், இல்லையில்லை வட கிழக்கும் உங்களோட வர காத்திருக்கிறது என இந்துத்துவா சொல்லாமல் சொல்கிறது!

The Metropolis Urban Winter Festival - அஸ்ஸாம் மற்றும் வட கிழக்கு மாநிலங்களின் காலாச்சார பண்பாட்டை உயர்த்தி பிடிக்கும் ஓர் நிகழ்வு தான் இது!
ஓவியம், இசை, சமூகம் சார்ந்த விழிப்புணர்வு மேடை நாடகங்கள் என இளைஞர்களால் களை கட்டும் அஸ்ஸாம் தலைநகர் கவுகாத்தி! உலக நாடுகளின் அறிவுஜீவிகளும் முற்போக்கு சிந்தனாவாதிகளும்
Assam Tourism, வட -கிழக்கு பண்பாடு மற்றும் காலாச்சார மையம் போன்ற அரசு துறைகளே  இதனை Sponsor செய்யும் அளவுக்கு பிரச்சித்தியானது!
5 வருடங்களாக Youth Festival என்ற அடை மொழியோடு இது நடந்து வருவது குறித்து வட - கிழக்கு மாநிலங்கள் பெருமிதமாக பார்க்கும் ஓர் ஒன்று கூடல்  இது!

   இப்போ இதுக்கு என்ன பிரச்சனை என்கிறீர்களா???

நமக்கு இருக்கும் அதே பிற்போக்கு மதவாதிகள் தான் பிரச்சனை! கடந்த மே மாதம் தமிழகத்தோடு சேர்ந்து அஸ்ஸாமுக்கும் தேர்தல் நடந்தது நினைவிருக்கிறதா ………!?

அங்கே ஓர் மாநில கட்சியுடன் இணைந்து ஆட்சிக்கு வந்தது பாஜக!
முதல்வராக பாஜகவை சேர்ந்த ஒருவர் தேர்ந்தெடுக்கப் பட்டார்!

முதல் வேலையாக பாபா ராம் தேவ்-க்கு சில ஆயிரம் ஏக்கர் நிலங்களை  பதஞ்சலி நிறுவன வளர்ச்சிக்கு என தாரை வார்த்தனர்!
அதே நாட்களில் தான் மணிப்பூரில் பெண்கள் தெருவில் இறங்கி தங்கள் காடுகளையும் மலைகளையும் Corporate க்கு இந்தியா தாரை வார்ப்பதை எதிர்த்து (Inter Line Permit)  போராடிக் கொண்டிருந்தனர்!

  இந்தியா முழுக்க பண மதிப்பு நீக்கத்தில் தத்தளிக்க அஸ்ஸாமில் குறிப்பிட்ட பகுதியில் மட்டும் அந்த விதி தளர்த்தப் பட்டு இருந்தது!
அடடே அருமையான விடயம் என உள்ளே சென்று விசாரித்தால், வரப் போகிற ஓர் குறிப்பிட்ட தேர்தலுக்கு பயந்தே பாஜக அப் பகுதிக்கு De monitaization ல் இருந்து விலக்கு அளித்தது வெளிச்சத்துக்கு வந்தது!

   இப்போது,
மேலே கூறிய Youth festival லை தடை செய்துள்ளது பார்ப்பனிய பாஜக அரசு!

காரணம் என்னவென்று தீர ஆராய்ந்தால், அங்கே நடக்கும் சமூக விழிப்புணர்வு பிரச்சாரங்கள், இந்துத்துவா -வின் தோலை உரிக்கும் ஓவியங்கள், மற்றும் முற்போக்கு உலகளாவிய சிந்தனையாளர்களின் அறிவார்ந்த உரையாடல்களும் தான்!

ஏன் இதை போய் யாராவது தடுப்பார்களா என்றால் ………?  அது தான் உண்மை!
இந்துத்துவா வின் பிற்போக்கு சிந்தனைகளாலும் சிந்தனையாளர்களாலும் தான் இத்தனை நாள் மோடி போன்ற இனப்படுகொலையாளன் எல்லாம் தமிழகத்துக்கு அவ்வப்போதேனும் வந்து போக முடிகிறது!  (அதற்கே கருப்பு கொடி காட்டி அதிர வைத்தவர்கள் நாம் தான் என்பது வேறு கதை)

அப்படி பட்ட பிற்போக்கு சிந்தனைகள் மெல்ல மெல்ல இது  போன்ற அறிவார்ந்த முற்போக்கு சிந்தனையாளர்களால் உடைக்கப் படும் என்பதையும், முகமூடிகள் கிழிக்கப் படுவதயும் எப்படி பாஜக /RSS ஜீரணிக்கும்!

அதனால் தான் தடை ……!

கடந்த 8 ம் தேதி ஞாயிறு மாலையில் விழா அரங்கு உள்ளே நுழைந்த காவல்துறை, நிகழ்ச்சியை உடனே நிறுத்துங்கள் இது முதல்வரின் உத்தரவு என தடை போட்டுள்ளனர்!

அடுத்த சில மணிகளில், மின்சாரம் குடிநீர் என அனைத்தும் தடை பட்டுள்ளது!
வெளிநாடுகளில் இருந்து வந்திருந்த 700 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் இருட்டிலேயே தத்தமது Stall களில்  அமர்ந்திருந்தனர் . குழுமியிருந்த 6000 க்கும் மேற்பட்ட மக்களும் கலைஞர்களும் அவதிக்குள்ளாயினர்!

அதற்கு இவர்கள் சொன்ன காரணம் தான் மிகப் பெரிய நகைச்சுவை!

மாநில பாஜகவின் நிதி அமைச்சர் தனது Tweet -ல் :-

அந்த இடம் சிறுவர்களுக்கானது அதில் எப்படி நீங்கள் நிகழ்ச்சி நடத்தலாம்!?  குப்பை போடுவதை நான் அனுமதிக்க மாட்டேன்!

   இது சிறுவர் பூங்கா என கடந்த சில வருடமாக நிகழ்ச்சிக்கு Sponsor செய்யும் Assam Tourism of Department க்கு தெரியாதா??

கலாச்சார பங்குதாரரான North East Cultural Forum க்கு தெரியாதா???

அவ்வளவு ஏன் 6-ம் தேதி விழாவை துவங்கி வைத்த கவுகாத்தி மாநகர் காவல் துறை தலைமை அதிகாரி அங்கமுத்து விற்கு தெரியாதா???

      ஆடத்தெரியாவன் தெருக் கோணல் என்ற கதை நான் நினைவுக்கு வருகிறது!

   பாஜகவே அந்தந்த தேசிய இனங்கள் இந்தியத்தை எட்டி உதைத்து தங்களுக்கான தனி தேசத்தை வாங்கும் வழியை திறம்பட காட்டி வருகின்றது!

Wednesday, 11 January 2017

சிரிய நண்பன்


How do you know about Kurdish...!  - அந்த சிரியா நாட்டு நண்பர் என்னை பார்த்து நேற்று கண்கள் விரிய ஆச்சரியமாக கேட்டார்!

    நான் இங்கு வந்த ஒரு மாதத்தில் என் அலுவலகத்தில் அவ்வப்போது அவரை பார்த்திருக்கிறேன்!
    போருக்கும் இடிபாடுகளுக்கும் இடையே காலம் விரட்டியதில் அலைக்கழிந்து போயிருக்க வேண்டும் அவரின் வாழ்க்கை பயணம்!

நான் அவரை கவனித்த வரை, அவர் ஓர் முன்னாள் சிரியா நாட்டு அரசு ஊழியர்! . சில பிரச்சனையினால் ஓமன் வந்து சேர்ந்து விட்டார்.!  ஐந்து வருடங்கள் முடியப் போகின்றன!  இனி சிரியா திரும்பினால் தன்னால் மீண்டும் வெளியே வரவே முடியாது என கூறிக் கொண்டிருந்தார்!

நேற்று எனது Senior கள் அங்கே நடக்கும் போரை பற்றியும் தற்போதைய நிலமை பற்றியும் பேச்சு வந்த போது நான், 
குர்தீஸ் தேசிய இன மக்களே தங்களின் சுயாதீன இராஜ்யமாக அறிவித்த (Federal State for Kurdistan) பகுதி இப்போது எப்படி உள்ளது..!!!? Is there everything fine???

அப்போது தான் அவர் உங்களுக்கு எப்படி குர்தீஸ் இன மக்களை பற்றி தெரியும் என கேட்டார் என்னிடம்! 
உடனே என் சீனியர், 'எங்காவது செய்தித்தாளில் படித்திருப்பார் அதை வைத்து கேட்கிறார், என்றார்!

  ஹ ஹ ஹா!  நான் மௌனமாக சிரித்துக் கொண்டேன்!

வெறும் செய்தித்தாளில் மட்டுமே படித்து விட்டு நகரும் சாதாரண போராட்டமா குர்திஸ்தான் விடுதலை யுத்தம்!

    இன்றைய நம் சம காலத்தில் சர்வதேசத்தை எதிர்த்து சமீப நாட்களில் தங்களுக்கான சுதந்திர தனி தேசத்தை பிரகடம் செய்திருக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஓர் தேசிய இனம் குர்தீஸ்!

   நான் அவ்வாறு கேட்டதும், I am too Kurdish என பேசத் துவங்கினார் அந்த நண்பர், அவை அப்படியே இங்கே :-

நாங்கள் 200 வருடங்களாக நிம்மதியகத்தான் வாழ்ந்து வந்தோம்!

அமெரிக்காவும் - இங்கிலாந்தும் உள்ளே வந்த பிறகு தான் எங்களின் நிம்மதி தொலைந்தது!

அதுவரை அனைத்து மக்களும் மத வேறு பாடு இன்றி ஒரே நாடாகவே வாழ்ந்து வந்தோம்!  இவர்கள் வந்த பின் பெரும்பான்மை மாதவாதிகள் தூண்டிவிடப் பட்டு அடுத்த மதத்தினரை  தாக்கும் நிலை துவங்கியது!

ஒரு கட்டத்தில் முஸ்லீம் மக்களுக்கு தலைவர் தான் தான் தலைவர் என ஒருவர் கூறிக் கொண்டு அரசியல் செய்ய அங்கு தான் பிரச்சனை வேறு திசைக்கு மாறியது! பலரை இழந்து விட்டோம்!

இனி ஊருக்கு திரும்புவதில்லை என்பது அவரின் பேச்சில் தெரிந்தது!
 
   அமெரிக்கா - இங்கிலாந்து போன்ற மேற்குலக நாடுகள் சிரியாவின் கனிம - பெட்ரோலியத்துக்காக உள் நாட்டு கலவரத்தை தூண்டியது குறிப்பிட தக்கது!

ISIS க்கு அமெரிக்கா உதவுவது ஊருக்கே தெரியும்!

ஆனாலும், நீயா நானா என அடித்துக் கொள்வதில் தொலைந்து போனது குர்தீஸ் இன மக்களின் அமைதி!

மக்கள் குர்தீஸ் தேசிய இன  மக்களாக இருந்தவரை எல்லாம் சரியாக இருந்தது!  மத ஏற்றத் தாழ்வுகள் உட்புகுந்து பலரின் வாழ்வை சீரழித்தது! 
தற்போது இந்திய தேசியம் என்ற பெயரில் இந்துத்துவா வை பாஜக - RSS திணிக்க நினைப்பதைப் போல!
அதை பயன் படுத்தி நம் வளங்களை மேற்குலகும் Corporate களும் எளிதில் சுரண்டும்!  நாம் அது தெரியாமல் சாதி மத சண்டை போட்டுக் கொண்டிருந்திருப்போம்!

இந்திய கூட்டமைப்பின் தேசிய இனங்களில் தமிழினம் எப்போதுமே முற்போக்கு சிந்தனை உடையது! 
அதனால் தான் நாம் எத்தனையோ சாதி ரீதியான மத ரீதியான சர்ச்சைகளையும் தூண்டுதல்களையும் இலகுவாக கடந்து விட்டோம்! 
அந்த முற்போக்கு நிதானத்தையே இந்தியம் தவறாக கணித்து நம்மை அடிக்கடி சீண்டுவது குறிப்பிட தக்கது!
அதற்கு அவ்வப் போது செவிட்டில் அறைந்தாற் போல சில பதில்களை தந்தே ஆக வேண்டியது அவசியம்!

தமிழனுக்கு பல எதிரிகள் அதில் கண்ணுக்கு தெரியாத முதல் எதிரி அமெரிக்கா!

கண்ணுக்கு தெரிந்த முதல் எதிரி சாதியும் - மதமும்!






Thursday, 5 January 2017

US vs Russia 5/1/17

இரண்டு நாள் முன்பு நாம் கூறியது போலவே NATO படைகள் மூலம் தன் படைகளை ரஷ்யாவுக்கு எதிராக நிறுத்த துவங்கி விட்டது அமெரிக்கா!
                     
ஜெர்மனியில் இருக்கும் தன் படைதளத்தில் இருந்து 2000 பீரங்கி  டேங்கர் களை கிழக்கு  ஐரோப்போ நோக்கி அடுத்த இரு நாட்களில் நகர்த்த US முடிவே எடுத்து விட்டது!  மேலும் 1600 பீரங்கி வாகனங்களை முன்னெச்செரிக்கையாக சேமித்து வைக்க  நெதர்லாந்தை தேர்வு செய்துள்ளனர்.

  இந்த நடவடிக்கைக்கு Operational Atlantic Resolve - என பெயர் சூட்டியுள்ளனர். நேட்டோ படைகளின் பெயரை சொல்லியே தனக்கு வேண்டிய இடங்களில் எல்லாம் கப்பல் நிறைய இராணுவத்தையும் ஆயுதங்களையும் அடுத்த வார இறுதிக்குள் நிரப்ப முடிவு செய்து விட்டது அமெரிக்கா!

அதே நேரத்தில் நேட்டோ படைகளின் ஆயிரக்கணக்கான படை வீரர்கள் ரஷ்ய எல்லையை நோக்கி நகர்ந்து கொண்டுள்ளனர். இதை நீங்கள் படிக்கும் போது அவர்கள் எல்லையில் முகாம் அமைத்து விட்டிருக்கலாம்!

ஐரோப்பாவுக்கான அமெரிக்க இராணுவ அதிகாரி Frederick "Ben" Hodges கூறுகையில்,

போர் நடந்தே ஆக வேண்டும் என்ற அவசியம் இல்லை!  "ஆனாலும் மூன்று வருடம் முன்பு ஐரோப்பா கண்டத்தை விட்டு வெளியேற்றிய கடைசி டாங்கிகள் வரை நாங்கள் மீண்டும் வரவழைக்கும் நிலையில் உள்ளோம் "
இங்கே நாங்கள் ஜெர்மனியின் உதவியின்றி எங்குமே நகர முடியாது என்பதை நன்றாகவே உணர்ந்துள்ளோம், ஆனால் அவர்கள் நேட்டோ படை என்பதால் உதவிதான் ஆக வேண்டும்!

  மூன்று கப்பல்களில் 4000 துருப்புகளும் 2 ஆயிரம் டாங்கிகளும் அமெரிக்காவிலிருந்து  ஜெர்மனியை  வந்தடையும்.
அங்கிருந்து போலந்துக்கும் EU ன் கிழக்கு, மத்திய நாடுகளுக்கு ரயில் மூலம் அனுப்ப படும்!

  உலக அரசியல் ஆய்வாளர்கள் கிட்ட தட்ட அதிகாரப்பூர்வ போர் அறிவிப்பாக பார்ப்பது அமெரிக்காவின் 3 வது Brigade ன் 4th Infinity Division ரஷ்ய எல்லைக்கு அனுப்பட்டதைத் தான்!
    இதுவே இப்போது சர்வதேச அரசியலில் மீண்டும் சூட்டை கிளப்பியுள்ளது!

ஒட்டுமொத்தமாக சிறு சிறு சரக்கு கப்பல்களில் 6-8 ம் தேதிக்குள் குறைந்தபட்சம் 2500 சரக்கு பெட்டகங்கள் துப்பாக்கிகள், கையெறி குண்டுகள் என உயிரைக் கொல்லும் விதவிதமான வஸ்துக்கள் ஜெர்மனி யை வந்தடையும்!

மேலும்,

900 - கார்கள்

600 - நடமாடும் ஆயுத கிடங்குகள் இவை இருப்பு பாதை வழியே!
மேலும் 40 வாகனங்கள் சாலை வழியே இவை அனைத்தும் சென்று சேரப் போகும் இடம் போலந்து!

இதில் கொடுமையே Departure செய்ப்படும் இடம் தான் . அது - ஜெர்மனியின் ப்ரேமன்!
       ஈழ விடயத்தை உண்மையில் உற்று நோக்குபவர்களுக்கு இந்த இடத்தின் அருமை புரியும்!

    இந்த விடயத்தில் தன் பெயரை கெடுத்துக்கொள்ள கூடாது என்று ஜெர்மனி மெல்ல ரஷ்யா அணு ஆயுதத்தை பயன் படுத்த முயல்கிறது இது கண்டிக்க தக்கது என மையமாக வாயை அசைத்து விட்டு அமைதியாகி விட்டது ! 

ஆனாலும் தன் பங்குக்கு 26 டாங்கிகள், 100 மாற்றுவகை வாகனங்கள் மற்றும் 120 கன்டெய்னர்களையும் லூதியானா நோக்கி அனுப்பு ஒப்புக் கொண்டுள்ளனர்!

ஆனால், இத்தனை Scene களையும் அமைதியாக வேடிக்கை பார்க்கிறது மாஸ்கோ என்கிறன  ஊடகங்கள்.
Frederick Hodge ஜோ, ரஷ்யா முழுமையான 100% தயாரிப்புகளுடன் அமைதிகாக்க கூடியவர்கள் . யார் முதல் குழலை (Pistol)  திறக்க போகிறோம் என்பதில் தான் இருக்கிறது மூன்றாம் உலகப் போரா இல்லை பனிப் போர் மட்டுமேவா என்ற முடிவு என்கிறார்!

   ஏற்கனவே Eygelshoven எனும் கிராமத்தில் போரில் முதன் ஆளாய் நிற்கும் 1,600 காலாட்படையை அமெரிக்கா நிறுத்தி விட்டது குறிப்பிட்ட தக்கது! இது பெல்ஜியம் - ஜெர்மனியின் கடைசி எல்லை கிராமம் ஆகும்!
இந்த ஊரை இதற்கு முன்பும் அமெரிக்கா பயன் படுத்தியுள்ளது, அது 1985 ல் ரஷ்யா - US பனிப் போர் துவங்கிய காலகட்டம் அது!

    இந்த போரின் பெயரை வைத்து எந்த இனப்படுகொலைக்கு அச்சாரம் போடுகிறார்கள் இந்த பண்ணாடைகள் என நினைத்தாலே பகீர் என்கிறது மனசு!