Wednesday, 25 October 2017

கட்டலோனியா - சுதந்திர நாடு

ஐரோப்பா முழுதும் தேசிய இனங்களுக்கான சம உரிமை கேள்விக்குறி ஆகியுள்ளதாகவே சர்வதேச அளவில் பார்க்கப் படுகின்றது!
EU வின் வெளியே-வும் சரி உள்ளேவும் சரி தேசிய இனங்களுக்கான சுய நிர்ணய உரிமை கோரிக்கை குறித்தான  அழுத்தம் இனி எந்த காலத்திலும் காலணி ஆதிக்கங்களால் அடக்கி விட முடியாத ஒன்றாகவே மாறியுள்ளதாக ஊடகவியலாளர்கள் மேற்கோள் காட்டுகின்றனர்!

இத்தனை ஆண்டுகள் ஐரோப்பிய காலணி ஆதிக்கம் எந்த அளவு தேசிய இனங்களை நசுக்கி வைத்துள்ளது என்பதை ஒவ்வொரு தேசிய இன மக்களும் அறியத் துவங்கி விட்டனர்!
தங்களின் புதைக்கப் பட்ட திரிக்கப்பட்ட வரலற்றை மக்களே தேடித் தேடி மீண்டும் வெளிக் கொணர துவங்கி விட்டனர்!
ஐரோப்பிய கூட்டமைப்பு உலகின் அமைதியன ஓர் கூட்டமைப்பு என்ற பெயரையே ஸ்பெயின் உடைத்து விட்டதாக அனைவரும் கருதுகின்றனர்!

கடந்த அக். 1 அன்று கட்டலோனிய பாராளுமன்றம் அறிவித்த பொதுவாக்கெடுப்பை சீர் குழைக்க ஸ்பெயின் அரசு செய்த வேலைகள் அனைத்தையும் உலகமே பார்த்து கோபத்தை கொப்பளித்ததை யாருமே மறுக்க முடியாது!

இவர்கள் நடத்திய வன்முறையால் 42.3% மக்களால் மட்டுமே வாக்களிக்க முடிந்தது என்பது குறிப்பிட தக்கது! அதிலும் பல அடிகளும், காயங்களையும் பொறுத்துக் கொண்டே மக்கள் இதனை நடத்தி முடித்தனர்! 91 % வாக்குகள் கட்டலோனியாவுக்கு ஆதரவாகவே விழுந்தது குறிப்பிட தக்கது!

இதில், கட்டலோனிய தனி நாட்டு தேவையை மக்கள் உலகிற்கு உணர்த்தி விட்டதாகவே தெரிகின்றது! மேலும், ஸ்பெயினின் கோர முகத்தையும் பிற்ப்போக்குத் தனமான காலணி ஆதிக்க மனநிலையையும் நமக்கு தோலுரித்துக் காட்டும் ஓர் வாய்ப்பாக இது அமைந்து விட்டது!
   இன்றைய ஐரோப்பிய யூனியனின் தேவை என்பது ஒவ்வொரு தேசிய இனத்திற்குமான உரிமையை தூசி தட்டி புதுப்பிப்பதும் அவர்களுக்கான உரிமையை வழங்குவதுமே சரியாக இருக்கும்!

கட்டலோனிய மக்களை SDR (Self Determination Rights) சுய நிர்ணய உரிமை சட்டத்தை நோக்கி தள்ளியதற்கு  அவர்களின் மொழி மீதான தாக்குதல் தான் முதல் காரணம்!
   அதே நிலைமையை தான் இந்தியா நமக்கும் உருவாக்கி வருகின்றது என்பதே யதார்த்தம்!

கட்டலோனிய சுதந்திர தாகம் உருவானது இன்று நேற்றல்ல, Francisco Franco's ன் சர்வாதிகார ஆட்சி காலத்தில் ' (1936 - 1975) கட்டோலன் மொழி முழுமையாக முடக்கப் பட்டு, ஸ்பானிஷ் மட்டுமே முன்னிருத்தப் பட்டது!
    அப்போதே  விடுதலை வேட்கயை கட்டலோனிய மக்களின் மனது நாட துவங்கி விட்டது என்கிறானர் வரலாற்று ஆசிரியர்கள்!

  அன்றைய தினம், கட்டலோன் மொழியில் பெயரை கூட தடுத்து நிறுத்திய காரணம் தன் மக்கள் தங்களின் உரிமையை தூக்கி பிடிக்கவும் முந்தைய கட்டலோனிய வரலாற்றை தேடி மீண்டும் புத்துயிர் கொடுக்கவூம் காரணமாக இருந்தது!

எத்தனை அடக்குமுறையிலும் அம் மக்கள் ஸ்பானிஷை உள்ளே நுழையவே விடக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தனர்!

   தங்களின் மொழி உரிமையை, மொழி பெருமையை குழந்தைகளுக்கு ஊட்ட துவங்கினர்! இலக்கியங்களும், காவியங்ளும் தங்கள் மொழியிலேயே கொண்டு வரத் துவங்கினர்!
  
இதோடு நம் ஹிந்தி எதிர்ப்பு போராட்ட காலத்தை ஒப்பீடு செய்து கொள்ளலாம்! அதே 1960, 70 மொழிப் போர் தீவிரமாக தமிழகத்தில் கனற்று கொண்டிருந்த சமயம் அது!  (என்ன ஓர் ஒற்றுமை பாருங்கள் உலகின் தெற்காசியாவில் நடந்த அதே புரட்சி,  வட மேற்குலம் ஒன்றிலும் துவங்கி இருக்கிறது)

இதில் கவனிக்க வேண்டிய ஒன்று, Francisco வின் ஸ்பெயின் முழுதுமான பாசிச அடக்கு முறையில் மொழி திணிப்பு இருந்தாலும்  ஷ்பானிய மொழியை முற்றிலும் தவிர்த்தும் கூட மற்ற மாகாணங்களை விடை "Catalonia "மாபெரும் பொருளாதார வளர்ச்சியை பெற்றது என்பதை இப்போது வரை ஒட்டு மொத்த Europe ம் ஆச்சரியம் விலகாமல் சொல்கிறது!

  இதையே தான் மே பதினேழு இயக்கம் தொடர்ந்து, தேசிய இன மொழி, கலாச்சாரம் இணைந்த "சுய சார்பு / தற் சார்பு பொருளாதாரம் வேண்டும் என்கிறோம்!

இது கட்டலோனிய மக்களின் விடா முயற்சியினாலேயே நிகழ்ந்து உள்ளதாகவே Spain னே ஒத்துக்கொள்ளும்!
தங்களின் கனிம வளங்களை மற்ற யாருடனும் பகிர்ந்து கொள்ள கூடாது என்பதில் மிகவும் தெளிவாக இருந்தனர் ! முக்கியமாக Spain உடன் தங்கள் உரிமையை பகிர்வது இல்லை என்பதில் தெளிவாக இருந்தனர்,இருக்கின்றனர் இப்போதும்! இதுவே தனித்த தேசிய உணர்வின் முதல் வெளிப்பாடு என்றே பார்க்கப் படுகிறது ! Catalonia பிரிந்து போனால் அதன் மூலம் மிகப் பெரிய இழப்பு Spain -க்கு தான் என்பதை நன்றாகவே உணர்ந்து உள்ளது Spain . ஐரோப்பியாவுக்கும் தான் என்பதை EU கூட்டமைப்பு உணர்ந்து உள்ளது ! அதனால் தான் போது வாக்கெடுப்பின் போது ஐரோப்பாவும் Spain நடத்திய வெறி ஆட்டங்களை கண்டு கொள்ளவில்லை என்பதை உணரலாம்!
அதே நிலையை தான் நாம் இங்கே சந்திக்கிறோம்.
இந்தியா தமிழ்நாடு பிரிந்து போக கூடாது என்று சொன்னால் அது பாசத்தில் இல்லை பணத்துக்கத்தான் என்பதை ஒரே வரியில் புரிந்து கொள்ளுங்கள்!

  Catalonia-வை எதிர்ப்பவர்கள் வைக்கும் ஒரே குற்றச்சாட்டு .; இது சட்டத்திற்கு புறம்பான பொது வாக்கெடுப்பு என குறை கூறுவது தான் !       Spain அரசு நடத்தவில்லை பிராந்திய அரசு தான் நடத்தியது போன்ற உளறல்கள் தான் அதிகம்!
இந்த உளறல்களுக்கு காரணம் , வலது சாரி நாடான England ல் அரசே போது வாக்கெடுப்பை நிகழ்த்தியதையே Bench Mark என நினைத்து கொண்டதால் வந்து அறிவிளித் தன்மை !

இதை கவனித்து வரும் நடுநிலையான சர்வதேச அரசியல் விமர்சகர்கள் , Spain இதில் நீதி , நேர்மையை கடைப்பிடிக்கும் என நம்பினால் முட்டாள்த்தனமானது என்கின்றனர்.
ஓர் தேசிய இன மக்களின் உரிமை என்பது அரசோ,நாடோ வெகுமதி அல்ல நினைக்கும் போது கொடுக்கவும் வேண்டாம் என்றால் எடுக்கவும் !
அது உலகம் முழுதும் தனி மனித சுதந்திர உரிமை அதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும் அரசுகள் அல்ல !

ஒபாம வே வந்து இங்கிலாந்து EU -விலிருந்து பிரிய கூடாது என நேரடியாக சொல்லி விட்டு சென்ற பின்னரும் பிரிட்டன் அரசு வாக்களித்த  மக்களின் உணர்வுக்கு மதிப்பு அளித்தது உடனடியாக பிரிந்து போகும் வேலையை துவங்கியது!
மாறாக பாராளுமன்றத்தில் மறு பரிசீலனைக்கு செல்ல வில்லை!

அந்த அடிப்படை அறிவு கூட ஸ்பெயினுக்கு இல்லை என்பதே கசப்பான உண்மை!

1 ம் தேதி வாக்கெடுப்பு நடந்து முடிந்திருந்தாலும் கட்டலோனியா முழுமைக்கும் இப்போதும் போராட்டங்களும், பேரணிகளும் தொடர்ந்த வண்ணமே உள்ளது!  கட்டலோனிய பாராளுமன்றம் சுதந்திர நாடு என்பதை அங்கீகரத்து விட்டாலும்,  ஸ்பெயின் -ன் ஒப்புமை பெறும் வரை அலுவல் ரீதியாக தனி நாடு குறித்தான வேலைகளை நிறுத்தி வைத்திருக்கிறார் கட்டலோன் அதிபர் "கார்ல்ஸ் புஜிமெண்ட் ".
ஆனால், ஸ்பெயின் மாகாண அரசையே Article 151 (Constitutional of Spain) யை பயன் படுத்தி கலைத்து விடுவோம் என மிரட்டுகிறார் Prime Minister "மரியானோ ரஜோய் ".

  
  இதில் நாம் கற்றுக்கொள்ள வேண்டியது :-

  1. தற்சார்பு பொருளாதாரம்

  2. தேசிய இன பண்பாட்டோடு இந்திய பண்பாடு கலப்பதை தடுத்தல்!

  3. நம் கனிம / இயற்கை வளங்களை இந்தியா எடுப்பதை முற்றிலுமாக நிறுத்துவது!

  4. தாய் மொழி வழிக் கல்வி!

  5. அந்நிய (இந்திய) கலாச்சாரத்தை முற்றிலுமாக தடை செய்தல்!

    இந்தியா உணர்ந்து கொள்ள வேண்டியது!;-

   1.ஸ்பெயினை விட இந்தியா என்பது மிகவும் வயது குறைந்த தேசிய இனங்களின் கூட்டமைப்பே!

   2. தேசிய இனங்களின் மீது நடக்கும் தாக்குதல் தனிநாட்டு கோரிக்கையையே வலுப்பெற செய்யும் என்பது!

Monday, 23 October 2017

Panama Papers- ம் படுகொலைகளும்

அமிதாப் பச்சான் முதல் Leonal மெஸ்ஸி வரை முறை கேடாக சொத்து சேர்த்த வழக்கில் குற்றம் சாட்டிய Panama Papers நினைவு இருக்கிறதா ...!

Iceland -ன் அதிபர் மக்கள் புரட்சியால் வெளியேற்ற ப்ட்டத்ற்க்கும் இதே Panama Papers தான் காரணம்!

  அதே வரிசையில் Malta (One of the Europian Country )  நாட்டின்  பிரதமர் மீதும் பல குற்றச்சாட்டுகளை அடுக்கினார் Daphne Caruana Galizia
 (டெப்னே கர்வானா காலிஸீயா ). Malta நாட்டின் முக்கியமான புலனாய்வு ஊட்கவியலாளர்.

தனது Blog-களிலும், பொது வெளியிலும் அந்த நாட்டின் பிரதமரும் அரசின் தலைமை அதிகாரிகளும் ஈடுபட்டுள்ள முறை கேடுகள் பற்றியும் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்துள்ளார் என்பது குறிப்பிட தக்கது !

மேலும் இதில் நாட்டின் வணிக லாபத்தில் கொழிக்கும் தொழில் அதிபர்கள் சிலரையும் கேள்விக்கு உள்ளாக்க வேண்டும் என குரல் கொடுத்து இருந்தார்.

இது Panama Papers -ன் தொடர்ச்சி என்பதாலேயே பலரும் உற்று நோக்கி கொண்டு இருந்த ஓர் விடயம் இது !

இந்நிலையில் , கடந்த வாரம் 16/10/17 திங்கள் அன்று மதியம் தன்  வீட்டில் இருந்து காரை தனியே Car-ல் கிளம்பியவர் நடு வழியில் கார்-ல் இருந்த குண்டு வெடித்து உயிர் இழந்தார் !

  இது நாடு முழுதும் பெரும் அதிருப்தியை உண்டாக்கி உள்ளது !

அவரின் கொலைக்கு காரணம் , Prime Minister - Joshep Muscat தான் என பலரும் உறுதியாக கூறுகின்றனர். பிரதமரின் மனைவி பெயரில் Panama -வில் வாங்கி கணக்கு இருப்பதை வெளிக்கொணர்ந்தது தான் டெப்னே மீது இந்த கொலை நிகழ்த்த பட்டுள்ளது என்பதே பலரின் குற்றச்சாட்டு !

Mafia State - (கொலைகார நாடு ) என மக்களே பேனர் வைக்கும் அளவுக்கு நிலை சென்று விட்டது !

இன்று வரை இதற்கான காரணமாவர்கள் யார் என்று கண்டு பிடிக்காததே பெரும் நெருக்கடிக்கு Mr. Muscat யை தள்ளி உள்ளது ! சென்ற வார இறுதியில் இந்த கொலை பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு 1 மில்லியன் யூரோ வெகுமதியாக வழங்கப்படும் என பாராளுமன்றத்தில் அறிவித்து உள்ளார்.

இதனை முற்றிலுமாக மறுத்து உள்ள டெஃப்னே அவர்களின் மகன், PM பதவி விலக வேண்டும் அதற்கு முன்பாக என் அம்மா குற்றம் சாட்டிய அந்த காவல் துறை உயர் அதிகாரியும் , மற்ற ஒருவரின் பதவியும் பறிக்கப்பட வேண்டும் என கூறி உள்ளார்.

Europe கூட்டமைப்பு உயர் அதிகாரிகள் இதை மிகவும் வன்மையாக கண்டித்துள்ளனர். " இது உலக முழுதுமான பேச்சு, எழுத்து சுதந்திரத்திற்காண சவால் என்றே குறிப்பிடுகிறார்.

இந்தியாவில் " வியாபம் ஊழல் கொலைகளும் "

அதானி சொத்து குவிப்பை வெளிக்கொணர்ந்ததால் தோழர்.Paranjoy  Guha, "EPW"-வில் இருந்து வெளியேற்ற பட்டதும் உங்களுக்கும் நியாபகம் வந்தால்..............,


நாம் எத்தனை பெரிய எதிரியை எதிர்த்து நிற்கிறோம் என்பதை உணர்ந்து விட்டோம் என்றே அர்த்தம்

Thursday, 27 July 2017

கலாம் - கரு.பழனி-பொன்ராஜ்

அப்துல் கலாமின் உதவியாளர் பொன்ராஜ்,  கரு.பழனியப்பன் Karu Palaniappan
அவர்களுக்கு பதில் சொல்கிறேன் என பேசிய காணொளி பார்த்தேன், காணொளியின் முதல் பத்து நிமிடம் பற்றி பேசுவோம்!

இரண்டு விடயங்கள் மட்டுமே  :-

ஈழ இனப்படுகொலை க்கு பிறகு ராஜபக்ஷேவை சந்தித்து பேசியதாகவும் "நீங்கள் சொன்ன காரணம் / போர் " முடிந்து விட்டதே அம் மக்களுக்கு Federal அமைப்பை உருவாக்கி கொடுங்கள், இல்லையென்றால் 40 வருடம் கழித்து இன்னுமோர் விடுதலை போராட்டம் வரும்.  - என்றார் கலாம்  நான் பக்கத்தில் இருந்தேன்!

அங்கே நடந்தது விடுதலை போராட்டம்,.  பிச்சை கேட்கவில்லை! இலங்கையோடு அவர்களின் பொம்மை அரசாக ஒத்து வாழ நினைத்திருந்தால் "இந்திரா காந்தி " காலத்திலேயே தேசிய தலைவர் .பிரபாகரன் வடக்கு பகுதியின் முதல்வர் ஆகியிருப்பார்!

(இடையில பிரபாகரனை புகழ்ந்து பேசினார் கலாம் என உணர்ச்சி கொந்தளிப்பு வேறு!)
- அது சரி, தமிழன் உணர்ச்சி தூண்டலுக்கு அடிமை என்பதை நீங்களும் தெரிந்து கொண்டீர்கள் போல!

கலாம் பேசியதாக நீங்கள் கூறியதைத்தான், 
         கனிமொழியும் - TR பாலு வும் ராஜபக்ஷே விடம் சிரித்த வண்ணம் பரிசு வாங்கி கொண்டே சொன்னதாக நம்மிடம் சொன்னார்கள்!
      அதையே மீண்டும்  சொல்ல எங்களுக்கு நீங்கள் எதற்கு!
   
நாங்கள் கேட்பது அங்கே போருக்கு முன் நடந்த பொது மக்களின் மீதான கொத்து குண்டுகள் வீச்சை பற்றி ஏன் கலாம் சிறு கண்டனம் கூட தெரிவிக்கவில்லை!
  2006 ல் செஞ்சோலை மாணவர்கள் இல்லம் மீது நடந்த தாக்குதலுக்கு இங்கிலாந்தில் இருக்கும் The Guardian பத்திரிக்கை வெளிப்படுத்திய கொந்தளிப்பை கொஞ்சம் எடுத்து பாருங்கள்! 
    அதில் 1% கூட பேச கலாம் க்கு வாய் வரவில்லையே ஏன்?

போரு க்கு பின்னரான இன அழிப்பு குறித்து ஏதேனும் பேசி உள்ளாரா???
தமிழன் என்பதற்காகவே கொல்லப் பட்ட பாலச்சந்திரனை பற்றியும் 'இசைப் பிரியா ' பற்றியும் கேள்வி எழுப்பியுள்ளாரா?

அவரை ஊர் ஊராக போய் மக்களிடம் பேச சொல்லவில்லை!

ஒரே ஓர் கண்டன அறிக்கை கூட தனிப் பட்ட முறையில் கொடுக்கவில்லையே என்பது தான் எங்களின் கோபம்!

"உயிர் போகும் போது தண்ணீர் கேட்டால் தராமல் கருமாதிக்கு பால் ஊற்றுவதால் என்ன பயன்?

அடுத்தது :-

இராமேஸ்வரம் மீனவர்களுக்கு,

Solar light for boat,

Solar light for schools

Solar light for houses

கலாம் சார்பில் கொடுத்ததாக கூறினார்! 
    Sir,  இது NGO வேலை! 
ஓர் அரசியல் பதவி வகித்தவர் ………… „ மக்களுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்பவர் செய்திருக்க வேண்டியது இதை அல்ல! 
   கூடங்குளம் வந்தால் தான் தமிழகத்திற்கு மின்சாரம் என் பொய் பிரச்சாரத்தை உடைத்து மாற்று வழி மின் உற்பத்தியை அரசுக்கு பரிந்துரை செய்து நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் அது தான் 'மக்களுக்கான தலைவரின் " எடுத்துக்காட்டாக அமைந்திருக்கும்!

மக்கள் இயக்கம் என்றால்,
JK போல,

அம்பேத்கர் போல,

பெரியார் போல,

    மக்களுக்கு எது நல்லதோ அதை முன்னிருத்தி அரசே எதிர்த்தாலும் மக்களை திரட்டி சாதித்து காட்டியிருக்க வேண்டும்!
அப்போது தான் அவர் மக்கள் தலைவர்!

ஆழ் கடல் மீன் பிடிப்பை ஊக்குவித்தால் தமிழக - சிலோன் மீனவர்கள் பிரச்சனை தீரும் என்று 2005 ம் ஆண்டு அறிவுரை சொன்னதாகவும் Iceland நாட்டின் மாதிரியை அடியொற்றி நடந்தால் நன்மை பயக்கும் என்றும் கலாம் கூறியதாகவும் அதற்கான மாதிரி வரை பட / திட்டத்தை தான் தயாரித்ததாகவும் பொன்ராஜ் கூறுகிறார்!

Iceland ன் மொத்த மக்கள் தொகையே 3.3 லட்சம் தான் (2015 ன் படி)  நாகப்பட்டினம் துவங்கி இராமேஸ்வரம் வரை மீனவர்கள் மட்டுமே 3 லட்சம் பேர் இருப்பார்கள்! 

   ஆழ்கடல் மீன் பிடிப்பு என்பதே Corporate களுக்கு மொத்தமாக,  மீனவர்களின் வாழ்வாதாரத்தை தாரை வார்ப்பதற்கு சமமானது! அவர்கள் சிறிய அளவிலான கப்பலில் வந்து மீன் பிடிக்கும் அளவுக்கு வசதி படைத்தவர்கள்! 
நம் மீனவன் 30-40 ஆயிரம் கடன் வாங்கி டீசல் கொண்டு சென்று 6-8 பேருடன் இரண்டு நாள் கடலிலேயே தங்கி மீன் பிடிப்பவன்!

   நீங்க போட்ட Plan யை இப்போ யார் Execute பண்ண காத்திருக்கிறார்கள் தெரியுமா?

Relince Fresh,

more.  - Adithya Birla
&
Tata

    ஆக,  corporate க்காக தான் வருசம் பூரா வேலை பார்த்திருக்கீங்க ரெண்டு பேரும் எங்க காசுல..!

   மூன்று நாட்கள் இந்திய மீனவர்களும் - மூன்று நாட்கள் இலங்கை மீனவர்களும் மீன் பிடித்தால் பிரச்சனை தீரும் என்று கலாம் பரிந்துரை செய்ததாகவும், 

உனக்கு என்ன தெரியும் சாதாரண  இயக்குனர் தானே நீ என கேட்டிருக்கிறார் திரு பொன்ராஜ்!

    இங்கே மீன்வளம் மட்டுமே பிரச்சனை இல்லை!  2004 முதல் 2014 க்குள் எல்லை தாண்டினாலே சுட்டுக் கொல்லப் பட்ட மீனவனுக்கான நீதி யை குறித்தும் தான்! 
  இதற்கான எந்த அறிக்கையை அல்லது கண்டனத்தை மீனவ குடும்பத்தில் பிறந்த கலாம் பதிவு செய்தார்???

இதை கேட்க அமெரிக்க அதிபர் ஜார்ஜ்.W.புஷ் ஷாக இருந்திருக்க வேண்டும் என்பதில்லை  தான் நம்பிய ஒரு தலைவனை தன்னை இந்தியன் என பெருமை படு என சூடேற்றிய மனிதரை பார்த்து தான் கேட்கிறோம்! 
அந்த சூடு உங்களுக்கு ஏன் வரவில்லை என்று!?

  Diplomatic aa வேலை செய்தாராம் கலாம்,.

எது?

600 க்கும் மேற்பட்ட மீனவன் கொல்லப் பட்ட பிறகும், தனியார் கல்லூரி மாணவர்களுக்கு "கனவு காணுங்கள் "ன்னு கதை விட்டாரே அது தான் Diplomatic aa,,.

80 ஆயிரம், விதவைகளும் ஒன்னே முக்கால் லட்சம் உயிர்களும் கொல்லப் பட்ட போதும் அமைதி காத்தாரே அது Diplomatic aa?

    திரும்பவும் சொல்றோம்!  He's a good Rocket Engineer & very bad politician ,,

That's it,.

Tuesday, 16 May 2017

1944 முதல் 2009மே 18 வரை… பகுதி - 1

மே மாதம் தமிழர்கள் வாழ்வில் மறக்க முடியாத மறைக்க முடியாத ஓர் கால கட்டம்!
உலகுக்கே மொழிப் பிச்சை போட்ட இனம் உலகெங்கும் விடுதலை பிச்சை வேண்டி பயணிக்கும் என்று எவரும் நினைத்திருக்க வாய்ப்பில்லை!

    தெற்காசியாவின் கடை கோடியில் இருக்கும் ஓர் நிலப்பரப்பில் நிகழத்தப் பட்ட இனப்படுகொலை என்பது இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய துயரம்!
  தமிழகத்தில் இருந்து 47 மைல் தூரத்தில் மட்டுமே உள்ள ஓர் தீவில் நம்மை போன்ற ஓர் தமிழன் படுகொலை செய்யப் படும் போது நாம்மால் வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்க முடிந்தது!

  உலகின் ஒவ்வொரு மனிதனுக்கும்
உடை,
உணவு,
உறைவிடம் போலவே அவனுக்கென
மொழி,
கலாச்சாரம்,
வாழ்வியல் முறை ஆகியவற்றை தானக தேர்ந்தெடுக்கும் உரிமை உள்ளது என ஐக்கிய நாடுகள் சபையின் விதிகள் கூறுகிறது!

இம்மூன்றின் ஒட்டுமொத்த வடிவம் தான் 'இறையாண்மை ' !
தனக்கென ஓர் தனித்த இறையாண்மையை வார்த்தெடுக்கும் எந்த இனக்குழுவுக்கும் தனி நாட்டினை பெறும் தகுதியுள்ளது!   இதன் அடிப்படையில் தனித் தமிழீழம் கேட்ட மக்களை தான் உலக நாடுகள் ஒன்றிணைந்து கொன்றொழித்தது!

   தனக்கான நாட்டினை கேட்டவர்களை ஏன் கொல்ல வேண்டும் என நாளை நம் பிள்ளைகள் நம்மை கேள்வி கேட்கும் போது என்ன பதில் சொல்லப் போகிறோம்!?

தமிழீழம் பற்றி பேசும் போது புவிசார் அரசியலை (Geo Politics)  பற்றி பேசியே ஆக வேண்டியது அவசியமாகிறது!

   தமிழர்களை கொன்றதில் அமெரிக்காவின் பங்கு மிக முக்கியமானது! அதை புவிசார் அரசியலோடு ஒப்பிட்டு பார்ப்பது அவசியம்.,  அதைப் பற்றி தான் இங்கே காணப் போகிறோம்!

அமெரிக்காவுக்கு ஏன் இவ்வளவு வஞ்சம் ஈழத்தின் மேல் என்பதை நாம் தெரிந்து கொள்வது அவசியம்  :-

  1950 களின் தொடக்கத்தில் தெற்காசியாவிற்கான அமெரிக்க வெளிவிவகாரத் துறை ஓர் அறிக்கையை வெள்ளை மாளிகைக்கு அளிக்கிறது, அதில், 
உலகின் 70 % வர்த்தகம் கடல் வழியே தான் நடக்கின்றது! அதில் 45 % வர்த்தகம் தெற்காசியாவின் இலங்கை தீவை ஒட்டி செல்லும் வழித் தடத்தில் இருப்பது  மிக முக்கியமானதாக கருதப் படுகின்றது!   எனவே இதன் அருகில் இருக்கும் திரிகோணமலை உள்ளிட்ட கடற் பகுதி 50 வருடங்களுக்கு பிறகு மிக முக்கிய பொருளாதார மையமாக மாறும் வாய்ப்புள்ளது!
அச் சமயம்  இப் பகுதியை எந்த நாடு அல்லது எந்த நாடுகளின் கூட்டமைப்பு இதை கட்டுப் பாட்டில் வைத்துள்ளதோ அதுவே அன்றைய வல்லரசா அல்லது வல்லரசுக்கு இணையாக திகழும்!
       - இது தான் அந்த அறிக்கை!
    
    இதை மனதில் கொண்டே US தன் காய்களை நகர்த்த துவங்கி இருந்தது!  ஆனால், பெரிதாக எதுவும் நிகழவில்லை!

இதற்கு இடையில் Sri Lanka விற்கு சுதந்திரம் வழங்கிய இங்கிலாந்து தன் பிடிப்பு எப்போதும் இவர்கள் மீது இருக்க வேண்டும் என்றே பாராளுமன்றத்தில் 1947 துவங்கி அடுத்த இருபது வருடம் தன் ஆதிக்கத்தை செலுத்தியது British.  அதனை இரட்டை ஜனநாயகம் என அப்போது அழைத்தனர்!
    தமிழர்களின் மீது சிங்களர்களுக்கு வஞ்சத்தை விதைத்ததில் இங்கிலாந்தின் பங்கு பெரியது! 

   காரணம், ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடியதில் சிங்களவர்களோடு இணைந்து தமிழர்களும் வலுவாக விடுதலைக்காக போராடியிருந்தனர்!  சொல்லப் போனால் 'சிங்களவர் "களை விட தமிழர்களை சமாளிப்பது பெரிய காரியமாகிப் போனது இங்கிலாந்து க்கு!
    இரு இனக்குழுவுக்கு இடையிலும் வேற்றுமையை உருவாக்கினால் மட்டுமே நாம் வாணிபம் செய்ய முடியும் என்பதை உணர்ந்திருந்தனர்!
எனவே சிங்களர்களே அதுவரை அறிந்திடாத
பாலி மொழியில் இருந்த 'மஹாவம்சம் ' என்ற புத்தமத நூலை சிங்கள மொழியில் மொழி பெயர்த்து கொடுத்தனர்!  அதில் ஆங்காங்கே இன துவேசங்களையும் விதைத்து விட்டிருந்தனர்!

    இது ஒரு புறம் பொளத்த மத குருமார் களிடமும், சிங்களர்களிடமும் விசத்தை விதைத்துக் கொண்டிருக்க …„

1944 ல் பிரிட்டன் ஓர் கமிஷனை நியமித்தது! இலங்கைக்கான அரசியலமைப்பை நிர்ணயிப்பதற்காக அமைக்கப் பட்ட கமிஷன் அது!
   அப்போது தமிழர்கள் முன் வைத்த கோரிக்கை, 50% அரசியல் மற்றும் இட ஒதுக்கீடு உரிமை சிங்களர்களுக்கும் மீத முள்ள 50% உரிமை பூர்வ குடி தமிழர்கள், இந்தியாவிலிருந்து வந்திருக்கும் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மற்றும் இஸ்லாமியர்களுக்கு மட்டுமே!  இதை பிரிட்டன் முற்றிலுமாக நிராகரிப்பு செய்தது!

   இது தான் தமிழர்களின் மீதான அடக்குமுறை க்கு பெரிதும் வசதியாகிப் போனது!

1959 செப் 25 அப்போதைய பிரதமர் சாலமன் பண்டார நாயகே ஓர் புத்த பிக்கு வால் சுட்டுக் கொல்லப் பட்டார்! 
அதற்கு அவர்கள் சொன்ன காரணம், 2500 வது புத்த ஜெயந்தியில் சிலோனை முழுமையான சிங்கள பௌத்த நாடாக அறிக்க தாங்கள் உத்தரவிட்டதை இந்த பிரதமர் நிறைவேற்றவில்லை என்பது தான்!

     இது, அங்கே வளர்த்தெடுக்கப் பட்ட சிங்கள இனவெறி க்கு ஓர் சிறு உதாரணமே! 

1961 ஜனவரி 1 முதல் இலங்கை முழுதும் சிங்களம் மட்டுமே ஆட்சி மொழி என்று அரசு ஆணை பிறப்பித்தது! நீதிமன்றங்கள் இனி சிங்களத்தில் இயங்கும், அரசு அலுவலகங்கள் சிங்களத்தில் மட்டுமே முழுதும் செயல் படும் என்று அறிவித்தது!

   அடுத்தடுத்து திரு.செல்வநாயகம் (தந்தை செல்வா) நடத்திய சத்தியாகிரகத்தில் பெருந்திரளாக மக்கள் கலந்து கொண்டர்!
ஆனால், அதை இராணுவத்தை வைத்து முடக்கியது அரசு!


ஐக்கிய தேசிய கட்சியும், சிறீலங்கா சுதந்திர கட்சியும் தாங்கள் ஆட்சிக்கு வருவதற்கும் தமிழர்களிடம் ஓட்டு கேட்கும் போது மட்டுமே தமிழர்களின் மீது கரிசனம் காட்டுவது போல நடித்தனர்!

தினமும் அடக்குமுறையும், வன்முறையும் வெறிச்செயலும் கட்டுக்கடங்காமல் கை  மீறிப் போனது! தமிழர்கள் கையில் ஆயுதம் ஏந்தகாரணம் என்னவென்பதை வருட வரிசையில் இவ் வரலாற்றை காண்பதுவே சரியாக இருக்கும் :-

1944 - தமிழர்களின் சம உரிமை கோரிக்கையை இங்கிலாந்து நிராகரிப்பு செய்கிறது!

1948 - சுதந்திரம் வழங்கப் படுகிறது!

1954 - ல் அரசு சார்பில் வெளியிடப்படும் அலுவல்கள் ரீதியான தகவல்கள்,  சுற்றறிக்கைகள் (G.O) முதலானவை சிங்களத்தோடு, தமிழிலும் வேண்டும் என்ற கோரிக்கையோடு பேரணி ஒன்றை நடத்தினார்கள் தமிழர்கள்! 
அன்று மாலைப்பொழுது அதைக் கண்ட 'சிங்கள ' வெறியர்கள்,  கூட்டத்தில் இருந்தவர்களை அடித்து நொறுக்கினர்! மறுநாள் அதிகாலை தமிழர்களின் இல்லங்களை குறி வைத்து வெறியாட்டம் ஆடினர்!  பலர் இரத்த வெள்ளத்தில் மிதந்தனர்!
அது மிகப் பெரிய கொந்தளிப்பை வெளியில் ஏற்படுத்தியது!

1956 - இலங்கை அரசு 'தமிழ் வழியில் ' கற்கவும் தமிழ் வழி அலுவல்களுக்கும் அனுமதி வழங்கியது!
 
அதை அடுத்து  நடந்த கொடுமைகள் கொஞ்ச நஞ்சமல்ல!
அப்போதைய எதிர் கட்சிகள்  'சிங்கள பேரின வாதத்தை ' முன்னிறுத்தி கலவரத்தை தூண்ட,  பதவியை தக்க வைக்க தான் கையொப்பம் போட்ட செல்லா வுடனான ஒப்பந்தத்தை எடுத்து வந்து தன் வீட்டின் முன் நின்ற கூட்டத்திடம் காட்டி கிழித்துப் போட்டார் பிரதமர்!  மீண்டும் தமிழர்களுக்கு ஏமாற்றமே!

1958 - மீண்டும் ஓர் இன கலவரம்!  இம்முறை குழந்தைகள் வரை நெருப்பில் தூக்கி வீசப் பட்டனர்! அதில் பெரிதும் தமிழர்களின் உடமைகளும் வீடுகளும் தீ வைத்துக் கொளுத்தப் பட்டன!
ஓர் பெண்மனியின் கண் முன்னாலேயே அவரின் வீடு தீக்கிரையாக்கப் பட்டது! அவரின் கணவர் அடித்தே கொல்லப் பட்டனர்!  இவற்றுக்கெல்லாம் ஒரே காரணம் தான் இருந்தது, அது அவர்கள் தமிழர்கள் என்பது மட்டும் தான்!

1961 - அகிம்சை முறையை விட "அடக்குமுறை 'யே வலிமையானது என இலங்கை அரசு நிரூபித்தது!
சிங்கள மயமாக்கலுக்கு எதிராக சத்தியாக்கிரகம் நடத்திய தமிழரசு கட்சி தலைவர்கள் வெகுவாக தாக்கப் பட்டனர்!

இத்தனைக்கும் அவர்கள் கேட்டது இரண்டே கோரிக்கை தான் :-
    1.குறைந்த பட்சம் வட கிழக்கு பகுதியில் அரசு நிர்வாகம் தமிழில் இயங்கட்டும் .
  2.இப் பகுதியில் நீதி மன்றம் தமிழில் செயல் பட அனுமதியுங்கள்!
    
திரிகோணமலையில் போராடிய தமிழரசு கட்சி தலைவர்களில் ஒருவரான 'ஏகாம்பரம்' போலீஸா ல் அடித்தே கொல்லப் பட்டார்!

இனி, அகிம்சை வேலைக்கு ஆகாது, அடிக்கு அடி உதைக்கு உதை என 20 இளைஞர்கள் ஒன்று திரண்டு "புலிப் படை " என்ற பெயரில் ஓர் அமைப்பை உருவாக்கினர் . ஆனால் நீண்ட நாள் நிலைக்கவில்லை!
இதில் முக்கிய பங்கு வகித்தவர் 'நவ ரத்தினம் ' ..!
    இவர் பின்னாளில் 'உலகையே திரும்பி பார்க்க வைத்த ' விடுதலை புலிகளின் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் ஆசிரியர் என்பது பலருக்கும் தெரியாத ஓர் விடயம்!

1965 - பிரதமர் டட்லி சேனநாயகாவுக்கும் - தந்தை செல்வா வுக்கும் ஓர் ஒப்பந்தம் ஏற்பட்டது! அது  தமிழ் மொழியை அலுவல் ரீதியாக  அங்கீகரிப்பது குறித்தானது! (தேர்தலுக்கு முன்பாகவே இது பேசப் பட்டு கூட்டணி அமைத்திருந்தனர் )  நிலவுடைமை ரீதியாகவும் தமிழர்களுக்கு உரிமையை பெறுவதும்!
   
   மீண்டும் அதே போன்ற வெறியாட்டங்கள்!  இந்த முறை செய்தது புத்த பிக்குகளும், சென்ற முறை ஆட்சியில் இருந்த பண்டார நாயகவும்!

இந்த முறை டட்லி தமிழர்களுக்கு கொடுத்த உரிமைகளையும், வாக்குறிதிகளையும் காற்றில் பறக்க விட்டார்!

தமிழர்களை வெறும் ஓட்டு போடும் எண்ணிக்கையாக மட்டுமே இரு கட்சிகளும் கருதின என்பது "நவரத்தினம் " போன்றோரின் வாதம்!

1967 - அதுவரை பிரிட்டன் வசம் இருந்த துறைமுகங்கள் இலங்கைக்கு திருப்பி தரப் பட்டன! அதையும் தேசிய மயம் என்ற பெயரில் 'சிங்கள " மயமாக்கியது அரசு!
 
    கூட்டணியில் இருந்த தமிழரசு கட்சி நொந்து போனது! பிரதமரை போய் சந்தித்தார் தந்தை செல்வா, 
"அட, இதையெல்லாம் கொஞ்ச காலத்தில் மறந்து விடுவீர்கள் என்றல்லவா நினைத்தேன்
தனித்த இறையாண்மை குறித்து பேசியவர்களுக்கு - மாவட்ட அளவில் உரிமை வழங்குகிறோம் எனவும் அதற்கான வரைவு திட்டத்தை எழுதி கொண்டு வரச் சொன்னார்கள்!

அதற்குள் டட்லி நாட்டை பிரித்து தமிழர்களுக்கு பாதியாக கொடுத்தே விட்டார் என எதிர் கட்சிகள் குற்றம் சாட்டின!
அய்யய்யோ .,  ஆட்சி போனால் மீண்டும் வரும் ஆனால், சிங்கள துரோகி என பட்டம் கிடைத்தால்,………, அவ்வளவு தான் அரசியல் வாழ்வே அஸ்தமனம் ஆகி விடுமே என யோசித்தார் டட்லி!

மக்களே, நான் அவர்களோடு தேர்தல் கூட்டணி மட்டுமே வைத்தேன் வேறு எதுவுமே இல்லை என பின் வாங்கினார் "டட்லி "

1968 - ல் பிரதமரை சந்தித்து விட்டு வெளியே வந்த தந்தை செல்வா, செய்தியாளர்களிடம் முதலில் எங்களை சாலமன் பண்டார நாயக ஏமாற்றினார், அடுத்து சிரிமாவோ பண்டார நாயகா ஏமாற்றினார் இப்போது டட்லி யும் ஏமாற்றி விட்டார் என சலித்துக் கொண்டார்!

   நவ ரத்தினம் கோபத்தின் உச்சத்திற்கே போனார், எத்தனை நாட்கள் தான் ஒப்பந்தம் ஒப்பபந்தம் என ஏமாற்றுவார்கள்! போதும் இதெல்லாம் இனி தனி நாடு மட்டுமே சாத்தியம் என பொங்கினார் ..!

1972 - இங்கிலாந்து - இலங்கை கூட்டு அரசியலமைப்பு திருத்தப் பட்டு முழுமையாக சிங்கள மயத்தை எட்டியது சிறீலங்கா! (சிலோன் - Sri Lanka வாக முழுமையாக மாறியிருந்தது)

1976 - தமிழர்கள் வரலாற்றில் முக்கியமான இரண்டு நிகழ்வுகள் நடந்தேறிய ஆண்டு
     அ)  வட்டுக்கோட்டை தீர்மானம் ..!

ஆ) விடுதலை புலிகள் துவங்கிய ஆண்டு

        …………… தொடரும் ……………