Saturday, 26 November 2016

ஈழமும் - கியூபாவும்!

பிடல் காஸ்ட்ரோ ஈழப் இனப்படுகொலையில் ஐ.நா. வில் துரோகம் இழைத்து விட்டதாக சில பதிவுகளை காண முடிகிறது!
அமெரிக்கா இலங்கைக்கு எதிராக கொண்டு வந்த தீர்மானத்தில் இலங்கையை ஆதரித்து விட்டனர் எனவே நாங்கள் பிடலை எதிர்க்கிறோம் என்று கூறுகிறார்கள்!

இது சரியான புரிதல் இல்லாததாலும் தவறான அரசியல் பார்வையும் கற்பிக்கப் பட்டதால் வந்த வினை!

1.2008 வரை தான் பிடல் காஸ்ட்ரோ ஆட்சியில் இருந்தார்.

2.LTTE மீது பல நாடுகள் தடை கொண்டு வந்த போது லத்தீன் நாடுகள் கியூபா உட்பட யாரும் தடை கொண்டு வர வில்லை!

3.ஐ.நா. வில் விசாரணை வந்தது 2010 -ல் தான்!
2013 -ல் அமெரிக்கா இலங்கையை எதிர்ப்பதாக கூறி கொண்டு வந்த தீர்மானம், ஏற்கனவே LLRC - அறிக்கையாக இலங்கை ஏற்கனவே வெளியிட்டு இருந்ததை தான் அமெரிக்கா தன் தீர்மானத்தை கொண்டு வந்தது!
        அப்படி பட்ட கேவலமான அமெரிக்க தீர்மானத்தை ஆதரித்து பேரணி நடத்தியவர்கள் பட்டியலே இருக்கிறது! 

(பேச வைக்காதீர்கள் நண்பர்களே, மனக் கசப்பு தான் வரும்)

4. தீர்மானத்தில் ஈழம் என்ற வார்த்தையோ, சர்வதேச விசாரணை என்ற எழுத்தோ மறந்தும் கூட இடம் பெற வில்லை!

5.தீர்மானம் இலங்கையை காப்பாற்றுவதாகவே இருக்கிறது, அதை நிராகரிப்பு செய்து இந்தியா இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணையை கோரும் தீர்மானத்தை கொண்டு வர வேண்டும் என்று தான் லயோலா மாணவர்கள் 2013 பிப்ரவரி-யில் உண்ணாவிரதத்தை தொடங்கினர்.!
   
   அதன் பின்பு நடந்த மார்ச் மாணவர் போராட்டம் நாம் அறிந்ததே!

6. உலகிற்கே தெரியும் கியூபா எப்போதுமே அமெரிக்கா வுக்கு எதிரானது என்று! அதன் அடிப்படையில் தான் கண்ணை மூடி எதிர் பக்கம் நிற்கிறது கியூபா (எதிரே நிற்பது இலங்கை)

7. இந்த விடயத்தில், கியூபா வுக்கு சரியான புரிதலை ஏற்படுத்தி இருக்க வேண்டியவர்களில் புலம் பெயர் தமிழர்களுக்கும் குறிப்பிட்ட பங்கு உள்ளது!

இனப் படுகொலையின் சாட்சியங்களாக பல்லாயிரம் மக்கள் உலகெங்கும் உள்ளனர்!
அவர்களின் சாட்சியங்களை,

* காணொளி யாக,
* ஒலி வடிவமாக,
* புத்தகங்களாக,
* ஆவணப் படங்களாக,
* திரைப்படமாக,
* மேடை நாடகங்களாக
மாற்றி குறைந்தது ஆயிரம் பக்க ஆவணமாக மாற்றியிருக்க வேண்டாமா??? இந்த ஏழு ஆண்டுகளில்!

  பேராசிரியர்கள், கலைஞர்கள், சினிமா தயாரிப்பாளர்கள், எழுத்தாளர்கள் இல்லையா புலம் பெயர் ஈழத் தமிழர்களின் நடுவே!

       இந்த   7 ஆண்டுகளில் இதை முதல் 3 ஆண்டுகளில் செய்து முடித்து இருந்தால் இந் நேரம் கியூபா உள்ளிட்ட நடுநிலை நாடுகளை ஓர் குழுவாக சென்று சந்தித்து இருந்தால் கிட்ட தட்ட 50 நாடுகளின் ஆதரவை நாம் பெற்றிருக்க முடியும்!

இதற்கு ஆகும் செலவு என்பது  தமிழகத்தின் அரசியல் மாற்றத்திற்கு என நீங்கள் செய்த நிதி உதவியில் பாதியளவு மட்டுமே ஆகியிருக்கும்!
   
     இதைத் தான் பல நாட்களாக தொடர்ந்து புலம் பெயர் மக்களிடம் கோரிக்கையாக வைத்துள்ளோம்.

இப்போதேனும் விழித்துக் கொள்ளுங்கள் வரும் மார்ச் மாதம் தான் சர்வதேச அளவில் ஈழ இனப்படுகொலை பற்றி பேசப் பபோகும் கடைசி ஐ.நா. கூட்டத் தொடர்!

     தமிழக முதல்வர் பதவி கிடைத்தால் ஈழம் கிடைக்கும் என்று நம்பிய உங்களுக்கு,
நடந்தது இனப்படுகொலை தான்  என நிரூபிக்க என்ன செய்ய வேண்டும் என்பதை உங்களிடம் சொல்லாமல் மறைத்தவர்கள் யார் என்பதை முதலில் கண்டறியுங்கள்! பின்னர் காஸ்ட்ரோ வை குறை சொல்லலாம்!

   வருடாவருடம் தலைவரின் பிறந்தநாளுக்கு மட்டும் வாழ்த்து கூறி செல்வதில் எங்களுக்கு விருப்பம் இல்லை!

கசப்பாக இருந்தாலும் இது தான் உண்மை!  யதார்த்தம்!

பி.கு :- LLRC / அமெரிக்க தீர்மானத்தில் வரும் மறு வாழ்வு நடவடிக்கைகளை மேற் கொள்வதில் முக்கிய பங்கு வகிக்கும் ஓர் நிறுவனம் LYCA

#Tamil_Eelam
#Fidel_Castro
#Hbd_TamilTiger

Monday, 21 November 2016

Demonitaization ம் நாணய வீழ்ச்சியும்

அடுத்த ஆறு மாதம் இந்தியாவின் மிக மோசமான நாட்களாக இருக்கப் போகின்றது!

  ஆம், இதை ஓர் தமிழ் தேசியவாதியாக நான் மட்டும் சொல்ல வில்லை!  மோடி பக்தகர்கள் என தங்களை இத்தனை நாள் சொல்லிக் கொண்ட சில முக்கிய பொருளாதார அல்லக்கைகளே சன்னமான குரலில் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்!

8 நவ. அன்று டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 66.33 பைசா. 18 ம் தேதி சரியாக Demonitization அறிவித்த பத்தாவது நாள் ₹ 68.16 என வீழ்ந்துள்ளது!
 
   இதை யாருமே பெரிதாக கவனிக்க வில்லை! ஆனால், இத் துறையில் இருக்கும் நண்பர்கள் இது குறித்து நான்கு நாட்கள் முன்பு பேசும் போது பெரும் கவலையை வெளிப்படுத்துகின்றனர்!

இன்னும் ஒரு வாரம் இதே பணத் தேக்கம் நீடித்தால் ₹ 70 ரூபாயை தாண்டினாலும் ஒன்றும் சொல்வதற்கு இல்லை!

இதுரை மிகப் பெரிய நாணய வீழ்ச்சியாக நாம் சந்தித்தது ₹68.85 தான் September - 2013 ல் .
இதே நிலை தொடர்ந்தால் இந்திய வரலாற்றில் ஒரு கருப்பு அத்தியாயத்தை நாம் காண நேரிடலாம்!

  இவ்வளவு நெருக்கமாக பண வீழ்ச்சி வந்தும் வடக்கு ஊடகங்கள் மோடிக்கு காவடி தூக்குவதில் மட்டுமே குறியாக உள்ளது மிகப் பெரிய கேவலம்!
  
   இந் நேரம் அவர்கள் தான் விவாதத்தை துவக்கி இருக்க வேண்டும் .ஆனால் அவர்கள் விலை போய் பல நாட்கள் ஆகிறது!

கடந்த சில வருடங்களாக தமிழகம் அறிவு சார் தளத்தில் சுதந்திரமான கருத்தியல் ரீதியான விவாதங்களை மையப் புள்ளிக்கு நகர்த்தியுள்ளோம்!

அதே போல் பொருளாதாரம் எனும் இதையும் விவாத களத்திற்கு நகர்த்துவது நம் தலையாய கடமையாகிது!

சரி, வாருங்கள் வரப் போகும் இடர் பாடுகளை பார்ப்போம் ………!

   பண பரிவர்த்தனையில் 87% ₹500, 1000 ரூபாய் நோட்டுகள் மட்டுமே எனில் கிட்டதட்ட 14 லட்சம் கோடியை நடமுறையில் இருந்து நீக்கி விட்டிருக்கிறார்கள்.

இது நீங்கள் பயணிக்கும் பேருந்தில் தேவையான 100 லிட்டர் Petrol க்கு பதில் 20 லிட்டர் மட்டுமே கொடுத்து விட்டு போகும் வழியில் ஒவ்வொரு குறிப்பிட்ட தூரத்திற்க்கும் 5 லிட்டர் தருவோம் அதை கொண்டே பயணத்தை சிறப்பாக நீங்கள் முடிக்கலாம் என்றால் எப்படி உங்கள் மனநிலை இருக்கும் என்பதை உணருங்கள் !
அதையேதான் இங்கேயும் செய்திருக்கிறார்கள் .

இதனால் அடுத்ததடுத்து இந்தியா சந்திக்க போகும் விபரீதங்களையே நாம் இங்கே பார்க்க போகிறோம் :-

     நவ. 8 க்கு பிறகு கிராம புற உற்பத்தி (விவசாயம்) என்பது மிகவும் மோசமாக பாதிக்கப் பட்டுள்ளது .
    இது நாட்டின் GDP வளர்ச்சியில் 16 %  பங்கை தன்னகத்தே கொண்டுள்ளது!

ஆனால், நாட்டின் Corporate (Reliance fresh, Adithya Birla) போன்ற   நிறுவனங்கள் விவசாயிகளிடம் இருந்து நேரடி கொள்முதலாக அனைத்து காய் கறி விளை பொருட்களை வாங்கி விடுவதாலும் நேரடி ஏற்றுமதி செய்வதாலும்! 10% சதவிகிதம் எவ் விதத்திலும் பாதிக்க வில்லை இந்த காலாண்டுக்கான GDP யில் மீதி 6% என்ன பாதிப்பை உண்டாக்கும் என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்!

   ஆனால், நடுத்தர வர்க்கத்துக்கும் ஏழை மக்களுக்கும் இன்னும் பத்து நாட்களுக்கு பிறகு காய்கறி தட்டுப்பாடு தானாக உருவாகும் என்பதை எந்த ஊடகமும் சொல்ல மறுக்கிறது!

எதிர்வரும் வாரங்களில் நாம் சந்திக்க போகும் அதே நேரம் எந்த ஊடகமும் பேச தயங்கும் சில விடயங்கள் :-

a)  Two Wheeler தயாரிப்பு நிறுவனங்கள் டிச. முதல் தன் உற்பத்தியை பாதியாக குறைக்க போகின்றன!

b) கிராமப்புற ( அ) பேரூராட்சி வேலைவாய்ப்பு என்பது கேள்க்குறியாகும்!  கிட்ட தட்ட 20 லட்சம் பேர் நாடு முழுதும் மறைமுகமாக வேலை இழப்பார்கள்

c) Construction field - கட்டுமான துறை பெரிய அளவில் வீழ்ச்சியையும் கட்டுமான பொருட்களும், வீடுகளும் விலை குறையும்!
இது பயனீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியாகவும் Civil Engineer 's க்கு பெரும் இடியாகவும் இருக்கும் என்ற கசப்பான உண்மையை ஒத்துக் கொண்டு தான் ஆக வேண்டும்!

d) அனைத்து தொழிற்சாலை மற்றும் உற்பத்தி துறையும் 50% தன் அன்றாட பணிகளை நிறுத்தி வைக்கும் என்பதே நிதர்சனம்!

e)  Money flow எனப்படும் பணப் புழக்கம் கிராம புறங்களில் 10% கூட சீர் செய்யப் படாத நிலையில் May 2017 வரை அவர்களிடம் வளர்ச்சி விகிதத்தை நாடு கிஞ்சித்தும் எதிர் நோக்க இயலாது!

f)  மொத்த GDP (The Gross Domestic Product) விகிதமானது மொத்தமாக 0.5 % வீழ்ச்சி அடையும் எனவும்,  சென்ற ஆறு மாத சராசரியான 6.4 % ல் இருந்து இந்த ஆறு மாத நிதியாண்டு 5.9 முதல் 5.7 % வரை செல்லும் என்பதே மிகப் பெரிய கவலையாக பொருளியல் துறை வல்லுந‌ர்கள் கூறுகிறார்கள்.

    இதில் பெரிய கொடுமையே மும்பையை சேர்ந்த ஓர் பங்குச்சந்தை நிறுவனம் அடுத்த ஆறு மாத Estimate யை (-) மைனஸ் ல் தான் வரும் என பகிரங்கமாக அறிவித்தே விட்டனர்!

NDTV profit, Bloomberg போன்ற Economics தொலைக்காட்சிகள் எதிர் வரும் கால பண வீக்கம் குறித்து தெளிவாக அறிக்கை தயார் செய்து விட்டனர்.
அரசின் அடக்குமுறைக்கு பயந்து மௌனம் காக்கின்றனர் வெளியிடாமல்!

இன்று 1 USD = 68.11 ₹ என்ற நிலையில் நாம் தள்ளாடி கொண்டிருக்கிறோம்!  ₹ 69 - 70₹ க்கு தள்ளப்படும் போது மேற்கண்ட நிறுவனங்கள் தங்கள் அறிக்கை சாட்டையை சுழற்றும் என எதிர் பார்க்கலாம்!

   இன்று (21 நவ.) முதல் அடுத்த ஒரு வாரத்திற்கு நாட்டின் அனைத்து Banks, ATM களும் செயல் பட்டால் ஒழிய நாம் மீள வாய்ப்பில்லை!
   அப்படியே செய்தாலும் நிலமை சீராக மார்ச் - 2017 ஆகும் என்பதே உண்மை!

  இதெல்லாம் தெரியாம யாராவது பக்தாஸ் சொம்பு தூக்கி கிட்டு வந்து காறித் துப்பி விரட்டி விடுங்க!

Modi is just Broker for Corporate's!  He never realize our issues (or) problems.

#ModiResignNow
#Modi_4_Corporate
#Economic
 

Saturday, 19 November 2016

அமெரிக்க தேர்தல் 7 &8 November 16

  US ELECTION, Hilary, Trump

    இந்த கருமத்தை தவிர வேற News channel ல காட்ட ஒன்மே இல்லையா!!!!?!?

அரசியல் அரிச்சுவடி படிக்க ஆரம்பித்த காலத்தில் இருந்து இதுவரை மூன்று  அமெரிக்க தேர்தல்களை பார்த்துள்ளேன்.

அல்கோர் - ஜார்ஜ்.W.புஷ் இடையிலான போட்டி (2000. -01 என ஞாபகம் ) முடிவுகளின் சர்ச்சை தான் நாங்க தொழில்நுட்பத்துல வளர்ந்தவய்ங்கன்னு காலரை தூக்கி விட்டு சுத்திய வல்லரசை தலையிலயே 'பொளிச்'ன்னு போட்டு தம்பி ஓராமா போய் உட்காருப்பான்னு காலம் காறித்துப்பிய தேர்தல் அது!

  சாதாரணமாக மேற்குலக நாடுகளில் தேர்தல் முடிந்து ஆறு அல்லது தேர்தல் முடிவுகள் தெரிந்துவிடும் என்றே அறிந்திருந்தோம்!

ஆனால் அந்த தேர்தல் முடிவுகள் மட்டும் இதோ அதோ, காலையில், மாலையில் என இழுத்து ஒரு வழியாக ஆக முடிவு தெரியும் முன் வாரப் பத்திரிக்கைகள் முதல் பாதி கட்டுரை வெளியிட்டு அடுத்த வார Cover story க்கு தயார் ஆனாது பக்கங்கள்!

பின்னர் நடந்தது வரலாறு ……!

சரி நடப்பு தேர்தலுக்கு வருவோம்!
மோனிகா லெவென்ஸ்கி - பில் கிளிண்டன் சர்ச்சை தான் பெரிய விடயமாக பார்க்க பட்ட  காலம் எல்லாம் மலையேறி போய் விட்டது!

(ஆனால், அந்த நாடகமே KLA வுக்கு ஆயுதம் கொடுத்ததை திசை திருப்பதான் என்பது தனி கதை) .

ஹிலாரியும், டிரம்ப் ம் மாறி மாறி ஒருவரை ஒருவர் திட்டிக் கொள்ளூம் போதும் Twitter ல் கழுவி கழுவி ஊத்திக் கொள்ளும் போதும்  எனக்கு, இவிங்க இன்னும் எத்தனை இனப்படுகொலையை மறைக்க இந்த நாடகம் போடுறானுகளோன்னு தான் உள்ளே குடையுது!

சில அதிமுகவினர் ஹிலாரி அம்மாவோட தோழி அதுனால அவங்க ஜெயிச்சா நமக்கு நல்லதுன்னு வேற சுத்திக்கிட்டு இருக்கானுக!
அதைத் தான் ஜீரணிக்கவே முடியல!

ஒரு கீழ் திசை நாட்டின் கடை கோடி மாகாண முதல்வரை, உலக வல்லரசின் வெளியுறவுத்துறை அமைச்சர் Lift புடிச்சி 2nd floor வந்து பார்க்க அவ்ளோ அவசியம் என்னன்னு யோசிச்சீங்களா!!!?

  Let's go to small and important Flash Back :-

   98 -ல் தங்கள் திரிகோணமலை  பகுதியில் தாது மணல் திருடும் ஓர் கப்பலை தடுத்து திருப்பி போக சொல்கிறார்கள் விடுதலை புலிகள்.! ஆனால் கேட்கவில்லை!
ஓர் அளவுக்கு மேல் பொறுமை இழந்து ஆயுதங்களை உபயோகித்து ஓட ஓட விரட்டி அடிக்கின்றனர் புலிகள்!

அது, அமெரிக்காவுக்கு சொந்தமான கப்பல்!

அப்போது தான் விடுதலை புலிகள் மேல் முதன் முறையாக அமெரிக்கா தடை கொண்டு வருகிறது-!

   உலக வல்லரசான அமெரிக்காவின் கப்பலை ஓர் சாதாரண தீவில் இருக்கும் ஓர் ஆயுத போராட்ட குழு விரட்டி அடிப்பதா!!!??? என இதை கௌரவ விடயமாக பார்க்கத் துவங்கியது U.S.

   அதற்கு அடுத்த நகர்வாக அமெரிக்கா செய்த கருத்தியல் ரீதியான நரித்தனம் தான் கவனிக்க வேண்டிய ஒன்று!
2001 ல் நடந்த உலக வங்கி மாநாட்டில் அதன் துணை தலைவர் பேசும் பொழுது, தெற்காசியாவின் எழில் கொஞ்சும் அழகான இலங்கையை உலக வியாபார மையம் ஆக்க வல்லரசு நாடுகள் உதவ வேண்டும்!

அங்கே நடக்கும் உள் நாட்டு யுத்தத்தை தடுத்து நிறுத்த அவர்களுக்கு உதவுங்கள் என அறிக்கை விடுத்தார்.

அதன் பின் தான் தமிழின அழிப்பு சூடு பிடித்தது!

2001 - 02 ல் ஓஸ்லோ பேச்சுவார்த்தையின் போது  சுமூக தீர்வு ஏற்படாத வண்ணம் பார்த்து கொண்டது அமெரிக்கா!  எந்த அளவுக்கு என்றால் ………… சந்திரிகா, ரணில் புலிகளின் கோரிக்கையை ஒத்துக்கொண்டாலும் அதை உடைத்து எதிரான தீர்வை தமிழர்களை நோக்கி எடுக்க வைக்கும் அளவுக்கு!

ஏன் இவ்வளவு வஞ்சம் ஈழத்தின் மேல் என்பதை நாம் தெரிந்து கொள்வது அவசியம்  :-

  1950 களின் தொடக்கத்தில் தெற்காசியாவிற்கான அமெரிக்க வெளிவிவகாரத் துறை ஓர் அறிக்கையை வெள்ளை மாளிகைக்கு அளிக்கிறது, அதில், 
உலகின் 70 % வர்த்தகம் கடல் வழியே தான் நடக்கின்றது!
அதில் 45 % வர்த்தகம் தெற்காசியாவின் இலங்கை தீவை ஒட்டி செல்லும் வழித் தடமே மிக முக்கியமானதாக கருதப் படுகின்றது!

எனவே இந்த திரிகோணமலை உள்ளிட்ட கடற் பகுதி 50 வருடங்களுக்கு பிறகு மிக முக்கிய பொருளாதார மையமாக மாறும் விய்ப்புள்ளது!
அப்போது இப் பகுதியை எந்த நாடு அல்லது எந்த நாடுகளின் கூட்டமைப்பு இதை கட்டுப் பாட்டில் வைத்துள்ளதோ அதுவே அன்றைய வல்லரசா அல்லது வல்லரசுக்கு இணையாக திகழும்!

    இதை மனதில் கொண்டே US தன் காய்களை நகர்த்தியது!
நார்வே யின் முகமூடியில் அமெரிக்கா இருந்ததை தேசிய தலைவர் அன்றே சுட்டி காட்டினார்.
" அமெரிக்காவின் ஆயுத முகம் இஸ்ரேல்,  அமைதி முகம் நார்வே " என்று!

2001 ல் பெண்டகனும், WTO வும் விமான தாக்குதலுக்கு உள்ளாக்கப் படுகின்றது!
   
   அன்று இரவே 'War on Terrorism ' திட்டத்தை ஆரம்பிக்கிறது CIA வும் FBI யும்.

   அதில் ஒரு பகுதியாக தடை செய்யப் பட்ட இயக்கங்கள் பட்டியல் வெளியிடப் பட்டது!

அதில் விடுதலை புலிகள் பெயரை இணைத்ததில் முக்கிய பங்கு Hilary க்கு உண்டு!

இதை மறைக்க இன்னும் அமெரிக்க காலை நக்கி பிழைக்கும் சில தமிழக NGO க்களும் கட்சிகளும் அமெரிக்க வாழ் தமிழர்களில் சில அமைப்பும் "ஹிலாரி புலிகளை பெருமையாக பேசினார் என வருசத்துக்கு ஒருமுறை ஏதேனும் ஒரு கதையை விடுவதெல்லாம் நடந்து கொண்டுதான் இருக்கின்றது!

  2002 இரண்டில் LTTE க்கு எதிரான தன் ' பிளான் பீக்கான் ' என்ற திட்டத்தை செயல் படுத்த துவங்கின மேற்குலக நாடுகள்!

அதில் ஒரு பகுதி தமிழகத்தில் இருந்து கிடைக்கும் ஆதரவை புலிகளின் பெரும் பலமாக கருதி அதை தடுக்கும் முயற்சியில் கொண்டு வரப் பட்டது தான் ' தடா ' சட்டம்.

அந்த நேரத்தில் அமெரிக்காவுக்கு சரியாக கை கொடுத்தவர் ஜெ.  தான்.!

அதில் சிக்கி 500 நாட்களுக்கு மேல் சிறை சென்றவர்களை எல்லாம் நாம் அறிவோம்!

      அந்த நன்றியை நேரில் தெரிவிக்கத் தான் பல ஆண்டுகள் பின்னர் ஜெ. முதல்வராக இருக்கும் போது இரண்டு மாடி ஏறி வந்து சந்தித்தார் ஹிலாரி!   தனக்கான மரியாதை தாமதம் ஆனதை அவர் அமர்ந்திருக்கும் 'கெத்து ' லயே காட்டியிருப்பார் ஜெ.!
   
     இப்போ புரியுதா,  ஹிலாரி ங்குற நரி திராட்சை தோட்டம் பக்கம் ஏன் ஒதுங்கிச்சின்னு!

     இதுல அம்மா சொன்னா  ஹிலாரிக்கு ஓட்டு கேட்பானுங்களாம்!

மீத்தேன்

நியூட்ரினோ

கெயில்

Mecdonals

Pizza - உடல் பருமனை அதிகரித்தது!

Oats - உடல் எடையை காட்டுப் படுத்த!

Pepsi

Coke

  இதில் ஏதாவது ஒன்னு நம் வாழ்வாதாரத்தை காக்குமா???

சொல்லுங்க, எல்லாமே US companies தான்!

     அமெரிக்காவில் எவன்(ள்) ஆட்சிக்கு வந்தாலூம் 3ஆம் உலக நாடுகளில் சுரண்டுவதையும், கொள்ளையடிப்பதையும் நிறுத்த மாட்டார்கள்!  அதை முதலில் புரிந்து கொள்ளுங்கள்!

  24 மணி நேர செய்தி தொலைக்காட்சிகள் நடிகர் சங்க தேர்தலை எப்படி மிக அதி முக்கிய செய்தியாக காட்டினார்களோ அதே போலத்தான் US தேர்தலையும் நான் பார்க்கின்றேன்!

    டேய் திருந்துங்கடே!

  

Monday, 31 October 2016

பெல்லட் குண்டுகளும் Surgical Strike கும்

100 நாட்களை கடந்து விட்டது காஷ்மீரிய தேசிய இன மக்கள் மீதான வன்முறையும் கொலைவெறி தாக்குதலையும் இந்திய ராணுவம் துவங்கி ………

   இப்போது வரை, 17 ஆயிரம் பேர் துப்பாக்கி சூட்டிலும், பெல்லட் குடுண்களாலும் படுகாயம் அடைந்துள்ளனர். அதில் 400  பேருக்கும் மேல் கண்களில் பார்வையை இழந்துள்ளனர்.
இதில் பெரும்பாலானோர் இளைஞர்களும் சிறுவர்களுமே!
இவையன்றி, 94 படுகொலை களும் இதில் அடங்கும். மேலும்,
5000 பேரை இராணுவம் கைது செய்து வைத்துள்ளது! 

இது முற்றிலும் ஜனநாயத்துக்கு எதிரானக பொது மக்கள் மீது நடத்தப் பட்ட தாக்குதலாகவே உலக நாடுகளில் பார்க்கப் படுகிறது!
ஏற்கனவே, பாலஸ்தீனுக்கு அடுத்த படியாக இனப்படுகொலைகள் குறித்து ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் விவாதிக்கப் படுவது காஷ்மீரின் 1987 - 2014 வரை கொல்லப்பட்ட (அல்லது) காணாமல் போன 97ஆயிரம் மக்களை பற்றி தான்.

இதை திசை திரும்ப தான் பலுசிஸ்தானை வம்புக்கு இழுத்தார் மோடி!  அது பெரிதாக வேகவில்லை!
   ஏன் இப்போது இத்தனை வேகாமாக கருத்தியலை மாற்ற முற்படுகிறார்கள் என பார்த்தால் விடயம் பொருளாதார ரீதியாக பிரச்சனையை கிளப்பியுள்ளது சர்வதேச அளவில்!

இந்தியாவின் இந்த மோசமான முறையற்ற தாக்குதல் July 8 முதல் இன்று வரை (27 Oct. - 16) கிட்ட தட்ட 111 நாட்களாக ஒட்டு மொத்த பள்ளி கல்லூரிகள், வணிக வளாகங்கள், தொழிற்சாலை நடவடிக்கைகள் என அனைத்தும் முடங்கி போய் விட்டது!
கடந்த வார நிலவரப்படி ₹ 10, 000 கோடி நட்டம் என கணிக்கப் பட்டுள்ளது!

   இது காஷ்மீருக்கு மட்டுமே அல்லாமல் இந்திய பொருளாதாரத்தையும் பாதித்துள்ளது!

இதற்கு சப்பை கட்டாக வழக்கம் போல் தீவிரவாதத்தை காரணம் காட்டி தேசிய பாதுகாப்பு ஆலோசனை மையம் கை நீட்டுகிறது!
    அதன் ஆலோசகராக உள்ள எம்.கே.நாராயணன் இதை ஹிஸ் புல் முஜாஹிதீன் அமைப்பையும், ப்ருகான் வாஹ்னியை யும் காரணமாக சொல்கிறார்.
   இந்த நாராயணன் யார் தெரியாம!!?  தமிழீழ இனப்படுகொலையில் முக்கிய காரண கர்த்தாவாக இருந்தவன்.
ஜனவரி 11 - 2009 அன்று ஐ.நா மனித உரிமை அலுவலர்கள் சிறீலங்காவில் நின்று கொண்டு,
" இங்கே நடப்பது போர் அல்ல " இதற்கு பெயரே வேறு அப்பாவி மக்களை ஐ.நா வே படுகொலை செய்ய அனுமதிக்க முடியாது!

இத் தகவலை வெளி உலகுக்கும், ஐ.நா மன்றத்திலும் அறிவித்தே ஆக வேண்டும் என கதறிய போது, அதை தடுத்து நிறுத்தியவன் தான் இந்த M.K .நாராயணன்.!  
  
      அப்படி எனில், இவரின் அறிக்கை எவ்வளவு நேர்மையாக இருக்கும் என உணர்ந்து கொள்ளுங்கைள்.!

   சரி விடயத்துக்கு வருவோம்!

        காஷ்மீரின் அவலத்தை அனைவரும் கேள்வி எழுப்ப துவங்கியதும் அதை மடை மாற்றம் செய்ய போட்ட நாடகம் தான் Surgical Strike ....!

     கடைசியில் அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என ஐ.நாவில் வைத்தே பாக். தெரிவித்து விட!
     மோடியில் Media Stunt புஸ்வானம்.

இங்கே கெஜ்ரிவால் போன்றோர் அதற்கு ஆதாரம் கேட்க, அவரை தேச துரோகி ஆக்கி கறித்துக் கொட்டியது பக்தாஸ் கேங்!

உடனே, இந்திய நாடக துறை Surgical Strike யை பற்றிய காணொளி உள்ளது Editing மட்டுமே பாக்கி,  PM Office பார்த்ததும் தருகிறோம்ன்னு போனவங்க ……………… போனாங்க, போனாங்க!  இப்போ வரை எனக்கு தெரிஞ்சு ஒரு Video வும் வெளியே வரலை!   (Video வரும் வரும்ன்னு சொன்னீங்க ஆனா,  வருண் காந்தி வருவார்ன்னு சொல்லலையே ஜி)

இதற்கிடையில் கெஜ்ரியை மன்னிப்பு கேட்க வைத்து, அக்க்ஷய் குமாரை Selfie video போட வைத்து எல்லாம் தேச பக்திக்கு குளுக்கோஸ் ஏத்தினார்கள்.!

கடைசியில், எந்த தாக்குதலை காரணம் காட்டி Surgical Strike 'Drama ' நடத்தப் பட்டதோ அதே Uri தாக்குதலுக்கு ஐ.நா விசாரணை தேவை என ஜெனீவா சென்றனர்.
இதில், ஹைலைட்டே ஜெனீவா போனாது இந்தியா அல்ல, பாக்கிஸ்தான்!

www.dawn.com/news/1286214

இந்த எல்லா கதையும் ஒரு புறம் இருந்தால், Surgical Strike நாடகத்தை வைத்து இவர்கள் மறைத்த நடவடிக்கைகள் ஏராளம் :-

  * Surgical strike நடந்ததாக சொல்லப் பட்ட 24 மணி நேரத்தில் 'இராணுவ வீரர்களின் ஓய்வு ஊதியம் வெகுவாக குறைக்கப் பட்டது! 
    கொடுமையை பாருங்க, யாரை வைத்து இவர்கள் போலி தேச பக்தியை நீர் ஊற்றி வளர்க்கிறார்களோ அவர்களின் முதுகிலேயே குத்தினார்கள். ஒரு மாத தொடர்ச்சியான போராட்டத்திற்க்கு பிறகு மீண்டும் நேற்று (29 அக்.) பழைய படி ஓய்வூதியம் வழங்க அரசு ஒப்புக் கொண்டுள்ளது!

  *  நீதி மன்றம் எழுப்பிய ஏன் பெல்லட் குண்டுகள்  அப்பாவி பொது மக்கள் மீது பயன் படுத்தப் பட்டது என்ற கேள்விக்கு சப்பையாக ஒரு பதிலை கொடுத்த தோடு, காஷ்மீர் மக்களின் உரிமையை ஏன் பறிக்கிறீர்கள் என யாரும் கேள்வி கேட்க நேரமே கொடுக்கவில்லை!

*  யூரி, பதான் கோட் போன்றவை மாற்று கட்சிகளையோ, ஊடகங்களையோ மறந்தும் காஷ்மீரில் கொள்ளப் பட்ட 94 பேரை பற்றி தெரியாமல் கூட பேச வில்லை!

   ஓர் தேசிய இனம், இந்தியா என்ற கூட்டமைப்புக்குள் எந்த நம்பிக்கையில் வந்தார்களோ கிட்ட தட்ட அந்த நம்பிக்கையை மொத்தமாக இந்தியம் சிதைத்து விட்டது!

    காஷ்மீருக்கு தோட்டாக்களும், Pellet குண்டுகளும் என்றால் தமிழகத்துக்கு மீத்தேனும், நியூட்ரினோவும் இனப்படுகொலைக்கு முன்னணியில் நிற்கிறது!

    இந்த அரை டவுசர்கள் சொல்வது போல் வளர்ச்சி பாதை எல்லாம் ஒரு மண்ணாங்கட்டியும் தமிழகத்துக்கு வராது என்பதை உணருங்கள்.

  - கூடங்குளம் 3, 4 ம் உலைக்கூடத்துக்கு அனுமதி

   > எய்ம்ஸ் மருத்துவமனை நிராகரிப்பு

- காவிரி டெல்டா வில் பெட்ரோல் எடுக்க RIL (ரிலையன்ஸ்) க்கூ அனுமதி

> காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க எதிர்ப்பு

- தாமிரபரணியில் Coke / Pepsi க்கு மக்கள் தடையை மீறி அனுமதி

இப்படித் தான் போகிறது இந்தியா வின் செயல் பாடு தமிழகத் பொறுத்தவரை!

ஏற்கனவே நீரை தனியார் மயமாக்கும் சட்டத்தை கிட்ட தட்ட நடைமுறைக்கு கொண்டு வரும் நிலைக்கு வந்து விட்டது பாஜக / RSS அரசு!
 
மீத்தேன், நியூட்ரினோ, டெல்டாவில் பெட்ரோல்  என அனைத்து நாசக் கார திட்டங்களும் ஆரம்பிக்கப் பட்ட பின் நாம் தெருவில் இறங்கினால் …………

முதலில் பேச்சுவார்த்தை,  தடுப்பு, தடியடி, பின்னர் துப்பாக்கி சூடு என மாறி கடைசியில் நமக்கு எதிராகவும் இராணுவத்தை இறக்க தயங்க மாட்டார் Corporate களின் தரகரான நரேந்திர மோடி!

நீங்கள், எந்த கட்சி எந்த அமைப்பாக வேண்டுமானாலும் இருங்கள்.  நம் கருத்து வேறு பாடுகளை பின்னர் பேசிக் கொள்ளலாம்.

நம் வீட்டை கொள்ளையடிக்க மூவர்ண கொடி என்ற முகமூடியோடு வருகின்றது இந்தியம்!

நாம் இன்று தெருவில் இறங்காவிடில் என்றுமே முடியாது என்பதை உணருங்கள்!