Sunday, 21 August 2016

காஷ்மீர் முதல் தமிழ் தேசம் வரை

350 பால்ரஸ் குண்டுகளை வாயில் அடக்கி கொண்டு பாய்ந்து சென்று எதிரில் நிற்பவரின் உடலில் மூன்று இஞ்ச் ஆழத்திற்க்கு துளைத்து தங்கி விடும் ஓர் குப்பியை தான் முழுமையான ஒரே ஒரு தோட்டா என்கிறது இந்தியாவின் CRPF ……………!

  மொத்தமாக 13 முதல் 16 லட்சம்  வரையிலான Pellet குண்டுகளை காஷ்மீர் மக்கள் மீது வீசியுள்ளது இந்திய  Corporate அரசு!

   இது கிட்ட தட்ட இனப்படுகொலையையும் விட மிக மோசமான செயல். ஓர் தலைமுறையையே ஊனமாக மாற்றும் திடமான நாசக்கார பணி இது!
   
    இந்தியாவின் முதல் தேர்தல் முடிந்ததும் காஷ்மீரில் பொதுவாக்கெடுப்பு நடத்தப் படும்.  இதை சொன்னவர் ஜவஹர்லால் நேரு ஐ.நா சபையில். 

    இன்று வரை அந்த  இந்திய தேர்தல் வரவில்லை போல காஷ்மீருக்கு! 
   பின்னர் எப்படி ஐ.நா வில் சப்பை கட்டு கட்டியது தெரியுமா இந்தியா …………! ?  அது தான் சட்டசபை, உள்ளாட்சி தேர்தல்கள்  .

    சில வருடம் முன்பு ராஜபக்ஷே Common wealth மாநாட்டில் சொன்னாரே, " வடக்கு மாகாணத்தில் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்தினோம். அம் மக்கள் அவர்களுக்கு விருப்பமானவர்களை அவர்களே தேர்வு செய்து கொண்டுவிட்டனர் " பிரச்சினையே முடிந்து விட்டது.  பின்னர் எதற்கு சர்வதேச குழு தமிழர் பகுதியை பார்வையிட வேண்டும் என்று!

     அதைத் தான் இந்திய பார்ப்பனிய அரசும் சொன்னது!  அதோடு கதையை ஊத்தி மூடி விட்டார்கள்.

   ஆனாலும், காஷ்மீரை மைய்ய படுத்தியே இந்திய - பாக் போர்கள் மூள காரணம் அமெரிக்காவின் குள்ளநரித் தனமும் இராணுவ தளவாட விற்பனைகளும் தான்.

    தெற்காசியாவில், இந்தியா - பாக் - சீனா மூன்றும் அமைதியாக வாழ துவங்கி விட்டாலே அமெரிக்காவின் 50 ஆண்டு கால வல்லரசு கனவு தவிடு பொடி ஆகி விடுமே அது தான் முக்கிய Agenda வே Pizza வாயனுங்களுக்கு!

சரி விடயத்துக்கு வருவோம்!

அந்த பால்ரஸ் குண்டுகள் சிறுவன் சிறுமி என எந்த வித்தியாசமும் பாராமல் அனைவரின் உடலிலும் புதைந்துள்ளது! 
இனி அதை வெளியே எடுப்பதும் உடலை கொத்து கொத்தாக கீறி போடுவதும் ஒன்று தான். உடலை நார் நாராக கீறினால் தான் குண்டை வெளியே எடுக்கவே முடியும். கடந்த ஜூலை 22 ம் தேதி வரை மட்டுமே 100 க்கும் மேற் பட்டோர் க்கு பார்வை திரும்ப வர வாய்ப்பே இல்லை என கை விரித்து விட்டனர் டாக்டர்கள். !

ஆயுள் முழுக்க அந்த குண்டை  வெளியே முடியாதாம்!

கொஞ்சம் யோசியுங்கள் தெருவில் விளையாட போகும் உங்கள் குழந்தை 48 சிறிய வகை பால்ரஸ் குண்டுகளை உடலில் வாங்கி விட்டுதான் வீடு திரும்பும் என்றால் நீங்க சும்மா இருப்பீங்களா ………!? இரத்தம் கொதிக்காது, இராணுவம் மீது கல்லெறிய மாட்டீர்களா …………!?
 
   அதைத் தான் அம் மக்கள் செய்கிறார்கள். அவர்களா தீவிரவாதிகள்.

    " எந்த ஓர் தேசிய இனமும் தனக்கான சுயநிர்ணய நாட்டினை பெற  உரிமை உள்ளதாக " ஐ.நா விதி  99 A சொல்கிறது!

( Article 99 -A Describe, Every National Community has deserve to a independent country. This is Calling "Self Determination Rights ")

  இதில் பெரிய காமெடியே அனைத்து கட்சி கூட்டத்தில் மோடி சொன்னது தான் . :-

" காஷ்மீர் மக்களுக்கு நியாயம் கிடைக்க செய்வோம், இந்திய அரசியல் சாசண சட்டப்படி "

    அடேய்! 
   அப்ரசெண்டிகளா அவிங்க போராடுறதே இந்திய அரசியல் சாசனம் எங்களுக்கு வேண்டாம் எங்களுக்கான தனி இறையாண்மையை நாங்களே முடிவு பண்ணிக்குறோம் நீங்க மூடிட்டு கிளம்புங்க அப்டின்றது தான்!

   ஃப்ருகான் வாணி ன்னு ஒருத்தன் செத்ததுக்கே 2 லட்சம் பேர் கூடினப்பவே அம் மக்கள் சொல்லாம சொல்லிட்டாங்க நீங்க தேவையில்லைன்னு!

கோயமுத்தூர்ல, Amnesty முற்றுகை போராட்டத்துக்கு ஆள் கிடைக்காம College, School பசங்களை மிரட்டி கடத்திட்டு வந்து கேவலப் பட்டவய்ங்க தானே நீங்க.!
  
   உங்களுக்கு எங்க தெரிய போகுது போராட்டம்ன்னா ஆளு சேக்குறது இல்லை வெறும் பத்து பேரும் இருந்தாலும் கடைசி வரை தன்னோட கொள்கையில உறுதியா நிற்குறதுக்கு பேரு தான் "போராளி"ங்குறது

87 முதல் 2014 வரை காஷ்மீர் காணாமல் போனோர் மட்டுமே 90 ஆயிரம் பேர்.

   91 - ல் குப்வாரா மாவட்டத்தில் நடந்த பெண்களின் மீதான வன்புணர்வும் கற்பழிப்புக்குமே இன்றுவரை இந்திய இராணுவம் எந்த பதிலும் சொல்ல வில்லை!

      " இந்த குண்டுகளை பயன் படுத்தாமல் இருந்திருந்தால் Fire யை தான் நாங்கள் Open செய்திருக்க வேண்டும்.  " அம் மக்கள் மீது தாக்குதல் நடத்தியது மன வருத்தத்தை தான் தருகிறது!  என்ன செய்வது எங்கள் வேலை அது. 
நாங்க, Plastic குண்டுகளை தான் பயன் படுத்தினோம்.!

      - இப் படையை வழி நடத்திய இயக்குனர். துர்கா  பிரசாத்.

   ஒருவேளை யாராவது இவர் வீட்டின் மீது கல்லெறிந்து விட்டு, Sorry we felt s…………O guilty. 
என்ன செய்றது எங்க கிட்ட வெடி குண்டு இல்லை அதான் கல்லை விட்டோம்ன்னு சொன்னா அரசு வேடிக்கை பார்த்து கொண்டு சும்மா விடுமா ஓர் சாமானியனை  ………!?

அடுத்து பிளாஸ்டிக் குண்டு என்கிறார் அவர் . ஆனால் உண்மை,

   " இந்த பால்ஸ் குண்டு உருண்டையாக தான் இருக்கும் ஆனால் இவை ஒரு முனையில் கவனமாக கூர் செய்து எடுத்து வந்திருக்கிறார்கள். இன்னும் பல வடிவமே இல்லாமல் இரும்பு துண்டுகள் போன்றே உள்ளன "

        - இது 25 நாட்கள் முன்பே மருத்துவ குழு அளித்த அறிக்கை!

    இதே நிலை நாளை தமிழகத்திற்க்கு வர அனைத்து காரணிகளும் பிரகாசமாக உள்ளது!

மீத்தேன், கெயில், கூடங்குளம், தேனியில் நியூட்ரினோ என பல நாசக்கார செயல்கள் நம்மை விழுங்க தயார் ஆகி வருகிறது! ஜல்லிக்கட்டு நடத்த தமிழே தெரியாத ஒருத்தன் நமக்கு மறுப்பு சொல்றான் High court ல உட்கார்ந்து கிட்டு!

   நாளை நமக்கும் நம் இறையாண்மைக்கும் பங்கம் வந்து நாம் சர்வதேச நீதி மன்றத்தையே நாடினாலும் அவர்கள் சொல்லப் போவது அம் மக்கள் நிம்மதியாக சுதந்திரமாக தானே  வாழ்கிறார்கள்  என்ற  சப்பை கட்டுத்தான்.

அதற்கான பாரம்பரிய Branded அஸ்திராம் தான்

தேர்தல் ......!

   எப்படி ஈழ போருக்கு பின் தமிழகத்தில் உருவான இந்தியாவை நிராகரிக்கும் "தமிழ் தேசிய அரசியலை " சில போலி தமிழ் தேசிய வாதிகள் தேர்தல் பாதையில் நிறுத்தினார்களோ!  இந்திய உளவுத்துறையின் திட்டப்படி  போராட்ட களத்தை மழுங்கடித்து ,  DNA டெஸ்டிங் அரசியல் பேசி மொத்த உணர்வான இளைஞர்களை நட்டாற்றில் நிறுத்தி இன துவேச அரசியலுக்கு அடிமை படுத்தி வைத்திருக்கிறார்களோ அதைத் தான் தமது வெற்றியாக இப்போது  கொண்டாடுகிறது RAW....!


   இன்னும் நாம்  "இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை" யும் அதன் தேசிய இனங்களுக்கான துரோகங்களையும் உள்ளூர ஆராயாமல் விட்டால், 
Pellet குண்டுக்கும், காலாவதியான கண்ணீர் புகை  குண்டுகளையு எதிர் கொள்ள தயார் ஆகுங்கள்.

     தேர்தலில் போட்டியிடுவதும், இந்திய பார்பனிய பணியா கும்பலுக்கு சாமரம் வீசுவதும் ஒன்று தான்.

#Free_Kashmir
#Lets_peel_off_the_Mask_of_Indian_Constitution

Thursday, 11 August 2016

Brazil

மூன்று வாரம் முன்னரே நான் எழுத துவங்கிய கட்டுரை இது.  அப்போது இதை ஏனோ சோம்பேறித் தனத்தால் அப்படியே விட்டு விட்டேன். 

ஆனால் இரண்டு நாள் முன்பு பார்த்த ஓர் காணொளியும் என் அலுவலகத்தில் அது பற்றிய ஓர் விமர்சனமும் வந்த பின் தான் இதை தொடர்ந்து உடனே முடித்தேன்.


பிரேசில் ஒலிம்பிக் போட்டிகளை சீர் குலைக்க முயன்றதாக  10 பேர் கைது
          - போட்டிகள் துவங்க  ஒரு வார முந்தைய செய்தி இது
 
இது மற்றவர்களுக்கு ஓர் வெளிநாட்டு செய்தி அவ்வளவே!
 
ஆனால், நான் இதை அவ்வாறு பார்க்கவில்லை!
சில முந்தைய  நிகழ்வுகளை இணைத்து பார்க்க வேண்டிய அவசியம் உள்ளது!





2014 ஜுன் :-
    Football  உலக கோப்பை துவங்கும் முதல் நாள் வரை நாடு முழுதும்  பொது மக்களுக்கும் அரசுக்கும் நடந்த போராட்டத்தை மறக்க இயலாது!
லத்தீன் அமெரிக்க நாடுகளில் முக்கியமான ஓர் நாடு பிரேசில்!
  உலகோப்பைக்காக மைதானத்தையும் சுற்று வட்டார பகுதிகளையும் மேம் படுத்துவதாக கூறி அப் பகுதியில் குடியிருந்த மக்களை வெளியேற்றியது அரசு!
மீண்டும் உங்கள் பகுதி உங்களுக்கே என்ற வாக்குறுதியோடு!
அடுத்த சில நாட்களில், போட்டிகள் முடிவுற்ற பின்னர் வல்லரசு நாடுகள் அப் பகுதியை வணிக ரீதியில் பயன் படுத்த போகிறார்கள் என அறிந்ததும் போராட்டம் பெரிய அளவில் வெடித்தது!
போராட்டம் ஓர் நாள் இரு நாள் இல்லை!  மே 14 - 2014 துவங்கிய போராட்டம் ஜூலை வரை தொடர்ந்தது!
Sao Paulo, Brasilia, மரக்காணா என அனைத்து மைதானங்களையும் முற்றுகையிட்டனர் மக்கள்!
    சுவர் ஓவியம்,
     இணையம்
          தொலைக் காட்சி என மக்களை திரட்டியது போராட்ட குழு!

   ( இந்தியாவா இருந்திருந்தா முதல் மூணு மேட்ச்சுல தோத்து அடுத்த நாலு மேட்சுல ஜெயிச்சு Final கொண்டு போக வச்சி "தேச பற்று எனும் நாக்கு பூச்சியை  உடல் முழுக்க ஓட விட்டிருப்பார்கள்.!
   பாவம் பயிற்சி பத்தலை போல பிரதமருக்கு)


      இவ்வளவு பெரிய மக்கள் எதிர்ப்பை மீறி  கால்பந்தாட்டத்தை எப்படி நடத்தப் போகிறார்கள் என நானெல்லாம் கண்கள் விரிய காத்திருந்த போது தான் ..... மெல்ல அமெரிக்காவின் பாரம்பரிய மொள்ளமாரித்தனத்தை தானும் பயன் படுத்துவது என களத்தில் இறங்கியது பிரேசில்..!
காவல் துறையை வைத்து போராட்ட பேரணிக்குள் கலவரத்தை ஏற்படுத்தினார் பிரதமர். அடுத்து அதை அடக்குவதாக கூறி
இராணுவத்தை வைத்து பலரை கைது செய்தது அரசு!
   அப் போராட்டக்காரர்கள்  108 பேர் கைது செய்துள்ளதாகவும் 500 க்கும் மேற் பட்டோர் படுகாயம் அடைந்ததாகவும் தங்கள் பக்கத்தில் பதிவு செய்துள்ளனர் அந்த தோழர்கள்!
     லத்தீன் அமெரிக்க நாடுகளான பிரேசில், அர்ஜெண்டினா, பராகுவே போன்ற வற்றின் நீர்வளம் அமெரிக்காவுக்கு தேவை!
காரணம் அப்போது தான் அழிந்து வரும் தன் நாட்டின் பல நீர்நிலைகளை காக்கவும் பாதுகாத்து தன் சந்ததிக்கு அடுத்த 50 ஆண்டுகளுக்கும் வைத்திருக்க முடியும் என தெளிவாக இருந்தது! (That அடுத்தவன் எக்கேடு கெட்டா நமக்கென்னா Moment)
   அதற்க்கு அவர்கள் எடுத்த முதல் படி தான் தென் அமெரிக்காவின் மிகப் பெரிய பொழுது போக்கு மையமான கால்பந்து போட்டிகள் .
   World Cup, Confidential Cup's அடுத்ததாக இப்போது Olympic., 
   இப் பெயர்களில் நாட்டை சுத்தம் செய்கிறோம் முன்னேற்றுகிறோம் நவீனமயமாக்குகிறோம் என பழங்குடி மக்களையும், பூர்வீக குடிகளையும் சொந்த மண்ணை விட்டு புலம் பெயரச் செய்தது!
   இத்தனை அரசியலை எல்லாம் நாம் எங்கே கவனித்திருக்க வாய்ப்பில்லை!
நாடு முழுதும் ஏற்கனவே வறுமை, கல்வி என நொடித்து போயிருந்த நிலையில் World Cup போட்டிகளுக்கு மட்டுமே மொத்த நாட்டின் நிதியில் இருந்து 30% இதற்காக மட்டுமே செலவிடப் பட்டது!
   இந்த பொருட்செலவு கணக்கு இதுவரை நாடு கண்டிறாத மிகப் பெரும் கொள்ளை "Big Theft in History " என பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் கால்பந்து வீரருமான "ரொமாரியோ " கதறினார்.




   யாரும் எதையும் கண்டு கொள்ளவில்லை!
அடுத்து வந்த Panama Papers ன் அலை அர்ஜெண்டினாவின் மக்களை வீதிக்கு அழைத்து வந்தது!
Brasilia - வின் நகர தெருவை 2500 மக்கள் முற்றுகை இட்டு  போராடிய போது கலைத்த இராணுவம்,
இம்முறை கதிகலங்கி போனது!
சுமார் 3.5 பில்லியன்  மக்கள் 300 நகரங்களை நிலை குலைய செய்தனர். இது மொத்த பிரேசிலின் மக்கள் தொகையில் 5 ல் ஒரு பங்கு!
ஆடிப் போனர் முன்னாள் இன்னாள் பிரதமர்கள். காரணம் இருவரும் சிறை செல்லுங்கள், எங்கள் நாடு எங்களுக்கே என களம் புகுந்தனர் சாமானியர்கள்.
பெண்கள், குழந்தைகள், யுவதிகள் என அல்லோகலப் பட்டது பிரேசில்! 

 இப்போதும் ஒலிம்பிக்கு எதிரான போராட்டம் தொடர்ந்து கொண்டு தான் உள்ளது !



ஆனால் சர்வதேச ஊடகங்கள் அத்தனை முற்றிலுமாக மறைக்கும் வேலையை செய்து வருகின்றது 

   
   அத் தெருக்களில் வரைந்திருக்கும் ஓவியங்களையும், வீதிகளில் இறங்கி நிற்க்கும் பெண்கயும் பாருங்கள் .!
    இது தான் புரட்சியின் விதை!
Facebook ம், What's up ம் தகவலை தான் தெரிவிக்கும் நாம் தான் செயலில் துவங்க வேண்டும்.
இதை எல்லாம் ஏன் இப்போது எழுதுகிறேன் .....? அதுவும் De - activate செய்த கணக்கை மீண்டும் உயிர்பித்து .....!





நேற்று ஓர் காணொளியை காண நேர்ந்தது.! 
  பிரேசிலின் ஒலிம்பிக் மைதானத்தை சுற்றி இருக்கும் பகுதியில் வெளி நாட்டு சுற்றுலா பயணிகளிடம்,  அப்பகுதி இளைஞர்கள் வழிப்பறி செய்வது போலவும், அடித்து பிடுங்குவது போலவும் ஓர் படத் தொகுப்பு அது!
    வாழ்வாதாரத்தையும் வாழ்விடத்தையும் இழந்தவன்
   இதை சாதாரணமாக கடந்து செல்லும் ஓர் நிகழ்வாக என்னால் பார்க்க இயலவில்லை!
   மிகத் தெளிவாக பல சம்பவங்களை இணைத்து அம் மக்கள் மீது ஓர் வெறுப்பு உணர்வையும், திருடர்கள் என்ற ஒரு மாயையும் பார்ப்பவர் மனதில் பதிய வைக்க அந் நாட்டு அரசே தான் செய்திருக்க வேண்டும்.
   தன் மக்களையே யாராவது காட்டி கொடுப்பார்களா என நீங்கள் கேட்கலாம்.
  ஆனால், Corporate களுக்கும் அமெரிக்காவுக்கும் சொம்பு தூக்கும் போது கிடைக்கும் வசதியையும் பதவியையும் நினைக்கும் போது இதெல்லாம் பெருசாக தெரியாதே!
   இப்போதே அம் மக்கள் மீது தவறான ஓர் பார்வையை பதித்து விட்டால் போதும்.  இனி அவர்களை எப்போது வேண்டுமானாலும் கைது செய்யலாம் அவர்களின் போராட்டத்தை ஒடுக்கலாம்.  (இங்கே பழங்குடிகளை மாவோயிஸ்ட் என கூறி குருவியை போல சுடுமே Corporate தரகு இந்திய அரசு அப்படி)

    இதற்க்கும் நமக்கும் என்ன சம்பந்தம் ஏன் அம் மக்களின் துயரை நாம் பகிற வேண்டும் .....!??
   கடந்த டிசம்பரில் பெய்த மழையை சாக்காக வைத்து பல குடிசை வாழ் மக்கள் இடம் பெயர செய்யப் பட்டனர். சைதாபேட்டை மற்றும் சென்னையின் முக்கிய பகுதியில் வசித்த  பலர்,
செம்மஞ்சேரி, குமரன் நகர், கண்ணகி நகர் என!
    இன்று அப் பகுதிகள் கிட்ட தட்ட ஓர் தீண்ட தகாக பகுதிகள் போல காவல்துறையாலும் பகட்டு வாழ்க்கை பண்ணாடைகளாலும் சித்தரிக்கப் பட்டுள்ளது! அங்கே தான் திருட்டு, களவு என பலரும் தொடர்பானவர்கள் இருப்பது போல!  உண்மையில் இவர்கள் தான் மனதளவில் "தாழ்த்தப் படும் " மக்கள்.
  சமீபத்தில் செம்மஞ்சேரி பகுதியிலிருந்து,  ஓர் செயின் பறிப்பு வழக்கில் வீட்டில் தூங்கி கொண்டிருந்தவனை அழைத்து சென்று கண் மண் தெரியாமல் போலீஸ் அடித்ததில் அவனின் செவித் திறன் பறி போனது! 
மறு நாள் அவனை தவறாக அழைத்து சென்று விட்டோம் எனக் கூறி ரோட்டில் இறக்கி விட்டு சென்றது காவல் துறை!
இதையெல்லாம் கவனிக்க வேண்டிய முதல்வரோ இன்னும் தூக்கத்தில் இருந்து எழ வில்லை போல!
    அங்குள்ள என் நண்பனை நான் சந்திக்க சென்றாலும் இங்கெல்லாம் உனக்கு நட்பா என ஏதோ ஏலியன்ஸை போல பார்க்கிறார்கள்.
   இன்றும் அம் மக்களின் பூர்வீக பகுதிகளை ஆக்கிரமித்து கட்டப்பட்ட Five star விடுதிகளும் Multinational நிறுவனங்களையும் இந்த அரசு கிஞ்சித்தும் கேள்வி கேட்காது!  கேட்டில் இந்தியா கொடுக்கும் நிதியையும் நிறுத்தி விடுமே!    
World Bank சென்னையை ஓர் வணிக பூங்காவாக மாற்ற எத்தனை கோடியை வேண்டுமானாலும் செலவழிக்க தயாராக உள்ளது!  காரணம், ஆசியாவிலேயே குறைந்த செலவில் மேற்குலக நாடுகள் லாபம் ஈட்டும் இடம் தற்போதைக்கு தமிழ் நாடு தான்.
   அதன் துவக்க குறியீடுகள் தான் கெயில், மீத்தேன், நியூட்ரினோ போன்றவை! அடுத்த பத்தே ஆண்டில் நீங்களும் நானும் அடுத்த இனப்படுகொலையை தரிசிக்க வேண்டிவரும் என்பதை நினைவில் வையுங்கள்.


     மரக்காணாவுக்குள்ளும் மெட்ராஸூக்குள்ளும் நடப்பவை ஒன்று தான்.

    இன்னும் உலக அரசியலை நாம் உற்று நோக்காத வரை நாம் இப்படியே ஜெ. கருணா. சண்டை தான் வேடிக்கை பார்த்து பொழுது போக்குவோம்!!!