350 பால்ரஸ் குண்டுகளை வாயில் அடக்கி கொண்டு பாய்ந்து சென்று எதிரில் நிற்பவரின் உடலில் மூன்று இஞ்ச் ஆழத்திற்க்கு துளைத்து தங்கி விடும் ஓர் குப்பியை தான் முழுமையான ஒரே ஒரு தோட்டா என்கிறது இந்தியாவின் CRPF ……………!
மொத்தமாக 13 முதல் 16 லட்சம் வரையிலான Pellet குண்டுகளை காஷ்மீர் மக்கள் மீது வீசியுள்ளது இந்திய Corporate அரசு!
இது கிட்ட தட்ட இனப்படுகொலையையும் விட மிக மோசமான செயல். ஓர் தலைமுறையையே ஊனமாக மாற்றும் திடமான நாசக்கார பணி இது!
இந்தியாவின் முதல் தேர்தல் முடிந்ததும் காஷ்மீரில் பொதுவாக்கெடுப்பு நடத்தப் படும். இதை சொன்னவர் ஜவஹர்லால் நேரு ஐ.நா சபையில்.
இன்று வரை அந்த இந்திய தேர்தல் வரவில்லை போல காஷ்மீருக்கு!
பின்னர் எப்படி ஐ.நா வில் சப்பை கட்டு கட்டியது தெரியுமா இந்தியா …………! ? அது தான் சட்டசபை, உள்ளாட்சி தேர்தல்கள் .
சில வருடம் முன்பு ராஜபக்ஷே Common wealth மாநாட்டில் சொன்னாரே, " வடக்கு மாகாணத்தில் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்தினோம். அம் மக்கள் அவர்களுக்கு விருப்பமானவர்களை அவர்களே தேர்வு செய்து கொண்டுவிட்டனர் " பிரச்சினையே முடிந்து விட்டது. பின்னர் எதற்கு சர்வதேச குழு தமிழர் பகுதியை பார்வையிட வேண்டும் என்று!
அதைத் தான் இந்திய பார்ப்பனிய அரசும் சொன்னது! அதோடு கதையை ஊத்தி மூடி விட்டார்கள்.
ஆனாலும், காஷ்மீரை மைய்ய படுத்தியே இந்திய - பாக் போர்கள் மூள காரணம் அமெரிக்காவின் குள்ளநரித் தனமும் இராணுவ தளவாட விற்பனைகளும் தான்.
தெற்காசியாவில், இந்தியா - பாக் - சீனா மூன்றும் அமைதியாக வாழ துவங்கி விட்டாலே அமெரிக்காவின் 50 ஆண்டு கால வல்லரசு கனவு தவிடு பொடி ஆகி விடுமே அது தான் முக்கிய Agenda வே Pizza வாயனுங்களுக்கு!
சரி விடயத்துக்கு வருவோம்!
அந்த பால்ரஸ் குண்டுகள் சிறுவன் சிறுமி என எந்த வித்தியாசமும் பாராமல் அனைவரின் உடலிலும் புதைந்துள்ளது!
இனி அதை வெளியே எடுப்பதும் உடலை கொத்து கொத்தாக கீறி போடுவதும் ஒன்று தான். உடலை நார் நாராக கீறினால் தான் குண்டை வெளியே எடுக்கவே முடியும். கடந்த ஜூலை 22 ம் தேதி வரை மட்டுமே 100 க்கும் மேற் பட்டோர் க்கு பார்வை திரும்ப வர வாய்ப்பே இல்லை என கை விரித்து விட்டனர் டாக்டர்கள். !
ஆயுள் முழுக்க அந்த குண்டை வெளியே முடியாதாம்!
கொஞ்சம் யோசியுங்கள் தெருவில் விளையாட போகும் உங்கள் குழந்தை 48 சிறிய வகை பால்ரஸ் குண்டுகளை உடலில் வாங்கி விட்டுதான் வீடு திரும்பும் என்றால் நீங்க சும்மா இருப்பீங்களா ………!? இரத்தம் கொதிக்காது, இராணுவம் மீது கல்லெறிய மாட்டீர்களா …………!?
அதைத் தான் அம் மக்கள் செய்கிறார்கள். அவர்களா தீவிரவாதிகள்.
" எந்த ஓர் தேசிய இனமும் தனக்கான சுயநிர்ணய நாட்டினை பெற உரிமை உள்ளதாக " ஐ.நா விதி 99 A சொல்கிறது!
( Article 99 -A Describe, Every National Community has deserve to a independent country. This is Calling "Self Determination Rights ")
இதில் பெரிய காமெடியே அனைத்து கட்சி கூட்டத்தில் மோடி சொன்னது தான் . :-
" காஷ்மீர் மக்களுக்கு நியாயம் கிடைக்க செய்வோம், இந்திய அரசியல் சாசண சட்டப்படி "
அடேய்!
அப்ரசெண்டிகளா அவிங்க போராடுறதே இந்திய அரசியல் சாசனம் எங்களுக்கு வேண்டாம் எங்களுக்கான தனி இறையாண்மையை நாங்களே முடிவு பண்ணிக்குறோம் நீங்க மூடிட்டு கிளம்புங்க அப்டின்றது தான்!
ஃப்ருகான் வாணி ன்னு ஒருத்தன் செத்ததுக்கே 2 லட்சம் பேர் கூடினப்பவே அம் மக்கள் சொல்லாம சொல்லிட்டாங்க நீங்க தேவையில்லைன்னு!
கோயமுத்தூர்ல, Amnesty முற்றுகை போராட்டத்துக்கு ஆள் கிடைக்காம College, School பசங்களை மிரட்டி கடத்திட்டு வந்து கேவலப் பட்டவய்ங்க தானே நீங்க.!
உங்களுக்கு எங்க தெரிய போகுது போராட்டம்ன்னா ஆளு சேக்குறது இல்லை வெறும் பத்து பேரும் இருந்தாலும் கடைசி வரை தன்னோட கொள்கையில உறுதியா நிற்குறதுக்கு பேரு தான் "போராளி"ங்குறது
87 முதல் 2014 வரை காஷ்மீர் காணாமல் போனோர் மட்டுமே 90 ஆயிரம் பேர்.
91 - ல் குப்வாரா மாவட்டத்தில் நடந்த பெண்களின் மீதான வன்புணர்வும் கற்பழிப்புக்குமே இன்றுவரை இந்திய இராணுவம் எந்த பதிலும் சொல்ல வில்லை!
" இந்த குண்டுகளை பயன் படுத்தாமல் இருந்திருந்தால் Fire யை தான் நாங்கள் Open செய்திருக்க வேண்டும். " அம் மக்கள் மீது தாக்குதல் நடத்தியது மன வருத்தத்தை தான் தருகிறது! என்ன செய்வது எங்கள் வேலை அது.
நாங்க, Plastic குண்டுகளை தான் பயன் படுத்தினோம்.!
- இப் படையை வழி நடத்திய இயக்குனர். துர்கா பிரசாத்.
ஒருவேளை யாராவது இவர் வீட்டின் மீது கல்லெறிந்து விட்டு, Sorry we felt s…………O guilty.
என்ன செய்றது எங்க கிட்ட வெடி குண்டு இல்லை அதான் கல்லை விட்டோம்ன்னு சொன்னா அரசு வேடிக்கை பார்த்து கொண்டு சும்மா விடுமா ஓர் சாமானியனை ………!?
அடுத்து பிளாஸ்டிக் குண்டு என்கிறார் அவர் . ஆனால் உண்மை,
" இந்த பால்ஸ் குண்டு உருண்டையாக தான் இருக்கும் ஆனால் இவை ஒரு முனையில் கவனமாக கூர் செய்து எடுத்து வந்திருக்கிறார்கள். இன்னும் பல வடிவமே இல்லாமல் இரும்பு துண்டுகள் போன்றே உள்ளன "
- இது 25 நாட்கள் முன்பே மருத்துவ குழு அளித்த அறிக்கை!
இதே நிலை நாளை தமிழகத்திற்க்கு வர அனைத்து காரணிகளும் பிரகாசமாக உள்ளது!
மீத்தேன், கெயில், கூடங்குளம், தேனியில் நியூட்ரினோ என பல நாசக்கார செயல்கள் நம்மை விழுங்க தயார் ஆகி வருகிறது! ஜல்லிக்கட்டு நடத்த தமிழே தெரியாத ஒருத்தன் நமக்கு மறுப்பு சொல்றான் High court ல உட்கார்ந்து கிட்டு!
நாளை நமக்கும் நம் இறையாண்மைக்கும் பங்கம் வந்து நாம் சர்வதேச நீதி மன்றத்தையே நாடினாலும் அவர்கள் சொல்லப் போவது அம் மக்கள் நிம்மதியாக சுதந்திரமாக தானே வாழ்கிறார்கள் என்ற சப்பை கட்டுத்தான்.
அதற்கான பாரம்பரிய Branded அஸ்திராம் தான்
தேர்தல் ......!
எப்படி ஈழ போருக்கு பின் தமிழகத்தில் உருவான இந்தியாவை நிராகரிக்கும் "தமிழ் தேசிய அரசியலை " சில போலி தமிழ் தேசிய வாதிகள் தேர்தல் பாதையில் நிறுத்தினார்களோ! இந்திய உளவுத்துறையின் திட்டப்படி போராட்ட களத்தை மழுங்கடித்து , DNA டெஸ்டிங் அரசியல் பேசி மொத்த உணர்வான இளைஞர்களை நட்டாற்றில் நிறுத்தி இன துவேச அரசியலுக்கு அடிமை படுத்தி வைத்திருக்கிறார்களோ அதைத் தான் தமது வெற்றியாக இப்போது கொண்டாடுகிறது RAW....!
இன்னும் நாம் "இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை" யும் அதன் தேசிய இனங்களுக்கான துரோகங்களையும் உள்ளூர ஆராயாமல் விட்டால்,
Pellet குண்டுக்கும், காலாவதியான கண்ணீர் புகை குண்டுகளையு எதிர் கொள்ள தயார் ஆகுங்கள்.
தேர்தலில் போட்டியிடுவதும், இந்திய பார்பனிய பணியா கும்பலுக்கு சாமரம் வீசுவதும் ஒன்று தான்.
#Free_Kashmir
#Lets_peel_off_the_Mask_of_Indian_Constitution
No comments:
Post a Comment