Saturday, 28 October 2017

Banking Merger -

அரசுத் துறை வங்கிகள் அனைத்தினையும் ஒன்றாக இணைக்க மத்திய அமைச்சரவைக்கு அழுத்தம் கொடுக்கப் படுவதாக தகவல்கள் வருகின்றது!
இதன் மூலம் பொருளாதாரம் உயரும் , எதிர்கால வளர்ச்சிக்கு நல்லது போன்ற ஜால வார்த்தைகள் ஆங்கில பத்திரிக்கைகளை நிறைகின்றன !

இது எப்படி பட்ட விளைவினை நம்மை போன்ற சாமானியர்களுக்கு உண்டாக்கும் என்பதை பார்க்கும் முன் ,

ஒரு இரண்டு வருடம் முன்பு அதானி -க்கு SBI வங்கி ஆஸ்திரேலியாவில் நிலக்கரி எடுக்கும் தொழில் செய்ய 6 ஆயிரம் கோடி கடன் கொடுத்ததையும் அது இன்னும் சில மாதங்களில் SBI யினால் Short Close செய்யப் பட போகின்றது என்பதினையும் சில வாரங்கள் முன்பே ஆதாரங்களுடன் நாம் முன் வைத்திருந்தோம் !

அதிக வைப்பு தொகையும் , கையிருப்பும் கடைப்பிடிக்காத விழிம்பு நிலை வங்கிகள் அனைத்தையும் மூடும் வேலையை செய்ய துவங்கி விட்டது இந்திய அரசு ! ( Non-performing assets ) NPA என்ற அடிப்படையில் கிரமப்புறங்களில் சேவை வழங்கி வரும் பல வங்கிகளை ஒரே குடையின் கீழ் கொண்டு வர துடிக்கிறது WTO - தன் தற்போதைய அடிமை பாஜக !

இவர்களின்ஒரே நோக்கம் உழைக்கும் மக்களின் கடைசி சேமிப்பை சிதைப்பதும் ...தனியார் கார்பொரேட் நிறுவனங்களை ஊக்குவிப்பதும் தான் சில வருடங்கள் முன்பே Reliance” வங்கி தொடங்க RBI-யிடம் பேச்சு வார்த்தை நடத்தியது நினைவு இருக்கிறதா......... ?

இந்தியாவில் Allahabad Bank முதல் , Vijaya Bank வரை SBI தவிர்த்து 20 அரசுக்கு சொந்தமான வாங்கிகள் உள்ளன !

இவை அனைத்தையும் SBI ன் கீழ் இணைத்து விட்டால் இதில் கொடுக்கப் பட்ட கடன்களை பற்றிய விபரங்களையும் மீழ் வசூலையும் ஒரே நேர்கோட்டில் கொண்டு வருவதற்கே பல வருடங்கள் ஆகிவிடும்!

இந்த அரசு வங்கிகளில் கடன் வாங்கி விட்டு ஓடிய (இல்லை இல்லை பாஜக தப்ப வைத்த )  விஜய் மல்லையா மட்டுமே 6400 கோடி தர வேண்டியது உள்ளது ! ( Except  Axis Bank & Other Banks  653Cr.)

விபரம் கீழே:-

According to reports, following is the list of 17 banks which have paid nearly Rs.7,000 crore (excluding interest) to Mallya:-

Bank name
Amount
SBI
Rs.1,600 cr
PNB
Rs.800 cr
IDBI Bank
Rs.800 cr
Bank of India
Rs.650 cr
Bank of Baroda
Rs.550 cr
United Bank of India
Rs.430 cr
Central Bank
Rs.410 cr
UCO Bank
Rs.320cr
Corporation Bank
Rs.310 cr
State Bank of Mysore
Rs.150 cr
Indian Overseas Bank
Rs.140 cr
Federal Bank
Rs.90 cr
Punjab & Sind Bank
Rs.60 cr
Axis Bank
Rs.50 cr
Other banks
Rs.603cr

இந்த நிலையிலும் இவர்கள் இதை நடத்தி முடிக்க வேண்டும் என நினைத்தால் , 1997-ல் வங்கி துறையில் நிகழ்ந்த Asian Economic Crisis யை நினைவு படுத்துவது அவசியமாகிறது !
அப்போது ஆசிய நாடுகள் முழுதும் நிகழ்ந்த பொருளாதார நெருக்கடியை சமாளிக்க பல நாடுகளும் தள்ளாடியது குறிப்பிட தக்கது அதன் விளைவாக சில நாடுகள் அனைத்து வங்கிகளையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வந்தது! அதில் மலேசியா முக்கியமான ஓர் நாடு !

அப்போது கூட இந்திய வங்கிகளை அந்த நெருக்கடி சிறிதும் சீண்ட வில்லை என்பது மிக முக்கியமாக நாம் கவனிக்க வேண்டிய ஒன்று !  மாறாக தனியார் வங்கிகள் துவங்குவதற்கும் அனுமதி அளிக்க துவங்கியது RBI .

வங்கிகளை இணைத்ததால் நாம் சந்தித்த ஓர் பெரும் இழப்பு PNB என அழைக்கப்படும் Punjab  National  Bank உடன் 1993 ல் New Bank of India என்ற வாங்கியுடன் வலுக்கட்டாயமாக இணைத்தது RBI. அதற்கு சொல்லப் பட்டகாரணம்:- இவ் வங்கியின் நிதி நிலை மிகவும் மோசமாகவும் பண வீக்கத்தை உண்டாக்கவும் செய்யும் என்பதால் வலுவான நிதி நிலை கொண்ட PNB உடன் இணைக்கின்றோம் என்றது RBI.

ஆனால்,
இதன் விளைவு 1996 ல் PUNJAB  NATIONAL  BANK 96 கோடி இழப்பு என கணக்கு காட்டும் அளவுக்கு போனது !
இரண்டு வங்கிகளும் வழங்கிய கடன், Structure Of functioning, Staff Co-operation என 

பலவும் சேர்ந்து அடுத்த 5 வருடங்களுக்கு PNB யை குறிப்பிட தக்கது !



SBI இதற்கு முன்பு இணைத்து கொண்ட வங்கிகளால் நேர்ந்த அவலங்களை நாம் இங்கே காண்பதும் அவசியம் :- 

வங்கிகளில் 7 Sisters என குறிப்பிடப் படும் இந்திய சுதந்திரத்துக்கு முன்பு உருவாக்கப் பட்ட வங்கிகளை இணைத்து கொள்ளும் படி 1991 -ல் நரசிம்மன் குழு SBI க்கு அறிவுரை வழங்கியது !

அந்த வங்கிகள் 

1. SBBJ  -  State Bank of Bekaner & Jaipur 

2.Bank of Indor / State Bank Of Indore - இது 1920 ல் மஹாராஜா. Tukoji Rao Holkar வால் துவங்க பட்டது! 

3.State Bank of Saurashtra - 1902 ல் பவன் நகர் வங்கி குழுமத்தால் துவங்கப் பட்டது!


4.State of Hyderabad Nizam's - 1941 ல் துவங்க பட்டது Hyderabad நிஜாம் அவர்களால்,,...
பின்னாளில் இதுவே  State Bank of Hyderabad (SBH) .

இதே வரிசையில் பட்டியாலா , திருவான்கூர் , மைசூர் வங்கிகள் உட்பட..... 

இவற்றிக்கு ஏற்கனவே 1963 முதலே SBI நிதி உதவி அளித்து வருவது குறிப்பிட தக்கது !

ஆயினும் , 2008 , 2010 என பொறுமையாகவே தன்னோடு  இரு வங்கிகளை மட்டுமே இணைத்து கொண்டது SBI . 

மேலும் அரசின் பல கட்ட அழுத்ததிற்கு பின்னரே 2016 ன் மத்திய அரசின் ஆணைப் படி 2017 - மார்ச்-ல் மீதி 5 வங்கிகளையும் தன்னோடு இணைத்து கொண்டது SBI . 

ஏப்ரல் 2017 ல் SBI வெளியிட்ட ஆண்டு அறிக்கை எத்தனை பெரிய சுமையை இந்த கையால் ஆகாத அரசு தன் மேல் சுமத்தி உள்ளது என வெளிக்காட்டியது !

ஆதாரம் கீழே :- 




இந்த அரசு செய்யும் பல முறைக்கேடுகளில் இது மிக முக்கியமாக நாட்டை Zero Balance என்ற நிலையில் நிறுத்தும் ஒன்று !

இதன் மூலம் பல பண முதலைகள் பெற்ற

 கடன்ங்கள் மூடி மறைக்கப் படலாம் ., 

 மொத்தமாக  தள்ளுபடி என்ற பெயரில்........

 அம்பானி, அதானி , வேதாந்தா போன்றோர் வாங்கிய கடன்கள் ஊத்தி மூடப் படலாம் !     

அதோடு நீங்களும் நானும் சிறுக சிறுக சேர்த்த சேமிப்பு மண்ணோடு மண்ணாக போய் விட்டதாகவும் , நாட்டின் நலன்னுக்காக மக்கள் இதை பொறுத்து கொள்ள வேண்டும் என்றும் புரியாத மொழியில் பைஜாமா போட்ட ஒருத்தர் TV -யில் பேசுவார் !

இதை எதிர்த்து வரும் நாட்களில் நீங்களும் நானும் தெருவில் இறங்காமல் நம் குழந்தைகளின் எதிர்காலத்தை நிர்ணயம் செய்ய இயலாது !

நாம் வேகமாக  எதிர் வினை ஆற்றும் நிலையில் உள்ளோம் என்பதை மறவாதீர்கள் !





Wednesday, 25 October 2017

கட்டலோனியா - சுதந்திர நாடு

ஐரோப்பா முழுதும் தேசிய இனங்களுக்கான சம உரிமை கேள்விக்குறி ஆகியுள்ளதாகவே சர்வதேச அளவில் பார்க்கப் படுகின்றது!
EU வின் வெளியே-வும் சரி உள்ளேவும் சரி தேசிய இனங்களுக்கான சுய நிர்ணய உரிமை கோரிக்கை குறித்தான  அழுத்தம் இனி எந்த காலத்திலும் காலணி ஆதிக்கங்களால் அடக்கி விட முடியாத ஒன்றாகவே மாறியுள்ளதாக ஊடகவியலாளர்கள் மேற்கோள் காட்டுகின்றனர்!

இத்தனை ஆண்டுகள் ஐரோப்பிய காலணி ஆதிக்கம் எந்த அளவு தேசிய இனங்களை நசுக்கி வைத்துள்ளது என்பதை ஒவ்வொரு தேசிய இன மக்களும் அறியத் துவங்கி விட்டனர்!
தங்களின் புதைக்கப் பட்ட திரிக்கப்பட்ட வரலற்றை மக்களே தேடித் தேடி மீண்டும் வெளிக் கொணர துவங்கி விட்டனர்!
ஐரோப்பிய கூட்டமைப்பு உலகின் அமைதியன ஓர் கூட்டமைப்பு என்ற பெயரையே ஸ்பெயின் உடைத்து விட்டதாக அனைவரும் கருதுகின்றனர்!

கடந்த அக். 1 அன்று கட்டலோனிய பாராளுமன்றம் அறிவித்த பொதுவாக்கெடுப்பை சீர் குழைக்க ஸ்பெயின் அரசு செய்த வேலைகள் அனைத்தையும் உலகமே பார்த்து கோபத்தை கொப்பளித்ததை யாருமே மறுக்க முடியாது!

இவர்கள் நடத்திய வன்முறையால் 42.3% மக்களால் மட்டுமே வாக்களிக்க முடிந்தது என்பது குறிப்பிட தக்கது! அதிலும் பல அடிகளும், காயங்களையும் பொறுத்துக் கொண்டே மக்கள் இதனை நடத்தி முடித்தனர்! 91 % வாக்குகள் கட்டலோனியாவுக்கு ஆதரவாகவே விழுந்தது குறிப்பிட தக்கது!

இதில், கட்டலோனிய தனி நாட்டு தேவையை மக்கள் உலகிற்கு உணர்த்தி விட்டதாகவே தெரிகின்றது! மேலும், ஸ்பெயினின் கோர முகத்தையும் பிற்ப்போக்குத் தனமான காலணி ஆதிக்க மனநிலையையும் நமக்கு தோலுரித்துக் காட்டும் ஓர் வாய்ப்பாக இது அமைந்து விட்டது!
   இன்றைய ஐரோப்பிய யூனியனின் தேவை என்பது ஒவ்வொரு தேசிய இனத்திற்குமான உரிமையை தூசி தட்டி புதுப்பிப்பதும் அவர்களுக்கான உரிமையை வழங்குவதுமே சரியாக இருக்கும்!

கட்டலோனிய மக்களை SDR (Self Determination Rights) சுய நிர்ணய உரிமை சட்டத்தை நோக்கி தள்ளியதற்கு  அவர்களின் மொழி மீதான தாக்குதல் தான் முதல் காரணம்!
   அதே நிலைமையை தான் இந்தியா நமக்கும் உருவாக்கி வருகின்றது என்பதே யதார்த்தம்!

கட்டலோனிய சுதந்திர தாகம் உருவானது இன்று நேற்றல்ல, Francisco Franco's ன் சர்வாதிகார ஆட்சி காலத்தில் ' (1936 - 1975) கட்டோலன் மொழி முழுமையாக முடக்கப் பட்டு, ஸ்பானிஷ் மட்டுமே முன்னிருத்தப் பட்டது!
    அப்போதே  விடுதலை வேட்கயை கட்டலோனிய மக்களின் மனது நாட துவங்கி விட்டது என்கிறானர் வரலாற்று ஆசிரியர்கள்!

  அன்றைய தினம், கட்டலோன் மொழியில் பெயரை கூட தடுத்து நிறுத்திய காரணம் தன் மக்கள் தங்களின் உரிமையை தூக்கி பிடிக்கவும் முந்தைய கட்டலோனிய வரலாற்றை தேடி மீண்டும் புத்துயிர் கொடுக்கவூம் காரணமாக இருந்தது!

எத்தனை அடக்குமுறையிலும் அம் மக்கள் ஸ்பானிஷை உள்ளே நுழையவே விடக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தனர்!

   தங்களின் மொழி உரிமையை, மொழி பெருமையை குழந்தைகளுக்கு ஊட்ட துவங்கினர்! இலக்கியங்களும், காவியங்ளும் தங்கள் மொழியிலேயே கொண்டு வரத் துவங்கினர்!
  
இதோடு நம் ஹிந்தி எதிர்ப்பு போராட்ட காலத்தை ஒப்பீடு செய்து கொள்ளலாம்! அதே 1960, 70 மொழிப் போர் தீவிரமாக தமிழகத்தில் கனற்று கொண்டிருந்த சமயம் அது!  (என்ன ஓர் ஒற்றுமை பாருங்கள் உலகின் தெற்காசியாவில் நடந்த அதே புரட்சி,  வட மேற்குலம் ஒன்றிலும் துவங்கி இருக்கிறது)

இதில் கவனிக்க வேண்டிய ஒன்று, Francisco வின் ஸ்பெயின் முழுதுமான பாசிச அடக்கு முறையில் மொழி திணிப்பு இருந்தாலும்  ஷ்பானிய மொழியை முற்றிலும் தவிர்த்தும் கூட மற்ற மாகாணங்களை விடை "Catalonia "மாபெரும் பொருளாதார வளர்ச்சியை பெற்றது என்பதை இப்போது வரை ஒட்டு மொத்த Europe ம் ஆச்சரியம் விலகாமல் சொல்கிறது!

  இதையே தான் மே பதினேழு இயக்கம் தொடர்ந்து, தேசிய இன மொழி, கலாச்சாரம் இணைந்த "சுய சார்பு / தற் சார்பு பொருளாதாரம் வேண்டும் என்கிறோம்!

இது கட்டலோனிய மக்களின் விடா முயற்சியினாலேயே நிகழ்ந்து உள்ளதாகவே Spain னே ஒத்துக்கொள்ளும்!
தங்களின் கனிம வளங்களை மற்ற யாருடனும் பகிர்ந்து கொள்ள கூடாது என்பதில் மிகவும் தெளிவாக இருந்தனர் ! முக்கியமாக Spain உடன் தங்கள் உரிமையை பகிர்வது இல்லை என்பதில் தெளிவாக இருந்தனர்,இருக்கின்றனர் இப்போதும்! இதுவே தனித்த தேசிய உணர்வின் முதல் வெளிப்பாடு என்றே பார்க்கப் படுகிறது ! Catalonia பிரிந்து போனால் அதன் மூலம் மிகப் பெரிய இழப்பு Spain -க்கு தான் என்பதை நன்றாகவே உணர்ந்து உள்ளது Spain . ஐரோப்பியாவுக்கும் தான் என்பதை EU கூட்டமைப்பு உணர்ந்து உள்ளது ! அதனால் தான் போது வாக்கெடுப்பின் போது ஐரோப்பாவும் Spain நடத்திய வெறி ஆட்டங்களை கண்டு கொள்ளவில்லை என்பதை உணரலாம்!
அதே நிலையை தான் நாம் இங்கே சந்திக்கிறோம்.
இந்தியா தமிழ்நாடு பிரிந்து போக கூடாது என்று சொன்னால் அது பாசத்தில் இல்லை பணத்துக்கத்தான் என்பதை ஒரே வரியில் புரிந்து கொள்ளுங்கள்!

  Catalonia-வை எதிர்ப்பவர்கள் வைக்கும் ஒரே குற்றச்சாட்டு .; இது சட்டத்திற்கு புறம்பான பொது வாக்கெடுப்பு என குறை கூறுவது தான் !       Spain அரசு நடத்தவில்லை பிராந்திய அரசு தான் நடத்தியது போன்ற உளறல்கள் தான் அதிகம்!
இந்த உளறல்களுக்கு காரணம் , வலது சாரி நாடான England ல் அரசே போது வாக்கெடுப்பை நிகழ்த்தியதையே Bench Mark என நினைத்து கொண்டதால் வந்து அறிவிளித் தன்மை !

இதை கவனித்து வரும் நடுநிலையான சர்வதேச அரசியல் விமர்சகர்கள் , Spain இதில் நீதி , நேர்மையை கடைப்பிடிக்கும் என நம்பினால் முட்டாள்த்தனமானது என்கின்றனர்.
ஓர் தேசிய இன மக்களின் உரிமை என்பது அரசோ,நாடோ வெகுமதி அல்ல நினைக்கும் போது கொடுக்கவும் வேண்டாம் என்றால் எடுக்கவும் !
அது உலகம் முழுதும் தனி மனித சுதந்திர உரிமை அதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும் அரசுகள் அல்ல !

ஒபாம வே வந்து இங்கிலாந்து EU -விலிருந்து பிரிய கூடாது என நேரடியாக சொல்லி விட்டு சென்ற பின்னரும் பிரிட்டன் அரசு வாக்களித்த  மக்களின் உணர்வுக்கு மதிப்பு அளித்தது உடனடியாக பிரிந்து போகும் வேலையை துவங்கியது!
மாறாக பாராளுமன்றத்தில் மறு பரிசீலனைக்கு செல்ல வில்லை!

அந்த அடிப்படை அறிவு கூட ஸ்பெயினுக்கு இல்லை என்பதே கசப்பான உண்மை!

1 ம் தேதி வாக்கெடுப்பு நடந்து முடிந்திருந்தாலும் கட்டலோனியா முழுமைக்கும் இப்போதும் போராட்டங்களும், பேரணிகளும் தொடர்ந்த வண்ணமே உள்ளது!  கட்டலோனிய பாராளுமன்றம் சுதந்திர நாடு என்பதை அங்கீகரத்து விட்டாலும்,  ஸ்பெயின் -ன் ஒப்புமை பெறும் வரை அலுவல் ரீதியாக தனி நாடு குறித்தான வேலைகளை நிறுத்தி வைத்திருக்கிறார் கட்டலோன் அதிபர் "கார்ல்ஸ் புஜிமெண்ட் ".
ஆனால், ஸ்பெயின் மாகாண அரசையே Article 151 (Constitutional of Spain) யை பயன் படுத்தி கலைத்து விடுவோம் என மிரட்டுகிறார் Prime Minister "மரியானோ ரஜோய் ".

  
  இதில் நாம் கற்றுக்கொள்ள வேண்டியது :-

  1. தற்சார்பு பொருளாதாரம்

  2. தேசிய இன பண்பாட்டோடு இந்திய பண்பாடு கலப்பதை தடுத்தல்!

  3. நம் கனிம / இயற்கை வளங்களை இந்தியா எடுப்பதை முற்றிலுமாக நிறுத்துவது!

  4. தாய் மொழி வழிக் கல்வி!

  5. அந்நிய (இந்திய) கலாச்சாரத்தை முற்றிலுமாக தடை செய்தல்!

    இந்தியா உணர்ந்து கொள்ள வேண்டியது!;-

   1.ஸ்பெயினை விட இந்தியா என்பது மிகவும் வயது குறைந்த தேசிய இனங்களின் கூட்டமைப்பே!

   2. தேசிய இனங்களின் மீது நடக்கும் தாக்குதல் தனிநாட்டு கோரிக்கையையே வலுப்பெற செய்யும் என்பது!

Monday, 23 October 2017

Panama Papers- ம் படுகொலைகளும்

அமிதாப் பச்சான் முதல் Leonal மெஸ்ஸி வரை முறை கேடாக சொத்து சேர்த்த வழக்கில் குற்றம் சாட்டிய Panama Papers நினைவு இருக்கிறதா ...!

Iceland -ன் அதிபர் மக்கள் புரட்சியால் வெளியேற்ற ப்ட்டத்ற்க்கும் இதே Panama Papers தான் காரணம்!

  அதே வரிசையில் Malta (One of the Europian Country )  நாட்டின்  பிரதமர் மீதும் பல குற்றச்சாட்டுகளை அடுக்கினார் Daphne Caruana Galizia
 (டெப்னே கர்வானா காலிஸீயா ). Malta நாட்டின் முக்கியமான புலனாய்வு ஊட்கவியலாளர்.

தனது Blog-களிலும், பொது வெளியிலும் அந்த நாட்டின் பிரதமரும் அரசின் தலைமை அதிகாரிகளும் ஈடுபட்டுள்ள முறை கேடுகள் பற்றியும் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்துள்ளார் என்பது குறிப்பிட தக்கது !

மேலும் இதில் நாட்டின் வணிக லாபத்தில் கொழிக்கும் தொழில் அதிபர்கள் சிலரையும் கேள்விக்கு உள்ளாக்க வேண்டும் என குரல் கொடுத்து இருந்தார்.

இது Panama Papers -ன் தொடர்ச்சி என்பதாலேயே பலரும் உற்று நோக்கி கொண்டு இருந்த ஓர் விடயம் இது !

இந்நிலையில் , கடந்த வாரம் 16/10/17 திங்கள் அன்று மதியம் தன்  வீட்டில் இருந்து காரை தனியே Car-ல் கிளம்பியவர் நடு வழியில் கார்-ல் இருந்த குண்டு வெடித்து உயிர் இழந்தார் !

  இது நாடு முழுதும் பெரும் அதிருப்தியை உண்டாக்கி உள்ளது !

அவரின் கொலைக்கு காரணம் , Prime Minister - Joshep Muscat தான் என பலரும் உறுதியாக கூறுகின்றனர். பிரதமரின் மனைவி பெயரில் Panama -வில் வாங்கி கணக்கு இருப்பதை வெளிக்கொணர்ந்தது தான் டெப்னே மீது இந்த கொலை நிகழ்த்த பட்டுள்ளது என்பதே பலரின் குற்றச்சாட்டு !

Mafia State - (கொலைகார நாடு ) என மக்களே பேனர் வைக்கும் அளவுக்கு நிலை சென்று விட்டது !

இன்று வரை இதற்கான காரணமாவர்கள் யார் என்று கண்டு பிடிக்காததே பெரும் நெருக்கடிக்கு Mr. Muscat யை தள்ளி உள்ளது ! சென்ற வார இறுதியில் இந்த கொலை பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு 1 மில்லியன் யூரோ வெகுமதியாக வழங்கப்படும் என பாராளுமன்றத்தில் அறிவித்து உள்ளார்.

இதனை முற்றிலுமாக மறுத்து உள்ள டெஃப்னே அவர்களின் மகன், PM பதவி விலக வேண்டும் அதற்கு முன்பாக என் அம்மா குற்றம் சாட்டிய அந்த காவல் துறை உயர் அதிகாரியும் , மற்ற ஒருவரின் பதவியும் பறிக்கப்பட வேண்டும் என கூறி உள்ளார்.

Europe கூட்டமைப்பு உயர் அதிகாரிகள் இதை மிகவும் வன்மையாக கண்டித்துள்ளனர். " இது உலக முழுதுமான பேச்சு, எழுத்து சுதந்திரத்திற்காண சவால் என்றே குறிப்பிடுகிறார்.

இந்தியாவில் " வியாபம் ஊழல் கொலைகளும் "

அதானி சொத்து குவிப்பை வெளிக்கொணர்ந்ததால் தோழர்.Paranjoy  Guha, "EPW"-வில் இருந்து வெளியேற்ற பட்டதும் உங்களுக்கும் நியாபகம் வந்தால்..............,


நாம் எத்தனை பெரிய எதிரியை எதிர்த்து நிற்கிறோம் என்பதை உணர்ந்து விட்டோம் என்றே அர்த்தம்