இன்று தோழர்.ஜிக்னேஷ் மேவானி……பாஜக மற்றும் சங் பரிவாரின் கொள்கை பரப்பு ஊது குழலாக செயல் படும் Republic தொலைக்காட்சி வெளியேறிய பிறகு தான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிப்பேன் என கூறியதை சிலர் சர்ச்சை ஆக்கி சுற்றி வருகிறார்கள்!
உண்மையிலயே தோழர். ஜிக்னேஷ் செய்தது ஊடக தர்மத்திற்கு எதிரானது என தோன்றினாலும் அறம் சார்ந்து நிற்காமல் ஆட்சியாளர்களின் அட்டூழியங்களையும், அவர்கள் செய்யும் படுகொலைகளையும் நியாயப்படுத்தி காவடி தூக்கும் அர்ணாப் போன்ற நச்சுப் பாம்புகளை அடித்து விரட்டுவதில் தவறே இல்லை!
ஊடகம் செய்யும் தவறுக்கு ஊடகத்தில் மாத சம்பளத்துக்கு பணி புரியும் அப்பாவிகள் என்ன செய்வார்கள் என நீங்கள் கேட்கலாம்! இங்கே நிராகரிப்பு செய்யப் பட்டது மதவெறி கூட்டத்தின் ஓர் ஒலிபெருக்கி-யே தவிர அந்த ஒலிப் பெருக்கியை கட்டும் தனிப் பட்ட நபர் அல்ல!
ஈழ விடுதலை போராட்டத்தை கொச்சை படுத்தியும் தமிழர்களுக்கு எதிராகவும் நின்ற The Hindu, Front line போன்ற ஊடகங்களை மே பதினேழு இயக்கம் நேரடியாகவே அம்பலப்படுத்தி உள்ளோம். பல சமயம் The Hindu ஆங்கில நாளிதழின் நிருபர்கள் எடுக்க வந்த பேட்டியை தீர்க்கமாக புறக்கணிப்பு செய்திருக்கின்றோம்!
நமக்கு ஊடக நட்பு எந்த அளவிற்கு தேவை என நாம் நம்புகிறோமோ…… அதே அளவுக்கு யாரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் காலம் கற்றுத் தந்து விடும்!
இன்று, தோழர்.ஜிக்னேஷ் மேவானி கூட்டத்தில் இருந்து வெளியேறி வந்து விட்டதாக பெருமை பீத்தும் சில ஆங்கில ஊடகங்கள் தான், H.ராஜா நிருபர்களை பார்த்து Anti Indian என்று கூறிய பின்னரும் எச்சை யின் பின்னால் மைக்கை தூக்கி கொண்டு ஓடும் அளவிற்கு தான் இருக்கிறது இவர்களின் அறச்சீற்றம்!
விஜயகாந்த், "என் கிட்ட இவ்ளோ கேள்வி கேக்குற நீங்க, ஜெயலலிதா கிட்ட போய் கேக்க முடியுமா …ன்னு கேட்டு, த்தூ💦ன்னு துப்பிய போதும் இவர்களால் விஜயகாந்தை திட்ட முடிந்ததே தவிர ஆளும் வர்க்கத்தை எதிர்த்து பேச இயலவில்லை! அவர்களை சொல்லி தப்பில்லை!
இவ்வளவு தான் இவர்களாலும் இயலும்!
இன்றைய தேதியில் யார் பத்திரிகையாளர்களை நயமாக கையாளுகிறார் என்று கேட்டால், TTV என்று தான் பல ஊடவியலாளர்களுரம் கூறுவார்கள். உண்மையில், அவ்வாறு தான் கையாள வேண்டும் என்ற நிர்பந்தம் தினகரனுக்கு உண்டு அதிலும் அதிகார மையத்தை நோக்கி தன்னை நகர்த்தும் ஒருவர் அப்படி இருப்பதும் ஒருவகையில் அவருக்கு தேவையான அனுகுமுறை தான்!
ஆனால்,
வாழ்நாள் முழுதும் அடக்குமுறைக்கு உள்ளான ஓர் சமூகத்திற்காக போராட களத்தில் இறங்குபவனுக்கு யாருக்கும் இறங்கி பேச வேண்டிய தேவையும் இல்லை! ஊடக வெளிச்சத்திற்காக சமரசமான அனுகுமுறையை காட்ட வேண்டிய தேவையும் இல்லை! வெற்றியோ தோல்வியோ தேவை இல்லை என்பதில் தெளிவாக வும் தன் சமூகம் நிமிர்ந்தால் மட்டுமே தனக்கான விடுதலை அது என்பதில் உறுதியாக இருக்கும் ஒருவருக்கு எந்த லைம் லைட் பிச்சையும் தேவையில்லை!
இனி, ஒவ்வொருவரும் ஊடக இயக்கிகளை தோலுரித்து காட்டுவதில் தயங்காமல் இறங்குவோம்!
#StandWithJignesh