கமல் எத்தனை பெரிய நுண்ணரசியல் வாதி என்பது என்னைப் போன்று அவரின் பல வருடமாக தீவிர ரசிகனாக இருந்தவர்களுக்கு தெரியும்!
விடுதலை புலிகளை மறைமுகமாக எதிர்க்க துவங்கி தமிழ் தேசிய, மார்க்சிய லெனினிய போராளிகளை தீவிரவாதிகளாக சித்தரிப்பதும் ஈழ இனப்படுகொலையை மறைக்க RAW கொழும்பில் நடத்திய IIFA அவார்டுக்கு போக முதல் ஆளாய் 2009 -ல் தயார் ஆனதையும் நன்றாகவே அறிந்துள்ளோம்!
அதே போல் ரஜினி 1995-96 ல் சென்னை (DD) தொலைக்காட்சி க்கு அளித்த நேர்காணலை என் ஊரில் தெருவை அடைத்து மேசை போட்டு கலர் டிவி-யில் ஒளிபரப்பு செய்து புழங்காகிதம் அடைந்த திமுகவினருக்கு சிறிதும் குறைவில்லாதது பாஜக வினரின் இன்றைய "ஆன்மிக அரசியல் '' நாடகம்!
மு.க - ஜெ. வுக்கு பிறகு நாத்திக இடத்தில் கமலையும் ஆத்திக இடத்தில் ரஜினியையும் எப்படியாவது பொருத்தி விட முடியாதா என்று தான் இந்துத்துவா ஏதேதோ சர்கஸ் செய்து பார்க்கின்றது!
ஆனால்,
அவர்கள் இருவருமே Ball point பேனாவில் சொருக முயற்சிக்கும் Ink Pen மூடி-யை போல நினைக்கவே கண்றாவியாக இருக்கிறது அந்த Combination.
தன்னை ஓர் ஆன்மீகம் செறிந்த அப்பாவியாக காட்ட நினைக்கும் ரஜினி -க்கு வாயிலயே வாஸ்து சரியில்லை!
* கொள்கை என்ன வென்று கேட்டால் தலை சுற்றுவது!
* போராடுறதுக்கும் அறிக்கை விடறதுக்கும் வேற கூட்டம் இருக்கு!
* Assembly Election வரைக்கும் அரசியல் பேச வேண்டாம்!
என்பது போன்ற தத்துவ முத்துக்களை உதிர்த்து தான் அடுத்தவனுக்கு கைக் கூலியா தான் இருக்கேன் என்பதை நொடிக்கொரு முறை நிரூபிப்பது!
ஒரு புறம் என்றால் …….,
கமல் தன்னை Intellectual ஆக காட்டுவதாக நினைத்து ட்விட்டரில் மட்டுமே கம்பு சுத்தி கொஞ்ச நாள் சீன் போட்டார் அதையும் சில்லு சில்லாக உடைத்து விட்டார்கள் நெட்டிசன்கள்!
* தமிழகம் ஊழலில் திளைக்கிறது எல்லோரும் அமைச்சர்களுக்கு இணைய வழியே புகார் அனுப்புங்கள்.
* டீமானிடைசேஷன் என்றால் என்னவென்றே தனக்கு தெரியாது என்பார்! ஆனால், FICCI ன் ஊடகத்துறை Chairman என பெருமை பட்டுக்கொள்வார்!
* தமிழகத்தில் டெங்கு மரணங்களுக்கு காரணமே சுகாதாரமின்மை தான் என மாநில அரசை கண்டித்து ட்விட் போடுவார் கமல்.,
சுவச் பாரத் -க்கு 0.5% வரியை ஒவ்வொரு தமிழனுக்கு இந்தியாவுக்கு கட்டுகிறான்! இதில் இந்தியாவுக்கு இருக்கும் பங்கை பற்றி பேசவே வாய் வராது கமலுக்கு! இதில் பெரிய வேடிக்கையே தூய்மை இந்தியா திட்டத்தின் தூதுவர் கமல்.!
* தலித் படுகொலைகள், மாட்டின் பெயரில் படுகொலைகள்., GST என எதையும் எதிர்த்து பேசவே நெஞ்சம் நடுங்குவதை தமிழன் கண் கூடாக பலமுறை பார்த்துவிட்டான்!
* NEET -ல் அனிதா படுகொலைக்கு "திருமாவளவன் " தெருவில் இறங்கி போராட வேண்டும் என்பார்!
ஜெ. வை கொன்ற பிறகு NEET தமிழகத்தில் திணித்த இந்துத்துவா பற்றி கேள்வியே எழுப்பாதவர்.,
அனிதா கொலைக்கு முக்கியமான காரண கர்த்தாவான "நிர்மலா சீதாராமன் " பற்றி வாயே திறக்க விட வில்லை போல அவரின் 'நூல் பாசம்'
இப்படி பட்ட தமிழின துரோகிகளை கண்டுணர்ந்து தூரமாக விலக்கி வைப்பதையே முந்தைய தமிழர்களின் வரலாறு!
அதையே தான் நாமும் இப்போது செய்யப் போகிறோம் ………!
No comments:
Post a Comment