நேற்று மதிய உணவை முடித்து விட்டு டி.வி பார்த்துக் கொண்டிருந்தோம் Dining Hall ல்!
விஸ்வரூபம் படத்தின் பாடல் ஒன்று ஒளிபரப்பு ஆகிக் கொண்டிருந்தது!
நண்பர் ஒருவர், அந்த படத்தை பற்றியும் அதன் வேகம் பற்றியும் பேசினார். அடுத்து கமலை புகழத்தான் போகிறார் என நன்றாக தெரிந்து விட்டது!
நான் மெல்ல,
இந்த படத்தோட இரண்டாம் பாகம் எடுத்து ரெண்டு வருசம் ஆச்சு ஏன் வரலைன்னு தெரியுமா???
தெரியலையே ……?
இந்த படத்தில் கமல் அமெரிக்காவுக்கு தூக்கியிருந்த சொம்பு CIA வே எதிர்பார்க்காத அளவுக்கு!
"பெண்களையும் குழந்தைகளையும் அமெரிக்கர்கள் கொல்ல மாட்டார்கள் " - இப்படி ஓர் வசனம் வரும்!
இது எந்த அளவு அபத்தம் என உலக நாடுகள் அனைத்திற்கும் நன்றாகவே தெரியும்!
வியட்நாம், ஆப்கானிஸ்தான், ஈழம் தற்போது சிரியா என சாட்சிகள் கண் முன்னாடி ஏராளம்!
இந்த படம் டி.வியில் ஒளிபரப்பாகும் போதெல்லாம் கருத்தியல் தளத்தில் குறைந்தது 10 பேராவது ஒவ்வொரு முறையும் கமலை கழுவி கழுவி ஊற்றி கொண்டு தான் இருக்கிறார்கள்!
இந்த லெட்சணத்தில் இரண்டாம் பாகம் வெளி வந்தால் அது எவ்வளவு எதிர்ப்பையும் கெட்ட பெயரையும் சம்பாதித்து கொடுக்கும் எனவும் கூடவே கொஞ்ச நஞ்சம் ஒட்டியிருக்கும் தன் சோஷலிச முகமூடி காற்றில் பறந்து போகும் என்பதை கமல் நன்றாக அறிவார்!
ஹோ……… இவ்ளோ இருக்கா என்றார் நண்பர்!
அவரிடம் சொல்லாத சில கமலின் பச்சோந்தி தனங்கள் :-
2009 - July -August ல் IIFA Awards என்ற பெயரில் இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலையை மறைக்க இந்தியா ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் பங்கேற்க முதல் ஆளாக சம்மதம் தெரிவித்தது "கமல் " தான் அதன் பிறகு அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய்!
நம் தோழர்கள் கமல் வீட்டை முற்றுகையிட்டு நடத்திய போராட்டத்தால் சிறீலங்கா போகும் திட்டத்தை கை விடுவதாக அறிவித்தார் கமல்!
அதற்கு ஒரு நாள் முன்பே அமிதாப் வீட்டை மும்பையில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியல் அவர்கள் இருவரும் செல்ல வில்லை என அறிவித்திருந்தனர்! மும்பை போராட்டத்தில் இயக்குநர் தங்கர் பச்சான் கலந்து கொண்டதும், இயக்குநர் பாரதிராஜா தனக்கு அளிக்கப் பட்ட தேசிய விருதை திருப்பி அனுப்பியதும் நினைவு கூறத்தக்கது!
கமலுக்கு முட்டு கொடுத்து யாரும் தயவு செய்து வந்து விடாதீர்கள்! காரணம் உங்களை விட வெறித்தமான ரசிகனாக 20 வருடம் (விவரம் தெரிந்த நாள் முதல்) இருந்தவன் நான்!
2013 ஜனவரியில் அவரின் விஸ்வரூபம் படத்திற்கு ஜெ. தடை விதித்த போது அவருக்காக அவர் வீட்டு வாசலில் விடியவிடிய அமர்ந்திருந்த பலரோடு நானும் ஒருவனாக இருந்திருப்பேன், ஏனோ அன்று உடன் பணிபுரிந்த நண்பர் வேறு வேலை இருப்பதாக இழுத்து சென்று விட்டார் என்னை! அன்று அவர் மேல் கோபம் வந்தது! இன்று சுத்தமாக இல்லை! காரணம், அதற்கு அடுத்த மாதமே லயோலா கல்லூரி மாணவர்கள் "ஈழத்திற்காக " உண்ணாவிரதம் அமர்ந்த போது தமிழகத்தின் அனைத்து மாணவ சமுதாயமும் ஒன்றிணைந்தது குரல் குடுத்தது!
சரியாக 1 மாதம் முன்பு யாருக்காக தமிழகமே ஒன்று திரண்டு குரல் கொடுத்ததோ அதே கமல் வீட்டிற்குள் ஒளிந்து கொண்டார்.
மாணவர்களோடு உண்ணாநோன்பு பந்தலில் அமர்ந்த சிம்பு ஒட்டு மொத்த தமிழ் சினிமாவுக்கும் எதிரியாகி போனார். அவரின் அடுத்த படம் வர இரண்டரை ஆண்டுகள் ஆனது! சிம்பு செய்த ஒரே தவறு தமிழினத்துக்காக குரல் கொடுத்தது மட்டுமே!
இப்போ தெரியுதா யார் யதார்த்த வாதி யார் சந்தர்ப்பவாதி என்று!
திரு.கமல் அவர்களே நீங்கள் 10 வருடம் முன்னோக்கி படம் எடுப்பதாக சொல்லி நுண்ணரசியலை திணித்து யாருக்கு படத்தை எடுத்தீர்ளோ, அந்த 20 வருடம் பின்னோக்கி யோசிக்கும் என் அப்பா மாமா தலைமுறை படம் பார்ப்பதை நிறுத்தியே பல நாட்கள் ஆகி விட்டது!
வேணும்னா America ல Release பண்ணுங்களேன் ஆஸ்கார் ஏதும் தருவாய்ங்க The Best Comedy Film ன்னு!