Sunday, 11 December 2016

Rimland - வரலாறும் புவியியலும்! 

சிறு வயதில் உங்களுக்கு பிடிக்காத பாடம் எது என்று கேட்டால் நான் உடனடியாக கணிதம் என்பேன்! இன்றும் அது தான்!
இன்றைய நாட்களில் எனக்கு வரலாறு பிடிக்காது என்று சொல்பவர்கள் கொஞ்சம் அதிகமாகவே காண முடிகிறது! அதையும் ஒரு பெருமையின் வெளிப்பாடாக ! இவர்கள் யாரென்று பாத்தால்  தன்னை மெத்த படித்தவர்களாக காட்டிக் கொள்ளும் So Called, Well paying - White collar பணம் பன்னும் இயந்திரங்கள் தான் அதில் அதிகம்!

நாம் படித்தது அல்லது படிக்க வைக்கப் பட்டது பணம் சம்பாதிக்கவும் அடுத்தவனை எப்படி முந்துவது அல்லது வீழ்த்துவது என்பதுவரை பாடத்திட்டமாவே உள்ளது!

            ஆனால்,  நம் சமூகத்திற்கும் வரலாற்று பதிவுக்கும் மிக முக்கியமாக விளங்கும் ஓர் வார்த்தை (அ) படிப்பு  Geo politics - புவிசார் அரசியல்!

இந்த படிப்பை இன்று பல பல்கலைக்கழகங்கள் முன்னெடுப்பதோ அல்லது அதற்கான விழிப்புணர்வையோ மறந்தும் செய்வதில்லை!

    " அனைத்து புவியியலும் வரலாறு படிக்க வேண்டும் அனைத்து வரலாறும் புவியியல் படிக்க வேண்டும் "
     இது கிரேக்க தத்துவ மேதை ஹீரோடோடஸ் சொன்னது!

  56 லட்சம் வருடங்கள் முன்னதாக ஆசியா, ஐரோப்பா உள்ளிட்ட கண்டங்கள் இணைந்து Eurasia - என அழைக்க பட்டதாகவும் அப்போது நிலப் பரப்பால் மட்டுமே இவை இணைந்து இருந்ததாக கருதப் படுகின்றது! அதில் தற்போதைய ஆப்ரிக்க, வளைகுடா நாடுகளும் அடக்கம்!
    இதை அடிப்படையாக மனதில் கொண்டு ஓவ்வொரு தேசமும் இன்று சந்திக்கும் பிரச்சனைகளையும் அவற்றை அன்றைய யூரேசியா வின் 60 நாடுகளும் எவ்வாறு பதவி சண்டை, நில, நீர் பங்கீட்டை சமாதானத்துடன் நடைமுறைக்கு கொண்டு வந்தனர் என்பதை அறிக்கையை சமர்பித்தார் பிரிட்ஷ் புவி சார் அரசியல் ஆய்வாளர் Mackinder 1904 ல்!

அவர் தன்  The geographical Pivot of History என்ற புத்தகத்தில் இதை The Heart Land Theory என்றும் குறிப்பிட்டார்!

" அதில் நிலம்,  நீர் எல்லை மற்றும் பதவிக்கான போராட்டம் போட்டியும் தொடரும் போது தான் ஓர் கண்டம் என்பது எந்த இழப்பும் இல்லாமல் நிலைத்து ஒரே வடிவில் இருக்கும் " என்றார்!

     இவர் அவ்வாறு கூறியதன் காரணியாக அவர் முன் வைப்பது ஆசிய ஐரோப்ப நாடுகள் தான் 2/3 ல் பங்கு உலகின் பங்கு நிலத்தை வைத்திருப்பதாகவும்.
   
இங்கே இவர்களுக்குள்ளேயே நடக்கும் போர்களும் (சகோதர யுத்தம் போல் ) பேராசை போட்டிகளும் தான் இக் கண்டங்களை வடிவமும் எல்லையும் மாறாமல் நிலைத்திருக்க வைத்திருப்பதாகவும் , இதனால் வேறு மூன்றாவது மனிதர் உள்ளே வர வாய்ப்பே இல்லை என்றும் முன் வைத்தார்.

இது எவ்வளவு பெரிய அபத்தம் என்று பின்னாளில் Spykman னால் நிரூபிக்கப் பட்டது!

   இதை மறுத்து இதன் பின் விளைவுகளை தோலுரித்து காட்ட முன் வைக்கப் பட்ட ஓர் தத்தும் தான் Rim Land Theory.!

இதைப் பற்றி தான் நாம் இங்கே பார்க்க போகிறோம் :-

1944 - இரண்டாம் உலக போர் உட்சத்தில் இருந்த போது  Spykman என்பவர் தான் எழுதிய The Geography of Peace என்ற புத்ககத்தில் கீழ் வருமாறு கூறிகின்றார்.,
 
      * Heart land theory யின் கீழ் வரும் நாடுகளில் வரும் உள்நாட்டு போர் என்பது குறுகிய கால பதவி போராட்டமே!

* இவை ஓர் நாட்டின் வலுவான தரப்பை சோதிக்கும் பலப்பரீட்சை என்றும் நீர் நில எல்லைகளை வலுப்படுத்தும் செயல் என்றும் கூறுவதும் முற்றிலும் ஏற்க இயலாத ஒன்று!

* இவ்வாறான கோட்பாடுகளை சந்தித்த அல்லது திணிக்கப் பட்ட நாடுகளே Rim Land நாடுகள் என அழைக்கப் படுகின்றன!

* இந்த Theory ல் வராத நாடுகளாக (1944 வரை)  வடக்கு மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகள் மேற்கு ஆப்பிரிக்கா போன்றவை ஆகப் பெரிய சிக்கலை சந்திக்கவில்லை என்பதை நினைவில் கொள்ளவும்!

* இப்படி உள் நாட்டு போர் மூளும் போது அதில் இரு நாடுகளே பெரிய அளவில் சட்டாம்பிள்ளை தனமாகவோ அல்லது ஆயுத விற்பராகவோ இருந்துள்ளது அவை :-
                         1. அமெரிக்கா
                         2. ரஷ்யா

* ஆரம்ப (அ)  பண்டைய காலங்களில் யூரேசியா (ஆசியா -EU) நிலப்பரப்பில் உள்ள நாடுகளை தன் Control யார் வைத்திருந்தார்களோ அவர்களே உலகின் வல்லரசாக வலம் வந்தது குறிப்பிடத்தக்கது!

       இந்த Rim Land தத்துவத்தை தங்களின் முக்கிய துருப்பு சீட்டாக பார்க்கும் ஓர் நாடு அமெரிக்கா!
U.S ன் முன்னாள் அதிபர்கள் Harry S Truman ம் John F Kennedy இருவரும் தான் இதை உலகம் முழுதும் திணிக்க துவங்கினர்!
ரஷ்யா உடனான பனிப்போர் காலங்களில் கம்யூனிச சோஷலிச சித்தாந்த நாடுகளுக்குள் பல உள்நாட்டு போர் மூண்டதை உதாரணமாகவும் அதை தீர்க்க அமெரிக்கா முன் வருவதை போன்ற நிலைப்பாடுகளையும் சர்வதேச தத்தில் உருவாக்கினர்.

    வியட்நாம், ஆப்கானிஸ்தான், வட - தென் கொரிய போர்கள் மேலும் சோவியத்தை உடைத்தது போன்றவை குறிப்பிட தக்கது!

   இதை நம் தமிழர் வரலாற்றோடு ஒப்பிட்டு பார்ப்பது இங்கே அவசியமாகிறது!
எப்படி !!!!?

   1947 ல் சுதந்திரத்திற்கு பின் 1950-51 ல் அமெரிக்க உளவு மையம் ஓர் தகவலை வெள்ளை மாளிகைக்கு அனுப்புகிறது!  அதில், உலகின் மொத்த வர்த்தகத்தில் 70% நீர் வழித்தடம் தான் அதில் 45% தெற்காசியாவின் தமிழ் நாட்டிற்கும் - திரிகோணமலைக்கும் இடை பட்ட பகுதி மிக முக்கியம் என்றும்!

இன்னும் 50 வருடங்கள் கழித்து இந்த பகுதியை அல்லது இந்த பகுதி உள்ளடக்கிய அரசுகளை யார் தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனரோ அவர்களே உலகின் வல்லரசாக வலம் வரும் என்று அறிக்கை தருகிறது!

அடுத்தடுத்து மெல்ல பிரச்சனை தலை தூக்குகிறது இலங்கையில்! இனி சிங்களம் மட்டுமே ஆட்சி மொழி என G.O வலம் வர அதை மாற்றி அமைக்க கோரி தமிழ் அமைப்புகள் ஊர்வலம் செல்ல அதை கலவரமாக மாற்றி இன வெறி முன்னெடுக்கப் படுகிறது!
  அது பல  இனப்படுகொலையில் தான் நிறுத்தியிருக்கிறது! இன்றும் தொடர் கதையாக………
ஆனால், Voice of America வானொலி நிலையத்தை 500 ஏக்கரில் திரிகோணமலையில் அமைத்து விட்டது!

    புலிகள் ஆயுத கொள்முதல் 80 களின் இறுதியில் துவங்கிய காலத்தில் இருந்தே ஓர் குறிப்பிட்ட அளவிலான Seller ஆக அமெரிக்கா மறைமுகமாக செயல் பட்டுள்ளனர்.

அதே நேரம் இரட்டை வேடமும் போட்டது U.S .
       2006-7 கால கட்டத்தில் Floating warehouse எனப்படும் 7 புலிகளின் ஆயுத கப்பல்களை இலங்கை சர்வதேச கடல் எல்லையிலும் இந்தோனேசியா அருகிலும் அழிக்க அமெரிக்கா உதவியதாக முன்னாள் இலங்கை கடற்படை தளபதி தன் சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார் என்பதே சாட்சி!

   இந்தியா, பாக். என ஒவ்வொரு நாட்டிற்கும் உள்ளுக்குள் ஏதேனும் ஓர் மறுக்க முடியாத போர் இருந்து கொண்டே தான் இருக்கும்!  அப்போது தான் அமெரிக்கா தன் வணிக நலன்களை மெல்ல நிறைவேற்றிக் கொண்டே இருக்கும்! காஷ்மீர் விவகாரம் ஐ.நா மனித உரிமைகள் சபையில் பாலஸ்தீனத்துக்கு அடுத்த படியாக பெரிய அளவில் பேசப் பட்டாலும் அதற்கு நிரந்தர தீர்வு வராமல் இருப்பதே அமெரிக்கா வுக்கு நல்லது!
அப்போது தான் தன் கைக்குள்ளேயே பாக்.கும்- இந்தியாவும் இருக்கும் என்றே நினைக்கின்றர்.!

இன்று நடக்கும் ஆப்கன், வளைகுடா, சிரியா போர்கள் அனைத்தும் Rim Land ற்குள் அகப் பட்ட தேசங்கள் தான்! UNO -வில் இன்றும் மிகப் பெரிய சர்ச்சையாகவும், மனித உயிர்களை காவு வாங்கும் ஓர் Theory (அ) Ideology யாக பார்க்கப்படுவது Spykman -ன் இந்த Rim Land Theory.  இன்று வரை US யை குற்றவாளியாக கருத்தியல் ரீதியாக நிரூபணம் செய்வதும் இந்த ரிம் லேண்ட் தியரி தான்!

        
    நீங்களும் நானும் சோறு திங்க Computer ம் கணக்கும் தெரிஞ்சா போதும்!  நம் பையன் பேரன் எதிர்காலத்தில் நிம்மதியாக சோறு திங்க இறந்த கால அனுபவங்களை கொண்டே நிகழ்கால அரசியல் நகர்வுகளை கட்டமைப்பது மிகவும் அவசியமாகிறது!

No comments:

Post a Comment