500, 1000 ரூபாய் நோட்டுகளை தடை செய்த போது முதலில் கருப்புப் பண ஒழிப்பிற்காக என்று பில்டப் கொடுத்தார்கள் மோடியும் அருண் ஜெட்லியும். பின்னர் கள்ள நோட்டுகளை ஒழித்து தீவிரவாத நடவடிக்கைகளை தடுப்போம் என்றார்கள். ஆனால் தற்போது Shadow Economy ஐ ஒழிக்க இந்த தடை என்கிறார்கள். பூனைக்குட்டி கொஞ்சம் மெதுவாகத்தான் வெளியே வந்திருக்கிறது.
Shadow Economy என்றும் Underground Economy என்றும் இவர்கள் சொல்வது எதை? IMF இன் Document இவ்வாறு சொல்கிறது.
“A factory worker has a second job driving an unlicensed taxi at night; a plumber fixes a broken water pipe for a client, gets paid in cash but doesn't declare his earnings to the tax collector;”
ஒரு தொழிற்சாலையில் பணிபுரியக்கூடிய தொழிலாளி தன் குடும்ப வருமானத்துக்காக இரவில் ஆட்டோ ஓட்டி சம்பாதிக்கும் பணமெல்லாம் கணக்கில் வருவதில்லையாம். இதுபோன்ற கோடிக்கணக்கான மக்கள் செய்கிற சிறு சிறு தொழிலகளைத் தான் இவர்கள் Shadow Economy நிழல் பொருளாதாரம் என்று சொல்கிறார்கள். நிழல் உலக தாதாக்கள் என்பதைப் போன்று குறிப்பிடுகிறார்கள். ஒரு தொழிலாளியின் குடும்ப நலனைக் காக்க எந்த முன்னெடுப்பையும் செய்யாத அரசு, அவன் தன் குடும்ப நலனுக்காக கூடுதல் நேரம் உழைத்து சம்பாதிப்பதிலிருந்து வரியைப் பிடுங்க நினைக்கிறது.
- Vivekanandan Ramadoss
----- - - - - - + - - - - - - - - - -:-
அடேய்,
அப்ரசெண்டிகளா உங்களை எல்லாம் நிதி அமைச்சர், பிரதமர் ன்னு ஆகலைன்னு யார் அழுதா???
Shadow Economy - முறைசாரா பொருளாதாரம் (அ) வெள்ளை பொருளாதாரம் என்பது பண்டையகால முறை மூலம் சிறு குறு தொழில்கள், வளரும் தொழில் முனைவோர் போன்றோர் வருமானம் ஈட்டுவது ! அதைத் தான் இத்தனை நாள் செய்து வந்தனர், செய்து வருகின்றனர்!
பண்டம் மாற்று முறை தான் முதலில் வழக்கமாக இருந்தது. பின் அது தங்கமாக இருந்தது! பின்னர் பணமாக வடிவம் பெற்றது!
அவர்கள் தான் நாட்டின் முதுகெலும்பு!
அதற்கான உதாரணம் :-
சில மாதங்கள் முன்பு Europe நாடுகளில் பொருளாதார சரிவு ஏற்பட்ட போது E.U வின் பல நாடுகள் 4 % வரை தன் GDP வளர்ச்சியை இழந்தது!
ஆனால் கிரீஸ் நாடு மட்டும் 0.5% மட்டுமே வீழ்ச்சியையே கண்டது!
அதற்கு காரணம், Shadow Economy எனப்படும் முறை சாரா வர்த்தகமும், தொழிலாளர்களும் தான்!
அவை என்னென்ன ……?
*உள்ளூர் சந்தையில் விற்கப்படும் காய் கறி கள்,
* மீனவர்கள்
* பிளம்பர்
*டைலர்
*தள்ளுவண்டி கடைகள் (உணவு - உடை அனைத்தும்)
* கொத்தனார்
*வெல்டர்
*மளிகை கடை
* பெட்டிக்கடை
* தெருவோர ஹோட்டல்கள்
* Carpenter, Electrician & construction labours etc.,
* டீ கடை
* கை வினை பொருட்கள் தயாரிப்போர்
*நெசவாளர்கள்
* விவசாயிகள்
போன்றோரின் வருமானமே Shadow Economy என சர்வதேசம் குறிப்பிடுகின்றது!
இன்னும் ஓர் உதாரணம்,
2007-08 ல் உலகம் முழுதும் பொருளாதார முடக்கம் வந்த போது அமெரிக்கா, UK உட்பட பல வல்லரசுகள் நொடித்து போயின ஆனால் இரு நாடுகள் மட்டுமே அதில் ஓரளவுக்கு தப்பித்தன!
1. சீனா
2.இந்தியா
காரணம்,
இரு நாடுகளின் பாரம்பரிய தொழில் முறைகளும் சேமிப்பு பழக்கமும்!
நிலமை இப்படியே போனால் இந்தியா தானாகவே ஸ்திரமான ஓர் பொருளாதாரத்தை அடுத்த 30 ஆண்டுகள் கழித்தும் ஏறாமலும் இறங்காமலும் நிலைத்திருக்கும்!
ஆனால் அதனால் உலக வல்லரசுகள் என சொல்லிக் கொள்பவர்களுக்கு என்ன லாபம்!
அடுத்த முப்பது ஆண்டுகளில் தற்போதைய Share market, தள்ளாட்டம் அவர்களை தெருவில் நிறுத்தியிருக்கும்!
ஓர் விடயத்தை கவனித்தீர்களா ……?
UN சபை ஜெனீவா வில், ILC (international Law Commission) ஜெனீவா வில் . ஆனால், IMF (International Mandatory Fund) மட்டும் New York ல். லேசா எங்கயோ பிசிறடிக்கலை!!!?
So, they want India always being under their control. அதனால் தான் மோடியை வைத்து வளர்ச்சி என்ற பெயரில் நம் வாழ்வோடு விளையாடுகிறது IMF ம், WTO வும்!
சீனா வை மேற்குலக நாடுகள் நெருங்குவது அவ்வளவு எளிதல்ல. ஊருக்கு இளைச்சவன் கோவில் மட ஆண்டிங்குற கதை தான் நம் நிலை!
உங்கள் தொழில் முறையை சிதைக்க Debit card / e - pay, Shopping Mall கலாச்சாரம்.
உங்களுக்கு தெரியமலே உங்களின் சேமிப்பு பழக்கத்தை முடக்க Credit Card லைஃப் ஸ்டைல்!
- பிறை
No comments:
Post a Comment