Thursday, 1 September 2016

இரோம் சர்மிளாவை காண நாங்கள் புறப்பட்ட கதை - 1


இரோம் சர்மிளாவை காண நாங்கள் புறப்பட்ட கதை!
சில மாதம் முன்பு மின்னல் (Hari Haran) என்னை காண கேளம் பாக்கம் வந்திருந்தான்! இருவரும் பேசிக் கொண்டிருந்த போது இமயமலை Bike riding போலாமாண்ணே! என்றான் நானும் சரிடா போலாம், ஆனால் எனக்கு விடுமுறை கிடைப்பது அரிதானதே! கொஞ்சம் யோசிக்கனும் என்றேன்! அட போங்கண்ணே, நீங்க உங்களுக்குள்ளயே ஒரு வட்டம் போட்டு வச்சிருக்கீங்க அதை முதல்ல உடைச்சிக்கிட்டு வெளியே வாங்க, அப்போ தான் இந்த உலகம் எவ்ளோ அழகா இருக்கும்ன்னு தெரியும்ன்னு சொல்லிட்டு கிளம்பிட்டான்! நானும் ஏதோ புரிஞ்சா மாதிரி தலையை ஆட்டி அனுப்பிட்டேன்!
ஒரு பத்து நாள் இருக்கும் அன்றைக்கு தஞ்சாவூரில் இருந்து இரவு சென்னை திரும்பி கொண்டிருந்தேன், மின்னல் தொலைபேசியில் அழைத்தான், அண்ணே, நான் காலையில நாலரை மணிக்கு எல்லாம் வண்டலூர் வந்திடுவேன், கேளம் பாக்கம் வந்திட்டு போன் பண்றேன் வந்திடுங்க என்றான் நானும் சரி என்றேன். ஆனால் அவன் எனக்கு முன்பாக வந்திறங்கி அத்தை வீட்டிற்க்கே சென்று விட்டிருந்தான். அன்று மாலை அவன் எங்கோ வெளியூர் செல்வதாக பதிவிட்டிருந்தான். பின்னர் தான் தெரிந்தது பய புள்ளை எங்க கிட்ட ஏதும் சொல்லாமல் கொள்ளாமல் இமயமலை Bike riding கிளம்பி விட்டான் என்பது.........!
அதோட விட்டா பரவாயில்லை,! தினம் தினம் What's app ல Photo அனுப்பி கடுப்பேத்த ஆரம்பிச்சுட்டான்! ஓரளவுக்கு மேல நானும் கடுப்பாகி நம்ம கவிராயர்அரவிந்த்.கே.எஸ் க்கு கூப்பிட்டு, தலைவரே நாம இமயலை போறோம் செப்டம்பர் முதல் வாரம் தயாரா இருந்துக்குங்க என்று கூறி தொலை பேசியை அனைத்து விட்டேன். இரண்டு நாள் கழித்து Guna SanThiru பேசும் போது இமயமலை பயணம் போவது உறுதியா என்று மட்டும் மீண்டும் ஒரு முறை கேட்டுக் கொண்டார். ஆம், உறுதி தான் என்று கூறி விட்டு "விஜய் சின்தெல்லா " மாம்ஸ்க்கு அழைத்தேன். விடயத்தை கேட்ட உடனே அவரே, மாப்ள என்னைய தயவு செஞ்சு கூப்பிடாதடா!
உங்க அக்கா ஹங்கேரி போறதா இருந்தா அவங்க office ல அதை நான் தான், நாம தனியா போகலாம்! Office மூலமா போனா வேலையெல்லாம் சொல்லுவாங்க, அது இதுன்னு கதை சொல்லி நான் தான் போக விடலை! இப்போ நான் உங்க கூட வர்றேன்னு தெரிஞ்சா நான் தொலைஞ்சேன் மாப்ள! உங்களுக்கு என்ன வேனும்னாலும் கேளுங்க நான் தயார் பண்றேன் .ஆனா என்னை மட்டும் கூப்பிடாதீங்கன்னு அவர் மறுத்து விட்டார். அடுத்த சில நாளில் கவிஞரும் விடுமுறை கிடைக்க வாய்ப்பே இல்லை கழண்டு விட்டார். இறுதியில் மிஞ்சியது நானும் குணாவும் மட்டுமே! ஏற்கனவே ஒரு பிரச்சினையில் என் மேலாளரிடம் சண்டை போடும் போது அடுத்த மாசம் பத்து நாள் நான் லீவு சார் என்று கோபமாக சொல்லியிருந்தது கொஞ்சம் பின்னாளில் கை கொடுத்தது உண்மை! இதற்கிடையில் மின்னல் போன் செய்து September ல் பனி உருக ஆரம்பிக்கும் எனவே சாலையை அடைத்து விடு வார்கள்! எதற்க்கும் விசாரித்து பாருங்க என்றான்! அவன் சொன்னது போலவே ஆகஸ்ட் 10 தேதிக் கெல்லாம் Sri Nagar சாலை மூடப்படலலாம் என மறு நாளே செய்தி பார்த்தேன். ஏற்கனவே இமய மலைக்கு மாற்றாக Haff long என்று ஓர் இடம் இருப்பபதாக மின்னல் கூறியிருந்தான். அஸ்ஸாம் பக்கத்தில்தான் சென்று வாருங்கள் என்றான். அவனுக்கு மாவோயிஸ்ட்டுகள் அதிகம் அங்கு வசிப்பபதால் தயக்கம் என கூறியிருந்தான்.
கிட்டதட்ட அஸ்ஸாமை சுற்றித்தான் நம் பயணம் என்பது முடிவானது! குணாவிடமும் பேசி சம்மதம் வாங்கியாகி விட்டது! இதற்கிடையில் குணாவிற்க்கு திடீரென படப்பிடிப்பு ஏதும் வராது என உறுதி செய்து கொண்டோம். நான் ஏற்கனவே அலுவலகத்தில் சொல்லி வைத்திருந்ததால் கொஞ்சமாக சமாளித்தும், நிறைய சண்டை போட்டும் விடுமுறையை உறுதி செய்தோம். ஓர் நாள் இரவு தொலைபேசியில் பேசும் போது Google map ஐ திறக்க சொல்லி அஸ்ஸாம் பக்கத்தில் இருக்கும் இடங்களை படிக்கச் சொன்னேன் குணாவிடம்.
- நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம் பூடான் ன்னு காட்டுது Bro - இன்னும் கொஞ்சம் Zoom பண்ணுங்க - Dimapur, Imphal, senapati......... -wait, wait இம்பாலா??? -ஆமாம் Bro இம்பால்ன்னு ஒன்னு காட்டுது என்றார். - இம்பால் To Haff long எவ்ளோ தூரம் காட்டுதுன்னு பாருங்க! - 400KM. -செம, அப்போ ஒரு வேளை செய்வோம், இரோம் சர்மிளா சொந்த ஊரு அதான் அவங்களை போய் பார்ப்போமா!!!
-Bro செம ஐடியா Bro அப்டியே செய்யலாம். நான் தயார் என்றார்!
மறு நாளே Google ல் தேட துவங்கினேன். What is the Residential address for Irome Sharmila??? Where is irome sharmila right now
How to meet Irome sharmila??? என்னெவெல்லாமோ போட்டு பார்த்தும் ஒரு உறுப்படியான தகவலும் கிடைக்கலை!
நாங்கள் ஏதோ குருட்டாம் போக்கில் முடிவு செய்து விட்டோமே தவிர அவரை எப்படி சந்திப்பது யாரை கேட்பது என்று மட்டும் புரிய வில்லை! ஆனால், NDTV 2013 ம் ஆண்டு தன் இணைய பக்கத்தில், சர்மிளாவை பொது மக்கள் சந்திக்க இருந்த தடையை மணிப்பூர் நீதி மன்றம் நீக்கி விட்டது என்ற தகவல் மட்டும் ஆறுதல் அளித்ததது! தற்போது அவர் இருக்கும் மருத்துவமனை யே சிறையாக கையாளப் படுகின்றது என்பதும் கிடைத்தது!
அன்று இரவே தோழர் Kondal Samy க்கு அழைத்து விடயத்தை கூறினேன்! சரி இரவு பத்து மணிக்கு மேல் அழைக்கின்றேன் என்றார்.
அவர் போனை வைத்ததும், வேறு யார் நமக்கு இந்த விடயத்தில் உதவுவார்கள் என யோசிக்க துவங்கினேன். அப்போது தோன்றிய பெயர் தான் திரு. Vijayasankar Ramachandran Frontline ஆங்கில வார இதழின் ஆசிரியர் (மிக்க நன்றி சார் தங்களின் உடனடி பதிலுக்கு) அவருக்கு இன் பாக்ஸ் ல் தகவலை அனுப்பி விட்டு காத்திருந்தேன்.
அடுத்த இரண்டு மணி நேரத்தில் பதில் அனுப்பினார். சற்று கடினம் ஆனால் முயற்ச்சிப்போம் என்றார்.
மறு நாள் காலை கொண்டல் அழைத்தார் அப்போது அவர் தோழர்.Maga Tamizh Prabhagaran சென்ற வாரம் அஸ்ஸாம், மணிப்பூர் சென்று ஷர்மிளாவை சந்தித்து ஆவணப் படம் எடுத்து வந்துள்ளார் அவரை தொடர்பு கொள்ளுங்கள் என்றார். குணா விடம் விசயத்தை சொன்ன பிறகு சர சர வென அனைத்தும் நடந்தது!
குணாவின் தோழிகள் ஊடகத் துறையில் இரூந்ததால் பிரபாவின் தொலைபேசி எண்ணை வாங்கி, அவரிடம் பேசி நேரில் சந்தித்தும் முழு விபரம் அறிந்து கொண்டோம்! அங்கிருந்து கிளம்பும் இரண்டு நாள் முன்பு இரோம் ஷர்மிளாவின் மூத்த சகோதரர் தொடர்பு எண்ணை வாங்கி கொண்டோம். திங்கட்கிழமை அவரை தொடர்பு கொண்டு பேசினேன். தகவலை சொன்னதும் You, most welcome. Once you reach Here, just call me i will guide you என்றார். மறு நாள் காலை சென்னை to கொல்கத்தா, கொல்கத்தா to இம்பால் க்கு எங்கள் விமானம் பறந்தது! September -1 (Tuesday)
பயணம் முழுக்க குணா, தற்படமாக (Selfiee) எடுத்து தள்ளிக் கொண்டிருந்தார். அடுத்தடுத்து நாங்கள் சந்திக்க போகும் இடைஞ்சல்களை அறியாமல் ......,..! சரியாக மதியம் 12:25 க்கு எங்கள் விமானம் மணிப்பூர் தலை நகர் இம்பாலில் தரை இறங்கியது!
ஸ்ஸ்ஸ்ஸ்.....,..ர்ர்ர்ட்ட்.......க்கீரீட்ச்...!.
- தொடரும்

No comments:

Post a Comment