Monday, 31 October 2016

பெல்லட் குண்டுகளும் Surgical Strike கும்

100 நாட்களை கடந்து விட்டது காஷ்மீரிய தேசிய இன மக்கள் மீதான வன்முறையும் கொலைவெறி தாக்குதலையும் இந்திய ராணுவம் துவங்கி ………

   இப்போது வரை, 17 ஆயிரம் பேர் துப்பாக்கி சூட்டிலும், பெல்லட் குடுண்களாலும் படுகாயம் அடைந்துள்ளனர். அதில் 400  பேருக்கும் மேல் கண்களில் பார்வையை இழந்துள்ளனர்.
இதில் பெரும்பாலானோர் இளைஞர்களும் சிறுவர்களுமே!
இவையன்றி, 94 படுகொலை களும் இதில் அடங்கும். மேலும்,
5000 பேரை இராணுவம் கைது செய்து வைத்துள்ளது! 

இது முற்றிலும் ஜனநாயத்துக்கு எதிரானக பொது மக்கள் மீது நடத்தப் பட்ட தாக்குதலாகவே உலக நாடுகளில் பார்க்கப் படுகிறது!
ஏற்கனவே, பாலஸ்தீனுக்கு அடுத்த படியாக இனப்படுகொலைகள் குறித்து ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் விவாதிக்கப் படுவது காஷ்மீரின் 1987 - 2014 வரை கொல்லப்பட்ட (அல்லது) காணாமல் போன 97ஆயிரம் மக்களை பற்றி தான்.

இதை திசை திரும்ப தான் பலுசிஸ்தானை வம்புக்கு இழுத்தார் மோடி!  அது பெரிதாக வேகவில்லை!
   ஏன் இப்போது இத்தனை வேகாமாக கருத்தியலை மாற்ற முற்படுகிறார்கள் என பார்த்தால் விடயம் பொருளாதார ரீதியாக பிரச்சனையை கிளப்பியுள்ளது சர்வதேச அளவில்!

இந்தியாவின் இந்த மோசமான முறையற்ற தாக்குதல் July 8 முதல் இன்று வரை (27 Oct. - 16) கிட்ட தட்ட 111 நாட்களாக ஒட்டு மொத்த பள்ளி கல்லூரிகள், வணிக வளாகங்கள், தொழிற்சாலை நடவடிக்கைகள் என அனைத்தும் முடங்கி போய் விட்டது!
கடந்த வார நிலவரப்படி ₹ 10, 000 கோடி நட்டம் என கணிக்கப் பட்டுள்ளது!

   இது காஷ்மீருக்கு மட்டுமே அல்லாமல் இந்திய பொருளாதாரத்தையும் பாதித்துள்ளது!

இதற்கு சப்பை கட்டாக வழக்கம் போல் தீவிரவாதத்தை காரணம் காட்டி தேசிய பாதுகாப்பு ஆலோசனை மையம் கை நீட்டுகிறது!
    அதன் ஆலோசகராக உள்ள எம்.கே.நாராயணன் இதை ஹிஸ் புல் முஜாஹிதீன் அமைப்பையும், ப்ருகான் வாஹ்னியை யும் காரணமாக சொல்கிறார்.
   இந்த நாராயணன் யார் தெரியாம!!?  தமிழீழ இனப்படுகொலையில் முக்கிய காரண கர்த்தாவாக இருந்தவன்.
ஜனவரி 11 - 2009 அன்று ஐ.நா மனித உரிமை அலுவலர்கள் சிறீலங்காவில் நின்று கொண்டு,
" இங்கே நடப்பது போர் அல்ல " இதற்கு பெயரே வேறு அப்பாவி மக்களை ஐ.நா வே படுகொலை செய்ய அனுமதிக்க முடியாது!

இத் தகவலை வெளி உலகுக்கும், ஐ.நா மன்றத்திலும் அறிவித்தே ஆக வேண்டும் என கதறிய போது, அதை தடுத்து நிறுத்தியவன் தான் இந்த M.K .நாராயணன்.!  
  
      அப்படி எனில், இவரின் அறிக்கை எவ்வளவு நேர்மையாக இருக்கும் என உணர்ந்து கொள்ளுங்கைள்.!

   சரி விடயத்துக்கு வருவோம்!

        காஷ்மீரின் அவலத்தை அனைவரும் கேள்வி எழுப்ப துவங்கியதும் அதை மடை மாற்றம் செய்ய போட்ட நாடகம் தான் Surgical Strike ....!

     கடைசியில் அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என ஐ.நாவில் வைத்தே பாக். தெரிவித்து விட!
     மோடியில் Media Stunt புஸ்வானம்.

இங்கே கெஜ்ரிவால் போன்றோர் அதற்கு ஆதாரம் கேட்க, அவரை தேச துரோகி ஆக்கி கறித்துக் கொட்டியது பக்தாஸ் கேங்!

உடனே, இந்திய நாடக துறை Surgical Strike யை பற்றிய காணொளி உள்ளது Editing மட்டுமே பாக்கி,  PM Office பார்த்ததும் தருகிறோம்ன்னு போனவங்க ……………… போனாங்க, போனாங்க!  இப்போ வரை எனக்கு தெரிஞ்சு ஒரு Video வும் வெளியே வரலை!   (Video வரும் வரும்ன்னு சொன்னீங்க ஆனா,  வருண் காந்தி வருவார்ன்னு சொல்லலையே ஜி)

இதற்கிடையில் கெஜ்ரியை மன்னிப்பு கேட்க வைத்து, அக்க்ஷய் குமாரை Selfie video போட வைத்து எல்லாம் தேச பக்திக்கு குளுக்கோஸ் ஏத்தினார்கள்.!

கடைசியில், எந்த தாக்குதலை காரணம் காட்டி Surgical Strike 'Drama ' நடத்தப் பட்டதோ அதே Uri தாக்குதலுக்கு ஐ.நா விசாரணை தேவை என ஜெனீவா சென்றனர்.
இதில், ஹைலைட்டே ஜெனீவா போனாது இந்தியா அல்ல, பாக்கிஸ்தான்!

www.dawn.com/news/1286214

இந்த எல்லா கதையும் ஒரு புறம் இருந்தால், Surgical Strike நாடகத்தை வைத்து இவர்கள் மறைத்த நடவடிக்கைகள் ஏராளம் :-

  * Surgical strike நடந்ததாக சொல்லப் பட்ட 24 மணி நேரத்தில் 'இராணுவ வீரர்களின் ஓய்வு ஊதியம் வெகுவாக குறைக்கப் பட்டது! 
    கொடுமையை பாருங்க, யாரை வைத்து இவர்கள் போலி தேச பக்தியை நீர் ஊற்றி வளர்க்கிறார்களோ அவர்களின் முதுகிலேயே குத்தினார்கள். ஒரு மாத தொடர்ச்சியான போராட்டத்திற்க்கு பிறகு மீண்டும் நேற்று (29 அக்.) பழைய படி ஓய்வூதியம் வழங்க அரசு ஒப்புக் கொண்டுள்ளது!

  *  நீதி மன்றம் எழுப்பிய ஏன் பெல்லட் குண்டுகள்  அப்பாவி பொது மக்கள் மீது பயன் படுத்தப் பட்டது என்ற கேள்விக்கு சப்பையாக ஒரு பதிலை கொடுத்த தோடு, காஷ்மீர் மக்களின் உரிமையை ஏன் பறிக்கிறீர்கள் என யாரும் கேள்வி கேட்க நேரமே கொடுக்கவில்லை!

*  யூரி, பதான் கோட் போன்றவை மாற்று கட்சிகளையோ, ஊடகங்களையோ மறந்தும் காஷ்மீரில் கொள்ளப் பட்ட 94 பேரை பற்றி தெரியாமல் கூட பேச வில்லை!

   ஓர் தேசிய இனம், இந்தியா என்ற கூட்டமைப்புக்குள் எந்த நம்பிக்கையில் வந்தார்களோ கிட்ட தட்ட அந்த நம்பிக்கையை மொத்தமாக இந்தியம் சிதைத்து விட்டது!

    காஷ்மீருக்கு தோட்டாக்களும், Pellet குண்டுகளும் என்றால் தமிழகத்துக்கு மீத்தேனும், நியூட்ரினோவும் இனப்படுகொலைக்கு முன்னணியில் நிற்கிறது!

    இந்த அரை டவுசர்கள் சொல்வது போல் வளர்ச்சி பாதை எல்லாம் ஒரு மண்ணாங்கட்டியும் தமிழகத்துக்கு வராது என்பதை உணருங்கள்.

  - கூடங்குளம் 3, 4 ம் உலைக்கூடத்துக்கு அனுமதி

   > எய்ம்ஸ் மருத்துவமனை நிராகரிப்பு

- காவிரி டெல்டா வில் பெட்ரோல் எடுக்க RIL (ரிலையன்ஸ்) க்கூ அனுமதி

> காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க எதிர்ப்பு

- தாமிரபரணியில் Coke / Pepsi க்கு மக்கள் தடையை மீறி அனுமதி

இப்படித் தான் போகிறது இந்தியா வின் செயல் பாடு தமிழகத் பொறுத்தவரை!

ஏற்கனவே நீரை தனியார் மயமாக்கும் சட்டத்தை கிட்ட தட்ட நடைமுறைக்கு கொண்டு வரும் நிலைக்கு வந்து விட்டது பாஜக / RSS அரசு!
 
மீத்தேன், நியூட்ரினோ, டெல்டாவில் பெட்ரோல்  என அனைத்து நாசக் கார திட்டங்களும் ஆரம்பிக்கப் பட்ட பின் நாம் தெருவில் இறங்கினால் …………

முதலில் பேச்சுவார்த்தை,  தடுப்பு, தடியடி, பின்னர் துப்பாக்கி சூடு என மாறி கடைசியில் நமக்கு எதிராகவும் இராணுவத்தை இறக்க தயங்க மாட்டார் Corporate களின் தரகரான நரேந்திர மோடி!

நீங்கள், எந்த கட்சி எந்த அமைப்பாக வேண்டுமானாலும் இருங்கள்.  நம் கருத்து வேறு பாடுகளை பின்னர் பேசிக் கொள்ளலாம்.

நம் வீட்டை கொள்ளையடிக்க மூவர்ண கொடி என்ற முகமூடியோடு வருகின்றது இந்தியம்!

நாம் இன்று தெருவில் இறங்காவிடில் என்றுமே முடியாது என்பதை உணருங்கள்!


 

Monday, 17 October 2016

ILC யில் RSSன் கை கூலி

Once again , Modi Government proves their self,  BJP having only interest imperial RSS / Hindhuthuva guys into powerful position (or) ministry.

   
  இந்தியாவை Corporate களுக்கு கூறு போட்டு விற்றுக் கொண்டிருக்கும் அதேவேளையில் பாசிச இந்துத்துவா ஆட்களை நாட்டின் கட்டமைப்புகளிலும்  அதிகார வர்க்கத்திலும் RSS பின்புலம் கொண்டவர்களை அமர்த்திக் கொள்வதில் முனைப்பாக செயல் படுவதை தொடர்ந்து நாம் பார்த்து வந்துள்ளோம் .
       
         அதே போல் மீண்டும் ஓர் துரோகத்தை நமக்கு மோடி அரசு செய்யப் போகிறது என்பதின் எச்சரிக்கை மணி தான் கீழ் வருபவை :-

   சென்ற வாரம் இந்தியா சார்பில் International Law Commission  "உலக நீதி மையத்தின் ஆலோசனை  உறுப்பினராக   RSSயை சேர்ந்த ஒருவர் பரிந்துரை செய்ய பட்டுள்ளார்.!

    அனிருத்தா ராஜ்புத் என்ற 33 வயதான ஒருவரை போகிற போக்கில் பிரதமர் அலுவலகம் முன் மொழிந்துள்ளது!

  இவர் தன் துறையில் ஆராய்ச்சி (P.hd) யை முடித்தே சில மாதங்கள் தான் ஆகிறது!

   இந்திய வெளியுறவுத்துறை விவகாரங்களுக்கான Legal Advisor களாக இருந்த மூத்த சட்ட வல்லுந‌ர்களையோ அல்லது மூத்த உச்ச நீதிமன்ற நீதிபதிகளையோ தான் இந்திய அரசு 1967 முதல் இப்போது வரை பரிந்துரைத்து வந்துள்ளது .

முதலில் International Law Commission என்றால் என்ன என பார்த்து விடுவோம்.

ILC - என்பது உலக நாடுகளுக்கு இடையேயான சட்ட விதிமுறைகளை,  ஒவ்வொரு காலகட்டத்திற்கும் ஏற்ப உலக மக்களின் நலனை மனதில் கொண்டு அதற்கான அடிப்படை காரணிகளை ஆய்வுக்கு உட்படுத்தி புது புது சட்ட விதிகளை புகுத்தும் அல்லது பரிந்துரை செய்யும் ஓர் சக்திவாய்ந்த அமைப்பு!

   UN Assembly ஜெனீவா வில்  1947 -ல் இந்த அமைப்பை உருவாக்கியது!

பிரிட்டன் தன் கைவசம் இருந்த ஒவ்வொரு காலணி நாடுகளையும் 20ம் நூற்றாண்டின் மத்தியில் ஒவ்வொன்றாக விடுவிக்க துவங்க புது புது தேசங்கள் முளைத்தன அதில் ஒன்று தான்  இந்திய கூட்டமைப்பும்.

நாடுகள் அதிகரிக்க துவங்கவும் ஒவ்வொரு தனித் தனி நாடுகளின் இடையே சட்ட விதிமுறைகள் சுமூகமாகவும் சச்சரவு இன்றி நகரும் பொருட்டே இக் கமிட்டி அமைக்கப் பட்டது!

மொத்தம் 32 உறுப்பினர்களை மட்டுமே உள்ளடக்கிய கூட்டமைப்பு இது!
ஆசிய கண்டத்தில் இருந்து 7 உறுப்பினர்கள் மட்டுமே இதில் பங்கு பெற முடியும்.

   இதன் தலையாய கடமை, ஒவ்வொரு பருவத்திலும் உலக நாடுகளிடையே ஏற்படும் சண்டை சச்சரவுகள்,  பனிப் போர், இயற்கை வளங்களை பங்கீடல் போன்றவை குறித்தான தீர்க்கமான பார்வையையும் அதன் தீர்வுகளையும் ஐ.நா வுக்கு சமர்ப்பிதே ஆகும்.

மொத்தம் பத்து உறுப்பு நாடுகள் இந்த 7 இடங்களை பிடிக்க போட்டி போடுகின்றன!

சீனா, ஜப்பான், கத்தார், ஜோர்டான், இந்தோனேசியா மற்றும் கொரியா போன்ற நாடுகளின் நடப்பு 6 உறுப்பினர்களே அடுத்த பருவ காலத்திற்க்கும் தொடர்வார்கள் என்ற நிலையில் இருக்கும் ஒரே ஒரு பதவிக்கு,  இப் போட்டியில் இதுவரை பங்கேற்காத மலேசியா, வியட்னாம் போன்றவையும் போட்டி போடுகின்றன!

ஈரான் தன் சார்பில் முன்னாள் கமிட்டி  உறுப்பினரான Jamshid Momtaz (ILC 2000 -2006) யை நிறுத்துகிறது!

மலேசியா தன் சார்பில் நிறுத்தும் Prof.Rahmat Mohammed ஆசியா - ஆப்பிரிக்கா உறவு மேம்பாட்டு குழுவில் சட்ட ஆலோசகராக செயல் பட்டவர்.

வியட்னாம் தன் சார்பில் ஜூயன் ஹாங் தாவோ (Nguyen Hing Thao) என்பவரை நிறுத்துகிறது இவர் Asian Association of International Law சபையில் செயற்பாட்டாளராக 2007 முதல் இன்று வரை பணியாற்றி வருகிறார்.

அவ்வளவு ஏன்,  32 உறுப்பினர்களில் மூவர் முன்னாள் அட்டர்னி ஜெனரல்கள், ஒரு வெளியுறவுத்துறை அமைச்சராக பணியாற்றியவர், ஒரு முன்னாள் நீதிபதி, 8 வெளியுறவுத்துறை தூதுவர்கள்.

இத்தனை பெரிய பதவிக்கு பரிந்துரை செய்யப் படும் ஒருவர், புனே மற்றும் லண்டனில் சட்ட கல்லூரிகளில் படித்தால் மட்டுமே போதும் என்று இவர்களே முடிவு செய்து விட்டார்கள் போலும்!

டி.வி. நடிகை என்ற ஒரே தகுதி கொண்ட  ஸ்மிரிதி ராணியை பல்கலைக்கழகங்களை கட்டுப்படுத்தும் HRD அமைச்சராக ஆக்கிய அரை வேக்காடுகள் தானே இவர்கள். 

   இப்போது ILC உறுப்பினராக இருக்கும் 'நரேந்திர சிங் 'ற்கு வரும் 2017 MAY யுடன் பதவி காலம் முடிவடைகிறது!
இவரை கேட்டால் அனிருத் ராஜ்புத் என்ற பேரை இதுவரை தான் கேட்டதே இல்லை என்கிறார்.

வெளியுறவுத்துறையில் 12 சட்ட வல்லுந‌ர்கள் உள்ளனர். அதில் ஒருவருக்கு கூடவா தகுதி இல்லை இப் பதவிக்கு ....!!?

    தன் நாட்டு மக்கள் 624 பேரை பக்கத்து நாட்டு கடற்படை சுட்டு கொன்றுள்ளது.  இன்றுவரை ஒரே ஒரு FIR கூட இவர்கள் இன்றுவரை உலக நீதி மன்றத்தில் பதிவு செய்யவில்லை! இவர்களா எதிர் காலத்தில் நம்மை காக்க போகிறார்கள்.

  ஈரான், மலேசியா, வியட்னாம் இத்தனை கடும் போட்டியிலும் ஓர் RSS கை கூலியை மோடி அரசு முன்னிருத்துகிறது எனில் இலங்கை போன்ற நாடுகள் ஆதரிக்கும் என்பதால் தான்.

    அங்கே பொதுபல சேனா வும், சிவ சேனாவும் இணைந்து செயல் பட போகின்றது என்பதை ஏற்கனவே மே 17 இயக்கம் அம்பலப் படுத்தியது நினைவிருக்கும். சென்ற வாரம் "சிவ சேனை " என்ற பெயரில் அங்கே பாசிச இந்துத்துவாவை வேறூன்ர இந்தியம் உதவியது, அதற்கு அடுத்த நாள் PMO (பிரதமர் அலுவலகம்) அனிருத் பெயரை ILC போட்டியாளராக உச்சரிக்கிறது!

    இவரை வைத்து WTO மற்றும் UN - ல் தன் அகண்ட பாரத கனவை நிறைவேற்ற துடிக்கிறது பார்ப்பனி பணியா அரசு!

    மீண்டும், மீண்டும் இவர்கள் மக்களை நசுக்கும் வேலையை மட்டுமே செய்து வருகிறார்கள்.

    எதிர்காலத்தில் தமிழகத்தை வஞ்சிக்கும் பல திட்டங்களுக்காக  (மீத்தேன், காவிரி டெல்டாவில் பெட்ரோல், நியூட்ரினோ etc.,) அரசு நம் வாழ்வாதாரத்தை சூறையாடும் போது, கண்டிப்பாக உச்ச நீதிமன்றம் நமக்காக ஒரு ஆணியும் புடுங்காது!
அடுத்து நாம் உலக நீதி மன்றத்தை நாடினால் அங்கேயும் சட்ட ரீதியாக நமக்கு முட்டுக்கட்டை போட ஒருவனை இப்போதே  அனுப்புகிறது RSS என்பதை உணருங்கள்.

கீழே இருப்பது, அனிருத் ஓர் RSS காரனாக பேசிய காணொளி,

https://m.youtube.com/watch?v=h2fFHgigWTk

  இதில் கொடுமையே, இவண் பெயரை வெளியிட்ட வெளியுறவுத்துறையின் செயலாளர் 'ஜெய் சங்கரே ' ஓர் தமிழன் என்பது தான்! .

   நாம் இப்போது செய்ய வேண்டியது 'ஜெய் சங்கருக்கு ' (Secretary of External affairs)  தொடர்ந்து மின்னஞ்சல் மூலம் கேள்விக்கனை களை தொடுப்பது தான் . இன்னும் அதிகாரபூர்வமாக PMO இணையதத்தில் "அனிருத் " பெயர் பதிவேறும் முன் நாம் இதை செய்து முடிக்க வேண்டியது அவசியம்!

E - Mail - id :-
   
    psfs@mea.gov.in
    jsxp@mea.gov.in

கேள்விகள் கீழே :-

1.What was the selection process for choosing India’s candidate for ILC?

2.Is there any criteria being followed to look at minimum qualifications/experience? If yes, Can we assume that Rajput met those standards?

3.What in your view are Rajput’s credentials in the field of public international law?

4.Since ILC members from other countries are almost invariably professors of public international law with many publications to their credit, or former ambassadors, judges or officials with long years of practical experience in the field of public international law, is it not likely that Rajput, with a recently submitted doctorate, will be considered by others on the ILC as under-qualified?

5.Since the MEA did not advertise or invite applications, and Rajput is still relatively unknown in public international law, how did you settle upon his candidature?

6.Why did the MEA not consider other names for nomination?

7.What are India’s expectations from the International Law Commission?

     இது நம் உரிமை நமக்கு பதில் சொல்ல வேண்டியது அரசின் கடமை.!

  









Friday, 7 October 2016

பொலிவியா - போராட்டங்களின் களம்

Oscar Olivera - ஆஸ்கர் ஆலவேரா

பொலிவியா - தென் அமெரிக்க நாடுகளில் ஓர் முக்கியமான நாடு .  நீர் வளத்திற்க்கு குறைவில்லா ஓர் தேசம்!
   
     அந்த நாடு சந்தித்த நீர் சார்ந்த ஓர் Corporate அரசியலையும் அதனை முறியடித்த உலகை மிரள வைத்த ஓர் மக்கள் போராட்டத்தையும்  தான் இப்போது நாம் பார்க்க போகிறோம்

பிரேசில், பராகுவே, பொலிவியா இடையே எல்லை கோடுகளே கிடையாது! . ஆனால் இவற்றை பிரிப்பது ஓர் வற்றாத மற்றும் கடலில் கலக்காத ஓர் ஜீவ  நதி தான்.

      ஆனால் பிரச்சனை அங்கு அல்ல!

நாட்டின் மத்திய நகரமான CochoBamba (கோச்சோ பாம்பா)  எனும் இடத்தில் தான்!

1999 ல் ஆண்டிஸ் மழை தொடரின் இயற்கை சூழலுக்கு நடுவே இருக்கும் இந் நகரில் குடிநீரை பொருத்தவரை அரசும், சிறு சிறு நிறுவனங்களும் மக்களுக்கான தேவையை நிறைவேற்றி வந்தன!
    அதாவது அருவியிலும் நீரோடையிலும் இருந்து நீரை எடுத்து விநியோகம் .

திடீரென ஓர்நாள்,

   மக்களே!!,
         நாம் சுகாதாரமான நீரைத்தான் பயன் படுத்த வேண்டும், இப்படி மலையிலும், அருவியிலும் வரும் நீரை பயன்படுத்தினால் உடலுக்கு கேடு எனவே நாம் நீர் சுத்திகரிப்பு மையத்தை துவங்க போகிறோம் என ஓர் அறிக்கையையும் கூடவே சில கட்டுக்கோப்பான சட்டத்தையும் அறிவித்தது அரசு!
   (இல்லையில்லை அறிவிக்க வைக்கப் பட்டது)

அடுத்து என்ன நிகழ்ந்தது என்பதை அறியும் முன் பொலிவியா-வின் அப்போதைய பொருளாதார நிலையினை கொஞ்சம் பார்த்து விடுவோம் . அப்போது தான் பிரச்சனையின் அடிநாதமும், அடுத்து நாம் இந்தியாவில் சந்திக்க போகும் அரசின் துரோகங்களையூம் நீங்கள் எளிதாக உணர்ந்து கொள்ள இயலும்.

      Bolivia வுக்கு மிக மோசமான பொருளாதார நெருக்கடியான கால கட்டம் அது! 

  1.    செப் -1998 IMF (International Monetry Fund) உலக நாணய நிதியகம் $ 138 பில்லியன் நிதியை ஒதுக்கியது பொலிவியாவுக்கு தன்  பொருளாதாரத்தை  சீர் செய்து கொள்ள!

2. ஆனால் , பொலிவிய அரசாங்கத்துக்கு அந்த பணம் போதுமானதாக இருக்கவில்லை நிலமையை சீர் செய்ய என்பதே நிதர்சனம்.

3.ஜூன் - 1999 ல் World Bank ஓர் அறிக்கையை வெளியிட்டது .
இனி எந்த மானியமும் வழங்க முடியாது பொலிவியாவுக்கு முக்கியமாக CochoBamba  வின் நீர்வளத்துறைக்கு .
(அப்போது ஒன்றும் விளங்கவில்லை அரசுக்கு ஏன் குறிப்பாக கோச்சோ பாம்பாவை உலக வங்கி குறிப்பிடுகிறது என்று )

        செப் - 1999 :-
        கையறு நிலைக்கு தள்ளப் பட்டது Bolivia.

4.அனைத்து பொதுத்துறை நிறுவனங்களும் தனியார் மயமாக்கும் முடிவுக்கு வந்தது அரசு.  ஆயில் நிறுவனங்கள்,  முக்கியமாக SEMAPA வும். 
   SEMAPA தான் கோச்சோ பாம்பா வுக்கு நீர் விநியோகிகக்கும் ஓர் சாதாரண அரசு நிறுவனம்.

5. SEMAPA வை கையகப் படுத்தியது Aguas del Tunari நிறுவனம்! 

    சரி இப்போது விடயத்துக்கு வருவோம்

உடனடியாக பணிகள் விறு விறுவென நடந்தேறின!

மக்களுக்கு சுகாதாரமான குடிநீர் வழங்கும் WHO (உலக சுகாதார மையம்) ன் கொள்கைப் படி சிறந்த குடிநீரை நாட்டிலே இங்கு தான் முதன் முறையாக வழங்க போகிறோம் என அங்கலாய்த்தது Bolivian Congress. (அதுவரை இயற்கையான அருவி, ஓடை நீரையே அரசு விநியோகம் செய்து வந்தது)

   20 கி.மீ க்கு சுரங்கம் தோண்டப் பட்டு Tunnel அமைக்கப்பட்டது .
அது ஆண்டிஸ் மலைச்சரிவில் இருந்து நீர் கொண்டு வந்து மாகாணத்தின் மையத்தில் சுத்திகரிக்கவும் மேலும் மாநிலம் முழுதும் விநியோகிக்கவும் ஏற்பாடு!

    பணிகளும் சிறப்பாக நிறைவேறியது!
ஆனால் ஒரே பிழை இவை அனைத்தும் அரசு செய்யதிருக்க வேண்டியது எல்லாவற்றையும் ஓர் தனியார் நிறுவனம் செய்து முடித்திருந்தது!

   மக்களுக்கு குடிநீர் வழங்கல் துவங்கியது!  ஒரேயோர் நிபந்தனையோடு :-
அது,
     
        ஆண்டிஸ் மலைத் தொடரில் இருந்து யாரும் நீர் எடுக்க கூடாது, மீறி எடுத்தால் அது தேச துரோகம்!
  
    அதற்கு முன்னர் நீரை மலைச்சரிவு ஏரியில் இருந்து எடுத்து மக்களுக்கு  விநியோகித்துக்கொண்டிருந்த  சில உள்ளூர் குறுந் தொழில் வணிகர்கள் அரண்டு போயினர்.

       முழு அரசின்  உதவியோடு ராட்சசத் தனமான ஓர் நிறுவனத்தை கண்டால் யாருமே ஓர் நிமிடம் திகைத்து தான் போவோம்!  அதே நிலைதான் அவர்களுக்கும்.

   நகரின் மொத்த Businessம் கைக்குள் அடங்க அதிக சிரமம் எடுக்கவில்லை Aguas  நிறுவனத்திற்க்கு!

ஹூம்ம், ஒன்றை சொல்ல மறந்து விட்டே……னே!
    Aguas del Tunari ஆனது Bechtel என்ற குழுமத்தால் இயக்கப் பட்டது.  Bechtel அமெரிக்காவை சேர்ந்த பெருவணிக நிறுவனங்களுள் ஒன்று.!

இதை சரியாக பயன் படுத்திக் கொண்டது US.

   மெல்ல மெல்ல தன் வேலையை காட்ட துவங்கியது அமெரிக்கா!
   ஏற்கனவே நாட்டிற்க்குள் தொழிற்சாலைகள், வாகன, மக்கள் நெரிசலால் Pollution மொத்தமும் கெட்டு போய் இருந்தது!

   

   இதுவரை, நீங்கள் வெறும் நீரை தான் அருந்தினீர்கள். இப்போது pure Mineral Water எனவே Price just Hike!

அடுத்த சில நாட்களில் …,

  நீர் கொணரும் தூரம் அதிகம், எனவே நீரின் விலை உயர்த்துகிறோம்! மின்சார பிரச்சனை எனவே நட்டம்!
அதில் குறை , இதில் ஓட்டை என ஏதேதோ கூறி விலை நிர்ணய உரிமையை தனக்கு மாற்றிக் கொண்டது  அந் நிறுவனம்!

1999 -   அக்டோபர் - 11

    முதலில் 35 % விலை உயர்வை தொடக்கத்தில் ஆரம்பித்த Bechtel ஒன்றரை ஆண்டுகளில் சீரான விலையேற்றம் மக்களை  தெருவுக்கு கொண்டு வந்து நிறுத்தியிருந்தது!

  மக்கள் மொத்தமாக திணறி போயிருந்தனர்.
குடி நீர் மட்டுமே அல்லாமல், அன்றாட உபயோகத்திற்கான தண்ணீர், Sewage, Drainage என எல்லாவற்றிற்கும் கட்டணம்!

   இதே நிலை தொடர்ந்தால் 5 ஆண்டுகளில் Domestic Water supply மற்றும்
   கழிவு நீர் சுத்திகரிப்புக்கு மட்டும் 93 % விலை உயர்ந்து நிற்கும் என சமூக ஆர்வலர்கள் பதறினர்.

தினம் ஓர் போராட்டம் சிறு சிறு கண்டன கூட்டங்கள் மெல்ல எதிர்ப்பை தெரிவிக்க ஆரம்பித்தனர் மக்கள்!

    சிறு சிறு கூட்டங்களாக நிகழ்ந்தவை, தங்கள் வீட்டு Water Bill இரண்டு மூன்று மடங்கு என எகிர ஒட்டு மொத்தமாக ரோட்டில் இறங்கினார்கள் மக்கள்!

   2000 - ஜனவரி
மக்கள் சாரை சாரையாக வீதிக்கு வந்தனர்.  தங்களின் வேலை, பொழுதுபோக்கு, விழா, சடங்கு என எதையும் பார்க்கவில்லை!

நான்கு நாட்கள் மொத்தமாக கோச்சோ பாம்பா நகரமே முடங்கியது!

சாலைகளில் ஆயிரக்கணக்கில் மக்கள் நிற்க ஆரம்பித்தனர்.
Transport, School, Theater, Park everything got shut down.
கோச்சோ பாம்பா மாநகரம் முழுவதும் முடங்கி போனது!

   அரசோ திகைத்து, திகைத்து ஓர் மனநிலையில் வெறுத்து போனது!
யார் இவர்கள் எங்கிருந்து இத்தனை மக்களை திரட்ட முடிந்தது!
      - ஒன்றும் புரியவில்லை அரசுக்கு.!
  
    ஒரே பெயர் தான் விடையாக கிடைத்தது - ஆஸ்கர் ஆலி வோரா. சமூக அரசியல் செயற்பாட்டாளர்.

அதற்கு பின் கட்டணம் குறையும் என்று எதிர் பார்த்தும் ஒன்றும் நடந்த பாடில்லை!

February - 4 & 5 - 2000

   Oscar தலைமையில் இம்முறை அணிவகுப்பு பேரணியை மேற்கொண்டனர் மக்கள்.
அமைதியான பேரணி ...!
கிட்ட தட்ட நகரத்தின் அனைத்து வீடுகளும் பூட்டிதான் இருந்திருக்க வேண்டும்.
இந்த முறை போலீஸ் தன் வேலையை காட்ட துவங்கியது!
பேரணிக்குள் வன்முறையை தூண்டி விட்டது.
கண்ணீர் புகை குண்டுகளால் இருவர் பார்வையை இழந்தனர். 175 பேர்  படுகாயம் அடைந்தனர்.

   இதை Pacific News இதழ் உலகம் முழுக்க கொண்டு சென்றது, "A War over Water " என்ற குறீயீட்டோடு!
அப் பத்திரிக்கையின் செயற்பாட்டாளர் Jim Shultz -ன் பங்கு இப் போராட்டத்தில் மிகப் பெரிய பங்காற்றியது! 
மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டியதில் இவர் முதன்மையானவர். தன் கையில் இருக்கும் ஊடகத்தை செம்மையாக பயன் படுத்தினார் தன் மக்களுக்காக!
Bechtel நிறுவன CEO (முதன்மை செயல் அலுவலர்) Riley Bechtel க்கு Jim - ன் அறிவுரைப்படை ஆயிரக்கணக்கான மின்னஞ்சல்கள் குவிந்தன .

    இது அறிவார்ந்த தளத்தில் மிகப் பெரிய கவனத்தை ஈர்த்தது!

March - 2000

    ஓர் அங்கீகரிக்க படாத பொதுவாக்கெடுப்பை Political Activities கள் Oscar Olivera தலைமையில் நடத்தினர் 96% மக்கள் Bechtel யை பொலிவியாவை விட்டே வெளியேற்ற வேண்டும் என வாக்களித்தனர்.
ஆனால், இதை அரசு பெரிதாக கண்டு கொள்ளவில்லை!

    தொடர்ந்து ......,

     அடுத்தடுத்த போராட்டங்களும், முற்றுகைகளும்
CochoBamba நகரை மட்டுமல்லாமல் நாடு முழுதும் அரசின் மேல் ஓர் வெறுப்பையும் கோபத்தையுமே உண்டாக்கியது!

ஆஸ்கர் உடன் பேச்சுவார்த்தை எல்லாம் நடத்தியது Bolivian Congress.  ஹூம்ம்ம் ஹும்,  ஒன்றும் வேலைக்கு ஆக வில்லை!

   இதற்க்கு இடையில், உலக வங்கி தலைவர் Washington D.C யில் அளித்த பேட்டியில்.  தண்ணீரை இலவசமாகவோ அதற்கு மானியம் வழங்குவதோ மக்களை வீணாக நீரை செலவழிக்க வழி செய்யும் என 1981 ல் பிரான்ஸ்ஸும், இங்கிலாந்தும் தண்ணீரை கொள்ளை அடிக்க பயன்படுத்திய அதே வாசகத்தை பயன் படுத்தினார்.
       ( இதிலேயே இவர்களின் , மேற்குலக கூட்டு களவு திட்டத்தை நாம் உணர வேண்டும்)

அடுத்த நடந்த போராட்டாம் முற்றிலும் வேறு வடிவில் இருந்தது!
நாட்டின் அனைத்து NGO's, இயக்கங்கள், தொழிறச் சங்கங்கள் என அனைத்தும் இணைந்தன!

   அதிபர், ஊரடங்கு உத்தரவு போடும் அளவுக்கு நிலமை போனது!

அப்போது நடந்த துப்பாக்கி சூட்டில் 17 வயது இளைஞன் உயிரிழந்தார்.

    தென் அமெரிக்கா முழுதும் பொலிவியாவின் மீது கறித்து கொட்ட துவங்கியது நடுநிலை ஊடகங்கள்.

  இங்கு தான் மக்களின் கோபத்தை சரியான பாதையில் திசை திருப்பினார் ஆஸ்கர்.

வட அமெரிக்காவின் 50 மாகாணங்கள் தென் அமெரிக்க நாடுகள் முழுவதும் என எங்கெல்லாம் உலக வங்கி மற்றும் IMF கருத்தரங்குகள், கூட்டங்கள் நடத்துகிறதோ அங்கெல்லாம் முற்றுகையை போட்டது போராட்ட குழுக்களும் அந்தந்த பகுதி சமூக ஆர்வலர்களும்.

ஓர் நிலையில், உலக வங்கி இக் கட்டான சூழ்நிலையில் சிக்கும் நிலை!
        (நாம் ஈழ விடயத்தில் அமெரிக்க தூதரகம் மற்றும் ஐ.நா அலுவலக முற்றுகையிடுவதை கிண்டல் செய்யும் சில அறிவுஜீவிகள் கவனத்திற்கு)

   தொடர்ந்து நாடு முழுதும் ஆதரவு குரல்களும் பல நாடுகளின் Political Movement களின் ஆலோசனை என கோச்சோ பாம்பா அதிந்தது!

      Betchtel நிறுவன நீரை நாடு முழுதும் பெரும்பாலோர் நிராகரிக்க துவங்கினர். பெயரும் கெடத் துவங்கியது!

Betchtel - உலக வங்கியில் நேராக புகார் கொடுக்க ஓடியது!

அடுத்த அரைநாளில் ஆஸ்கர் கலவரம், மற்றும் மக்களை அரசுக்கு எதிராக தூண்டிவிட்டார் என கைது செய்ப்பட்டார்.
மக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

72 மணி நேரத்துக்கு ஒருமுறை உள்ளூர் காவல் நிலையத்தில் கையொப்பம் இட வேண்டும் என்ற நிபந்தனையோடு அன்றே விடுவிக்கப் பட்டார்.

      அந்த நேரத்தில் சரியாக கோச்சோபாம்பா வை சார்ந்த ஒருவரே அதிபராக பதவி ஏற்க!  உலக வங்கியும் போராட்ட காரர்களின் தொடர் முற்றுகையால் தாக்கு பிடிக்காமல் இறங்கி வர, Betchtel யை வெளியேற்றும் நாள் வந்து சேர்ந்தது!
Bolivian Congress ஆஸ்கரை அழைத்து ஏற்கனவே அவர்களோடு போட்டிருந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதாகவும், அவரின் La Coordinadora கூட்டமைப்பிற்க்கு நீர் விநியோகத்தை ஒப்பந்தத்தத்தை வழங்கியது அரசு.
 
   அடுத்த சில நாட்களில் நிலமை சீரானது, ஆனால் பிரச்சனை வேறு வடிவில் வந்தது!

   Betchtel உலக வங்கியில்  $ 25 Million நட்ட ஈடு கேட்டு பொலிவியாவுக்கு எதிராக வழக்கை தொடங்கியது.
40 வருட Contract போட்டோமே நாசமா போச்சே என கண்ணீர் விட்டது.

   அங்கு தான் ,  Oscar அரசுக்கு கை கொடுத்தார். 125 அரசியல் அமைப்புகளை ஒன்றிணைத்து San - Francisco வில் இருக்கும் Betchtel தலைமை செயலகத்தை முற்றுகையிட்டு அதிர வைத்தார்.

   நிலமை கை மீறி போனதால் Oscar Olivera உடன் பேச்சுவார்த்தைக்கு வந்தது Betchtel நிறுவனம்.

இறுதியில் 1,25, 000 மக்களின் வாழ்வாரத்திற்கு என இறங்கி வந்தது Betchtel.

     சரியாக அதற்கு மறுநாள் தென் அமெரிக்க நாடுகளுக்கான  "சுற்றுச்சூழலுக்கான தங்க மகன்" விருதை பெற்றார் Oscar Olivera.

      இதில் நாம் உணர வேண்டிய முக்கிய விடயங்கள் :-

*    போராட்டம் மட்டுமே நமக்கான, உரிமையை பெற்று தரும்.

*  அனைத்து மக்களை இணைத்து தெருவில் இறங்காமல் அரசை திரும்பி பார்க்க வைக்க முடியாது.

*  அரசியல் அமைப்புகள் கட்சிகள் என அனைத்தும் ஓர் அணியில் திரளுவது அவசியம்.

*  களத்தில் மட்டுமே அல்லாமல் "கருத்தியல் ரீதியான " ஆதரவு நிலையை நாம் உண்டாக்குதல் மிகப் பெரிய தேவை.

* மிக முக்கியம், Corporate களுக்கு பக்கெட் தூக்கும் அல்லக்கை களை செருப்பை கழட்டி அடித்தே விரட்ட வேண்டும் .

#Protest
#Siege
#Bolivia
#Latin_America
#Movement