Once again , Modi Government proves their self, BJP having only interest imperial RSS / Hindhuthuva guys into powerful position (or) ministry.
இந்தியாவை Corporate களுக்கு கூறு போட்டு விற்றுக் கொண்டிருக்கும் அதேவேளையில் பாசிச இந்துத்துவா ஆட்களை நாட்டின் கட்டமைப்புகளிலும் அதிகார வர்க்கத்திலும் RSS பின்புலம் கொண்டவர்களை அமர்த்திக் கொள்வதில் முனைப்பாக செயல் படுவதை தொடர்ந்து நாம் பார்த்து வந்துள்ளோம் .
அதே போல் மீண்டும் ஓர் துரோகத்தை நமக்கு மோடி அரசு செய்யப் போகிறது என்பதின் எச்சரிக்கை மணி தான் கீழ் வருபவை :-
சென்ற வாரம் இந்தியா சார்பில் International Law Commission "உலக நீதி மையத்தின் ஆலோசனை உறுப்பினராக RSSயை சேர்ந்த ஒருவர் பரிந்துரை செய்ய பட்டுள்ளார்.!
அனிருத்தா ராஜ்புத் என்ற 33 வயதான ஒருவரை போகிற போக்கில் பிரதமர் அலுவலகம் முன் மொழிந்துள்ளது!
இவர் தன் துறையில் ஆராய்ச்சி (P.hd) யை முடித்தே சில மாதங்கள் தான் ஆகிறது!
இந்திய வெளியுறவுத்துறை விவகாரங்களுக்கான Legal Advisor களாக இருந்த மூத்த சட்ட வல்லுநர்களையோ அல்லது மூத்த உச்ச நீதிமன்ற நீதிபதிகளையோ தான் இந்திய அரசு 1967 முதல் இப்போது வரை பரிந்துரைத்து வந்துள்ளது .
முதலில் International Law Commission என்றால் என்ன என பார்த்து விடுவோம்.
ILC - என்பது உலக நாடுகளுக்கு இடையேயான சட்ட விதிமுறைகளை, ஒவ்வொரு காலகட்டத்திற்கும் ஏற்ப உலக மக்களின் நலனை மனதில் கொண்டு அதற்கான அடிப்படை காரணிகளை ஆய்வுக்கு உட்படுத்தி புது புது சட்ட விதிகளை புகுத்தும் அல்லது பரிந்துரை செய்யும் ஓர் சக்திவாய்ந்த அமைப்பு!
UN Assembly ஜெனீவா வில் 1947 -ல் இந்த அமைப்பை உருவாக்கியது!
பிரிட்டன் தன் கைவசம் இருந்த ஒவ்வொரு காலணி நாடுகளையும் 20ம் நூற்றாண்டின் மத்தியில் ஒவ்வொன்றாக விடுவிக்க துவங்க புது புது தேசங்கள் முளைத்தன அதில் ஒன்று தான் இந்திய கூட்டமைப்பும்.
நாடுகள் அதிகரிக்க துவங்கவும் ஒவ்வொரு தனித் தனி நாடுகளின் இடையே சட்ட விதிமுறைகள் சுமூகமாகவும் சச்சரவு இன்றி நகரும் பொருட்டே இக் கமிட்டி அமைக்கப் பட்டது!
மொத்தம் 32 உறுப்பினர்களை மட்டுமே உள்ளடக்கிய கூட்டமைப்பு இது!
ஆசிய கண்டத்தில் இருந்து 7 உறுப்பினர்கள் மட்டுமே இதில் பங்கு பெற முடியும்.
இதன் தலையாய கடமை, ஒவ்வொரு பருவத்திலும் உலக நாடுகளிடையே ஏற்படும் சண்டை சச்சரவுகள், பனிப் போர், இயற்கை வளங்களை பங்கீடல் போன்றவை குறித்தான தீர்க்கமான பார்வையையும் அதன் தீர்வுகளையும் ஐ.நா வுக்கு சமர்ப்பிதே ஆகும்.
மொத்தம் பத்து உறுப்பு நாடுகள் இந்த 7 இடங்களை பிடிக்க போட்டி போடுகின்றன!
சீனா, ஜப்பான், கத்தார், ஜோர்டான், இந்தோனேசியா மற்றும் கொரியா போன்ற நாடுகளின் நடப்பு 6 உறுப்பினர்களே அடுத்த பருவ காலத்திற்க்கும் தொடர்வார்கள் என்ற நிலையில் இருக்கும் ஒரே ஒரு பதவிக்கு, இப் போட்டியில் இதுவரை பங்கேற்காத மலேசியா, வியட்னாம் போன்றவையும் போட்டி போடுகின்றன!
ஈரான் தன் சார்பில் முன்னாள் கமிட்டி உறுப்பினரான Jamshid Momtaz (ILC 2000 -2006) யை நிறுத்துகிறது!
மலேசியா தன் சார்பில் நிறுத்தும் Prof.Rahmat Mohammed ஆசியா - ஆப்பிரிக்கா உறவு மேம்பாட்டு குழுவில் சட்ட ஆலோசகராக செயல் பட்டவர்.
வியட்னாம் தன் சார்பில் ஜூயன் ஹாங் தாவோ (Nguyen Hing Thao) என்பவரை நிறுத்துகிறது இவர் Asian Association of International Law சபையில் செயற்பாட்டாளராக 2007 முதல் இன்று வரை பணியாற்றி வருகிறார்.
அவ்வளவு ஏன், 32 உறுப்பினர்களில் மூவர் முன்னாள் அட்டர்னி ஜெனரல்கள், ஒரு வெளியுறவுத்துறை அமைச்சராக பணியாற்றியவர், ஒரு முன்னாள் நீதிபதி, 8 வெளியுறவுத்துறை தூதுவர்கள்.
இத்தனை பெரிய பதவிக்கு பரிந்துரை செய்யப் படும் ஒருவர், புனே மற்றும் லண்டனில் சட்ட கல்லூரிகளில் படித்தால் மட்டுமே போதும் என்று இவர்களே முடிவு செய்து விட்டார்கள் போலும்!
டி.வி. நடிகை என்ற ஒரே தகுதி கொண்ட ஸ்மிரிதி ராணியை பல்கலைக்கழகங்களை கட்டுப்படுத்தும் HRD அமைச்சராக ஆக்கிய அரை வேக்காடுகள் தானே இவர்கள்.
இப்போது ILC உறுப்பினராக இருக்கும் 'நரேந்திர சிங் 'ற்கு வரும் 2017 MAY யுடன் பதவி காலம் முடிவடைகிறது!
இவரை கேட்டால் அனிருத் ராஜ்புத் என்ற பேரை இதுவரை தான் கேட்டதே இல்லை என்கிறார்.
வெளியுறவுத்துறையில் 12 சட்ட வல்லுநர்கள் உள்ளனர். அதில் ஒருவருக்கு கூடவா தகுதி இல்லை இப் பதவிக்கு ....!!?
தன் நாட்டு மக்கள் 624 பேரை பக்கத்து நாட்டு கடற்படை சுட்டு கொன்றுள்ளது. இன்றுவரை ஒரே ஒரு FIR கூட இவர்கள் இன்றுவரை உலக நீதி மன்றத்தில் பதிவு செய்யவில்லை! இவர்களா எதிர் காலத்தில் நம்மை காக்க போகிறார்கள்.
ஈரான், மலேசியா, வியட்னாம் இத்தனை கடும் போட்டியிலும் ஓர் RSS கை கூலியை மோடி அரசு முன்னிருத்துகிறது எனில் இலங்கை போன்ற நாடுகள் ஆதரிக்கும் என்பதால் தான்.
அங்கே பொதுபல சேனா வும், சிவ சேனாவும் இணைந்து செயல் பட போகின்றது என்பதை ஏற்கனவே மே 17 இயக்கம் அம்பலப் படுத்தியது நினைவிருக்கும். சென்ற வாரம் "சிவ சேனை " என்ற பெயரில் அங்கே பாசிச இந்துத்துவாவை வேறூன்ர இந்தியம் உதவியது, அதற்கு அடுத்த நாள் PMO (பிரதமர் அலுவலகம்) அனிருத் பெயரை ILC போட்டியாளராக உச்சரிக்கிறது!
இவரை வைத்து WTO மற்றும் UN - ல் தன் அகண்ட பாரத கனவை நிறைவேற்ற துடிக்கிறது பார்ப்பனி பணியா அரசு!
மீண்டும், மீண்டும் இவர்கள் மக்களை நசுக்கும் வேலையை மட்டுமே செய்து வருகிறார்கள்.
எதிர்காலத்தில் தமிழகத்தை வஞ்சிக்கும் பல திட்டங்களுக்காக (மீத்தேன், காவிரி டெல்டாவில் பெட்ரோல், நியூட்ரினோ etc.,) அரசு நம் வாழ்வாதாரத்தை சூறையாடும் போது, கண்டிப்பாக உச்ச நீதிமன்றம் நமக்காக ஒரு ஆணியும் புடுங்காது!
அடுத்து நாம் உலக நீதி மன்றத்தை நாடினால் அங்கேயும் சட்ட ரீதியாக நமக்கு முட்டுக்கட்டை போட ஒருவனை இப்போதே அனுப்புகிறது RSS என்பதை உணருங்கள்.
கீழே இருப்பது, அனிருத் ஓர் RSS காரனாக பேசிய காணொளி,
https://m.youtube.com/watch?v=h2fFHgigWTk
இதில் கொடுமையே, இவண் பெயரை வெளியிட்ட வெளியுறவுத்துறையின் செயலாளர் 'ஜெய் சங்கரே ' ஓர் தமிழன் என்பது தான்! .
நாம் இப்போது செய்ய வேண்டியது 'ஜெய் சங்கருக்கு ' (Secretary of External affairs) தொடர்ந்து மின்னஞ்சல் மூலம் கேள்விக்கனை களை தொடுப்பது தான் . இன்னும் அதிகாரபூர்வமாக PMO இணையதத்தில் "அனிருத் " பெயர் பதிவேறும் முன் நாம் இதை செய்து முடிக்க வேண்டியது அவசியம்!
E - Mail - id :-
psfs@mea.gov.in
jsxp@mea.gov.in
கேள்விகள் கீழே :-
1.What was the selection process for choosing India’s candidate for ILC?
2.Is there any criteria being followed to look at minimum qualifications/experience? If yes, Can we assume that Rajput met those standards?
3.What in your view are Rajput’s credentials in the field of public international law?
4.Since ILC members from other countries are almost invariably professors of public international law with many publications to their credit, or former ambassadors, judges or officials with long years of practical experience in the field of public international law, is it not likely that Rajput, with a recently submitted doctorate, will be considered by others on the ILC as under-qualified?
5.Since the MEA did not advertise or invite applications, and Rajput is still relatively unknown in public international law, how did you settle upon his candidature?
6.Why did the MEA not consider other names for nomination?
7.What are India’s expectations from the International Law Commission?
இது நம் உரிமை நமக்கு பதில் சொல்ல வேண்டியது அரசின் கடமை.!
No comments:
Post a Comment