100 நாட்களை கடந்து விட்டது காஷ்மீரிய தேசிய இன மக்கள் மீதான வன்முறையும் கொலைவெறி தாக்குதலையும் இந்திய ராணுவம் துவங்கி ………
இப்போது வரை, 17 ஆயிரம் பேர் துப்பாக்கி சூட்டிலும், பெல்லட் குடுண்களாலும் படுகாயம் அடைந்துள்ளனர். அதில் 400 பேருக்கும் மேல் கண்களில் பார்வையை இழந்துள்ளனர்.
இதில் பெரும்பாலானோர் இளைஞர்களும் சிறுவர்களுமே!
இவையன்றி, 94 படுகொலை களும் இதில் அடங்கும். மேலும்,
5000 பேரை இராணுவம் கைது செய்து வைத்துள்ளது!
இது முற்றிலும் ஜனநாயத்துக்கு எதிரானக பொது மக்கள் மீது நடத்தப் பட்ட தாக்குதலாகவே உலக நாடுகளில் பார்க்கப் படுகிறது!
ஏற்கனவே, பாலஸ்தீனுக்கு அடுத்த படியாக இனப்படுகொலைகள் குறித்து ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் விவாதிக்கப் படுவது காஷ்மீரின் 1987 - 2014 வரை கொல்லப்பட்ட (அல்லது) காணாமல் போன 97ஆயிரம் மக்களை பற்றி தான்.
இதை திசை திரும்ப தான் பலுசிஸ்தானை வம்புக்கு இழுத்தார் மோடி! அது பெரிதாக வேகவில்லை!
ஏன் இப்போது இத்தனை வேகாமாக கருத்தியலை மாற்ற முற்படுகிறார்கள் என பார்த்தால் விடயம் பொருளாதார ரீதியாக பிரச்சனையை கிளப்பியுள்ளது சர்வதேச அளவில்!
இந்தியாவின் இந்த மோசமான முறையற்ற தாக்குதல் July 8 முதல் இன்று வரை (27 Oct. - 16) கிட்ட தட்ட 111 நாட்களாக ஒட்டு மொத்த பள்ளி கல்லூரிகள், வணிக வளாகங்கள், தொழிற்சாலை நடவடிக்கைகள் என அனைத்தும் முடங்கி போய் விட்டது!
கடந்த வார நிலவரப்படி ₹ 10, 000 கோடி நட்டம் என கணிக்கப் பட்டுள்ளது!
இது காஷ்மீருக்கு மட்டுமே அல்லாமல் இந்திய பொருளாதாரத்தையும் பாதித்துள்ளது!
இதற்கு சப்பை கட்டாக வழக்கம் போல் தீவிரவாதத்தை காரணம் காட்டி தேசிய பாதுகாப்பு ஆலோசனை மையம் கை நீட்டுகிறது!
அதன் ஆலோசகராக உள்ள எம்.கே.நாராயணன் இதை ஹிஸ் புல் முஜாஹிதீன் அமைப்பையும், ப்ருகான் வாஹ்னியை யும் காரணமாக சொல்கிறார்.
இந்த நாராயணன் யார் தெரியாம!!? தமிழீழ இனப்படுகொலையில் முக்கிய காரண கர்த்தாவாக இருந்தவன்.
ஜனவரி 11 - 2009 அன்று ஐ.நா மனித உரிமை அலுவலர்கள் சிறீலங்காவில் நின்று கொண்டு,
" இங்கே நடப்பது போர் அல்ல " இதற்கு பெயரே வேறு அப்பாவி மக்களை ஐ.நா வே படுகொலை செய்ய அனுமதிக்க முடியாது!
இத் தகவலை வெளி உலகுக்கும், ஐ.நா மன்றத்திலும் அறிவித்தே ஆக வேண்டும் என கதறிய போது, அதை தடுத்து நிறுத்தியவன் தான் இந்த M.K .நாராயணன்.!
அப்படி எனில், இவரின் அறிக்கை எவ்வளவு நேர்மையாக இருக்கும் என உணர்ந்து கொள்ளுங்கைள்.!
சரி விடயத்துக்கு வருவோம்!
காஷ்மீரின் அவலத்தை அனைவரும் கேள்வி எழுப்ப துவங்கியதும் அதை மடை மாற்றம் செய்ய போட்ட நாடகம் தான் Surgical Strike ....!
கடைசியில் அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என ஐ.நாவில் வைத்தே பாக். தெரிவித்து விட!
மோடியில் Media Stunt புஸ்வானம்.
இங்கே கெஜ்ரிவால் போன்றோர் அதற்கு ஆதாரம் கேட்க, அவரை தேச துரோகி ஆக்கி கறித்துக் கொட்டியது பக்தாஸ் கேங்!
உடனே, இந்திய நாடக துறை Surgical Strike யை பற்றிய காணொளி உள்ளது Editing மட்டுமே பாக்கி, PM Office பார்த்ததும் தருகிறோம்ன்னு போனவங்க ……………… போனாங்க, போனாங்க! இப்போ வரை எனக்கு தெரிஞ்சு ஒரு Video வும் வெளியே வரலை! (Video வரும் வரும்ன்னு சொன்னீங்க ஆனா, வருண் காந்தி வருவார்ன்னு சொல்லலையே ஜி)
இதற்கிடையில் கெஜ்ரியை மன்னிப்பு கேட்க வைத்து, அக்க்ஷய் குமாரை Selfie video போட வைத்து எல்லாம் தேச பக்திக்கு குளுக்கோஸ் ஏத்தினார்கள்.!
கடைசியில், எந்த தாக்குதலை காரணம் காட்டி Surgical Strike 'Drama ' நடத்தப் பட்டதோ அதே Uri தாக்குதலுக்கு ஐ.நா விசாரணை தேவை என ஜெனீவா சென்றனர்.
இதில், ஹைலைட்டே ஜெனீவா போனாது இந்தியா அல்ல, பாக்கிஸ்தான்!
www.dawn.com/news/1286214
இந்த எல்லா கதையும் ஒரு புறம் இருந்தால், Surgical Strike நாடகத்தை வைத்து இவர்கள் மறைத்த நடவடிக்கைகள் ஏராளம் :-
* Surgical strike நடந்ததாக சொல்லப் பட்ட 24 மணி நேரத்தில் 'இராணுவ வீரர்களின் ஓய்வு ஊதியம் வெகுவாக குறைக்கப் பட்டது!
கொடுமையை பாருங்க, யாரை வைத்து இவர்கள் போலி தேச பக்தியை நீர் ஊற்றி வளர்க்கிறார்களோ அவர்களின் முதுகிலேயே குத்தினார்கள். ஒரு மாத தொடர்ச்சியான போராட்டத்திற்க்கு பிறகு மீண்டும் நேற்று (29 அக்.) பழைய படி ஓய்வூதியம் வழங்க அரசு ஒப்புக் கொண்டுள்ளது!
* நீதி மன்றம் எழுப்பிய ஏன் பெல்லட் குண்டுகள் அப்பாவி பொது மக்கள் மீது பயன் படுத்தப் பட்டது என்ற கேள்விக்கு சப்பையாக ஒரு பதிலை கொடுத்த தோடு, காஷ்மீர் மக்களின் உரிமையை ஏன் பறிக்கிறீர்கள் என யாரும் கேள்வி கேட்க நேரமே கொடுக்கவில்லை!
* யூரி, பதான் கோட் போன்றவை மாற்று கட்சிகளையோ, ஊடகங்களையோ மறந்தும் காஷ்மீரில் கொள்ளப் பட்ட 94 பேரை பற்றி தெரியாமல் கூட பேச வில்லை!
ஓர் தேசிய இனம், இந்தியா என்ற கூட்டமைப்புக்குள் எந்த நம்பிக்கையில் வந்தார்களோ கிட்ட தட்ட அந்த நம்பிக்கையை மொத்தமாக இந்தியம் சிதைத்து விட்டது!
காஷ்மீருக்கு தோட்டாக்களும், Pellet குண்டுகளும் என்றால் தமிழகத்துக்கு மீத்தேனும், நியூட்ரினோவும் இனப்படுகொலைக்கு முன்னணியில் நிற்கிறது!
இந்த அரை டவுசர்கள் சொல்வது போல் வளர்ச்சி பாதை எல்லாம் ஒரு மண்ணாங்கட்டியும் தமிழகத்துக்கு வராது என்பதை உணருங்கள்.
- கூடங்குளம் 3, 4 ம் உலைக்கூடத்துக்கு அனுமதி
> எய்ம்ஸ் மருத்துவமனை நிராகரிப்பு
- காவிரி டெல்டா வில் பெட்ரோல் எடுக்க RIL (ரிலையன்ஸ்) க்கூ அனுமதி
> காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க எதிர்ப்பு
- தாமிரபரணியில் Coke / Pepsi க்கு மக்கள் தடையை மீறி அனுமதி
இப்படித் தான் போகிறது இந்தியா வின் செயல் பாடு தமிழகத் பொறுத்தவரை!
ஏற்கனவே நீரை தனியார் மயமாக்கும் சட்டத்தை கிட்ட தட்ட நடைமுறைக்கு கொண்டு வரும் நிலைக்கு வந்து விட்டது பாஜக / RSS அரசு!
மீத்தேன், நியூட்ரினோ, டெல்டாவில் பெட்ரோல் என அனைத்து நாசக் கார திட்டங்களும் ஆரம்பிக்கப் பட்ட பின் நாம் தெருவில் இறங்கினால் …………
முதலில் பேச்சுவார்த்தை, தடுப்பு, தடியடி, பின்னர் துப்பாக்கி சூடு என மாறி கடைசியில் நமக்கு எதிராகவும் இராணுவத்தை இறக்க தயங்க மாட்டார் Corporate களின் தரகரான நரேந்திர மோடி!
நீங்கள், எந்த கட்சி எந்த அமைப்பாக வேண்டுமானாலும் இருங்கள். நம் கருத்து வேறு பாடுகளை பின்னர் பேசிக் கொள்ளலாம்.
நம் வீட்டை கொள்ளையடிக்க மூவர்ண கொடி என்ற முகமூடியோடு வருகின்றது இந்தியம்!
நாம் இன்று தெருவில் இறங்காவிடில் என்றுமே முடியாது என்பதை உணருங்கள்!
No comments:
Post a Comment