ஐரோப்பா முழுதும் தேசிய இனங்களுக்கான சம உரிமை கேள்விக்குறி ஆகியுள்ளதாகவே சர்வதேச அளவில் பார்க்கப் படுகின்றது!
EU வின் வெளியே-வும் சரி உள்ளேவும் சரி தேசிய இனங்களுக்கான சுய நிர்ணய உரிமை கோரிக்கை குறித்தான அழுத்தம் இனி எந்த காலத்திலும் காலணி ஆதிக்கங்களால் அடக்கி விட முடியாத ஒன்றாகவே மாறியுள்ளதாக ஊடகவியலாளர்கள் மேற்கோள் காட்டுகின்றனர்!
இத்தனை ஆண்டுகள் ஐரோப்பிய காலணி ஆதிக்கம் எந்த அளவு தேசிய இனங்களை நசுக்கி வைத்துள்ளது என்பதை ஒவ்வொரு தேசிய இன மக்களும் அறியத் துவங்கி விட்டனர்!
தங்களின் புதைக்கப் பட்ட திரிக்கப்பட்ட வரலற்றை மக்களே தேடித் தேடி மீண்டும் வெளிக் கொணர துவங்கி விட்டனர்!
ஐரோப்பிய கூட்டமைப்பு உலகின் அமைதியன ஓர் கூட்டமைப்பு என்ற பெயரையே ஸ்பெயின் உடைத்து விட்டதாக அனைவரும் கருதுகின்றனர்!
கடந்த அக். 1 அன்று கட்டலோனிய பாராளுமன்றம் அறிவித்த பொதுவாக்கெடுப்பை சீர் குழைக்க ஸ்பெயின் அரசு செய்த வேலைகள் அனைத்தையும் உலகமே பார்த்து கோபத்தை கொப்பளித்ததை யாருமே மறுக்க முடியாது!
இவர்கள் நடத்திய வன்முறையால் 42.3% மக்களால் மட்டுமே வாக்களிக்க முடிந்தது என்பது குறிப்பிட தக்கது! அதிலும் பல அடிகளும், காயங்களையும் பொறுத்துக் கொண்டே மக்கள் இதனை நடத்தி முடித்தனர்! 91 % வாக்குகள் கட்டலோனியாவுக்கு ஆதரவாகவே விழுந்தது குறிப்பிட தக்கது!
இதில், கட்டலோனிய தனி நாட்டு தேவையை மக்கள் உலகிற்கு உணர்த்தி விட்டதாகவே தெரிகின்றது! மேலும், ஸ்பெயினின் கோர முகத்தையும் பிற்ப்போக்குத் தனமான காலணி ஆதிக்க மனநிலையையும் நமக்கு தோலுரித்துக் காட்டும் ஓர் வாய்ப்பாக இது அமைந்து விட்டது!
இன்றைய ஐரோப்பிய யூனியனின் தேவை என்பது ஒவ்வொரு தேசிய இனத்திற்குமான உரிமையை தூசி தட்டி புதுப்பிப்பதும் அவர்களுக்கான உரிமையை வழங்குவதுமே சரியாக இருக்கும்!
கட்டலோனிய மக்களை SDR (Self Determination Rights) சுய நிர்ணய உரிமை சட்டத்தை நோக்கி தள்ளியதற்கு அவர்களின் மொழி மீதான தாக்குதல் தான் முதல் காரணம்!
அதே நிலைமையை தான் இந்தியா நமக்கும் உருவாக்கி வருகின்றது என்பதே யதார்த்தம்!
கட்டலோனிய சுதந்திர தாகம் உருவானது இன்று நேற்றல்ல, Francisco Franco's ன் சர்வாதிகார ஆட்சி காலத்தில் ' (1936 - 1975) கட்டோலன் மொழி முழுமையாக முடக்கப் பட்டு, ஸ்பானிஷ் மட்டுமே முன்னிருத்தப் பட்டது!
அப்போதே விடுதலை வேட்கயை கட்டலோனிய மக்களின் மனது நாட துவங்கி விட்டது என்கிறானர் வரலாற்று ஆசிரியர்கள்!
அன்றைய தினம், கட்டலோன் மொழியில் பெயரை கூட தடுத்து நிறுத்திய காரணம் தன் மக்கள் தங்களின் உரிமையை தூக்கி பிடிக்கவும் முந்தைய கட்டலோனிய வரலாற்றை தேடி மீண்டும் புத்துயிர் கொடுக்கவூம் காரணமாக இருந்தது!
எத்தனை அடக்குமுறையிலும் அம் மக்கள் ஸ்பானிஷை உள்ளே நுழையவே விடக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தனர்!
தங்களின் மொழி உரிமையை, மொழி பெருமையை குழந்தைகளுக்கு ஊட்ட துவங்கினர்! இலக்கியங்களும், காவியங்ளும் தங்கள் மொழியிலேயே கொண்டு வரத் துவங்கினர்!
இதோடு நம் ஹிந்தி எதிர்ப்பு போராட்ட காலத்தை ஒப்பீடு செய்து கொள்ளலாம்! அதே 1960, 70 மொழிப் போர் தீவிரமாக தமிழகத்தில் கனற்று கொண்டிருந்த சமயம் அது! (என்ன ஓர் ஒற்றுமை பாருங்கள் உலகின் தெற்காசியாவில் நடந்த அதே புரட்சி, வட மேற்குலம் ஒன்றிலும் துவங்கி இருக்கிறது)
இதில் கவனிக்க வேண்டிய ஒன்று, Francisco வின் ஸ்பெயின் முழுதுமான பாசிச அடக்கு முறையில் மொழி திணிப்பு இருந்தாலும் ஷ்பானிய மொழியை முற்றிலும் தவிர்த்தும் கூட மற்ற மாகாணங்களை விடை "Catalonia "மாபெரும் பொருளாதார வளர்ச்சியை பெற்றது என்பதை இப்போது வரை ஒட்டு மொத்த Europe ம் ஆச்சரியம் விலகாமல் சொல்கிறது!
இதையே தான் மே பதினேழு இயக்கம் தொடர்ந்து, தேசிய இன மொழி, கலாச்சாரம் இணைந்த "சுய சார்பு / தற் சார்பு பொருளாதாரம் வேண்டும் என்கிறோம்!
இது கட்டலோனிய மக்களின் விடா முயற்சியினாலேயே நிகழ்ந்து உள்ளதாகவே Spain னே ஒத்துக்கொள்ளும்!
தங்களின் கனிம வளங்களை மற்ற யாருடனும் பகிர்ந்து கொள்ள கூடாது என்பதில் மிகவும் தெளிவாக இருந்தனர் ! முக்கியமாக Spain உடன் தங்கள் உரிமையை பகிர்வது இல்லை என்பதில் தெளிவாக இருந்தனர்,இருக்கின்றனர் இப்போதும்! இதுவே தனித்த தேசிய உணர்வின் முதல் வெளிப்பாடு என்றே பார்க்கப் படுகிறது ! Catalonia பிரிந்து போனால் அதன் மூலம் மிகப் பெரிய இழப்பு Spain -க்கு தான் என்பதை நன்றாகவே உணர்ந்து உள்ளது Spain . ஐரோப்பியாவுக்கும் தான் என்பதை EU கூட்டமைப்பு உணர்ந்து உள்ளது ! அதனால் தான் போது வாக்கெடுப்பின் போது ஐரோப்பாவும் Spain நடத்திய வெறி ஆட்டங்களை கண்டு கொள்ளவில்லை என்பதை உணரலாம்!
அதே நிலையை தான் நாம் இங்கே சந்திக்கிறோம்.
இந்தியா தமிழ்நாடு பிரிந்து போக கூடாது என்று சொன்னால் அது பாசத்தில் இல்லை பணத்துக்கத்தான் என்பதை ஒரே வரியில் புரிந்து கொள்ளுங்கள்!
Catalonia-வை எதிர்ப்பவர்கள் வைக்கும் ஒரே குற்றச்சாட்டு .; இது சட்டத்திற்கு புறம்பான பொது வாக்கெடுப்பு என குறை கூறுவது தான் ! Spain அரசு நடத்தவில்லை பிராந்திய அரசு தான் நடத்தியது போன்ற உளறல்கள் தான் அதிகம்!
இந்த உளறல்களுக்கு காரணம் , வலது சாரி நாடான England ல் அரசே போது வாக்கெடுப்பை நிகழ்த்தியதையே Bench Mark என நினைத்து கொண்டதால் வந்து அறிவிளித் தன்மை !
இதை கவனித்து வரும் நடுநிலையான சர்வதேச அரசியல் விமர்சகர்கள் , Spain இதில் நீதி , நேர்மையை கடைப்பிடிக்கும் என நம்பினால் முட்டாள்த்தனமானது என்கின்றனர்.
ஓர் தேசிய இன மக்களின் உரிமை என்பது அரசோ,நாடோ வெகுமதி அல்ல நினைக்கும் போது கொடுக்கவும் வேண்டாம் என்றால் எடுக்கவும் !
அது உலகம் முழுதும் தனி மனித சுதந்திர உரிமை அதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும் அரசுகள் அல்ல !
ஒபாம வே வந்து இங்கிலாந்து EU -விலிருந்து பிரிய கூடாது என நேரடியாக சொல்லி விட்டு சென்ற பின்னரும் பிரிட்டன் அரசு வாக்களித்த மக்களின் உணர்வுக்கு மதிப்பு அளித்தது உடனடியாக பிரிந்து போகும் வேலையை துவங்கியது!
மாறாக பாராளுமன்றத்தில் மறு பரிசீலனைக்கு செல்ல வில்லை!
அந்த அடிப்படை அறிவு கூட ஸ்பெயினுக்கு இல்லை என்பதே கசப்பான உண்மை!
1 ம் தேதி வாக்கெடுப்பு நடந்து முடிந்திருந்தாலும் கட்டலோனியா முழுமைக்கும் இப்போதும் போராட்டங்களும், பேரணிகளும் தொடர்ந்த வண்ணமே உள்ளது! கட்டலோனிய பாராளுமன்றம் சுதந்திர நாடு என்பதை அங்கீகரத்து விட்டாலும், ஸ்பெயின் -ன் ஒப்புமை பெறும் வரை அலுவல் ரீதியாக தனி நாடு குறித்தான வேலைகளை நிறுத்தி வைத்திருக்கிறார் கட்டலோன் அதிபர் "கார்ல்ஸ் புஜிமெண்ட் ".
ஆனால், ஸ்பெயின் மாகாண அரசையே Article 151 (Constitutional of Spain) யை பயன் படுத்தி கலைத்து விடுவோம் என மிரட்டுகிறார் Prime Minister "மரியானோ ரஜோய் ".
இதில் நாம் கற்றுக்கொள்ள வேண்டியது :-
1. தற்சார்பு பொருளாதாரம்
2. தேசிய இன பண்பாட்டோடு இந்திய பண்பாடு கலப்பதை தடுத்தல்!
3. நம் கனிம / இயற்கை வளங்களை இந்தியா எடுப்பதை முற்றிலுமாக நிறுத்துவது!
4. தாய் மொழி வழிக் கல்வி!
5. அந்நிய (இந்திய) கலாச்சாரத்தை முற்றிலுமாக தடை செய்தல்!
இந்தியா உணர்ந்து கொள்ள வேண்டியது!;-
1.ஸ்பெயினை விட இந்தியா என்பது மிகவும் வயது குறைந்த தேசிய இனங்களின் கூட்டமைப்பே!
2. தேசிய இனங்களின் மீது நடக்கும் தாக்குதல் தனிநாட்டு கோரிக்கையையே வலுப்பெற செய்யும் என்பது!