மோடியை எதிர்த்து பேசினாலோ கேள்வி கேட்டாலோ தேச துரோகியாம்!
யார்றா சொல்றதுன்னு பார்த்தா விவசாயத்தை வருங்காலத்துல துண்டு துண்டா நாசம் பண்ண கூடிய WTO வின் Trade Facilitation Agreement ல கையெழுத்து போட்ட நிர்மலா சீதாராமன் தான்.
World Trade Organization - இது மேற்குலக நாடுகளால் வர்த்தகம் உலகம் முழுதும் சீராக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் துவங்கப் பட்ட ஓர் அமைப்பே WTO.! - இவ்வாறு சொல்லப் படுவது மட்டுமே! உண்மையில் அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற வல்லாதிக்க நாடுகளின் வர்த்தகத்தை வலுப் படுத்த கீழ்த்திசை நாடுகளை சுரண்டுவதும் கொள்ளை அடிப்பதுமே இவர்களின் முதற் குறிக்கோள்!
அவ்வகையில் 1991 -ல் இந்தியாவிற்குள் அந்நிய முதலீடு உட்புகுத்தப் பட்டது குறிப்பிட தக்கது!
துவக்கத்தில், IT மற்றும் Motor துறையில் நுழைந்தவர்கள், குளிர்பானம், உணவு, உடை, அத்தியாவசிய பொருட்கள் என Toothpaste முதல் கால் செருப்பு வரை அந்நியச்செலாவணி முதலீடுகள் புகுத்தப் பட்டது!
அவர்களால் தொட முடியாத ஓர் விடயம் விவசாயம்! காரணம், நாட்டின் 75% கிராமங்களும் அதன் சார்ந்த விவசாய உற்பத்தியும் தான்!
அதில் கை வைக்கும் வேலையாக 2001 ல் கொண்டு வரப் பட்ட ஒன்று தான் DDA -Dhoa Development Agreement.!
அதில் அவர்கள் கொண்டு வந்த நிபந்தனைகள் :-
1.விவசாயத்தில் 100% அந்நிய முதலீட்டை அனுமதித்தல்.
2.விவசாயிகளுக்கு அளிக்கும் மானியத்தை நிறுத்த வேண்டும்!
3.தாங்கள் கொண்டு வரும் அல்லது இறக்குமதி செய்யும் அந்நிய பொருட்களுக்கான விலையை தாங்களே நிர்ணயம் செய்து கொள்ளும் உரிமை வேண்டும்!
4. விவசாயிகளுக்கு மானியம் கொடுத்தே ஆக வேண்டும் எனில், ரேசன் -ல் கொடுக்கும் அரிசி, மண்ணெண்ணெய், பருப்பு க்கு பதிலாக அதை பணமாக வழங்க வேண்டும்!
5.முக்கியமாக உணவை சேமிக்கும் கிடங்குகளை மூட வேண்டும்!
இதையெல்லாம் ஏற்றுக் கொண்டால், உங்களுக்கு நீங்கள் உலக நாடுகளுக்கு செய்யும் ஏற்றுமதியில் சில வரி விலக்குகள் அளிப்போம்!
இது தான் ஒட்டு மொத்த ஒப்பந்தத்தின் எளிமையாக புரிந்து கொள்ள கூடிய சாராம்சம்!
2001 -ல் இது கொண்டு வரப் பட்ட போது பல நாடுகளின் எதிர்ப்பை இது சம்பாதித்தது!
எனவே சில பெயர் மாற்றங்களோடு 2004-ல் Bali ஒப்பந்தம் என கொண்டு வந்தனர். ஆனால் அதே நிபந்தனைகளோடு ……!
அதுவரை பல நாடுகளின் முன்னேற்ற பணிகளுக்கு முட்டுக்கட்டை போட்டு வந்த வல்லாதிக்க நாடுகள்! சரி தொலையட்டும் என மன் மோகன் ஆட்சிக்கு வந்ததும், அவரை மிகப் பெரிய பொருளாதார நிபுணர் என நம்பி 161 நாடுகள் மேற்கண்ட Bali ஒப்பந்தத்தின் மேல் முடிவு எடுக்கும் உரிமையை இந்தியாவிடம் வழங்கியது!
இதெயெல்லாம் முழுதாக தெரிந்து கொண்ட மன் மோகன், இச் சட்டம் வந்தால் விவசாயிகளிடம் பெரிய வெறுப்பை சம்பாதிக்க நேரும் என பயந்து மெல்ல மெல்ல நாட்களை நகர்த்தினார் அதற்கு மாற்றாக, பல SEZ (சிறப்பு பொருளாதார மண்டலம்) FDI ல் அதிக முதலீடு என பல கதவுகளையும் திறந்து விட்டு மேற்குலகை சமாளித்து வந்தார்!
ஒப்பந்தமும் பெயர் மாறி மாறி, TFA -Trade Facilitation Agreement என வந்து நின்றது!
மன் மோகன் தன் ஆட்சி முடியும் 10 வது வருட தருவாயில் ஓர் முறை 'விவசாயிகள் வேளாண்மையை விட்டு வெளியேறுங்கள் ' என சொன்னது ஞாபகம் இருக்கிறதா?? ? அது இதை மனதில் வைத்து தான்!
2014 -ல் பாஜக ஆட்சிக்கு வந்தது!
நிர்மலா சீதாராமன் வணிகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் ஆனார், .
இந்த ஒப்பந்தம் குறித்து விவாதம் வந்த போது பாராளுமன்றத்தில், WTO வில் Trade Facilitation Agreement ல் இந்தியா கையொப்பம் இடாது! அதற்கு முன் ஏற்றுமதியில் நமக்கான சலுகையை பெற்று விட்டு மேலும், ஒப்பந்தத்தில் சில நமக்கு பாதகம் வராத மாற்றங்களை செய்வோம் என அழுத்தமாக பேசிவிடுகிறார். இது 2014 ஆகஸ்ட்ல்!
அதற்கு அடுத்த வாரமே மோடி க்கு ஒபாமாவிடம் இருந்து அழைப்பு வருகிறது அமெரிக்கா வரச் சொல்லி!
அடுத்த சில நாட்களிலேயே என்ன மாயம் நடந்ததோ சத்தமே இல்லாமல் ஜெனீவா வில் வைத்து இந்தியா TFA - Food Facilitated Agenda வில் கையொப்பம் இட்டது !
அதற்கு மறுநாள் WTO வின் Director General அமெரிக்க - இந்தியா இடையே கையொப்பமான Bali ஒப்பந்தம் மகிழ்ச்சி அளிக்கிறது என அறிக்கை வெளியிட்டார்!
அதன் பிறகு தான் இதன் விடயமே வெளி உலகுக்கு தெரிய வந்தது
இந்த ஒப்பந்தத்தில் இந்தியா முடிவு எடுக்க ஒரு மனதாக அனுமதி அளித்த நாடுகளான சீனா, பிரேசில், அர்ஜெண்டினா போன்ற வற்றிடம் எதை பற்றியுமே கலந்தாலோசிக்காமல் ஜெனீவா வில் வைத்து கையொப்பம் இடுகிறார் நம் போன்ற எளியோரின் துரோகியான நிர்மலா சீதாராமன்! எப்போதூமே மோடி No.1 டுபாகூர், ஆனால் இந்த விடயத்தில் இவர் தான் No.1 டுபாகூர் மோடியே அடுத்து தான்!
இதெல்லாம் நடந்து முடிந்தது பலருக்கு தெரியவே இல்லை! நமக்கு இதன் முழு விபரம் தெரிய வந்ததே 2016 மே மாதத்தில் தான்!
இதனை விளக்கமாக மக்களிடம் எடுத்து செல்ல வேண்டும் என மே 17 இயக்கம் சார்பில், செய்தியாளர்கள் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்யப் பட்டது! அதில் தெளிவாக தோழர்கள் பிரச்சனையை புரியும் படி கூறி ஊடகங்கள் மக்களிடம் இதை கொண்டு செல்ல வேண்டும் என கோரிக்கை வைத்தோம்!
ஆனால், அது தேர்தல் காலம் என்பதால் பெரிதாக கண்டு கொள்ளப் பட வில்லை!
தோழர்கள் விடாமல், பிரச்சனையின் தீவிரம் கருதி இரண்டாம் முறையும் செய்தியாளர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்தோம்!
அது நடந்து முடியவும் அதற்கு மறு நாள் வள்ளுவர் கோட்டத்தில் ஆர்பாட்டமும் அறிவித்து இருந்தோம்!
அதற்குள் தோழர்கள் ரேசன் கடை மூடப் படப் போகிறது என பேட்டி அளித்த காணொளி தமிழகத்தை விட வட இந்தியாவில் பெரிய தாக்கத்தை இரண்டே நாட்களில் அது ஏற்படுத்த ……… !
அலறி அடித்துக் கொண்டு, மே 17 இயக்கம் தவறான தகவலை மக்களிடம் பரப்புகிறது அதை யாரும் நம்ப வேண்டாம் என கடிதம் வெளியிட்டார் நிர்மலா. ! அதை அன்று மாலையே தமிழில் மொழி பெயர்த்து பாஜக வின் எஸ்.ஆர். சேகர் வெளியிட்டார் !
இவையனைத்தும் நாம் ஆர்ப்பாட்டம் நடத்தும் முதல் நாள் அவசர அசரமாக இந்திய அரசால் செய்யப் பட்டது! காரணம், நாட்டிலேயே முதன் முறையாக நாம் தான் இந்த பிரச்சனையை வெளியே கொண்டு வந்தோம்!
அன்று மாலையே என் inbox யை முற்றுகை இட்ட பாஜக பாய்ஸ் எல்லாம் இங்க தான் சுத்தி கிட்டு இருக்குதுங்க!
ஒரு பாஜக நண்பர் அப்படி ஏதும் மேற்கண்ட சம்பவம் நடந்தால் பாஜக வை விட்டு மே 17 ல் வந்து சேர்ந்து விடுகிறேன் என சவால் எல்லாம் விட்டார்!
இன்னும் சில comedy எல்லாம் வேற நடந்துச்சு!
இதுல May 17 - முகநூல் பக்கத்துல, பூட்டின வீட்டுகுள்ள உட்கார்ந்து sound குடுக்குற ஜந்து ஒன்னு Twitter ல நிர்மலா சீதாராமன் கிட்ட மே 17 இயக்கம் மன்னிப்பு கேட்கனும்ன்னு எல்லாம் சொல்லுச்சி !
" பன்னி குட்டி எல்லாம் பஞ்ச் டயலாக் பேசுற கொடுமையை " நேர்ல அப்போ தான் பார்த்தேன்!
அடுத்த சில நாட்கள்லயே நிர்மலா சீதாராமன் பண்ண பித்தலாட்டங்களை எல்லாம் ஆதாரத்தோட வைச்சி அவங்களுக்கே கடிதம் எழுதினோம்! அதுக்கு இப்போ வரை பதில் இல்லை!
( தொடர்ந்து படிக்கும் முன் மேலே உள்ள 5 ஒப்பந்த நிபந்தனைகளையும் ஒருமுறை படித்து விடுங்கள் ! அப்போது தான் பாஜக எவ்வளவு பெரிய தேச துரோகி என்பதை நீங்கள் உணர்வது எளிதாகும்)
அதன் பிறகு நடந்த சில சிறு சிறு விடயங்களை கவனிக்க பலர் தவறி விட்டோம்!
1. ஹரியானா, ஜார்கண்ட் மாநிலங்களில் 5 மாவட்டங்களில் மண்ணெண்னை விநியோகத்தை நிறுத்தி அதற்கு பதிலாக பணமாக கொடுப்போம் நீங்களே வெளியில் வாங்கி கொள்ளலாம்! என ஜெட்லி கடந்த செப் - அக்டோபர் ல் அறிவித்தார்! ( கெரசின் விலையை நிர்ணயிக்கும் உரிமை தனியாருக்கு)
2.அனைவரும் வங்கி கணக்கும், ஆதார் அட்டையும் வைத்திருக்க வற்புறுத்தப் பட்டனர். ( இதன் மூலம் உங்களுக்கான ரேசன் செலவை பணமாக செலுத்தி விடுவார்கள்,! நீங்கள் பொருளை தனியாரிடம் அவன் சொல்லும் விளைக்கு வாங்கும் நிலைக்கு தள்ளப் படுவீர் .!
3. De monitaization சமயம் ஓர் நாள் திடீரென ஓர் பரபரப்பு அதை பற்றி அன்று நாம் வெளியிட்ட பதிவில் தெளிவாக தோழர்கள் கூறியிருந்தனர் அது அப்படியே இங்கே : -
இன்று (29 -11-2016) பல ஊர்களில் ஊராட்சி மன்ற அலுவலகங்களிலும், ரேசன் கடைகளிலும் இந்த விண்ணப்பப் படிவத்தினை மக்களுக்கு அரசு அலுவலர்கள் வழங்கி வருகிறார்கள். இந்த படிவத்தை நிரப்பிக் கொடுத்தால் 10000 ரூபாய் உங்கள் Account க்கு கொடுப்போம் என்று வதந்திகளை பரப்பி விட்டு ஏமாற்றி மக்களை கூட்டம் கூட்டமாக வரிசையில் நிறுத்தி வைத்திருக்கிறார்கள்.
எதற்காக இந்த படிவம் கொடுக்கப்படுகிறது என்பது கூட தெரியாமல் தங்கள் ஆதார் அட்டைகளை Xerox எடுக்க மக்கள் ஓடிக் கொண்டிருக்கிறார்கள்.
அனைத்து ஆதார் கார்டு எண்களையும் வங்கிக் கணக்கோடு இணைக்கும் வேலைகளில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த படிவத்தில் Bullet Mark ல் இருக்கிற இரண்டாவது Point ன் படி,
"Have the Aadhar Number mapped with my bank account at NPCI to enable me to Receieve Direct Benefit Transfer from Govt Of India/ State Government through my account subject to eligibility."
அதாவது Direct Benefit Transfer ன் மூலமாக இந்திய அரசு/மாநில அரசு பணத்தை நேரடியாக என் வங்கிக் கணக்கில் அளிக்குமாறு கோரி மக்களே எழுதிக் கொடுப்பது.
இந்தியா போன்ற ஏழை நாடுகளில் மக்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள், எரி பொருட்கள் போன்றவற்றை அரசு கொள்முதல் செய்து மக்களுக்கு மானிய விலையில் வழங்கி வருகிறது. இந்தியாவின் ஏராளமான மக்களை பசியிலிருந்து காத்து வருவது நியாய விலைக் கடைகள்தான்.
Direct Benefit Transfer என்பது ரேசன் கடையில் வழங்கப்படும் அந்த நியாய விலைப் பொருட்களை நிறுத்தி விட்டு, அந்த பொருட்களுக்கான மானியத்தை உங்களுடைய வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்துகிறோம். பொருட்களை நீங்கள் வெளிச் சந்தையில் முழு விலை கொடுத்து வாங்கிக் கொள்ளுங்கள் என்பது.
இன்னும் சில காலத்தில் அரசு நியாயவிலைக் கடைகளில் மக்களுக்கு எந்த பொருளையும் வழங்காது. நம்மிடமிருந்து நாம் பயன்படுத்துகிற அனைத்துப் பொருட்களுக்கும் வரியைப் பிடுங்கிற அரசு, இந்த அடிப்படைத் தேவைகளை மக்களுக்கு வழங்கியாக வேண்டும் என்பது நமது உரிமை. நமது உரிமையை சலுகையாக பார்க்கிற மனநிலைக்கு அரசு நம்மை தள்ளியுள்ளது.
இத்தனை பொய் பித்தலாட்டங்களையும் நாம் வெளி கொணர்ந்த காரணத்தால் தான், இந்திய அயோக்கிய அரசின் முகமூடியை சமரசமின்றி அவ்வப்போது நாம் கிழித்து தொங்க விடுவதால் தான் மே 17 இயகத்தின் மீது சமூக விரோதிகள் எனவும் மெரினா போராட்டத்தில் பிரிவினை வாதம் பேசினோம் எனவும் வழக்கு போடுவதாக கூவிக் கொண்டு இருக்கிறா ர்கள் அரை வேக்காட்டு RSS கள்!
அப்போ சொன்னது தான் இப்போதும், எத்தனை தடைகள் வந்தாலும் மே 17 இயக்கம் அதை உடைத் தெறிந்து முன்னேறும்!