சென்ற வருடம் 2016 மே 18 ம் தேதி நான் எழுதியது!
ஈழ படுகொலைக்கு பின்னர் அதன் அரசியலை கொண்டு துவங்கப் பட்ட கட்சி நாம் தமிழர்.
1. இதுவரை நாம் தமிழர் கட்சி ஈழ விடுதலைக்காக சர்வதேச கவனத்தை ஈர்க்க நடத்திய போராட்டங்கள் எத்தனை???
2. அமெரிக்கா வும், ஐ.நா வும் இனப்படுகொலை க்கு துணை நின்றது என்று ஆதாரத்துடன் நாங்கள் அம்பலப் படுத்தியும் எனக்கு தெரிந்து ஓர் சிறு போராட்டம் கூட நடத்தியது இல்லை அக் கட்சி!
3. March 2013 ல் தமிழக மாணவர்கள் ஒன்றிணைந்து அமெரிக்க தீர்மானத்தை எதிர்த்து தெருவில் இறங்கிய போது, அதே தீர்மானத்தை ஆதரித்து இரண்டு ஆர்பாட்டங்களை நடத்தி முடித்து இருந்தது நாம் தமிழர் கட்சி!
அதன் பின் மாணவர்களின் எழுச்சிக்கு பின் தெற்காசியாவுக்கான அமெரிக்க அமைச்சர் ராபர்ட் பிளேக் "இந்த தீர்மானம் இந்தியா சொல்லி தான் கொண்டு வந்தோம் " எனவே எங்கள் மேல் மாணவர்கள் கோபம் கொள்ள வேண்டாம் எனவும்.
இத் தீர்மானத்தில் திருத்தம் செய்து மீண்டும் சமர்பிக்கிறோம் எனவும் அறிவித்தார்.
இப்போ சொல்லுங்கள் ஈழத்தில் கொலை செய்யப் பட்டவன் பெயரை வைத்து கட்சி துவங்கி விட்டு அவனுக்கே துரோகம் செய்வது யார்??
4. LYCA வை உள்ளே விட்டது :-
2006 ஏப்ரலில் ல் EU நாடுகளில் புலிகள் அமைப்பு தடை செய்யப் படுகிறது. அதே ஆண்டு அக்டோபர் -06 ல் Lyca வுக்கு இங்கிலாந்தில் தொழில் தொடங்க அரசு அனுமதி அளிக்கிறது!
சீமான் சொல்வது போல் அது, புலி ஆதரவு நிறுவனமாக இருப்பின் இங்கிலாந்து எப்படி தொழில் துவங்க அனுமதி தரும்!??
5. விடுதலை புலிகள் மேல் சர்வதேசம் வைக்கும் முதற் குற்றச்சாட்டே குழந்தை போராளிகளை பயன் படுத்தினர் என்பது தன்.
அதை ஆமோதிக்கும் வண்ணம் எடுக்கப் பட்ட புலி பார்வை படத்தின் வெளியீட்டு விழாவில் முதல் ஆளாக அமர்ந்தது "புலிகள் பெயரையும் பிரபாகரன் படத்தையும் " வைத்து கட்சி நடத்தும் சீமான். இதற்க்கு பெயர் துரோகம் அல்லாமல் வேறென்ன,?????
6.அவ்வளவு ஏன்,
2015 செப் 28 அன்று அமெரிக்கா ஈழத்திற்க்கு எதிராக தீர்மானம் கொண்டு வருகிறது என கூறி அமெரிக்க தூதரக முற்றுகையை நாங்கள் நடத்தினோம்.
நான் தனிப் பட்ட முறையில் பல நாம் தமிழர் தோழர்களிடம் பேசி போராட்டத்தை முன்னெடுக்க வேண்டினேன். தோழர். @மாணிக்கவாசகம் சீனி. மட்டுமே தீர்மானத்தை எதிர்த்து எழுதி இருந்தார். வேறு ஒன்றும் நடக்கவில்லை!
நாங்கள் முற்றுகை நடத்திய மறு நாள் கோவை யில் ஓர் நாம் தமிழர் தோழர் அமெரிக்காவை எதிர்த்து அந் நாட்டு கொடியை எரித்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்.
அதற்க்கு மறு நாளை போராட்டத்தை தொடர வேண்டாம் என கூறி கட்சி தலைமை அவரை கண்டித்ததை அறிவீர்களா??!?
7.நாங்கள் இந்தியாவையோ, அமெரிக்காவையோ எதிர்த்து எந்த செயற்பாட்டை மக்களிடம் கொண்டு செல்லும் போதெல்லாம் மக்களை திசை திருப்பவும் பிரபாகரன் மீது மற்றவர்களுக்கு கோபத்தை உண்டு பண்ணவும் அனைத்து வேலைகளையும் செய்கிறார்கள்.
அ) . திராவிடம் தமிழனை வஞ்சித்து விட்டது எனக் கூறி ஈழ விடுதலை போராட்டத்தில் தீவிரமாக இருக்கும் பெரியாரிய தோழர்களை வசை பாடுவது.
ஆ) . தெலுங்கு பேசுபவர்கள் தமிழர்கள் அல்ல எனக் கூறி விடுதலை புலிகளுக்கு ஆதரவாக பேசி பல - நாட்கள் சிறையில் இருந்த வைகோ, கொளத்தூர் மணி, கோவை.ராமகிருஷ்ணன் போன்ற தலைவர்களை தவறாக சித்தரிப்பது!
இ.) சரி இவை கூட பரவாயில்லை, "கண்டி நாயக்கர் " என ஆவணப் படம் எடுத்து சிங்களவன் நல்லவன் தமிழனை கொன்றது தெலுங்கன் என பச்சை பொய்யை சொல்லியதை எள் அளவும் ஏற்க முடியாது, .
கடைசியாக நாம் தமிழர் கட்சியில் இருந்து வெளியேறிய பல தெலுங்கு பேசும் தோழர்களை பற்றியாவது உங்களுக்கு தெரியுமா,???
உருது பேசுபவன் தமிழன் இல்லை என்பதெல்லாம் எந்த வகை அரசியல்???
தமிழனை சாதி, மதமாக துண்டு துண்டாக உடைக்கும் இவரா ஈழ விடுதலையை வாங்கி தருவார்???
No comments:
Post a Comment