Tuesday, 14 February 2017

Tamils_vs_Hinduthuva 14-2-17

Is that end of Diravidan Legacy - இது தான் வட இந்திய ஊடகங்களால் வலுகட்டாயமாக திணிக்கப் பட்ட விவாதம் ஜெ. இறந்த அன்று!

பார்ப்பனியமும் ஆரியமும்  எப்போது நாம் சிறிது அசறுவோம் என்றே பார்த்துக் கொண்டிருக்கிறது நம்மை வீழ்த்த!   அது,   இன்று வரை சாத்தியப் பட வில்லை அவர்களால் இதோ இன்றைய சசிகலா சிறைச்சாலை செல்லும் போதும் கூட!

  காரணம் திராவிடம் என்பது பதவி சுகத்தை அனுவிக்க உருவாக்கப் படவில்லை!  ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் தமிழனின் தனித்துவம் ஆரிய அடிமைத்தனத்தில் இருந்து விலகியே இருக்க வேண்டும் என்பதே!

     அதில் முரண் பட்டு தேர்தலில் நுழைந்தவர்கள் தான் திமுக அதன் கிளைகளாக அதிமுக, மதிமுக! 

இவர்கள் இன்னும் ஐந்தோ - பத்தோ வருடங்கள் இருக்கலாம் அல்லது மறைந்து போகலாம்!

ஆனால், திராவிட சித்தாந்தம் மறையாது!
ஆரியம் ஒழிந்தால் தான் திராவிடத்தின் தேவை குறையும்!

   எத்தனை இந்திய கை கூலிகள் பெரியாரை வசை பாடினாலும், சிதைத்தாலும் மீண்டும் மீண்டும் அவரின் சித்தாத்தங்களும் வழிகாட்டுதல்களுமே திமிறாக நிமிர்ந்து நிற்கிறது!

    ஜெ. செத்தாச்சு, சசி ஜெயிலுக்கு போயாச்சு 10 வருசத்துல ஸ்டாலின் ரிடையர்டு ஆகிடுவாறு என்று எல்லாம் சில கட்டுரைகளை பார்க்க நேர்ந்தது!  உண்மையில் எனக்கு சிரிப்பு தான் வந்தது!

  இவர்கள் கூறுவது போல் கலைஞர் செத்தால் ஜெ. செத்தால் ஆரியம் தமிழகத்தின் உள்ளே வந்து விட முடியும் எனில், அவர்கள் பெரியார் செத்த போதே வந்திருக்க வேண்டும்! எம் ஜி ஆர் செத்த போதே இரண்டாம் இடத்தை பிடித்து இருக்க வேண்டும்!

    ஏன் சாத்தியம் ஆகவில்லை,???
காரணம் பெரியார் ஒவ்வொருவரையும் சிந்திக்க சொன்னார் . எதையும் கேள்விக்கு உட்படுத்து என்றார்!  நானே சொன்னாலும் நம்பாதே அதை ஆய்வுக்கு உட்படுத்து என்றார்!

இவர்களோ  தாங்கள் பேசுவதை கேட்டால் போதும் என்றார்கள்!  தங்களின் சொல் படி நடக்க சொன்னார்கள் . தலைவன் சொன்னால் எல்லாமே சரி என நம்பி ஆட்டு மந்தைகள் பின்னால் போனார்கள்! ஆள் மட்டுமே மாறியது அய்யா, அம்மா, அண்ணன், தளபதி என வேறு வேறு பெயரில்!  செயல் பாடு ஒன்றே!
இவர்கள் போனதும் அடுத்து மேடையில் பேச ஆள் தேடினார்கள் .! பதவியை பிடிக்கத்தான் சண்டை போட்டார்கள்!  இப்போதும் போட்டுக் கொண்டு கொள்ளையை காற்றில் விட்டார்கள்!

ஆனால், பெரியார் போன பின்னர் ஒவ்வொருவரும் அவரை பேசிக் கொண்டிருக்கிறோம்!  

ஓட்டுக் கட்சிகளும் ஓட்டு பொறுக்குபவர்களும் மறைந்து போகலாம்!
சித்தாந்தங்கள் என்றுமே மறையாது!

    பெரியாருக்கு பின் தலை எடுத்த தமிழ் தேசியத்தை நாம் இங்கே குறிப்பிட்டே ஆக வேண்டும்!

   தமிழரசனின் 'தமிழ்நாடு விடுதலை படை '! மறைமலை அடிகளாருக்கு பின் தமிழ் தேசியத்தை தீவிரமாக முன்னெடுத்தவர்களில் வரலாற்றில் மறக்க முடியாத மறைக்க முடியாத ஒருவர்!
     புலவர்.கலியபெருமாள், தோழர்.ஜெயக்குமார் போன்றவர்களை ஓர் தமிழ் தேசிய வாதியாக நாம் என்றுமே மறக்க இயலாதவர்கள்!

    அந்த தோழர்கள் ஆயுதம் தாங்கி நின்றதால்  நீண்ட காலம் நிலைக்க முடியாமல் போனது மிகப் பெரிய வருத்தம்! இந்தியத்தால் படுகொலை செய்யப் பட்டனர்!
   இதையே சித்தாந்தமாக மாற்றி மக்கள் இயக்கமாக நகர்த்தியிருந்தால் மிகப் பரவலாக தமிழ் தேசியம் இன்று நிறைந்திருக்கும்!

  

    சரி,
   இப்போது நாம் செய்ய வேண்டியது என்ன???

புள்ளை குட்டிகளை படிக்க வைங்கய்யா ………!

   உண்மையிலேயே தான் சொல்றேன் குழந்தைகளை பெரியாரையும், தமிழ் தேசியத்தையும் படிக்க வையுங்கள்!

(யாரும் பெரியாரை தானே தமிழ் தேசியம் எதிர்க்குதேன்னு கேட்டு வந்துடாதீங்க! 
எனக்கு பதில் சொல்ல எல்லாம் நேரம் இல்லை .
என்னை பொறுத்த வரை அவர்களும் மேற் சொன்ன பதவிக்கு அலையும் கூட்டங்களில் ஒன்று தான்)

  புள்ளை குட்டிகளை படிக்க வைங்க!
    அதைத் தான் இந்துத்துவா செய்து வருகிறது!

இந்தியம் எனும் பெயரில் இந்துத்துவா எனும் விசத்தை மெல்ல மெல்ல ஊட்டி பார்ப்பனிய கூட்டத்தை மட்டுமே இன்று intellectual என காட்டி நிறுத்தியிருக்கிறார்கள்! 

உ.தா : - பாண்டே, குருமூர்த்தி, பானு கோம்ஸ், சுமந்த்.சி. ராமன், பத்ரி , விஜய சங்கர்,  தி ஹிந்து ராம், என பலரும் உண்டு!  அங்கே,  அர்ணாப் கோஸ்வாமி, ராஜீவ் சுக்லா என நம்மை சுற்றி வலை பின்னப் பட்டே வந்துள்ளது!

       அதே செய்தியை உருவாக்க கூடிய தளத்தில் தமிழர்கள் எத்தனை பேர்  இருக்கிறார்களா என்றால்  
    திருமாவேலன், செந்தில் வேல், பனி மலர், ஜென் ராம்,  குணா என மிகவும் சொற்பமே கிடைக்கிறார்கள்!

இன்னும் நம்மை எதிர்த்து எழுதுவதை மட்டுமே வேலையாக கொண்ட சில பத்திரிகைகளை பார்ப்போம்!

   The Week

     Front line

      EPW

       THE Hindu

The Times of India.,

   

தமிழில்,

தினமலர்,  தினமணி   போன்ற நாளிதழ்கள்!

இவை மட்டுமா, 

காலச்சுவடு,  தீராநதி போன்ற பதிப்பகங்களும் தான்!

Engineer க்கும் Doctors க்கும் குழந்தைகளை படிக்க வைத்தது போதும்!

Visual Media, Journalism, Psychology, Law என அனைத்து துறையிலும் படர வைப்பது அவசியமாகிறது! 

     இன்றே ஆரிய பார்ப்பன குழு முடிவு செய்திருக்கும் நாம் செய்ய வேண்டும் என நாம் அவர்களை விட வேகமாக செயல் பட வேண்டிய அவசியத்தில் உள்ளோம்!

No comments:

Post a Comment