அரசுத் துறை
வங்கிகள் அனைத்தினையும் ஒன்றாக இணைக்க மத்திய அமைச்சரவைக்கு அழுத்தம் கொடுக்கப்
படுவதாக தகவல்கள் வருகின்றது!
இதன் மூலம்
பொருளாதாரம் உயரும் , எதிர்கால
வளர்ச்சிக்கு நல்லது போன்ற ஜால வார்த்தைகள் ஆங்கில பத்திரிக்கைகளை நிறைகின்றன !
இது எப்படி பட்ட
விளைவினை நம்மை போன்ற சாமானியர்களுக்கு உண்டாக்கும் என்பதை பார்க்கும் முன் ,
ஒரு இரண்டு
வருடம் முன்பு அதானி -க்கு SBI வங்கி
ஆஸ்திரேலியாவில் நிலக்கரி எடுக்கும் தொழில் செய்ய 6 ஆயிரம் கோடி கடன் கொடுத்ததையும் அது இன்னும்
சில மாதங்களில் SBI யினால் Short
Close செய்யப் பட போகின்றது
என்பதினையும் சில வாரங்கள் முன்பே ஆதாரங்களுடன் நாம் முன் வைத்திருந்தோம் !
அதிக
வைப்பு தொகையும் , கையிருப்பும்
கடைப்பிடிக்காத விழிம்பு நிலை வங்கிகள் அனைத்தையும் மூடும் வேலையை செய்ய துவங்கி
விட்டது இந்திய அரசு ! ( Non-performing assets ) NPA என்ற அடிப்படையில் கிரமப்புறங்களில் சேவை வழங்கி வரும் பல
வங்கிகளை ஒரே குடையின் கீழ் கொண்டு வர துடிக்கிறது WTO - தன் தற்போதைய
அடிமை பாஜக !
இவர்களின், ஒரே நோக்கம் உழைக்கும் மக்களின் கடைசி சேமிப்பை சிதைப்பதும் ..., தனியார் கார்பொரேட் நிறுவனங்களை ஊக்குவிப்பதும் தான்! சில வருடங்கள் முன்பே Reliance” வங்கி” தொடங்க RBI-யிடம் பேச்சு வார்த்தை நடத்தியது நினைவு இருக்கிறதா......... ?
இந்தியாவில் Allahabad Bank முதல் , Vijaya Bank வரை SBI தவிர்த்து 20 அரசுக்கு சொந்தமான வாங்கிகள் உள்ளன !
இவை அனைத்தையும் SBI ன் கீழ் இணைத்து விட்டால் இதில் கொடுக்கப் பட்ட கடன்களை பற்றிய விபரங்களையும்
மீழ் வசூலையும் ஒரே நேர்கோட்டில் கொண்டு வருவதற்கே பல வருடங்கள் ஆகிவிடும்!
இந்த அரசு
வங்கிகளில் கடன் வாங்கி விட்டு ஓடிய (இல்லை இல்லை பாஜக தப்ப வைத்த ) விஜய் மல்லையா மட்டுமே 6400 கோடி தர வேண்டியது உள்ளது ! ( Except Axis Bank & Other Banks 653Cr.)
விபரம் கீழே:-
According to reports, following is the list of 17 banks which
have paid nearly Rs.7,000 crore (excluding interest) to Mallya:-
Bank name
|
Amount
|
SBI
|
Rs.1,600 cr
|
PNB
|
Rs.800 cr
|
IDBI Bank
|
Rs.800 cr
|
Bank of India
|
Rs.650 cr
|
Bank of
Baroda
|
Rs.550 cr
|
United Bank
of India
|
Rs.430 cr
|
Central Bank
|
Rs.410 cr
|
UCO Bank
|
Rs.320cr
|
Corporation
Bank
|
Rs.310 cr
|
State Bank of
Mysore
|
Rs.150 cr
|
Indian
Overseas Bank
|
Rs.140 cr
|
Federal Bank
|
Rs.90 cr
|
Punjab &
Sind Bank
|
Rs.60 cr
|
Axis Bank
|
Rs.50 cr
|
Other banks
|
Rs.603cr
|
இந்த நிலையிலும்
இவர்கள் இதை நடத்தி முடிக்க வேண்டும் என நினைத்தால் , 1997-ல் வங்கி துறையில் நிகழ்ந்த Asian Economic Crisis யை நினைவு படுத்துவது அவசியமாகிறது !
அப்போது ஆசிய
நாடுகள் முழுதும் நிகழ்ந்த பொருளாதார நெருக்கடியை சமாளிக்க பல நாடுகளும்
தள்ளாடியது குறிப்பிட தக்கது அதன் விளைவாக சில நாடுகள் அனைத்து வங்கிகளையும் ஒரே
குடையின் கீழ் கொண்டு வந்தது! அதில் மலேசியா முக்கியமான ஓர் நாடு !
அப்போது கூட
இந்திய வங்கிகளை அந்த நெருக்கடி சிறிதும் சீண்ட வில்லை என்பது மிக முக்கியமாக நாம்
கவனிக்க வேண்டிய ஒன்று ! மாறாக தனியார் வங்கிகள்
துவங்குவதற்கும் அனுமதி அளிக்க துவங்கியது RBI .
வங்கிகளை
இணைத்ததால் நாம் சந்தித்த ஓர் பெரும் இழப்பு PNB என அழைக்கப்படும்
Punjab National Bank உடன் 1993 ல் New Bank of India என்ற வாங்கியுடன்
வலுக்கட்டாயமாக இணைத்தது RBI. அதற்கு சொல்லப் பட்டகாரணம்:- இவ் வங்கியின்
நிதி நிலை மிகவும் மோசமாகவும் பண வீக்கத்தை உண்டாக்கவும் செய்யும் என்பதால் வலுவான
நிதி நிலை கொண்ட PNB உடன் இணைக்கின்றோம் என்றது RBI.
ஆனால்,
இதன் விளைவு 1996 ல் PUNJAB NATIONAL BANK 96 கோடி இழப்பு என கணக்கு காட்டும் அளவுக்கு போனது !
இரண்டு வங்கிகளும் வழங்கிய கடன், Structure
Of functioning, Staff Co-operation என
பலவும் சேர்ந்து அடுத்த 5
வருடங்களுக்கு PNB யை
குறிப்பிட தக்கது !
SBI இதற்கு முன்பு இணைத்து கொண்ட வங்கிகளால் நேர்ந்த அவலங்களை நாம் இங்கே காண்பதும் அவசியம் :-
வங்கிகளில் 7 Sisters என குறிப்பிடப் படும் இந்திய சுதந்திரத்துக்கு முன்பு உருவாக்கப் பட்ட வங்கிகளை இணைத்து கொள்ளும் படி 1991 -ல் நரசிம்மன் குழு SBI க்கு அறிவுரை வழங்கியது !
அந்த வங்கிகள்
1. SBBJ - State Bank of Bekaner & Jaipur
2.Bank of Indor / State Bank Of Indore - இது 1920 ல் மஹாராஜா. Tukoji Rao Holkar வால் துவங்க பட்டது!
3.State Bank of Saurashtra - 1902 ல் பவன் நகர் வங்கி குழுமத்தால் துவங்கப் பட்டது!
4.State of Hyderabad Nizam's - 1941 ல் துவங்க பட்டது Hyderabad நிஜாம் அவர்களால்,,...
பின்னாளில் இதுவே State Bank of Hyderabad (SBH) .
இதே வரிசையில் பட்டியாலா , திருவான்கூர் , மைசூர் வங்கிகள் உட்பட.....
இவற்றிக்கு ஏற்கனவே 1963 முதலே SBI நிதி உதவி அளித்து வருவது குறிப்பிட தக்கது !
ஆயினும் , 2008 , 2010 என பொறுமையாகவே தன்னோடு இரு வங்கிகளை மட்டுமே இணைத்து கொண்டது SBI .
மேலும் அரசின் பல கட்ட அழுத்ததிற்கு பின்னரே 2016 ன் மத்திய அரசின் ஆணைப் படி 2017 - மார்ச்-ல் மீதி 5 வங்கிகளையும் தன்னோடு இணைத்து கொண்டது SBI .
ஏப்ரல் 2017 ல் SBI வெளியிட்ட ஆண்டு அறிக்கை எத்தனை பெரிய சுமையை இந்த கையால் ஆகாத அரசு தன் மேல் சுமத்தி உள்ளது என வெளிக்காட்டியது !
ஆதாரம் கீழே :-
இந்த அரசு செய்யும் பல முறைக்கேடுகளில் இது மிக முக்கியமாக நாட்டை Zero Balance என்ற நிலையில் நிறுத்தும் ஒன்று !
இதன் மூலம் பல பண முதலைகள் பெற்ற
கடன்ங்கள் மூடி மறைக்கப் படலாம் .,
மொத்தமாக தள்ளுபடி என்ற பெயரில்........
அம்பானி, அதானி , வேதாந்தா போன்றோர் வாங்கிய கடன்கள் ஊத்தி மூடப் படலாம் !
அதோடு நீங்களும் நானும் சிறுக சிறுக சேர்த்த சேமிப்பு மண்ணோடு மண்ணாக போய் விட்டதாகவும் , நாட்டின் நலன்னுக்காக மக்கள் இதை பொறுத்து கொள்ள வேண்டும் என்றும் புரியாத மொழியில் பைஜாமா போட்ட ஒருத்தர் TV -யில் பேசுவார் !
இதை எதிர்த்து வரும் நாட்களில் நீங்களும் நானும் தெருவில் இறங்காமல் நம் குழந்தைகளின் எதிர்காலத்தை நிர்ணயம் செய்ய இயலாது !
நாம் வேகமாக எதிர் வினை ஆற்றும் நிலையில் உள்ளோம் என்பதை மறவாதீர்கள் !
சிறப்பான ஆய்வு கட்டுரை. வாழ்த்துக்கள்
ReplyDeleteநன்றி தோழர்
Delete