தமிழர்களின் அன்றாட வாழ்வோடு ஒன்றிப் போன அதே நேரம் பலரும் அதிகம் பேசாத வார்த்தை தமிழீழம்!
எப்படி உருவானது தமிழீழம் என்ற வார்த்தை!?
தற்போதைய இலங்கையின் முதற் பெயர் வரலாற்று ரீதியாக தூய தமிழில் ஈழம் தான்! தமிழர்கள் தங்களுக்கான நிலப் பரப்புக்கும் வாழ்வாதாரப் பகுதிக்கு மட்டுமே சுதந்திரம் கேட்டு போராடியதால் அதை தமிழ் ஈழம் என்று அழைத்தனர்!
ஏன் தேவைப் பட்டது சுதந்திர தமிழீழம்!?
இலங்கை-யில் வேலைக்கு தானே போனார்கள் தமிழர்கள் அங்கே போய் நாடு கேட்கலாமா என்று பலர் என்னை கேட்டது உண்டு!
உண்மையில் அம் மண்ணின் பூர்வ குடிகள் தமிழர்கள் தான்!
அசோகர் மற்றும் அவரின் மகள் சுமத்திரை யின் வருகைக்கு பிறகு தான் அங்கே பௌத்தம் வளர்க்கப் பட்டு பின்னாளில் சிங்கள இனமாக மாற்றம் கண்டது!
ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடியதில் 19-ம் நூற்றாண்டிலும் 20 ம் நூற்றாண்டின் துவக்கத்திலும் தமிழர்களே மிக மூர்க்கமாக எதிர்த்தனர்!
இரு சமூக மக்களும் சமயத்தில் இணைந்து எதிர்த்து நிற்கும் போது தங்களால் நினைத்த வியாபாரத்தை செய்ய இயலாமல் திணறியது குறிப்பிட தக்கது!
அப்போது தான் மக்களை எவ்வாறு பிரித்து ஆள்வது என யோசிக்க துவங்கியது பிரிட்டிஷ்!
அதன் முதற் படியாக, இரு மக்களுக்கும் இடையே இன வெறுப்பை விதைக்க மஹாவம்சம் என்ற சிங்கள இன வரலாறாக கூறப்படும் நூல் ஒன்றை பாலி மொழியில் இருந்து சிங்களத்திற்கு மொழி பெயர்த்து தந்தது சிங்கள மத குருமார்களையும் மக்களின் மனதில் மெல்ல மெல்ல வன்மத்தை விதைக்க துவங்கினர்!
இதன் தொடர்ச்சியாக சிறு சிறு இனவெறி பிரச்சனைகள் துவங்கி நாடு விடுதலை அடையும் சமயத்தில் " ஆங்கிலேயர்களிடமிருந்து விடுதலை கிடைத்ததும் தமிழர்கள் தமிழ்நாட்டோடு போய் சேர்ந்து விடுவார்கள் " என்று பௌத்த தலைவர்கள் கூறும் அளவுக்கு நிலைமை போனது!
1944 ல் பிரிட்டன் ஓர் கமிஷனை நியமித்தது! இலங்கைக்கான அரசியலமைப்பை நிர்ணயிப்பதற்காக அமைக்கப் பட்ட கமிஷன் அது!
அப்போது தமிழர்கள் முன் வைத்த கோரிக்கை, 50% அரசியல் மற்றும் இட ஒதுக்கீடு உரிமை சிங்களர்களுக்கும் மீத முள்ள 50% உரிமை பூர்வ குடி தமிழர்கள், இந்தியாவிலிருந்து வந்திருக்கும் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மற்றும் இஸ்லாமியர்களுக்கு மட்டுமே! இதை பிரிட்டன் முற்றிலுமாக நிராகரிப்பு செய்தது!
இது தான் தமிழர்களின் மீதான அடக்குமுறை க்கு பெரிதும் வசதியாகிப் போனது!
1959 செப் 25 அப்போதைய பிரதமர் சாலமன் பண்டார நாயகே ஓர் புத்த பிக்கு வால் சுட்டுக் கொல்லப் பட்டார்!
அதற்கு அவர்கள் சொன்ன காரணம், 2500 வது புத்த ஜெயந்தியில் சிலோனை முழுமையான சிங்கள பௌத்த நாடாக அறிக்க தாங்கள் உத்தரவிட்டதை இந்த பிரதமர் நிறைவேற்றவில்லை என்பது தான்!
இது, அங்கே வளர்த்தெடுக்கப் பட்ட சிங்கள இனவெறி க்கு ஓர் சிறு உதாரணமே!
1951 ல் தொடங்கி சிறு சிறு உரிமைகளுக்காக கோரிக்கை வைத்தவர் போராடியவர்கள் என அனைவரும் தாக்கப் பட்டார்கள்!
தமிழ் தேசிய கூட்டமைப்புகள் ஆளும் கட்சி எதிர் கட்சி என மாறி மாறி கூட்டணி வைத்தும் ஏதேதோ ஒப்பந்தங்கள் போட்டும் தேர்தலில் போட்டி இட்டு ஆயிற்று!
ஆனால் ஒன்றும் பிரயோஜனம் இல்லை!
வெற்றி பெற்று ஆட்சியை பிடித்ததும் தமிழர்கள் வைத்த கோரிக்கையை காற்றில் பறக்க விட்டு விடுவார்கள்!
1958 ல் நடந்த வன்முறை தான் மிகப் பெரிய அளவில் தமிழர்களை பாதிப்புக்கு உள்ளாக்கியது! குழந்தைகள் வரை எரியும் தீக்கு இரையாக்கப் பட்டனர்!
அதே அளவுக்கு 1983 ல் நடந்த கருப்பு ஜூலை தமிழர்கள் வாழ்வை புரட்டி போட்டது!
1970 களின் மத்தியில் ஆசிரியர் நவரத்தினம் உள்ளிட்டோரின் முயற்சியில் தமிழர்களுக்கான தனி நாடு வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப் பட்டது!
அதே கால கட்டங்களில் தான் தமிழர்கள் ஆயுதம் ஏந்த அன்னியம் ஆனார்கள் என்பது வரலாற்று பதிவு!
ஈழ இனப்படுகொலை-யில் சர்வதேசத்தின் பங்கு ஏன் வந்தது எதற்காக?!
தமிழீழம் பற்றி பேசும் போது புவிசார் அரசியலை (Geo Politics) பற்றி பேசியே ஆக வேண்டியது அவசியமாகிறது!
தமிழர்களை கொன்றதில் அமெரிக்காவின் பங்கு மிக முக்கியமானது! அதை புவிசார் அரசியலோடு ஒப்பிட்டு பார்ப்பது அவசியம்., அதைப் பற்றி தான் இங்கே காணப் போகிறோம்!
அமெரிக்காவுக்கு ஏன் இவ்வளவு வஞ்சம் ஈழத்தின் மேல் என்பதை நாம் தெரிந்து கொள்வது அவசியம் :-
1950 களின் தொடக்கத்தில் தெற்காசியாவிற்கான அமெரிக்க வெளிவிவகாரத் துறை ஓர் அறிக்கையை வெள்ளை மாளிகைக்கு அளிக்கிறது, அதில்,
உலகின் 70 % வர்த்தகம் கடல் வழியே தான் நடக்கின்றது! அதில் 45 % வர்த்தகம் தெற்காசியாவின் இலங்கை தீவை ஒட்டி செல்லும் வழித் தடத்தில் இருப்பது மிக முக்கியமானதாக கருதப் படுகின்றது! எனவே இதன் அருகில் இருக்கும் திரிகோணமலை உள்ளிட்ட கடற் பகுதி 50 வருடங்களுக்கு பிறகு மிக முக்கிய பொருளாதார மையமாக மாறும் வாய்ப்புள்ளது!
அச் சமயம் இப் பகுதியை எந்த நாடு அல்லது எந்த நாடுகளின் கூட்டமைப்பு இதை கட்டுப் பாட்டில் வைத்துள்ளதோ அதுவே அன்றைய வல்லரசா அல்லது வல்லரசுக்கு இணையாக திகழும்!
- இது தான் அந்த அறிக்கை!
இதை மனதில் கொண்டே US தன் காய்களை நகர்த்த துவங்கி இருந்தது! ஆனால், பெரிதாக எதுவும் நிகழவில்லை!
இதற்கு இடையில் Sri Lanka விற்கு சுதந்திரம் வழங்கிய இங்கிலாந்து தன் பிடிப்பு எப்போதும் இவர்கள் மீது இருக்க வேண்டும் என்றே பாராளுமன்றத்தில் 1947 துவங்கி அடுத்த இருபது வருடம் தன் ஆதிக்கத்தை செலுத்தியது British. அதனை இரட்டை ஜனநாயகம் என அப்போது அழைத்தனர்!
இங்கிலாந்து முழுமையாக வெளியேறிய பின்னர் 75-80 களில் அமெரிக்கா தனது வானொலி நிலையமான Voice Of America வை திரிகோணமலையில் அமைக்க Sri Lanka வுடன் ஒப்பந்தம் போட்டது அமெரிக்கா!
அதை மூர்க்கமாக எதிர்த்தவர் இந்தியாவின் இரும்பு பெண்மணி என்று அழைக்கப் பட்ட அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி!
தெற்காசியா-வில் இந்தியா தன் இருப்பை தக்க வைக்க மிக தீவிரமாக இருந்த நாட்கள் அவை!
ஆனால்,
பின்னாளில் LTTE யிடம் இருந்து திரிகோணமலை இலங்கை கைக்கு வந்த பிறகு அந்த இடத்தை அமெரிக்கா வுக்கு தாரை வார்த்தது Sri Lanka.,
ஆனால் அதுவே பின்னாளில் இலங்கை க்கு பிரச்சனையாக மாறவே VoA 2017 ஜனவரியில் வெளியேற்றப் பட்டது குறிப்பிட தக்கது!
ஏன் தமிழகம் ஈழத்துக்காக நிற்க வேண்டும்!?
தெற்காசிய பிராந்தியத்தில் உலகின் முதல் தேசிய இனத்தின் ஓர் இராணுவம் வலுவான அரணாக இருந்ததே இந்தியாவின் முக்கியமாக தமிழகத்தின் பாதுகாப்பாக கருதப் பட்டது சர்வதேச அறிஞர்களால்!
ஆனால்,
ஒரு போதும் அதை தமிழகமும் சரி இந்தியாவும் சரி அதை ஏற்றுக் கொண்டதே இல்லை!
அந்த பகுதி எவ்வளவு முக்கியமான ஓர் இடமாக நினைத்திருந்தால் அமெரிக்கா தன் முழு பலத்தையும் ஓர் உள் நாட்டு போரில் காட்ட தயாராககும் என்பதை தமிழர்கள் உணர்வது அவசியம்!
இன்றைய சூழலில் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதையும், இதனால் நமக்கு ஏற்படவிருக்கும் ஆபத்துக்களை பற்றியும் விரிவாக பேச இந்த பிப்.- 18 நமக்கு கிடைத்த ஓர் அறிய வாய்ப்பை பயன் படுத்திக் கொள்வோம்!
#வெல்லும்_தமிழீழம் மாநாட்டில் சந்திப்போம்!
No comments:
Post a Comment