Sunday, 8 July 2018

தமிழகம் ஏன் எப்போதுமே இந்துத்துவா கருத்தியலை எதிர்க்கிறது?

தமிழகம் எப்போதுமே ஓர் முற்போக்கு தன்மையோடு தான் இயங்கி வருகின்றது!

   அது இந்தியாவிடம் இருந்து முற்றிலுமாக விலகி விட்டது என்று சொன்னால் அது மிகைப் படுத்தலே……!

  யாரை எப்படி கையாள வேண்டும் என்பது உலகின் முதல் இனத்திற்கு நன்றாகவே தெரியும்!

   சென்ற முறை மோடி சென்னை வந்த போது #GoBackModi என்ற வாசகம் உலகின் ஒவ்வொரு மூலையையும் அசைத்துப் பார்த்தது என்பதை யாருமே மறுக்க முடியாது!
   தமிழகத்தில் நடக்ககும் அனைத்து பிரச்சனைகளுக்கும் பாஜக வும், இந்துத்துவா கருத்தியலும் தான் காரணம் என்பதை நாம் சொல்லாமலே மக்கள் உணரத் தொடங்கி பல மாதங்கள் ஆகின்றன!
    காவிரிக்காக பேசாத பிரதமர், மக்கள் போராடுவதை பற்றிக் கவலைப் படாத பிரதமர்………
  ஏகப் பட்ட ஊழல் முறைகேடுகளுக்கு ஆளாகி உள்ளதாக கூறப்படும் பாதுகாப்புத்துறை கண்காட்சியை திறக்க வருகிறார் என்றதும் ஒட்டுமொத்த தமிழகமே தன்னெழுச்சியாக திரண்டு நின்றது தான் தமிழர்களின் தனித்துவமான இயல்பை நமக்கு காட்டியது!

   இன்று அமித்ஷா வரப் போகிறார் என்றதும் அதே அளவில் #GoBackAmitShah என்று Twitter உலகம் தயாராவதை உளவுத்துறையோ, அரசோ, ஊடகங்களோ கவனிக்கிறதா என்பதே கேள்வி!

   எந்த பதவியிலும் இல்லாமல் ஒரு கட்சி தலைவரை தமிழர்கள் ஏன் இப்படி எதிர்க்கிறார்கள் என்ற கேள்வி எழும்..,
   மிக எளிதாக இதை புரிந்து கொள்ளலாம்..,, இந்தியா முழுதும் மனித குலத்தின் மீது நடக்கும் தாக்குதல்களுக்கு பாஜக தான் காரணம் என்பது ஊரறிந்த உண்மை!
  எத்தனை கொலைகள், எத்தனை மிரட்டல்கள், எத்தனை எத்தனை பதவி மாற்றங்கள்..!
   எந்த ஆட்சியும் செய்யாத ஒன்று தான் நீதி மன்றத்தை தனக்கு இசைவாக பாஜக வளைத்தது!

   இலங்கை-யில் ராஜபக்க்ஷே கையாண்ட அதே வழி முறை!
   இதுவரை மணிப்பூர், கோவா என்று அவர்கள் செய்த ஜனநாயக படுகொலைகளை கர்நாடகா-வில் செய்ய முடியாமல் போனதில்…… நாம் மகிழ்ச்சி அடைய ஒன்றும் இல்லை!
  காங்.,ம் இதை முன்னாளில் செய்துள்ளதே!

   ஆனால், தமிழகத்தை ஆள்வதே பாஜக என்பதில் தமிழனுக்கு கிஞ்சித்தும் சந்தேகம் இல்லை!

13 பேர் படுகொலை,

போராடுபவன் தேச துரோகி……

கேள்வி கேட்டால்…… குண்டாஸ்,

போராடினால் NSA

  இப்படி நடக்கும் அனைத்து அரச பயங்கர வாதங்களும் பாஜக வின் கண் அசைவில் தான் நடக்கிறது என்று நன்றாகவே தமிழகம் உணர்ந்து விட்டது!

அதன் வெளிப்பாடு தான் 1 1/2 ஆண்டுகளுக்கு பிறகு தேர்தலை மட்டுமே மனதில் வைத்து தமிழகம் வரும் அமித்ஷா வை விரட்டும் #GoBackAmitShah எனும் அம்புகளும், ஈட்டிகளும்!

   இது வெறும் அமித்ஷா வுக்கானது அல்ல ஒட்டு மொத்த மதெவெறி சக்திகளுக்கு விடுக்கப் படும் எச்சரிக்கை!

 

No comments:

Post a Comment