Monday, 27 June 2016

மகளுக்கு அப்பாவாக .....

வினோதினியில் துவங்கி வினுப் பிரியாவில் வந்து நிறுத்தியிருக்கிறது நமது So called அறிவியல் வளர்ச்சி .

   நிர்பயா துவங்கி சுவாதி வரை தாங்கள் படித்த பாட புத்தகங்களும் C ++, MBBS எல்லாம் தனக்கு ஆபத்து வரும் போது எப்படி காத்து கொள்வது என்ற அடிப்படை அறிவை கூட ஆரம்ப கல்வியிலேயே வழங்காமல் போனது யார் தவறு???

    நம்மவர்களுக்கோ மகன் / மகள் வளர்ந்ததும் கை நிறைய சம்பாதிக்கனும்.  கழுத்து நிறைய நகையும் காரும் வீடும் வாங்கனும் அதுக்கு என்ன வேண்டுமானாலும் படிக்க வைக்கலாம்! இந் நாட்களில் இது தான் So Called "settled in life "
  
   அது அலுவலகத்தை விட்டு வெளியே வந்ததும் ஒத்த பைசாவுக்கு கூட பிரயோஜனம் இருக்காது என்று தெரிந்தும் சேர்க்கிறோம் கல்வி நிறுவனங்களில்.

     தனக்கு நேரும் தனிப்பட்ட பிரச்சினைகளை தன் குடும்பத்தாரிடம் கூட பகிறுவதை அந்த பெண்ணுக்கு ஒரு வித மோசமான அனுபவமாக மாற்றி வைத்திருக்கிறோம்.

   சாதாரணமாகவே பெண்கள் தன் சார்ந்த விடயங்களை அம்மாவை விட அப்பாவிடம் அளவளாவுதல் அதிகம் காணலாம். அவள் பருவம் அடைந்த உடனேயே அது தலை கீழாக மாற்றி விடப் பட்டிருக்கும்.
    அங்கே துவங்குகிறது வீட்டிற்க்கும் அவள் பிரச்சினையின் தீர்வுக்குமான இடை வெளி தூரம்.

   #பூமலர் தன் விடயங்களை என்னிடமே முதலில் பகிர வேண்டும் என்றே காத்திருக்கிறேன். மகளின் தேவைகளை பூர்த்தி செய்வதில் மட்டுமல்ல பிரச்சினைகளை தீர்க்கவும் அப்பாவை விட வேறு யாரால் சிறப்பாக செயல் பட முடியும். 

அம்மாக்கள் ஆறுதலோ அடியோ கொஞ்சம் அதிகம் காட்டி நிறுத்தி விடுவார்கள். அவர்களுக்கு தெரிந்தது எல்லாம் கலாச்சாரம் என்ற பெயரில் குடும்ப கௌரவத்தை காக்கிறேன் என பிரச்சனைகளை மூடி மறைப்பது தான்.
  
   நிர்பயா வின் டெல்லியும் தினம் தினம் கற்பழிப்புகள் அரங்கேறும் வட கிழக்கின் "இரோம் சர்மிளாவும் " இங்கே தான் இருக்கிறார்கள்.
அருந்ததிராயும் நந்திதாஸ்ஸும் நடைமுறைக்கும் வேலு நாச்சியாரும் ராணி மங்கம்மாளையும் வரலாற்றிலும் காட்டி வளர்ப்பேன்.

உடனே, 
பொண்ண பையன் மாதிரி வளர்க்க போறியான்னு கேட்காதீங்க . பெண்ணாகவே தான் வளர்வாள் தன் சுற்றத்தையும், சுற்றி நப்பதையும் பகுத்தறிபவளாக .....!

Friday, 24 June 2016

Why we should avoid America ..!

   நம்ம ஊர் பக்கத்துல அப்பப்போ ஆலமரத்துக்கு கீழ பஞ்சயத்து நடக்குமே பாத்திருக்கீங்களா!!!!?
   சுத்தி இருக்குற பத்து இருபது ஊர்ல பண பலம் ஆள் பலம் கொண்ட பெருசுங்க நாங்க தான் பதினெட்டு பட்டிக்கும் எதாவது பிரச்சினைனா முதல் ஆளாளநிற்போம்!  எங்களை கேட்காமல் அனுவும் அசையாதுன்னு சீன் போடுவாய்ங்களே பாத்திருக்கீங்களா!!! 
                அதையே கொஞ்சம் பெரிய லெவல்ல செஞ்சா அதுவும் ரெண்டு நாட்டுக்கு நடுவுல அதுக்கு பேரு தான் அமெரிக்கா!
    ஆலமரத்துக்கு பதில் ஐ.நா மன்றம், ஆள் பலத்துக்கு ISI,  அல்கொய்தா!
அதிகார பலத்துக்கும் ஒற்று வேலைக்கும் CIA, மொசாட்.

இரண்டரை நூற்றாண்டு கால அமெரிக்க சுதந்திர ஆட்சியில் இந் நாடு பகைத்துக் கொள்ளாத தேசமே இல்லை எனலாம். 
      இன்று இங்கிலாந்துடன் ஒட்டி உறவாடும் இவர்கள் 1814 ல் நடை பெற்ற இரு நாட்டு இரானுவத்திற்க்கும் இடையேயான சண்டையில் வெள்ளை மாளிகையையே கொளுத்தி எரிய விட்டனர் பிரிட்டிஷ் வீரர்கள்! ஆனால் தன் வர்த்தக நலனுக்காக அதே நாட்டுடன் இணைந்து 20 ம் நூற்றாண்டில் இவர்கள் நிகழ்த்திய படுகொலைகளும், இன அழிப்புகளும் எண்ணில் அடங்காதவை.

    இப்படி ரஷ்யா, சீனா, வியட்நாம் என இவர்களின் எதிரி Cum நண்பர்களை அடுக்கி கொண்டே போகலாம்.
          இதில் அமெரிக்காவின் விழித்திரையில் விழுந்த தூசி என வர்ணிக்கப் படும் கியூபா வும் குறிப்பிடத்தக்க  ஓர் தேசம்.

     வெளியே  இருந்து பார்ப்பவர்களுக்கும் அங்கே சென்று வந்தவர்கள் கூறும் நலம் சார்ந்த விடயங்களும், படாடோப வசதிகளும் அனைவரையும் வாழ்வில் ஒருமுறையேனும் அந்த வல்லரசு தேசத்தை சந்தித்து விட மாட்டோமா என ஏங்க வைக்கும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை!
   இங்கே நாம் காண போவது அந்த உல்லாச வாழ்க்கையை பற்றி அல்ல!

    அவர்கள் உல்லாச மாக வாழ நம்மை போல வளரும் நாடுகளிலும், மூன்றாம் உலக நாடுகளிலும்,
அந் நாட்டு மக்களின் கண் முன்னாலேயே அவர்களின் வாழ்வாதாரம் பறி போகும் கொடூரத்தை   தான் நாம் இனி  பார்க்கப் போகின்றோம் .  .................!

      நம்மில் பலர் அமெரிக்கா பற்றி பேசும் போது,  1990 களுக்கு பிறகு அமெரிக்கா போன்ற மேற்குலக  நாடுகள் தங்கள் தொழிலை இங்கே  தொடங்கியதால் தானே நம்மில் பலரின் வாழ்க்கை தரம் பொருளாதார வழியில் முன்னேறியுள்ளது, முன்னேறிக் கொண்டிருக்கின்றது....!

      அந்த தேசத்தை  எப்படி நீங்கள் தவறாகவோ திரித்தோ  கூற முடியும் என்ற கேள்வியை நான் பல முறை எதிர் கொண்டுள்ளேன்.  
       அதற்க்கான பதிலை விவரமாக கூறினால் என்ன என்று நினைத்ததன் விளைவு தான் இதை எழுதவது என்ற நிலைக்கு கொண்டு வந்துள்ளது!
              - தொடரும்

Tuesday, 21 June 2016

இயக்குனர் ஷங்கருக்கு .....

திரு.ஷங்கர் அவர்களுக்கு,
   ஓர் சாதாரண பாமர சினிமா ரசிகன் எழுதும் கடிதம் .

       உங்களின் முதல் படமான ஜென்டில் மேன் பார்த்து விட்டு ,
  நாட்டில் அரசியல் வாதிகளை எதிர்த்து கேள்வி கேட்க முடியாவிட்டால் அவர்கள் உயிரை நம் உயிரால் கொன்றொழித்து இந் நாட்டின் மக்களை காப்பற வேண்டும் என என் பள்ளிக்கூட நாட்களில்  எங்களுக்கு  சொல்லி கொடுத்தவர் நீங்கள் ! 

ச்சே!  படம் எடுத்தா இவரை மாதிரி எடுக்கனும்டா.!  மொத்த நாடும் என்றேனும் ஓர் நாள் உங்க பட கிளைமேக்ஸ் போல மாறி விடாதா என ஏங்கி கொண்டிருந்த அப்பிராணிகளில் நானும் ஒருவன்!

அவ்வளவு பாதிப்பு மனதில் ....!

தங்களின் இந்தியன் படம் வந்த பிறகு தான் தங்களை பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வம் வந்தது! 
 
   தங்களின் படங்கள்  தெருவில் தினசரி நடக்கும் அவலங்களை தட்டிக் கேட்க்கும் கதாபாத்திரங்களும், ஒரே நாளில் நாட்டையே மாற்ற முடியும் என்று எங்களுக்கு நம்பிக்கை ஊட்டி  அதே வளர்ச்சி பாதை என்ற கனவிற்க்கு விதை போட்டது நீங்களே!
அப்துல் கலாமே பின்னர் தான்! 

இப்படி ஓர் சிறந்த சமூகத்தை நம் பிள்ளைகளுக்கு வழங்கி விட மாட்டோமா என தங்களின் பல படங்கள் மூலம் என்னை போன்றவர்களை ஏங்க வைத்து இருப்பீர்கள்.

   சரி,  இப்போது விடயத்துக்கு வருவோம்.

   21 ம் நூற்றாண்டின் வலாற்றில் மறைக்க இயலாத இனப்படுகொலை செய்து முடித்தது இலங்கை அரசு . அதற்க்கு இந்தியாவும் துணை தான் என்பதை நீங்களும் நானும் நன்றாகவே அறிவோம், இருந்தாலும் இப்போது இந்தியாவை பற்றி பேச வேண்டாம். காரணம் இதை எழுதி முடித்து நீங்கள் படிக்கும் போது என்னை பாக்கிஸ்தானுக்கு நாடு கடத்த சொல்லி இந்திய தேசிய வா(வியா)தி கள் கொடி பிடிக்க கூடும். 

      இதை ஏன் உங்களிடம் சொல்கிறேன் என கேட்கிறீர்களா , அவ்வளவு பெரிய இனப்படுகொலைக்கு துணை போன ஓர் Corporate நிறுவனமான LYCA விற்க்கு தங்களை போன்றோர் தமிழ் நாட்டினுள் ஆழமாக வேரூன்ற சிகப்பு கம்பள வரவேற்பு அளிப்பது எவ்வகையில் நியாயம்???

ஏற்கனவே அதிமுக அரசை வளைத்து கத்தி பட எதிர்ப்பை சமாளித்தது LYCA.

   கத்தி படத்தின் போது நாங்கள் இது இனப்படுகொலை நிறுவனம் படத்தை வெளியிடாதீர்கள் என்று போராடிய போது விஜயை பிடிக்காதவர்கள் செய்கிறீர்கள் என்றனர்.  அடுத்து, ஈழத்தை ஆதரிப்பதாக சொல்லிக்கொள்ளும் போலி தமிழ் தேசிய வாதிகளை கொண்டே நற் சான்றிதழ் வாங்கியது LYCA!
 
அப்போதே தெரியும் இவர்கள் பின்னாளில் சமயம் பார்த்து கழுத்தை அறுப்பார்கள் என்று.  இப்போது அதை சரியாக செய்து வருகிறார்கள். 

108 முன்னாள் போராளிகள் மர்மான நோயினால் இறந்ததாக இங்கே தமிழ் அமைப்புகள் போராட்டத்தில் இறங்க அவர்களோ ஆளையே காணோம்!

( அவர் எப்போதோ விலை போய் விட்டது தெரியாமல் பாவம் அந்த தோழர்கள் இன்னும் உயிரை கொடுத்து அண்ணன் வாழ்க கோசம் போட்டு திரிகிறார்கள்)

    தமிழ் பிள்ளை ஒருவரின் வளர்ச்சி பொறுக்காமல் என்னை போன்றோர் வயித்தெறிச்சல் படுகின்றோம் என்றனர்.  அவருக்கும் எங்களுக்கும் என்ன பங்காளி அங்காளி சண்டையா???

     இன்னும் சிலர், LYCA ஈழ கோரிக்கையையும் புலிகளையும் ஆதரித்தனர் என்று நியாயம் வேறு கற்பித்தனர்.

   அப்படி சிலர் நம்பிக் கொண்டு இருப்பின்,  இங்கே அதை பற்றிய  ஓர் வரலாற்று நிகழ்வை பேச வேண்டிய கடமை எமக்குள்ளது!

1) 2006 ஏப்ரலில் விடுதலை புலிகள் அமைப்பை இங்கிலாந்து அரசு தடை செய்கிறது!

2) அதே ஆண்டு செப்.- அக்டோபரில் LYCA தனது புதிய தொழிலை துவங்க பிரிட்டன் அனுமதி தருகிறது!

3) 2005 ல் புலிகளை காட்டி கொடுத்தவர் என கூறப் படும் "கருணா "விற்க்கு இங்கிலாந்து தஞ்சம் அளிக்கிறது!

     இதிலேயே புரிய வேண்டாமா தமிழன் கையை வைத்தே அவன் கண்ணை குத்துகிறது சர்வதேசம் என்று!

இனப்படுகொலை க்கு பின்னான LYCA வின் பிரவேசம்  தமிழ் சினிமாவினுல் மெல்ல மெல்ல ஆரம்பித்தது!
    முதலில் திரு.A.R முருகதாஸ் அவர்களால் அரங்கேறியது!  அடுத்து தனுஷ் தனது தயாரிப்பு படங்களின் ஊடாக LYCA வை உள்ளே கொண்டு வந்தார்! 

இன்னும் சிலர் கேட்கலாம் ஏன் தனுஷை எதிர்க்கவில்லை!  ஏன் விசாரணை படத்தை எதிர்க்க வில்லை என கேட்டு வருவார்கள் அதுவும் தெரிந்ததே!  

   எமக்கான எதிர்ப்பாயுதம் இன்று "கருத்தியலும், எழுத்தும் "தான்!

பேனா முனை கத்தியை விட கூர்மையானது என்பதை காலம் நிரூபிக்கும்!

எமக்கு மாநாடு போடும் அளவுக்கு தோழர்கள் இல்லை!  ஆனால் மனதளவில் திடமான சில தோழர்கள் தோழ் கொடுக்க உண்டு. 

ஈழ விடுதலைக்காக தெருவில் இறங்கிய பலர் இன்று சம்பந்தமே இல்லாத திசையில் நின்று கொண்டிருப்பது காலத்தின் சாபம்! 

  

     தமிழன் என்ற ஒரே காரணத்திற்க்காக எரியும் தனலில் தூக்கி வீசப்பட்ட அந்த 3, 4 வயது குழந்தைகளுக்கு தெரிய போகிறதா என்ன நம் சொந்த காரன் ஒருத்தன் நம் இனத்தையே அழிக்க துடித்த ஓர் Corporate நிறுவனத்துடன் தான் தொழில் கூட்டு வைத்துள்ளார் என்பது!

    அடுத்து, ஆட்டை கடித்து மாட்டை கடித்து கடைசியில் மனிதனை கடித்த கதையாக சிறு சிறு நிறுவனங்களில் நுழைந்தவர்கள் இப்போது நேரடியாக தங்களை போன்ற பிரபலங்களை வளைத்துள்ளார்கள். 

    இது எங்கே போய் முடியும் என்பது எங்களுக்கு நன்றாகவே தெரியும். இவர்கள் மெல்ல மெல்ல எல்லா பெரு நிறுவனங்களுடனும் பங்குதாரராக முதலில் மாறுவார்கள். அடுத்து பெரிய பெரிய நடிகர்களையும் இயக்குனர்களையும் மொத்த மாதக் கணக்கில் ஒப்பந்தம் செய்து விடுவர். இது நாளடைவில் சார்லி சாப்ளின் காலத்து  Hollywood போல கலைஞர்களை விலைக்கு வாங்கி விடுவர். அதன் பின் திரையுலகம் முழுதும் ஓர் ஆக்டோபஸ் மாதிரி இவர்களின் ஆளுமை படர்ந்து விடும்!

    நாளை மற்றும் வரும் காலங்களில் ஈழ விடுதலை தொடர்பான முக்கிய சமயத்தில் தமிழ் திரையுலகம் மக்களை திரட்ட வழக்கமாக முன்னெடுக்கும் சாதரண கூட்டங்களை கூட நடத்த விடாமல் செய்து விடும் LYCA. 

    ஈழ விடுதலை பற்றியும் இனப்படுகொலை நிகழ்ந்த அந்த தேதி பற்றியும் தன் படத்தில் காட்சி அமைத்த ஒரே காரணத்திற்க்காக உப்பு சப்பு இல்லாத பொய் காரணத்தை கூறி ஓர் இயக்குனரை 'தடை ' விதிக்கிறது தயாரிப்பாளர்கள் சங்கம்!
   அதை தங்களை போன்றோர் ஏன் என்று கூட எட்டிப்பார்க்கவில்லை! 
   உங்களுக்கு ரோட்டு ஓரமா ஒண்ணுக்கு அடிக்கிறவன் தானே மிக கொடூரமான  சமூக விரோதி! 

    நீங்க கையெழுத்து போடுங்க சார்!  அங்கே கொன்று குவிக்கப் பட்ட அப்பாவிகள் ஒன்றும் நம் வீட்டை சேர்ந்தவன் அல்லவே!

      நீங்க, எந்திரன் 2.0 வேலையை பாருங்க சார்!   அங்கே ஏவுகணை தாங்கி சிதைந்து போனது நம் தந்தையின் முகம் இல்லையே!

    அப்டியே ரஜினி சாருக்கும் சொல்லிடுங்க!  தமிழன் மேல் அக்கறை இருப்பது போல் நடித்தாலே போதும் நாங்க அவரோட ஒரு துளி வியர்வைக்கே ஒரு பவுன் தங்கம் கொடுப்போம் என்று!  காரணம் ஈழத்தில் கொல்லப் பட்ட தமிழனும் எங்களை போல வே அவரையும் தலை.........வா என சத்தமாக கூச்சல்  போட்டு குதூகலம் அடைந்தவன் என்று!

  சினிமா துறையை சார்ந்த நண்பர்கள் இருப்பின் தங்களால் முடிந்தால் "ஷங்கரிடம் " இதை சேர்ப்பிக்கவும்!

திராவிட நாடு

திராவிட நாடு என்ற கோரிக்கையில் இருந்த ஆந்திரம், கேரளம் மற்றும் மைசூர் ஏன் தமிழகத்தை போல
சுயாட்சி கோர வில்லை???

பதில் இதோ :-

1918 துவக்கத்திலேயே இங்கே மக்களாட்சி துவங்கி விட்டது அதாவது நீதி கட்சி, காங்கிரஸ் போன்றவையும் மறைமலை அடிகளாரின் தனித்தமிழ் இயக்கமும் மக்களுக்கு சுயமரியாதை எண்ணத்தை விதைத்து விட்டனர்.

ஆனால், மற்ற மாகாணாங்கள் திருவிதாங்கூர், மைசூர், விஜயநகரம் என மன்னர் ஆட்சியாகவே இருந்தது! அதாவது முடியாட்சி

அந்த மக்களுக்கு சுயாட்சி என்பதோ , மக்களாட்சியோ,  அனைத்தும் புதியதே!

ஆனால் இங்கே நிலமை வேறு,

    சட்ட புத்தகம் வெளியான உடனேயே இது முற்றிலும் தேசிய இனங்களின் உரிமைக்கு எதிரானது முழுக்க இந்துத்துவமும், முதலாளித்துவமும் மட்டுமே பேசுகிறது என சொல்லி முதன் முதலில் அந்த புத்தகத்தை எரித்தவர் பெரியார் தான்!

அந்த புத்தகத்தை எரித்தால் என்ன தண்டனை கொடுப்பது என்று தெரியாமல் இந்தியா திண்டாடியது தனி கதை!

அதனால் தான் இன்றும், பார்ப்பனர்களுக்கு பெரியார் பெயரை கேட்டாலே பதறுகின்றது!

இந்தியாவின் ஒட்டு மொத்த தேசிய இனங்களுக்காகவும் முதன் முதலில் குரல் கொடுத்தவர் அவர் தான்!

  இன்றும், அவர் பெயரை வட மாநிலங்களிலும்  பல பழ்கலை. மாணவ அமைப்பு சுமந்து உறுதியாக  நிற்க காரணம் இதுவே!