நம்ம ஊர் பக்கத்துல அப்பப்போ ஆலமரத்துக்கு கீழ பஞ்சயத்து நடக்குமே பாத்திருக்கீங்களா!!!!?
சுத்தி இருக்குற பத்து இருபது ஊர்ல பண பலம் ஆள் பலம் கொண்ட பெருசுங்க நாங்க தான் பதினெட்டு பட்டிக்கும் எதாவது பிரச்சினைனா முதல் ஆளாளநிற்போம்! எங்களை கேட்காமல் அனுவும் அசையாதுன்னு சீன் போடுவாய்ங்களே பாத்திருக்கீங்களா!!!
அதையே கொஞ்சம் பெரிய லெவல்ல செஞ்சா அதுவும் ரெண்டு நாட்டுக்கு நடுவுல அதுக்கு பேரு தான் அமெரிக்கா!
ஆலமரத்துக்கு பதில் ஐ.நா மன்றம், ஆள் பலத்துக்கு ISI, அல்கொய்தா!
அதிகார பலத்துக்கும் ஒற்று வேலைக்கும் CIA, மொசாட்.
இரண்டரை நூற்றாண்டு கால அமெரிக்க சுதந்திர ஆட்சியில் இந் நாடு பகைத்துக் கொள்ளாத தேசமே இல்லை எனலாம்.
இன்று இங்கிலாந்துடன் ஒட்டி உறவாடும் இவர்கள் 1814 ல் நடை பெற்ற இரு நாட்டு இரானுவத்திற்க்கும் இடையேயான சண்டையில் வெள்ளை மாளிகையையே கொளுத்தி எரிய விட்டனர் பிரிட்டிஷ் வீரர்கள்! ஆனால் தன் வர்த்தக நலனுக்காக அதே நாட்டுடன் இணைந்து 20 ம் நூற்றாண்டில் இவர்கள் நிகழ்த்திய படுகொலைகளும், இன அழிப்புகளும் எண்ணில் அடங்காதவை.
இப்படி ரஷ்யா, சீனா, வியட்நாம் என இவர்களின் எதிரி Cum நண்பர்களை அடுக்கி கொண்டே போகலாம்.
இதில் அமெரிக்காவின் விழித்திரையில் விழுந்த தூசி என வர்ணிக்கப் படும் கியூபா வும் குறிப்பிடத்தக்க ஓர் தேசம்.
வெளியே இருந்து பார்ப்பவர்களுக்கும் அங்கே சென்று வந்தவர்கள் கூறும் நலம் சார்ந்த விடயங்களும், படாடோப வசதிகளும் அனைவரையும் வாழ்வில் ஒருமுறையேனும் அந்த வல்லரசு தேசத்தை சந்தித்து விட மாட்டோமா என ஏங்க வைக்கும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை!
இங்கே நாம் காண போவது அந்த உல்லாச வாழ்க்கையை பற்றி அல்ல!
அவர்கள் உல்லாச மாக வாழ நம்மை போல வளரும் நாடுகளிலும், மூன்றாம் உலக நாடுகளிலும்,
அந் நாட்டு மக்களின் கண் முன்னாலேயே அவர்களின் வாழ்வாதாரம் பறி போகும் கொடூரத்தை தான் நாம் இனி பார்க்கப் போகின்றோம் . .................!
நம்மில் பலர் அமெரிக்கா பற்றி பேசும் போது, 1990 களுக்கு பிறகு அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகள் தங்கள் தொழிலை இங்கே தொடங்கியதால் தானே நம்மில் பலரின் வாழ்க்கை தரம் பொருளாதார வழியில் முன்னேறியுள்ளது, முன்னேறிக் கொண்டிருக்கின்றது....!
அந்த தேசத்தை எப்படி நீங்கள் தவறாகவோ திரித்தோ கூற முடியும் என்ற கேள்வியை நான் பல முறை எதிர் கொண்டுள்ளேன்.
அதற்க்கான பதிலை விவரமாக கூறினால் என்ன என்று நினைத்ததன் விளைவு தான் இதை எழுதவது என்ற நிலைக்கு கொண்டு வந்துள்ளது!
- தொடரும்
No comments:
Post a Comment