வினோதினியில் துவங்கி வினுப் பிரியாவில் வந்து நிறுத்தியிருக்கிறது நமது So called அறிவியல் வளர்ச்சி .
நிர்பயா துவங்கி சுவாதி வரை தாங்கள் படித்த பாட புத்தகங்களும் C ++, MBBS எல்லாம் தனக்கு ஆபத்து வரும் போது எப்படி காத்து கொள்வது என்ற அடிப்படை அறிவை கூட ஆரம்ப கல்வியிலேயே வழங்காமல் போனது யார் தவறு???
நம்மவர்களுக்கோ மகன் / மகள் வளர்ந்ததும் கை நிறைய சம்பாதிக்கனும். கழுத்து நிறைய நகையும் காரும் வீடும் வாங்கனும் அதுக்கு என்ன வேண்டுமானாலும் படிக்க வைக்கலாம்! இந் நாட்களில் இது தான் So Called "settled in life "
அது அலுவலகத்தை விட்டு வெளியே வந்ததும் ஒத்த பைசாவுக்கு கூட பிரயோஜனம் இருக்காது என்று தெரிந்தும் சேர்க்கிறோம் கல்வி நிறுவனங்களில்.
தனக்கு நேரும் தனிப்பட்ட பிரச்சினைகளை தன் குடும்பத்தாரிடம் கூட பகிறுவதை அந்த பெண்ணுக்கு ஒரு வித மோசமான அனுபவமாக மாற்றி வைத்திருக்கிறோம்.
சாதாரணமாகவே பெண்கள் தன் சார்ந்த விடயங்களை அம்மாவை விட அப்பாவிடம் அளவளாவுதல் அதிகம் காணலாம். அவள் பருவம் அடைந்த உடனேயே அது தலை கீழாக மாற்றி விடப் பட்டிருக்கும்.
அங்கே துவங்குகிறது வீட்டிற்க்கும் அவள் பிரச்சினையின் தீர்வுக்குமான இடை வெளி தூரம்.
#பூமலர் தன் விடயங்களை என்னிடமே முதலில் பகிர வேண்டும் என்றே காத்திருக்கிறேன். மகளின் தேவைகளை பூர்த்தி செய்வதில் மட்டுமல்ல பிரச்சினைகளை தீர்க்கவும் அப்பாவை விட வேறு யாரால் சிறப்பாக செயல் பட முடியும்.
அம்மாக்கள் ஆறுதலோ அடியோ கொஞ்சம் அதிகம் காட்டி நிறுத்தி விடுவார்கள். அவர்களுக்கு தெரிந்தது எல்லாம் கலாச்சாரம் என்ற பெயரில் குடும்ப கௌரவத்தை காக்கிறேன் என பிரச்சனைகளை மூடி மறைப்பது தான்.
நிர்பயா வின் டெல்லியும் தினம் தினம் கற்பழிப்புகள் அரங்கேறும் வட கிழக்கின் "இரோம் சர்மிளாவும் " இங்கே தான் இருக்கிறார்கள்.
அருந்ததிராயும் நந்திதாஸ்ஸும் நடைமுறைக்கும் வேலு நாச்சியாரும் ராணி மங்கம்மாளையும் வரலாற்றிலும் காட்டி வளர்ப்பேன்.
உடனே,
பொண்ண பையன் மாதிரி வளர்க்க போறியான்னு கேட்காதீங்க . பெண்ணாகவே தான் வளர்வாள் தன் சுற்றத்தையும், சுற்றி நப்பதையும் பகுத்தறிபவளாக .....!
No comments:
Post a Comment