Thursday, 1 September 2016

இரோம் சர்மிளாவை காண நாங்கள் புறப்பட்ட கதை - 2



பழமை நிரம்பிய கட்டிடங்கள் , மோசமாக பாராமரிக்கப்படும் சாலைகள் இவைதாம் மணிப்பூருடைய அழியா சொத்துக்கள் என தைரியமாக கூறலாம். நாங்கள் தங்கி இருந்த விடுதி முழுமைக்கும் சுற்றி அழுக்கும் வன் பொருள் விற்க்கும் கடையும் தான் இருக்கின்றன. கிட்டதட்ட நம் பேரிஸ் கார்னர் போல என்று சொல்லாம். எங்கு நோக்கிலும் வெறும் சிறப்பு ஆயுதப் படை இராணுவம் தான். அனைவரின் கையிலும் குறைந்தது நான்கு அடி உயரத்தில் அதி நவீன ரக துப்பாக்கியினை காணலாம். அவர்களை படம் எடுக்க தவறவில்லை குணா, கிட்டிய கேப் ல் எல்லாம் கிடா வெட்டினார் ! ஓரளவுக்கு மேல் எங்களுக்கே பயம் வந்து விட்டது ,கரணம் எங்களை தவிற அந்த ஊர் மக்கள் அனைவரும் மிகவும் சாதாரணமாகவே இராணுவத்தை எதிர் கொள்வதாகவே தோன்றியது! ஒரு வேளை 20 வருடங்களாக அப்படியே பழகி விட்டதாலோ என்னவோ ! நாங்கள் நகரத்திற்க் குள் நுழையும் போது ,ஓர் இஸ்லாமியரின் கடையில் புகுந்து ஏதோ விசாரித்துக் கொண்டிருந்தனர் இரு இராணுவ வீரர்கள்.
பயண களைப்பில் நன்றாக உறங்கி விட்டிருந்தோம். அந்த ஹோட்டல் தான் பாது காப்பானது என சர்மிளா வின் அண் ணன் பரிந்துரை செய்து இருந்தார். இரவு ஏழு மணி இருக்கும் தூங்கி எழுந்த பின்னர் வெளியில் செல்ல தயார் ஆனோம் . . எங்களின் புறப் படுதல் படலத்தை கண்ட விடுதி மேல் அலுவலர் , . எங்கே செல்கிறீர்கள் என்றார் .....! -வெளிய்ல் சுற்றி விட்டு வருகிறோமே கொஞ்சம்cash எடுத்து கொண்டு வந்து விடுகின்றோம் . - உங்களுக்கு என்ன வேண்டுமானாலும் கேளுங்கள் ,கொண்டுவர சொல்கின்றேன். ஆனால் வெளியே செல்ல மட்டும் அனுமதி இல்லை . பணம் நாளை கொடுத்தால் போதும். Here every thing would be closed @ 6.30 pm.
-A.T.M -That too ,if you want to go Military will ask you a question's & make you stay with them. When they will allow you to go .....no one knows. அதற்கு மேல் ஒன்றும் செய்ய இயலாது என்பது மட்டும் புரிந்தது ! நல்ல வேளை நுப்பிலான் நினைவு சின்னம் , 2000 ம் ஆண்டில் 20க்கும் மேற் பட்ட பெண்கள் இராணுவ முகாமிற்க்கு முன்பாக ,உலக அரங்கில் இந்தியா வெட்கி தலை குனிந்து நிற்க செய்த 'இண்டியன் ஆர்மி ரேப் அஸ் 'என்று நடத்திய போராட்ட களம் போன்றவற்றறை மதியமே பார்த்து விட்டோம். (மறு நாள் காலை பிரபா தொலைபேசி யில் கூறிய பிறகு தான் உண்மையிலேயே அந்த போராட்டக்களம் நினைவுக்கு வந்தது ) சர்மிளாவின் அண்ணன் ஏற்கனவே 'நாளை காலை எங்களை எஸ்.பி அலுவலகம் வந்து விடுங்கள் (அதாவது புதன் காலை 10 மணிக்கு ) அவரிடம் பேசி அனுமதி வாங்கலாம் என்று கூறியிருந்தார் . அதனால் நேரமாக எழுந்திருக்க வேண்டும் என்பதாலேயே உறங்க சென்று விட்டோம் ! இதற்கிடையில் , என் கடன் அட்டைக்கு பணம் கட்டியதோடு சரி! அதன் பின் முகநூல் ,டிவிட்டர் இணையதளம் எதுவுமே இயங்க வில்லை ! மறு நாள் அதிகாலை யே பிரபா அழைத்து காவல்துயினரிடம் என்ன பேச வேண்டுமென்று குறிப்பாக உணர்த்தி விட்டிருந்தார் . அடுத்த அரை மணிக்கெல்லாம் சர்மிளாவின் அண்ணன் தொலைபேசி யில் அழைத்துஓர் அவசர வேலை காரணமாக தான் மேற்கு இம்பால் செல்வதால் , எங்களையே நேரடி யாக மத்திய சிறைச் சாலைக்கு சென்று சூப்பிரண்ட் ஆப்போலீஸை ( SP) சந்தித்து பேச சொன்னார் . தெரியாத ஊர் தான் ஆனாலும் வேறு வழி இல்லை என நாங்களே அந்த இடத்தை தேடி நடக்க ஆரம்பித்தோம். வழியில் ஓர் ஆட்டோவிடம் வழியை கேட்டு சென்றடைந்தோம் . மத்திய சிறைக்கு முன்பாக வலப் புறத்தில் எஸ்.பி அலுவலகம் ! பச்சை பசேலென்ற புற்களும் அதற்கு ஈடாக தண்ணீர் தேங்கி நிற்கும் சாலையுமாக எம்மை வரவேற்பு அளித்தது . உள்ளே செல்லும் முன்னே வழியிலேயே நின்ற உதவி காவலர் ஒருவரை பார்த்து , நாங்கள் எங்கிருந்து வருகிறோம் ,என்ன விடயம் என்பதை கூறினோம் . காத்திருங்கள் எஸ்.பி வரும் நேரம் தான் என்றார் . அலுவலக வாசலில் மரம் ஒன்றில் 5 வயது குழந்தை ஒன்று ஏறி எதையோ பறித்து கொண்டிருந்தது !அவங்க அம்மா அழைத்ததும் அங்கிருந்து நேராக கீழே விழுந்து ஓடியது . நாங்கள் தான் பதறி விட்டோம் . அக் குழந்தை சிறிதும் அலட்டிக்க இல்லை. மணிப்பூர்il பெண்கள் மட்டுமே வேலைக்கு சென்று , ஆண்களை வீட்டை கவனிக்க வைத்த ஊர் ஆயிற்றே சும்மாவா !!!!
சிறிது நேரத்தில் எஸ்.பி வந்து சேர்ந்தார் . அவரை பார்த்தவுடன் நாங்கள் எழுந்து நின்றோம் . எங்களை பார்த்து ,யார் என்ன வேண்டும் என மணிப்பூரியில் கேட்டார் . நாங்கள் ஆங்கிலத்தில் விடயத்தை கூறினோம் . . ஓஓ............oooo என்ற படியே உள்ளே சென்றார் . அடுத்த நிமிடங்களில் ஓர் வெள்ளை உடை தரித்த நபர் ஒ ருவர் எங்களை அழைத்து சென்று தனியறையில் விசாரணை செய்தார் .
எங்கிருந்து வருகிறீர்கள் - சென்னை ,தமிழ்நாடு -எதற்காக நீங்கள் அவரை பார்க்க வேண்டும் - அவரின் ,விடாமுயற்சி யும் ,15 வருட போராட்டத்திற்கு ம் வாழ்த்துகள் தெரிவிக்க வேண்டும் , நான்
- அவரை பற்றி நிறைய படித்துள்ளோம். We impressed on her sacrifise, இது குணா
-Are you from media?? - No No we are General Public ஹூம்ம்.......ம் அன் பார்ட்ச்சுனேட்லி போன july 25 ம் தேதி ல இருந்து உள்துறை அமைச்சகம் சட்டத்தில் சில திருத்தங்களை செய்துள்ளது ! முன்னெல்லாம் வர்ற போறவங்க எல்லாம் இஷ்டத்துக்கு பார்க்க விட்டு கிட்டு இருந்தாங்க . இப்போ நீங்க பார்க்கணும் னா முப்பது நாள் முன்பே அப்ளே செஞ்சு இருக்கனும். நீங்கள் ஊடகமாக இருந்தால் 1லட்சம் முன் பணமா கேமரா , ஆடியோ பதிப்பு சாதனங்களுக்காக கட்ட வேண்டும் . ஒரு நான்கு பக்க பேப்பரை காட்டி இத்தனை யும் பேசினார். அதை குணா பத்திரமாக போட்டோ எடுத்து கொண்டவர் , Please do something Sir, என விண்ணப்பம் கொடுக்கும் பையனாக மாற ஆரம்பித்திருந்தார். அதற்கு வழி சொல்வது போல அந்த வெள்ள ஜிப்பா நீங்க தலைமை செயலகத்துக்கா போய் பேசி பாருங்களேன் என ஏதேதோ கதை சொன்னார் . we spend with him more then 3 minutes.But nothing happened. நானோ , நீங்கள் எ.ஸ்பியிடம் பேச ஐந்து நிமிடங்கள் அனுமதி வாங்கி தாருங்கள் . we will Convinse him. No,no, Sir is very Strict and this is not easy என்று சொன்னார் . தேங்க்யூ என்று கூறி விட்டு வெளியேறினோம் . ஆனால் ,, நான் இட்ஸ் ஓகே என்று மட்டுமே கூறி விட்டு வந்தேன் . காரணம் நம் வேலை இன்னும் முடிய வில்லைyea . ஒரு மாசம் முன்பே அப்ளே பண்ணனுமாம ..... அடேய் , 10 நாள் விடுமுறைகளை 5 நாளாக குறைத்த பின் தான் எங்கள் மேலாளர் மூஞ்சில சிரிப்பு வந்துச்சுன்னு சொன்னா உனக்கு புரியவா போகுது. செம கடுப்புல வெளியே வந்தோம். தலைமை செயலகத்தில் உள்ள அந்த நபரை சம்மதிக்க வைத்தால் மட்டுமே காரியம் நடக்கும் என்கிற நிலை ! இருவரும் ஏதோ அத்து வான காட்டில் விடப் பட்டது போல உணர்ந்தோம் . அந்த தலைமை செயலர் கண்டிப்பாக இதற்கு ஒப்புக்கொள்ள செய்வாரா என்பதும் சந்தேகமே ! நான் யோசித்து சரியாக இருந்தது . உடனடி யாக பிரபாவை அழைத்தார் குணா , அவர் தெளிவாக கூறிவிட்டார். இது நீதித் துறையின் கீழ் வரும் . உள் துறைக்கும் இதற்க்கும் சம்பந்தமே இல்லை நீங்கள் அங்கே சென்று அனுமதி மறுக்க பட்டால் அதை வைத்தே இவர்களும் இல்லை என்று கூறி விடுவார்கள். கிட்டத்தட்ட இருவருக்குமே ஒன்றுமே புரியவில்லை . உடனடியாக சர்மிளாவின் அண்ணன் மற்று ஓர் மாற்று ஏற்பாட்டை செய்ய துவக்கி விட்டார் எங்களுக்காக . குணா ,ப்ரோ முதலில் ஓர் இடத்தில் உட்காருவோம் என ஒரு டீக் கடையை தேடி அமர்த்தினார் 2012 ன்னு ஒரு Film டவந்தது பார்த்திருக்கின்றீர்களா நீங்கள் !!! அதில் விஞ்ஞானி ஒருவர் அந் நாட்டின் தலைவரை பார்க்க செல்வார். அதற்கு அந்த தலைவர் வேகமாக நடந்து கொண்டே , இப்போ உனக்கு நேரம் ஒதுக்க முடியாது நீ அப்பறம் வா என்பார்President. - இந்த பதிலை கேட்க நான் 2000 கி.மீ பயணம் செய்து வர வில்லை என்று கூறுவார். After that president will start to listen his query ! ஏனோ திடீரென இந்த காட்சி மனதில் வந்து போனது . அங்கேயே உட்கார்ந்து விடுவோம் என்று மீண்டும் எஸ்.பி அலுவலகம் நோக்கி நடக்க துவங்கினோம். இந்த முறை ஓர் முடிவோடு தான் உள்ளே சென்றோம் . ஏற்கனவே குணாவிடம் பிரபா கூறியிருந்தார் , நீங்கள் அவர்களுடன் வாக்கு வாதமே அல்லது பிரச்சினை யை எதிர் கொள்ளவோ தாயார் எனில் ஓர் ஊடகவியளாலர் என்ற முறையில் அனைத்து உதவி களும் செய்கின்றேன். என்று ! அதே பெஞ்ச் ல் போய் மீண்டும் அமர்ந்தோம். Now that person not seen who's refused our proposal. His named call Mr. Hooter . அடத் தக்காளி ! என் டிபார்ட்மெண்ட் ல இருந்து பேரை எடுத்து வச்சிக்கிட்டே இப்படி பண்ணா எப்டி டே ! ( In our Fire fighting Department we called one equipment Calling "Hooter" . ) if you staying in apartment you can see near the fire 🔥 protection shafts. 3 Option will be there 😊.From bottom, 1.M CP 2.Hooter 3.Speaker.
மீண்டும் அதே வரவேற்பு பகுதி , வெளியே சென்றிருந்த எஸ்.பி உள்ளே வந்து கொண்டிருந்தார் . இம்முறை அவருடன் வெள்ளை டி.சர்ட் அணிந்த வேறொவர் வந்து கொண்டிருந்தார் . எங்களை பார்த்ததும் அவரிடம் ஏதோ மணிப்பூரியில் சொன்னார் . அதில் சர்மிளா என்பது மட்டுமே புரிந்தது . சிறிது நேரத்தில் அடுத்த காவல்துறை அலுவலர்கள் வந்து எங்களை கண்டு யார் இவர்கள் என வினவினார்கள் . அதற்கு ஒரு உதவியாளர் , ஒவ்வொருவருக்கும் பதில் கூறிக் கொண்டு இருந்தார் . அவர்கள் பேசியதால் எனக்கு ஷர்மிளா ,ஷர்மிளா ,ஷர்மிளா என்பது மட்டும் கேட்டுக்கொண்டே இருந்தது . பின்னர் ஒருவர் வந்து , Where are you coming from என திரும்ப முதலில் இருந்தே ஆரம்பித்தார் . ஸ்ஸ்ஸ ஸ ஸ ப் ப ப் ப் பா என ஆகி விட்டது . ஆனால் முன்னேற்றம் இருக்கும் என தோன்றியது .
அடுத்த கொஞ்ச நேரத்தில் ,வெள்ளை டி.சர்ட் அதிகாரி இருந்த அறைக்குள் அழைத்து சென்றார்கள் . அவர் எங்களை புன்னகையோடு வரவேற்க , கொஞ்சம் அமைதியாக உணர்ந்தோம் . நாங்கள் யார் எதற்காக வந்துள்ளோம் என அனைத்தும் பொறுமையாக கேட்டறிந்தார். Do you want visit her for what purpose. -Just want to speak with her., She is impressive us very much. 15 years hunger strike don't not easy matter naa ! - What you are doing???? Engineering,medical,police 🚓,business??? I am a Plumbing Engineer. -me I am a Electrical engineer - Guna (இத்தனை நாள்ல Guna, Electrical படிச்சிருக்குறதே அப்போதுதான் எனக்கே தெரியும் . ) Oh !okay 👌 Are you coming here for only purpose of meet Sharmila or Anything else.
-No sir, only want to meet her. And get back to home. We having small amount of holidays only is there. இப்படியே 30 நி மிடங்கள் மேலாக நீண்டது எங்கள் உரையாடல்.
ஒரு கட்டத்தில் நாங்கள் 3000 கி.மீ கடந்து வந்துள்ளோம் , நேற்று ஆகாய மார்க்கம். நாளை தரை வழி பயணம் என்பதெல்லாம் அவரை கொஞ்சம் யோசிக்க வைத்தது.
1992-95 தான் ,சென்னை ,வேலூரில் பணியாற்றிய அனுபவம் .தற்போது வேலூரில் ப்ளை ஓவர் போட்டது வரை கேட்டார். நாங்கள் கொண்டு சென்றிருந்த புத்தகத்தையும் (I want English edition book 📚 regarding Tamil Eelam & L.T.TE nu ஒரு பதிவு கூட எழுதினேன் ஞாபகம் இருக்கா ... தோழர்.கொண்டல் அந்த புத்தகத்தை கொடுத்து அனுப்பி இருந்தார் . தோழர்.திரு வும் நல்ல புத்தகம் எடுத்து செல்லுங்கள் என்று கூறியிருந்தார் )எல்லாவற்றையும் பார்த்துவிட்டு அவரே ஒரு வெள்ளை தாளை கொடுத்து விண்ணப்பம் ஒன்று எழுத சொன்னார் . அவரே பேனாவையும் கொடுத்தார் . எழுதி கையொப்பம் இட்ட பின் அதை எடுத்துக் கொண்டு எ.ஸ்பி யை காண சென்றார் . இவர் பெயர் S.K.Thouthoung ,. D.S.P. என அங்கிருந்த பெயர் பலகையை பார்த்து அறிந்து கொண்டோம். முன்னதாக ,எங்கள் அடையாள அட்டையை கேட்ட போது என் கடவு சீட்டை கொடுத்தேன் . இது இந்தியா தான் பாஸ் போர்ட் எ ல்லாம் தேவையில்லை என சிரித்தார். இறுதியாக எஸ்.பி யிடம் பேசி எங்களுக்காக அனுமதி வாங்கி விட்டார். எங்களை உள்ளே அழைத்தனர். எ.ஸ்பி எங்களிடம் , We stopped all like this visitors, but you came from long distance that's what we allow you to meet her. But you having only 5 minutes. And no photo graphs ,no voice regarding.... I agree sir, when you take this much risk for us we should be honest naa ! Just take all my phone's & cameras, pass port even single pen too. After our exit,you give my things. -Ha...ha...ha no problem. Take your time.but don't cross the laws &rules. பின்னர் நாங்கள் கொண்டு சென்ற புத்தகத்தை புரட்டினார். ஒரு வழியாக எங்கள் பேப்பரில் கையொப்பம் இட்டார். நன்றி கூறி புறப்படும் நேரம். ப்ரோ இவங்க கூட ஒரு போட்டோ .............என்றார் குணா ! அவங்க கூட தான் எடுக்க முடியாது உங்க கூட எடுத்துக்குறோமே என்றோம். கொய் கட் பட் நஹி ஓஹின்னா என்றார் டி.எஸ்.பி Thouthoung சிரித்து கொண்டே ! பாகு பலி தமிழ் வாலி பிலிம் ஹேன்னா - ?????? - எங்களை தன் Scooty-ல் ஷர்மிளா வை காண அழைத்து சென்ற ராஜ் குமார் என்பவர். மணிப்பூர் முழுமைக்கும் ஒரு வாரமாக பெட்ரோல் கிடைப்பதில் சிரமமாம். அதற்கு மட்டும் 100ரூபாய் கொடுத்து விடுங்கள் என்றார் . தாரளமாக என்றேன் நான். மேலும் நாங்கள் மருத்துவமனை யை தேடி அலைய கூடாது என இவரை டி.எஸ்.பி யே எங்களோடு அனுப்பி இருந்தார் .
நல்ல நண்பராக மாறி விட்டார் சிறிது நேரத்தில் . வழியில் ஆர்மி எங்களை மடக்க தன் அடையாள அட்டை காட்டி எங்களை கூட்டி சென்றார் . சில உள்ளூர் சாதி பிரச்சினை காரணமாக பேஸ் புக் ,டிவிட்டர் , இணையதளம் போன்றவற்றை அரசு இரண்டு நாட்களாக முடக்கி வைத்துள்ளதாக கூறினார் . அப்போதுதான் என் FB ,இணையதளம் வேலை செய்யாததின் காரணம் புரிந்தது . 25 நிமிட பயணத்தில் ஷர்மிளா இருக்கும் ஜவஹர் லால் மருத்துவமனையை சென்றடைந்தோம்.
எங்களை நேராக எந்த பரிசோதனையும் இன்றி உள்ளே அழைத்து சென்றார் . கிட்டத்தட்ட அனைத்து மருத்துவ பெயர் பலகைகளும் மணிப்பூரியிலேயே இருந்தது ! பெண் காவலர் ஒருவரை பார்த்து விடயத்தை கூறி அனுமதி சீட்டை காட்டினார். அவர் உள்ளே சென்று பேசி விட்டு பக்கத்து அறை செல்லுங்கள் என்று கை காட்டினார் .
இரோம் ஷர்மிளா இருக்கும் அறையை நோக்கி நடந்தோம்.
-தொடரும்

No comments:

Post a Comment