இரோம் சர்மிளாவை சந்தித்த கதை - 3 மற்றும் நிறைவு பகுதி
வேல்ல்ல்லுப் ப்ப்ப்பிள்ளை பிரப்ப்ப்பாகரன். -நாங்கள் கொடுத்த
புத்தகத்தின் முதல் பக்கத்தில் இருந்த படத்தினை கண்டு அவர் உதிர்த்த வார்த்தைகள் இவை.
உலகின் குறிப்பிடத்தக்க ஒரு சில இரும்பு பெண்மனிகளில்
ஒருவர் என வர்ணிக்கப் படும் "இரோம் சானு ஷர்மிளா" எங்களை வாசல் வரை வந்து நின்று வர வேற்பார் என நாங்கள் கனவிலும் கணித்திருக்க வாய்ப்பில்லை!
Please come in என்றார், இரு கரம் கூப்பி நின்ற எங்களைப் பார்த்து .
"இவங்க சென்னையில இருந்து உங்களை பார்ப்பதற்க்காகவே வந்துள்ளனர் என ராஜ் குமார் கூறவும். Is it ??? ... - She just little blushing.
உள்ளே வந்து அமருங்கள் என்று ஓர் நாற்காலியை காட்டினார்.
- நீங்கள் முதலில் அமருங்கள் என்றோம்.
இரு கட்டில்களில் ஒன்றில் பாதி இடத்தை புத்தகங்கள் அடைத்து விட்டிருந்தது. மீதி சரி பாதியை அவருக்கு வந்திருந்த கடிதங்களில் நிரப்பியிருந்தன! ( கிட்டதட்ட 5500 சொச்சம் என பின்னர் கூறினார். )
மற்றுமோர் கட்டில் அவருக்கான இடம்.
நாங்கள் இருவர் நிற்கின்றோம் ஒரு நாற்காலி தான் இருக்கின்றது என உணர்ந்ததும். நொடியில் அருகில் இருந்த குளியலறை யினுள் இருந்து ஓர் நாற்காலியை இழுக்க ஆரம்பித்திருந்தார். சிறிய இடம் என்பதால் நாற்காலி கதவில் பட்டு சத்தம் எழுப்ப, Please leave it, leave it i will take என்று பதறிய குணாவை கண்டு கொண்டதாக தெரியவில்லை!
அந்த Chair ஐ எடுத்து போட்டு என்னை அமர வைத்த பிறகுதான் எதிரில் இருந்த அவருக்கான இடத்தில் அமர்ந்தார் .
புகைப் படங்களிலும் காணொளி காட்சிகளிலும் பார்த்தை விட இத்தனை அழகாகவும் மூன்று மடங்கு நிறமாகவும் இருப்பார் என நாங்கள் நினைக்கவில்லை! அது வட கிழக்கு மண்ணின் மகிமையா அல்லது பதிநான்கரையாண்டு ஆகாரமின்மையால் வந்த உடல் வெளிர்ப்பா என என்னால் இப்போதும் சரியாக கூறத் தெரியவில்லை! பாரம்பரிய உடை,
நீளமாக அதே நேரத்தில் அதிகமாக கொட்டிவிட்டதால் கலகலத்து போயிருந்த கூந்தல், வெட்டப் படாத கால் நகங்கள் என அவரை பார்த்ததும் புரிந்தது, பெண்கள் தனக்காக செய்து கொள்ளும் சிறிய அளவிலான அலங்கார ஒப்பணைகளுக்கு கூட அவர் கொஞ்சமும் ஆர்வம் காட்டுவதில்லை என்று!
எப்படி வந்தீர்கள் ....!
-Yesterday morning we got a flight at chennai and reach here @ 12.25pm itself.
- Did you came here just want to meet me
-yes. It's our long time plan but couldn't make it. But now it's finally happened.
அடுத்த சில நொடிகளில் எங்களை பேச விடாமல் அவர் பரபரப்பாக செயல் படத் தொடங்கினார
தனக்கு வந்த கடிதங்களில் ஒரு கத்தையை தனியாக எடுத்து வைத்திருந்தார் அவையனைத்தும் ஓர் தன்னார்வ அமைப்பால் Irome Sharmila பற்றி அமெரிக்காவில் நடந்த ஆதரவு கடித போராட்ட கண்காட்சியில், குழந்தைகளும் தன்னார்வலர்களும் அவருக்கு அனுப்பிய கடிதங்களில் இருந்து அவர் பல முறை திரும்ப திரும்ப படித்தவைகளாக இருக்கலாம்…….. அதில் சில வற்றில்...,
Be strong iron lady
All the best for your movement
Love you Sissy
We want you, please take care of your health
என பல தரப் பட்ட கடிதங்கள்.
அனைத்தையும் இந்திய அரசு அலசி ஆராய்ந்த பின்னர் தான் இவரிடம் கொண்டு வந்து சேர்த்திருக்கின்றது!
அந்த கடிதங்களில் ,ஒரே பெண் இரு முறை கடிதம் எழுதியுள்ளார் என்பது வரை மிக நுணுக்கமாக அதே நேரம் ,கவனமாக சேகரித்து வைத்துள்ளார் . அவருக்கு தன் நன்றியை கூறி விட வேண்டும் என்ற தவிப்பு அதில் தெரிந்தது . ..! But there is no mail or phone number on that card.
ஸ்கூட்டியில் வரும் போதே ராஜ் குமார் எங்களிடம், சாப் ஆப்கோ பாஞ்ச் மினிட் டைம் தியா, but i will give one more 10 minutes to you . With in 15 minute you have to finished the conversation and come out என்று கூறியிருந்தார். அதே போல எங்களை அறிமுகம் செய்து வைத்து விட்டு அப்போதே அவர் வெளியே சென்றிருந்தார்.
He's my fiancé, ஹீ ஸ் ன் அயர்லான்ட் -ஓர் டெடி பியர்
பொம்மை வைக்கப் பட்டிருந்த சிறிய பாலிதின் பெட்டியில் ஒட்டியிருந்த பாஸ்போர்ட் சைஸ் படத்தை காட்டி சொன்னார்.
What? ???? என இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டோம்.
Are you serious, is he your fiance -குணா கொஞ்சம் குழம்பி போய் கேட்டார்.
உங்க காதலரா ?????? - என்றேன் நான்.
-Yes....yes.
- Did you meet him?
- Many times. என்றார்.
இது எனக்கு பழைய செய்தி தான் . முன்னமே இதை "ஹைதர் பட இயக்குனர் Vishal Baradhvaj Times now ல் கூறியிருந்தார். " Iron lady heart melted for some special one " என்ற தலைப்பில். - ஷர்மிளா வை சந்தித்ததை இவ்வாறு கூறியிருந்தார். ஆனால் எங்களிடம் இதை இத்தனை நம்பிக்கையாக பகிர்ந்து கொள்ளுவார் என சிறிதும் யோசிக்கவில்லை அன்று!
ஆனால் ஏனோ அந்த நொடி அவரை எங்கே பார்த்தீர்கள், எப்படி பழக்கம் என்ற கேள்வியெல்லாம் கேட்க தோன்றவில்லை எங்களுக்கு!
Can you write a mail to him என கேட்டவாறே , பதிலுக்கு எதிர் பாராமல் உரிமையாக குணா வின் கையை பிடித்து ஓர் மின் அஞ்சல் முகவரியை
எழுதினார். (அந்த கையை இருபது mega pixel camara வில் குறைந்தது இருபத்தியோரு கோணத்திலாவது குணா படம் எடுத்திருப்பார் என்பது தனி கதை)
மின் அஞ்சல் எழுதுவது பற்றி பேச்சு வந்த போது, ஓர் அமெரிக்க ஊடகவியளாலர் தனக்கு எழுதிய கடிதத்தை காட்டி Ask them come and take the interview of mine. And let them spread throuh out the world. எங்கள் மக்களுக்கு ஓர் விடிவு பிறக்கும் என்று நம்புகின்றேன். உங்களை போன்றோர் இதை வெளியில் கொண்டு செல்லுங்கள். என் போராட்டம் இம் மண் விடுதலை பெறும் வரை ஓயாது என்பதை உலகிற்க்கு தெரியப் படுத்துங்கள்.
- இதை கூறும் போது அவர் கண்களில் ஓர் ஈரமான தீ எட்டி பார்த்ததை நான் உணர்ந்தேன்.
சரி சூழ்நிலை யை இயல்புக்கு கொண்டு வாருவோம் என நானே, உங்களை சந்திப்பதில் மகா .தமிழ். பிராபகரன் பெரிதும் உதவினார் என்றும், அவரின் அஸ்ஸாம்,மணிபூர் பற்றிய குறும் படங்களையும் பற்றி கூறினேன்.
அப்படியா என்றார். (அவரின் பாதுகாப்பு காரணமாக சில வற்றை தவிற்கின்றேன்.)
நாங்கள் கொண்டு சென்றிருந்த புத்தகத்தை கொடுத்தோம்.
முதல் பக்கத்தை புரட்டியதும் , தந்தை செல்வா , பிரபாகரன் படங்கள் இருந்தன .! இவரை தெரிகிறதா என படத்தில் கையை வைத்து காண்பித்தேன். பிராபகரன் என கூறு வாரா இல்லை யோசிப்பாரா எனநாங்கள் தயங்கிய போது தான் மிக தெளிவாக முதல் வரியில் நீங்கள் படித்ததை போல அழுத்தம் திருத்த மாக "வேலு பிள்ளை பிராபகரன்" என உச்சரித்தார்.
Wow you know his full name…..! – Guna
Why not ! I wrote poetry also about him in my earlier days. But he took violence ,that’s only I unable to accepted .
I agree your point. But you have to understand why he took this way. Because this is not just a 10 or 20 years freedom struggle fighting.
it’s started from 1954’s. See this picture (தந்தை செல்வாவை காட்டி) we calling him Thanthai Selva means Father.Selva .
இவர் முதல் முப்பது ஆண்டுகள் அறவழி போராட்டத்தை மட்டுமே முன் எடுத்தார் . ஆனால் உயிர் பழி அதிகம் ஆனது தான் மிச்சம். உண்மையில் பல யாதர்த்தங்கள் வெளி உலகிற்க்கு மறைக்கப் பட்டு விட்டது .
இந்த புத்தகம் நடுநிலையை மட்டுமே பேசும் , உங்களுக்கு தானாக பின்னர் புரியும் என்றேன்.
Definitely I would read என்றார்.
அது வரை சீராக சென்று கொண்டிருந்த அவரது பேச்சு திடீரென 100 டிகிரி வெப்பம் போல் ஓர் நொடியில் மாறியதை நாங்கள் வாழ் நாளில் மறக்க இயலாது .
அது ,
பேசிக் கொண்டிருக்கும் போதே நான் ஏதோ ஹிந்தியில் கேட்க எத்தனிக்க , I don’t know Hindi. Speak in English என நான் பேசி முடிக்கும் முன்னமே அவரிடம் இருந்து பதில் வந்து விட்டிருந்தது. ! ( I Should accept here ,we just freeze few seconds)
அவ்வளவு நேரம் பேசிக் கொண்டு இருந்த போது நாங்கள் கேட்காத ஓர் குரல் தோணி அது. இது வரை தனக்கு ஹிந்தி தெரியாது என என்னிடம் சொல்லியவர்களிடம் என் அனுபவத்தில் கேட்காத ஓர் கர்வமான குரல் இது என்பதை உடனே உணர்ந்தேன்.
இதில் வேறு அர்த்தமே இல்லை என நீங்கள் நினைத்தால் அது என் தவறு அல்ல! இன்னும் நீங்கள் இந்த நாட்டை நம்பி கொண்டு இருக்கின்றீர்கள் என அர்த்தம்.
இதற்கிடையில் ராஜ் குமார் உள்ளே வந்து விட்டார் . கொஞ்சம் இயல்பானோம். புறப்படும் நேரம் ஆகி விட்டதால் . அந்த அமெரிக்க ஊடகவியளாலரின் மின் அஞ்சல் தேவை பட்டதால் அங்கே கிடந்த ஓர் பழைய News Paper ல் ராஜ் குமாரின் அனுமதியுடன் எழுதி வாங்கி கொண்டோம்.
அவரின் பொழுதுபோக்கே அவர் வளர்க்கும் இரு வெள்ளை எலிகள் தான். They are so lovely என்கிறார் அவைகளை பற்றி பேசும் போது.
இதில் எங்களை ஆச்சர்ய்ய படுத்தியது, நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்கள் அடுக்கி வைக்கப் பட்டிருந்த ஓர் கட்டிலின் அடியில் அவைகள் வளர்வது தான்.
Please write your fiancé name in Block letter. Because we couldn’t understand his name in mail address என்றேன்.
(நாங்கள் உள்ளே நுழையும் போது அனைத்தையும் ராஜ் குமாரிடம் கொடுத்து விட்டு தான் வந்தோம் . ) இவர் தான் பயன் படுத்த வைத்திருந்த பேனாவால் தான் குணா கையில் எழுதினார். இப்போதும் பேனாவால் எழுதுவார் என நினைத்தால் ஒரு கருப்பு மார்க்கரை எடுத்து DESMOND COUTINHO என பெரிதாக எழுதி கொடுத்தார் தன் காதலர் பெயரை.
(வீட்டிற்கு வந்த பின் நேற்று குணா தான் நியாபக படுத்தினார். ,
Bro அவங்க நம்மளை கலாய்ச்சிக்கிராங்கோ ப்ரோ ! நீங்க Block letter (Big letter) nu சொன்னீங்க ள்ல , அவங்க அதான் Black letter ல எழுதி குடுத்துட்டாங்க போல என்றார்.) அடங்கப்பா !
சச்சின்,கலாம், Happy New year 2015 என கலவையாக தன் சுவரை அலங்கரித்திருந்தார். 10க்கு 20 அளவுள்ள ஓர் மருத்துவ மனை அறையை அழகான பூங்கா, நூலகம் என மாற்றியிருந்தார்.
புறப்படும் சமயம் நாங்கள் அளித்த புத்தகத்தில், அவரால் தொடர்பு கொள்ள இயலாது என அறிந்தும் எங்களின் தகவல்களை பதிவு செய்து விட்டு வந்தோம்.
12.25 Pm இப்போ 12.40 க்கு வெளியே வந்திடனும் என்று கூறிதான் உள்ளே அழைத்து சென்றார் ராஜ் குமார் . உண்மையில் வெளியே வந்த போது மணி 01:05 Pm. Thanks to Rajkumar.
நாங்கள் வெளியே வந்து விட்ட பின் அவர் ஞாபகமாக எங்களிடம் இருந்தது, குணாவின் கையில் எழுதப்பட்ட எழுத்தும், மறதியில் நாங்கள் எடுத்து வந்திருந்த அதே அவரின் பேனாவும்.
No comments:
Post a Comment