Saturday, 19 November 2016

அமெரிக்க தேர்தல் 7 &8 November 16

  US ELECTION, Hilary, Trump

    இந்த கருமத்தை தவிர வேற News channel ல காட்ட ஒன்மே இல்லையா!!!!?!?

அரசியல் அரிச்சுவடி படிக்க ஆரம்பித்த காலத்தில் இருந்து இதுவரை மூன்று  அமெரிக்க தேர்தல்களை பார்த்துள்ளேன்.

அல்கோர் - ஜார்ஜ்.W.புஷ் இடையிலான போட்டி (2000. -01 என ஞாபகம் ) முடிவுகளின் சர்ச்சை தான் நாங்க தொழில்நுட்பத்துல வளர்ந்தவய்ங்கன்னு காலரை தூக்கி விட்டு சுத்திய வல்லரசை தலையிலயே 'பொளிச்'ன்னு போட்டு தம்பி ஓராமா போய் உட்காருப்பான்னு காலம் காறித்துப்பிய தேர்தல் அது!

  சாதாரணமாக மேற்குலக நாடுகளில் தேர்தல் முடிந்து ஆறு அல்லது தேர்தல் முடிவுகள் தெரிந்துவிடும் என்றே அறிந்திருந்தோம்!

ஆனால் அந்த தேர்தல் முடிவுகள் மட்டும் இதோ அதோ, காலையில், மாலையில் என இழுத்து ஒரு வழியாக ஆக முடிவு தெரியும் முன் வாரப் பத்திரிக்கைகள் முதல் பாதி கட்டுரை வெளியிட்டு அடுத்த வார Cover story க்கு தயார் ஆனாது பக்கங்கள்!

பின்னர் நடந்தது வரலாறு ……!

சரி நடப்பு தேர்தலுக்கு வருவோம்!
மோனிகா லெவென்ஸ்கி - பில் கிளிண்டன் சர்ச்சை தான் பெரிய விடயமாக பார்க்க பட்ட  காலம் எல்லாம் மலையேறி போய் விட்டது!

(ஆனால், அந்த நாடகமே KLA வுக்கு ஆயுதம் கொடுத்ததை திசை திருப்பதான் என்பது தனி கதை) .

ஹிலாரியும், டிரம்ப் ம் மாறி மாறி ஒருவரை ஒருவர் திட்டிக் கொள்ளூம் போதும் Twitter ல் கழுவி கழுவி ஊத்திக் கொள்ளும் போதும்  எனக்கு, இவிங்க இன்னும் எத்தனை இனப்படுகொலையை மறைக்க இந்த நாடகம் போடுறானுகளோன்னு தான் உள்ளே குடையுது!

சில அதிமுகவினர் ஹிலாரி அம்மாவோட தோழி அதுனால அவங்க ஜெயிச்சா நமக்கு நல்லதுன்னு வேற சுத்திக்கிட்டு இருக்கானுக!
அதைத் தான் ஜீரணிக்கவே முடியல!

ஒரு கீழ் திசை நாட்டின் கடை கோடி மாகாண முதல்வரை, உலக வல்லரசின் வெளியுறவுத்துறை அமைச்சர் Lift புடிச்சி 2nd floor வந்து பார்க்க அவ்ளோ அவசியம் என்னன்னு யோசிச்சீங்களா!!!?

  Let's go to small and important Flash Back :-

   98 -ல் தங்கள் திரிகோணமலை  பகுதியில் தாது மணல் திருடும் ஓர் கப்பலை தடுத்து திருப்பி போக சொல்கிறார்கள் விடுதலை புலிகள்.! ஆனால் கேட்கவில்லை!
ஓர் அளவுக்கு மேல் பொறுமை இழந்து ஆயுதங்களை உபயோகித்து ஓட ஓட விரட்டி அடிக்கின்றனர் புலிகள்!

அது, அமெரிக்காவுக்கு சொந்தமான கப்பல்!

அப்போது தான் விடுதலை புலிகள் மேல் முதன் முறையாக அமெரிக்கா தடை கொண்டு வருகிறது-!

   உலக வல்லரசான அமெரிக்காவின் கப்பலை ஓர் சாதாரண தீவில் இருக்கும் ஓர் ஆயுத போராட்ட குழு விரட்டி அடிப்பதா!!!??? என இதை கௌரவ விடயமாக பார்க்கத் துவங்கியது U.S.

   அதற்கு அடுத்த நகர்வாக அமெரிக்கா செய்த கருத்தியல் ரீதியான நரித்தனம் தான் கவனிக்க வேண்டிய ஒன்று!
2001 ல் நடந்த உலக வங்கி மாநாட்டில் அதன் துணை தலைவர் பேசும் பொழுது, தெற்காசியாவின் எழில் கொஞ்சும் அழகான இலங்கையை உலக வியாபார மையம் ஆக்க வல்லரசு நாடுகள் உதவ வேண்டும்!

அங்கே நடக்கும் உள் நாட்டு யுத்தத்தை தடுத்து நிறுத்த அவர்களுக்கு உதவுங்கள் என அறிக்கை விடுத்தார்.

அதன் பின் தான் தமிழின அழிப்பு சூடு பிடித்தது!

2001 - 02 ல் ஓஸ்லோ பேச்சுவார்த்தையின் போது  சுமூக தீர்வு ஏற்படாத வண்ணம் பார்த்து கொண்டது அமெரிக்கா!  எந்த அளவுக்கு என்றால் ………… சந்திரிகா, ரணில் புலிகளின் கோரிக்கையை ஒத்துக்கொண்டாலும் அதை உடைத்து எதிரான தீர்வை தமிழர்களை நோக்கி எடுக்க வைக்கும் அளவுக்கு!

ஏன் இவ்வளவு வஞ்சம் ஈழத்தின் மேல் என்பதை நாம் தெரிந்து கொள்வது அவசியம்  :-

  1950 களின் தொடக்கத்தில் தெற்காசியாவிற்கான அமெரிக்க வெளிவிவகாரத் துறை ஓர் அறிக்கையை வெள்ளை மாளிகைக்கு அளிக்கிறது, அதில், 
உலகின் 70 % வர்த்தகம் கடல் வழியே தான் நடக்கின்றது!
அதில் 45 % வர்த்தகம் தெற்காசியாவின் இலங்கை தீவை ஒட்டி செல்லும் வழித் தடமே மிக முக்கியமானதாக கருதப் படுகின்றது!

எனவே இந்த திரிகோணமலை உள்ளிட்ட கடற் பகுதி 50 வருடங்களுக்கு பிறகு மிக முக்கிய பொருளாதார மையமாக மாறும் விய்ப்புள்ளது!
அப்போது இப் பகுதியை எந்த நாடு அல்லது எந்த நாடுகளின் கூட்டமைப்பு இதை கட்டுப் பாட்டில் வைத்துள்ளதோ அதுவே அன்றைய வல்லரசா அல்லது வல்லரசுக்கு இணையாக திகழும்!

    இதை மனதில் கொண்டே US தன் காய்களை நகர்த்தியது!
நார்வே யின் முகமூடியில் அமெரிக்கா இருந்ததை தேசிய தலைவர் அன்றே சுட்டி காட்டினார்.
" அமெரிக்காவின் ஆயுத முகம் இஸ்ரேல்,  அமைதி முகம் நார்வே " என்று!

2001 ல் பெண்டகனும், WTO வும் விமான தாக்குதலுக்கு உள்ளாக்கப் படுகின்றது!
   
   அன்று இரவே 'War on Terrorism ' திட்டத்தை ஆரம்பிக்கிறது CIA வும் FBI யும்.

   அதில் ஒரு பகுதியாக தடை செய்யப் பட்ட இயக்கங்கள் பட்டியல் வெளியிடப் பட்டது!

அதில் விடுதலை புலிகள் பெயரை இணைத்ததில் முக்கிய பங்கு Hilary க்கு உண்டு!

இதை மறைக்க இன்னும் அமெரிக்க காலை நக்கி பிழைக்கும் சில தமிழக NGO க்களும் கட்சிகளும் அமெரிக்க வாழ் தமிழர்களில் சில அமைப்பும் "ஹிலாரி புலிகளை பெருமையாக பேசினார் என வருசத்துக்கு ஒருமுறை ஏதேனும் ஒரு கதையை விடுவதெல்லாம் நடந்து கொண்டுதான் இருக்கின்றது!

  2002 இரண்டில் LTTE க்கு எதிரான தன் ' பிளான் பீக்கான் ' என்ற திட்டத்தை செயல் படுத்த துவங்கின மேற்குலக நாடுகள்!

அதில் ஒரு பகுதி தமிழகத்தில் இருந்து கிடைக்கும் ஆதரவை புலிகளின் பெரும் பலமாக கருதி அதை தடுக்கும் முயற்சியில் கொண்டு வரப் பட்டது தான் ' தடா ' சட்டம்.

அந்த நேரத்தில் அமெரிக்காவுக்கு சரியாக கை கொடுத்தவர் ஜெ.  தான்.!

அதில் சிக்கி 500 நாட்களுக்கு மேல் சிறை சென்றவர்களை எல்லாம் நாம் அறிவோம்!

      அந்த நன்றியை நேரில் தெரிவிக்கத் தான் பல ஆண்டுகள் பின்னர் ஜெ. முதல்வராக இருக்கும் போது இரண்டு மாடி ஏறி வந்து சந்தித்தார் ஹிலாரி!   தனக்கான மரியாதை தாமதம் ஆனதை அவர் அமர்ந்திருக்கும் 'கெத்து ' லயே காட்டியிருப்பார் ஜெ.!
   
     இப்போ புரியுதா,  ஹிலாரி ங்குற நரி திராட்சை தோட்டம் பக்கம் ஏன் ஒதுங்கிச்சின்னு!

     இதுல அம்மா சொன்னா  ஹிலாரிக்கு ஓட்டு கேட்பானுங்களாம்!

மீத்தேன்

நியூட்ரினோ

கெயில்

Mecdonals

Pizza - உடல் பருமனை அதிகரித்தது!

Oats - உடல் எடையை காட்டுப் படுத்த!

Pepsi

Coke

  இதில் ஏதாவது ஒன்னு நம் வாழ்வாதாரத்தை காக்குமா???

சொல்லுங்க, எல்லாமே US companies தான்!

     அமெரிக்காவில் எவன்(ள்) ஆட்சிக்கு வந்தாலூம் 3ஆம் உலக நாடுகளில் சுரண்டுவதையும், கொள்ளையடிப்பதையும் நிறுத்த மாட்டார்கள்!  அதை முதலில் புரிந்து கொள்ளுங்கள்!

  24 மணி நேர செய்தி தொலைக்காட்சிகள் நடிகர் சங்க தேர்தலை எப்படி மிக அதி முக்கிய செய்தியாக காட்டினார்களோ அதே போலத்தான் US தேர்தலையும் நான் பார்க்கின்றேன்!

    டேய் திருந்துங்கடே!

  

No comments:

Post a Comment