வங்கி ஊழல்களின் முக்கியமான ஒன்று!
நாங்கள் வங்கிகளை நம்பவில்லை, அவைகள் நியாயமற்றவை! மோசடியானவை என்ற வாதத்தை சில நாட்கள் முன்னர் மே பதினேழு இயக்கம் ஓர் தொலைக்காட்சி விவாதத்தில் முன் வைத்தது!
உடனே, சில மோடி பக்தர்களும் பொய் கணக்கு எழுதும் so called நிதி ஆலோசகர்களும் கீழும் மேலும் குதித்த வண்ணம் உள்ளனர்! அவர்களின் முகமூடியை கிழிக்கவே கீழ் காணும் தகவல் :-
மக்களே, நாம் கருப்பு பணத்தை ஒழிக்க போகிறோம்!
நாடு செழிப்படையப்போகிறது என்றெல்லாம் சீனை போட்டு சுத்தும் தேச பக்தர்களே உங்களுக்காகவே இந்த கட்டுரை!
வருகிற டிச. மாத இறுதியோடு நம் பிரச்னைகள் தீரப் போகிறது ! அதற்கு நீங்க செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான் உங்க பணத்தை எல்லாம் Bank ல போடுங்க!
- இப்படித் தான் சில படித்த அடிமைகளும் பொருளாதார அடியாட்களும் இரு வாரங்களாக கொஞ்சமும் கூச்சமின்றி வங்கிகளுக்காக முட்டுக் கொடுத்து கொண்டு உள்ளனர்.!
இங்கே, நாம் பார்க்க போவது இந்தியாவின் மாபெரும் வங்கி மோசடிகளில் முதல் இடத்தை பிடித்த சில கேவலமான முறைகேடுகளைத்தான் :-
சத்யம் கம்ப்யூட்டர்ஸ் :-
2008 - 09 பொருளாதார நெருக்கடியில் இந்தியா சிக்கியிருந்த சமயம்!
பல IT நிறுவனங்கள் முடங்கிய காலம். அப்போது நான் பெங்களூரில் ஓர் Apartment Construction -ல் பணியாற்றிக் கொண்டிருந்தேன்!
ஒவ்வொரு customer ஆக குடியேறிக் கொண்டிருந்தனர்.! ஓரிருவர் பல நாட்கள் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருப்பது காண முடிந்தது!
பின்னர் தான் நண்பன் சொன்னான், இவர்கள் சத்யம் கம்ப்யூட்டர்ஸ் -ல் வேலை பார்ப்பவர்கள் இரண்டு மாத சம்பளத்துடன் விடுமுறை என்றும், கூப்பிடும் போது வந்தால் போதும் என்றும் சொல்லப் பட்டதாக கூறினான்!
அடுத்த சில நாட்களில் ராமலிங்க ராஜூ என்ற பெயர் பரவலாக செய்திகளில் அடி பட்டது!
$ 1.47 மில்லியன் அளவுக்கு மோசடியும் கையாடளும் நடந்து விட்டது! இனிமேலும் நிர்வாகத்தை நகர்த்தி செய்ய முடியுமா என தெரியவில்லை! நான் இப்போது பதவி விலகுகிறேன் மன்னித்து விடுங்கள்!
- வாய் வலிக்காமல் கூறிவிட்டு இடத்தை காலி செய்தார் ராஜூ!
அடுத்தடுத்து CBI, SFIO (Serious Fraud Investigation office) என பல விசாரணைகள் நடந்து 2015 ல் அவர் குற்றவாளி என நிரூபணம் ஆனது!
அதெல்லாம் தெரிந்த கதை! தெரியாத (அ) கவனிக்கப் படாத சில வற்றை இங்கே பார்க்கப் போகிறோம் : -
* இவர் கையாடல் செய்த பணம் அமெரிக்க டாலரில் 1.47 மில்லியன்.! எனில் இதை இந்திய மதிப்பில் பார்த்தால் அது லட்சம் கோடியை தாண்டுகிறது! ( சரியான கணக்கை நீங்களே போட்டு பார்த்துக் கொள்ளுங்கள்)
* இத்தனை லட்சம் கோடியை ஒரே நிறுவனத்தின் பேரிலோ தனி நபர் பேரிலோவா வைக்க முடியும்!
அதற்காக இவருக்கு சரியான ஆலோசனை வழங்கியது ஓர் Auditing நிறுவனம்!
* அவர்களின் யோசனை பேரில் வெவ்வேறு பெயரில் நிறுவனங்கள் போலியாக உருவாக்கப் பட்டது! அனைத்தும் ராஜூ வின் மனைவி மகள், மற்றும் உறவினர் பெயர்களில்! மொத்தமாக 166 போலி நிறுவனங்கள் . அதில் ஒன்று Maytas எனப்படும் நிறுவனம். இது RR -ன் குடும்ப உறுப்பினர்களின் நேரடி தொடர்பில் இருக்கும் நிறுவனம்!
* இவை மூலமாக பல வங்கி கணக்குகள் துவங்கப் பட்டன! அந்த வங்கிகள் நிறுவனத்தின் உண்மை தன்மையை சிறிதும் சோதித்து பார்க்காமலா இருந்திருக்கும்!???
எல்லாம் தெரிந்தும் அமைதி காத்தனர். 166 நிறுவனங்கள் எனில் குறைந்தது 1 க்கு பத்து எனில் 16 வங்கிகளாவது தேவைப் படும் ஆனால் இங்கே நிலை வேறு!
* இந்த Account களுக்கு சாதாரணமாக கேட்க்கும் Photo I d - proof கூட பல கணக்குகளுக்கு இவர்கள் கேட்கவில்லை! அவ்வளவு ஏன் PAN Card எண் இல்லாமலே லட்சங்களில் Transaction நடந்திருக்கின்றன!
( The report says: No photographs have been obtained. No nominees have been named. No PAN has been mentioned. There was no introduction by a person holding an account in the bank.)
2002 ம் ஆண்டு வருமான வரித்துறை சட்ட விதியை கிஞ்சித்தும் இவர்கள் Follow செய்ய வில்லை!
* இவர்கள் கணக்கு துவங்க பயன் படுத்திய பெயர்கள் RR ன் நண்பர்கள் உறவினர்கள் பெயருக்கு பின்னால் ராஜூ என்பதே பெரிய தகுதியாக கருதி விட்டனர் போலும்!
A Bashkar Raju, Mallapa Raju, Janaki Ram Raju இவைகளை மட்டுமே Proof ஆக எண்ணி விட்டனர். அதை விட கொடுமை அனைத்து A/C க்கும் ஒரே முகவரி :-
Shyamala building, Begumpet, Hyderabad.
* நீங்களே நானோ SB account திறக்க போனால், "நாம மொதல்ல இந்த ஊர்ல தான் பிறந்தோமான்னு சந்தேகம் வர்ற அளவுக்கு கேள்வி கேட்பார்கள் என்பது வேறு கதை!
* எந்த கேள்வியும் கேட்காமல் மனம் போல் A/C open செய்த அந்த அசகாய வங்கிகள் இவை தான்:-
1. Vyasa Bank (Banjara Hills, Hyderabad),
2. State Bank of Hyderabad (Begumpet),
3. UTI Bank (Kakinada),
4. HDFC Bank (Vishakhapatnam) and
5. Karur Vyasa Bank (Vijayawada).
* பணத்தை வெறும் ரூபாய்களாக மட்டுமே வைக்காமல் பங்கு பத்திரங்களாக மாற்றும் வேலையிலும் இவருக்கு உதவியது சில வங்கிகள்
அவை : -
Citi,
ICICI,
HDFC,
HSBC
சத்தியம் வெளிநாட்டில் இருந்து வாரா வாரம் கோடிக் கணக்கில் பண பரிவர்த்தனை செய்யும் ஓர் நிறுவனம் என்பதை எல்லோரும் அறிந்ததே! ஆனால், தாங்கள் நடத்தும் பரிவர்த்தனைகளின் மெய்யியல் தன்மை கூடவா பரிசோதித்து அறிய மாட்டீர்கள் என அப்போதே Reserve Bank கேள்வி எழுப்பி இருந்தது!
எல்லாத்தையும் விட சில முக்கிய உத்தமர்களை உங்களுக்கு அறிமுகம் செய்ய வேண்டும் :-
அவர்கள் நால்வர் :-
1. S Gopalakrishna,
2. Talluri Srinivas,
3. V Srinivasa,
4. VS Prabhakara Rao
இவர்களுக்கு அவர்களின் துறை சார்ந்த தலைமை அமைப்பு வாழ்நாள் தடை விதித்தது! அத் துறையின் பெயர் The Institute of Chartered Accountants of India (ICAI) . ஆம், இவர்கள் ஆடிட்டர்கள் தான்.
இவர்கள் Price Water House Coopers என்ற நிறுவனத்தின் மூலம் Sathyam Computers க்கு ஆலோசனை வழங்கி வந்தனர்! இந் நிறுவனம் பெங்களூரில் செயல்படுகிறது. இதன் பூர்வீகம் U.K!
மேலே சொன்னது ஒரே ஒரு உதாரணம் தான் இன்னும் பல வங்கி ஊழல்களை பற்றி அடுத்தடுத்து விரிவாக தோலுரித்துக் காட்டப் படும்!
இந்த நான்கு Auditor கள் தான் வேறு மனிதர்களாக, வேறு உருவங்களாக, நிதி ஆலோசகர், பொருளாதார வல்லுநர், சமூக ஆர்வலர் என பற்பல பெயர்களில் சிலர் டி.வி விவாதங்களில் பாஜக வுக்கும் WTO & IMF அஜெண்டாவுக்கும் முட்டுக் கொடுத்து கொண்டுள்ளார்கள்!