அடுத்த ஆறு மாதம் இந்தியாவின் மிக மோசமான நாட்களாக இருக்கப் போகின்றது!
ஆம், இதை ஓர் தமிழ் தேசியவாதியாக நான் மட்டும் சொல்ல வில்லை! மோடி பக்தகர்கள் என தங்களை இத்தனை நாள் சொல்லிக் கொண்ட சில முக்கிய பொருளாதார அல்லக்கைகளே சன்னமான குரலில் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்!
8 நவ. அன்று டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 66.33 பைசா. 18 ம் தேதி சரியாக Demonitization அறிவித்த பத்தாவது நாள் ₹ 68.16 என வீழ்ந்துள்ளது!
இதை யாருமே பெரிதாக கவனிக்க வில்லை! ஆனால், இத் துறையில் இருக்கும் நண்பர்கள் இது குறித்து நான்கு நாட்கள் முன்பு பேசும் போது பெரும் கவலையை வெளிப்படுத்துகின்றனர்!
இன்னும் ஒரு வாரம் இதே பணத் தேக்கம் நீடித்தால் ₹ 70 ரூபாயை தாண்டினாலும் ஒன்றும் சொல்வதற்கு இல்லை!
இதுரை மிகப் பெரிய நாணய வீழ்ச்சியாக நாம் சந்தித்தது ₹68.85 தான் September - 2013 ல் .
இதே நிலை தொடர்ந்தால் இந்திய வரலாற்றில் ஒரு கருப்பு அத்தியாயத்தை நாம் காண நேரிடலாம்!
இவ்வளவு நெருக்கமாக பண வீழ்ச்சி வந்தும் வடக்கு ஊடகங்கள் மோடிக்கு காவடி தூக்குவதில் மட்டுமே குறியாக உள்ளது மிகப் பெரிய கேவலம்!
இந் நேரம் அவர்கள் தான் விவாதத்தை துவக்கி இருக்க வேண்டும் .ஆனால் அவர்கள் விலை போய் பல நாட்கள் ஆகிறது!
கடந்த சில வருடங்களாக தமிழகம் அறிவு சார் தளத்தில் சுதந்திரமான கருத்தியல் ரீதியான விவாதங்களை மையப் புள்ளிக்கு நகர்த்தியுள்ளோம்!
அதே போல் பொருளாதாரம் எனும் இதையும் விவாத களத்திற்கு நகர்த்துவது நம் தலையாய கடமையாகிது!
சரி, வாருங்கள் வரப் போகும் இடர் பாடுகளை பார்ப்போம் ………!
பண பரிவர்த்தனையில் 87% ₹500, 1000 ரூபாய் நோட்டுகள் மட்டுமே எனில் கிட்டதட்ட 14 லட்சம் கோடியை நடமுறையில் இருந்து நீக்கி விட்டிருக்கிறார்கள்.
இது நீங்கள் பயணிக்கும் பேருந்தில் தேவையான 100 லிட்டர் Petrol க்கு பதில் 20 லிட்டர் மட்டுமே கொடுத்து விட்டு போகும் வழியில் ஒவ்வொரு குறிப்பிட்ட தூரத்திற்க்கும் 5 லிட்டர் தருவோம் அதை கொண்டே பயணத்தை சிறப்பாக நீங்கள் முடிக்கலாம் என்றால் எப்படி உங்கள் மனநிலை இருக்கும் என்பதை உணருங்கள் !
அதையேதான் இங்கேயும் செய்திருக்கிறார்கள் .
இதனால் அடுத்ததடுத்து இந்தியா சந்திக்க போகும் விபரீதங்களையே நாம் இங்கே பார்க்க போகிறோம் :-
நவ. 8 க்கு பிறகு கிராம புற உற்பத்தி (விவசாயம்) என்பது மிகவும் மோசமாக பாதிக்கப் பட்டுள்ளது .
இது நாட்டின் GDP வளர்ச்சியில் 16 % பங்கை தன்னகத்தே கொண்டுள்ளது!
ஆனால், நாட்டின் Corporate (Reliance fresh, Adithya Birla) போன்ற நிறுவனங்கள் விவசாயிகளிடம் இருந்து நேரடி கொள்முதலாக அனைத்து காய் கறி விளை பொருட்களை வாங்கி விடுவதாலும் நேரடி ஏற்றுமதி செய்வதாலும்! 10% சதவிகிதம் எவ் விதத்திலும் பாதிக்க வில்லை இந்த காலாண்டுக்கான GDP யில் மீதி 6% என்ன பாதிப்பை உண்டாக்கும் என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்!
ஆனால், நடுத்தர வர்க்கத்துக்கும் ஏழை மக்களுக்கும் இன்னும் பத்து நாட்களுக்கு பிறகு காய்கறி தட்டுப்பாடு தானாக உருவாகும் என்பதை எந்த ஊடகமும் சொல்ல மறுக்கிறது!
எதிர்வரும் வாரங்களில் நாம் சந்திக்க போகும் அதே நேரம் எந்த ஊடகமும் பேச தயங்கும் சில விடயங்கள் :-
a) Two Wheeler தயாரிப்பு நிறுவனங்கள் டிச. முதல் தன் உற்பத்தியை பாதியாக குறைக்க போகின்றன!
b) கிராமப்புற ( அ) பேரூராட்சி வேலைவாய்ப்பு என்பது கேள்க்குறியாகும்! கிட்ட தட்ட 20 லட்சம் பேர் நாடு முழுதும் மறைமுகமாக வேலை இழப்பார்கள்
c) Construction field - கட்டுமான துறை பெரிய அளவில் வீழ்ச்சியையும் கட்டுமான பொருட்களும், வீடுகளும் விலை குறையும்!
இது பயனீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியாகவும் Civil Engineer 's க்கு பெரும் இடியாகவும் இருக்கும் என்ற கசப்பான உண்மையை ஒத்துக் கொண்டு தான் ஆக வேண்டும்!
d) அனைத்து தொழிற்சாலை மற்றும் உற்பத்தி துறையும் 50% தன் அன்றாட பணிகளை நிறுத்தி வைக்கும் என்பதே நிதர்சனம்!
e) Money flow எனப்படும் பணப் புழக்கம் கிராம புறங்களில் 10% கூட சீர் செய்யப் படாத நிலையில் May 2017 வரை அவர்களிடம் வளர்ச்சி விகிதத்தை நாடு கிஞ்சித்தும் எதிர் நோக்க இயலாது!
f) மொத்த GDP (The Gross Domestic Product) விகிதமானது மொத்தமாக 0.5 % வீழ்ச்சி அடையும் எனவும், சென்ற ஆறு மாத சராசரியான 6.4 % ல் இருந்து இந்த ஆறு மாத நிதியாண்டு 5.9 முதல் 5.7 % வரை செல்லும் என்பதே மிகப் பெரிய கவலையாக பொருளியல் துறை வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
இதில் பெரிய கொடுமையே மும்பையை சேர்ந்த ஓர் பங்குச்சந்தை நிறுவனம் அடுத்த ஆறு மாத Estimate யை (-) மைனஸ் ல் தான் வரும் என பகிரங்கமாக அறிவித்தே விட்டனர்!
NDTV profit, Bloomberg போன்ற Economics தொலைக்காட்சிகள் எதிர் வரும் கால பண வீக்கம் குறித்து தெளிவாக அறிக்கை தயார் செய்து விட்டனர்.
அரசின் அடக்குமுறைக்கு பயந்து மௌனம் காக்கின்றனர் வெளியிடாமல்!
இன்று 1 USD = 68.11 ₹ என்ற நிலையில் நாம் தள்ளாடி கொண்டிருக்கிறோம்! ₹ 69 - 70₹ க்கு தள்ளப்படும் போது மேற்கண்ட நிறுவனங்கள் தங்கள் அறிக்கை சாட்டையை சுழற்றும் என எதிர் பார்க்கலாம்!
இன்று (21 நவ.) முதல் அடுத்த ஒரு வாரத்திற்கு நாட்டின் அனைத்து Banks, ATM களும் செயல் பட்டால் ஒழிய நாம் மீள வாய்ப்பில்லை!
அப்படியே செய்தாலும் நிலமை சீராக மார்ச் - 2017 ஆகும் என்பதே உண்மை!
இதெல்லாம் தெரியாம யாராவது பக்தாஸ் சொம்பு தூக்கி கிட்டு வந்து காறித் துப்பி விரட்டி விடுங்க!
Modi is just Broker for Corporate's! He never realize our issues (or) problems.
#ModiResignNow
#Modi_4_Corporate
#Economic
No comments:
Post a Comment