Saturday, 26 November 2016

ஈழமும் - கியூபாவும்!

பிடல் காஸ்ட்ரோ ஈழப் இனப்படுகொலையில் ஐ.நா. வில் துரோகம் இழைத்து விட்டதாக சில பதிவுகளை காண முடிகிறது!
அமெரிக்கா இலங்கைக்கு எதிராக கொண்டு வந்த தீர்மானத்தில் இலங்கையை ஆதரித்து விட்டனர் எனவே நாங்கள் பிடலை எதிர்க்கிறோம் என்று கூறுகிறார்கள்!

இது சரியான புரிதல் இல்லாததாலும் தவறான அரசியல் பார்வையும் கற்பிக்கப் பட்டதால் வந்த வினை!

1.2008 வரை தான் பிடல் காஸ்ட்ரோ ஆட்சியில் இருந்தார்.

2.LTTE மீது பல நாடுகள் தடை கொண்டு வந்த போது லத்தீன் நாடுகள் கியூபா உட்பட யாரும் தடை கொண்டு வர வில்லை!

3.ஐ.நா. வில் விசாரணை வந்தது 2010 -ல் தான்!
2013 -ல் அமெரிக்கா இலங்கையை எதிர்ப்பதாக கூறி கொண்டு வந்த தீர்மானம், ஏற்கனவே LLRC - அறிக்கையாக இலங்கை ஏற்கனவே வெளியிட்டு இருந்ததை தான் அமெரிக்கா தன் தீர்மானத்தை கொண்டு வந்தது!
        அப்படி பட்ட கேவலமான அமெரிக்க தீர்மானத்தை ஆதரித்து பேரணி நடத்தியவர்கள் பட்டியலே இருக்கிறது! 

(பேச வைக்காதீர்கள் நண்பர்களே, மனக் கசப்பு தான் வரும்)

4. தீர்மானத்தில் ஈழம் என்ற வார்த்தையோ, சர்வதேச விசாரணை என்ற எழுத்தோ மறந்தும் கூட இடம் பெற வில்லை!

5.தீர்மானம் இலங்கையை காப்பாற்றுவதாகவே இருக்கிறது, அதை நிராகரிப்பு செய்து இந்தியா இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணையை கோரும் தீர்மானத்தை கொண்டு வர வேண்டும் என்று தான் லயோலா மாணவர்கள் 2013 பிப்ரவரி-யில் உண்ணாவிரதத்தை தொடங்கினர்.!
   
   அதன் பின்பு நடந்த மார்ச் மாணவர் போராட்டம் நாம் அறிந்ததே!

6. உலகிற்கே தெரியும் கியூபா எப்போதுமே அமெரிக்கா வுக்கு எதிரானது என்று! அதன் அடிப்படையில் தான் கண்ணை மூடி எதிர் பக்கம் நிற்கிறது கியூபா (எதிரே நிற்பது இலங்கை)

7. இந்த விடயத்தில், கியூபா வுக்கு சரியான புரிதலை ஏற்படுத்தி இருக்க வேண்டியவர்களில் புலம் பெயர் தமிழர்களுக்கும் குறிப்பிட்ட பங்கு உள்ளது!

இனப் படுகொலையின் சாட்சியங்களாக பல்லாயிரம் மக்கள் உலகெங்கும் உள்ளனர்!
அவர்களின் சாட்சியங்களை,

* காணொளி யாக,
* ஒலி வடிவமாக,
* புத்தகங்களாக,
* ஆவணப் படங்களாக,
* திரைப்படமாக,
* மேடை நாடகங்களாக
மாற்றி குறைந்தது ஆயிரம் பக்க ஆவணமாக மாற்றியிருக்க வேண்டாமா??? இந்த ஏழு ஆண்டுகளில்!

  பேராசிரியர்கள், கலைஞர்கள், சினிமா தயாரிப்பாளர்கள், எழுத்தாளர்கள் இல்லையா புலம் பெயர் ஈழத் தமிழர்களின் நடுவே!

       இந்த   7 ஆண்டுகளில் இதை முதல் 3 ஆண்டுகளில் செய்து முடித்து இருந்தால் இந் நேரம் கியூபா உள்ளிட்ட நடுநிலை நாடுகளை ஓர் குழுவாக சென்று சந்தித்து இருந்தால் கிட்ட தட்ட 50 நாடுகளின் ஆதரவை நாம் பெற்றிருக்க முடியும்!

இதற்கு ஆகும் செலவு என்பது  தமிழகத்தின் அரசியல் மாற்றத்திற்கு என நீங்கள் செய்த நிதி உதவியில் பாதியளவு மட்டுமே ஆகியிருக்கும்!
   
     இதைத் தான் பல நாட்களாக தொடர்ந்து புலம் பெயர் மக்களிடம் கோரிக்கையாக வைத்துள்ளோம்.

இப்போதேனும் விழித்துக் கொள்ளுங்கள் வரும் மார்ச் மாதம் தான் சர்வதேச அளவில் ஈழ இனப்படுகொலை பற்றி பேசப் பபோகும் கடைசி ஐ.நா. கூட்டத் தொடர்!

     தமிழக முதல்வர் பதவி கிடைத்தால் ஈழம் கிடைக்கும் என்று நம்பிய உங்களுக்கு,
நடந்தது இனப்படுகொலை தான்  என நிரூபிக்க என்ன செய்ய வேண்டும் என்பதை உங்களிடம் சொல்லாமல் மறைத்தவர்கள் யார் என்பதை முதலில் கண்டறியுங்கள்! பின்னர் காஸ்ட்ரோ வை குறை சொல்லலாம்!

   வருடாவருடம் தலைவரின் பிறந்தநாளுக்கு மட்டும் வாழ்த்து கூறி செல்வதில் எங்களுக்கு விருப்பம் இல்லை!

கசப்பாக இருந்தாலும் இது தான் உண்மை!  யதார்த்தம்!

பி.கு :- LLRC / அமெரிக்க தீர்மானத்தில் வரும் மறு வாழ்வு நடவடிக்கைகளை மேற் கொள்வதில் முக்கிய பங்கு வகிக்கும் ஓர் நிறுவனம் LYCA

#Tamil_Eelam
#Fidel_Castro
#Hbd_TamilTiger

No comments:

Post a Comment