டேய் மானாவாரியா சிரிப்பு மூட்டாதீங்கடா!!!!
ஆண்ட பரம்பரை வாசிக்கிறது……ம் பாஜக ஆடுறது……… மா……… அட அட அட என்ன ஒரு பொருத்தம்!
என்னங்கடா ஒரே தில்லான்னா மோகனாம்பாள் ரேஞ்சுல முட்டு குடுக்குறீங்க !
பத்தாததுக்கு இப்போ மே17 இயக்கத்தை உள்ளே விட்ராதீங்க அவங்க போராட்டத்தை சிதைச்சிடுவாங்க…………! அப்டின்னு கூவுறானுக!
அடேய்! போராட்டம் ஆரம்பிச்ச நாள்ல இருந்தே மே 17 இயக்கம் அங்க தான் இருக்கோம்!
மேடை நாடகம், பறை இசை என தோழர்கள் கலக்கி இட்டு தான் இருக்காங்க! ஓரமா போய் முட்டு குடுங்கடா!
வந்துட்டானுக சொம்பை தூக்கிட்டு!
மெரினாவை, இது தமிழர் கடல் நாங்க இங்க தான் எங்கள் போராட்டத்தை நடத்துவோம்ன்னு முதல்ல இறங்குனதே நாங்க தான் 2011 - ஜூன் மனித உரிமைகள் தினத்துல ஈழ இனப்படுகொலைக்கான முதல் நினைவேந்தலை அங்க முதன் முறையா மே 17 இயக்கம் தான் நடத்துச்சு!
அதுல எதிர் பார்த்ததை விட அதிக அளவில் மக்கள் வந்ததால் அடுத்து 2012 மே மாதம் அனுமதி தரலை! இது தமிழர் கடல் தான் இங்க தான் நடத்துவோம் தமிழர் உரிமையை விட்டு தர மாட்டோம்ன்னு திடமா நின்னு நடத்தி முடிச்சோம்!
அதுனால அதுல கலந்துகிட்ட பல பேர் மீது வழக்கு போட்டார்கள். தோழர் கவிஞர். தாமரை வரைக்கும்!
அதை உடைத்து வெளியே வந்த பின்னர் தான் யார் வேண்டுமானாலும் அங்கு ஒன்று கூடல் நடத்தலாம் என்ற சுதந்திரமான அனுமதியை உறுதி செய்தோம்!
தம்பிகளா ……! இதெல்லாம் உங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை தான் சாதிக்கும், மதத்துக்கும் முட்டு குடுத்தே காலத்தை ஓட்டுனா இப்டி தான் பேச தோனும்!
போராடினால் தான் நமக்கு உரிமையே கிடைக்கும் . தேர்தல் அரசியலில் வெறும் பேச்சு மட்டுமே என்பதை உணர்ந்ததால் வந்த கூட்டம்! சாதியும் மதமும் சொல்லி அழைத்துவரப் பட்டவர்கள் அல்ல இவர்கள்!
இதை உணர்ந்த தேர்தல் கட்சிகள் தான் வேகமாக மே 17 மீது பாய்கின்றன! காரணம், தேர்தல் கட்சிகளால் நமக்கான உரிமையை பெற்றுத் தரும் அளவுக்கு இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் தேசிய இனங்களுக்கான உரிமை இல்லை என்பதை நாம் மீண்டும் மீண்டும் வலுவாக கடந்த காலங்களில் வழுவாக பதிவு செய்து வருகிறோம்!
மக்களே ……! இயக்கமாக மாறுங்கள் என்பதை நாம் திரும்ப திரும்ப கூறிக் கொண்டே இருக்கிறோம்!
இந்த போராட்டம் துவங்கியதும் நாம் கூறியது ஜல்லிக்கட்டுக் கான போராட்டம் மட்டுமே இல்லை! தமிழர் உரிமைக்கான ஒட்டு மொத்த எழுச்சி!
மீனவர் படுகொலை
மீத்தேன்
காவிரி,
முல்லை பெரியாறு,
நியூட்ரினோ, கெயில் என இத்தனை துரோகங்களுக்கும் ஒன்று சேர்ந்த ஓர் எதிர்ப்பு!
என்பதை கூறிக் கொண்டே இருந்தோம்! இப்போது அவசர சட்டம் வந்ததும் ஆளாளுக்கு தீர்வு கிடைத்து விட்டது!
இயக்கவாதிகள் மக்களை திசை திருப்புகிறார்கள் என்றெல்லாம் அலறுகிறார்கள் ஓட்டு பொறுக்கும் அரசியல்வாதிகள்!
தனித் தமிழ்நாடு க்கு இது வழி வகுக்குமாம்! அதுனால இந்தியாவை எதிர்க்க கூடாதாம்!
ஏன்டா, தமிழ் தேசியம் இங்க கேட்காமல் அண்டார்டிகாவுலயா போய் கேட்பாங்க!
இவர்கள் எதிர்க்க நினைப்பது மே 17 இயக்கத்தை அல்ல நாங்கள் முன்வைக்கும் மாற்று இயக்க அரசியலை!
அது தான் இவர்களின் ஓட்டு அரசியல் கட்சிகளின் மாய பிம்பத்தை உடைக்கும் கருவி என்பதை இவர்கள் நன்றாகவே உணர்ந்துள்ளனர்!
அதற்குள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர தங்களை தலைவராக காட்டிக் கொண்டவர்கள் முந்தி தள்ளப் படுகின்றார்கள்!
இவ்ளோ தான் இந்தியம்.!
உங்கள் கேட்டால் மட்டுமே கிடைக்கும் சமயத்தில் கத்தி கூப்பாடு போட்டாலும் கிடைக்காது! காரணம் நாம இன்னும் தமிழ்நாட்டுக்கான தனித்த இறையாண்மையை வாங்கி விட வில்லை என்பதை உணருங்கள்!
யார் என்ன சொன்னாலும் அழுத்தம் திருத்தமாக மீண்டும் மீண்டும் சொல்வது இதைத்தான்!
இந்திய தேர்தல் ஆணையத்துக்கு உட்பட்ட எந்த அரசியல் கட்சியும் இந்திய அரசியலமைப்பை எதிர்த்து பேச முடியாது!
பேசாமல் ஓர் தேசிய இனத்துக்கான உரிமையை தர இந்திய அரசியலமைப்புக்கு பெரிய மனது இல்லை! That's all.
No comments:
Post a Comment