மே மாதம் தமிழர்கள் வாழ்வில் மறக்க முடியாத மறைக்க முடியாத ஓர் கால கட்டம்!
உலகுக்கே மொழிப் பிச்சை போட்ட இனம் உலகெங்கும் விடுதலை பிச்சை வேண்டி பயணிக்கும் என்று எவரும் நினைத்திருக்க வாய்ப்பில்லை!
தெற்காசியாவின் கடை கோடியில் இருக்கும் ஓர் நிலப்பரப்பில் நிகழத்தப் பட்ட இனப்படுகொலை என்பது இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய துயரம்!
தமிழகத்தில் இருந்து 47 மைல் தூரத்தில் மட்டுமே உள்ள ஓர் தீவில் நம்மை போன்ற ஓர் தமிழன் படுகொலை செய்யப் படும் போது நாம்மால் வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்க முடிந்தது!
உலகின் ஒவ்வொரு மனிதனுக்கும்
உடை,
உணவு,
உறைவிடம் போலவே அவனுக்கென
மொழி,
கலாச்சாரம்,
வாழ்வியல் முறை ஆகியவற்றை தானக தேர்ந்தெடுக்கும் உரிமை உள்ளது என ஐக்கிய நாடுகள் சபையின் விதிகள் கூறுகிறது!
இம்மூன்றின் ஒட்டுமொத்த வடிவம் தான் 'இறையாண்மை ' !
தனக்கென ஓர் தனித்த இறையாண்மையை வார்த்தெடுக்கும் எந்த இனக்குழுவுக்கும் தனி நாட்டினை பெறும் தகுதியுள்ளது! இதன் அடிப்படையில் தனித் தமிழீழம் கேட்ட மக்களை தான் உலக நாடுகள் ஒன்றிணைந்து கொன்றொழித்தது!
தனக்கான நாட்டினை கேட்டவர்களை ஏன் கொல்ல வேண்டும் என நாளை நம் பிள்ளைகள் நம்மை கேள்வி கேட்கும் போது என்ன பதில் சொல்லப் போகிறோம்!?
தமிழீழம் பற்றி பேசும் போது புவிசார் அரசியலை (Geo Politics) பற்றி பேசியே ஆக வேண்டியது அவசியமாகிறது!
தமிழர்களை கொன்றதில் அமெரிக்காவின் பங்கு மிக முக்கியமானது! அதை புவிசார் அரசியலோடு ஒப்பிட்டு பார்ப்பது அவசியம்., அதைப் பற்றி தான் இங்கே காணப் போகிறோம்!
அமெரிக்காவுக்கு ஏன் இவ்வளவு வஞ்சம் ஈழத்தின் மேல் என்பதை நாம் தெரிந்து கொள்வது அவசியம் :-
1950 களின் தொடக்கத்தில் தெற்காசியாவிற்கான அமெரிக்க வெளிவிவகாரத் துறை ஓர் அறிக்கையை வெள்ளை மாளிகைக்கு அளிக்கிறது, அதில்,
உலகின் 70 % வர்த்தகம் கடல் வழியே தான் நடக்கின்றது! அதில் 45 % வர்த்தகம் தெற்காசியாவின் இலங்கை தீவை ஒட்டி செல்லும் வழித் தடத்தில் இருப்பது மிக முக்கியமானதாக கருதப் படுகின்றது! எனவே இதன் அருகில் இருக்கும் திரிகோணமலை உள்ளிட்ட கடற் பகுதி 50 வருடங்களுக்கு பிறகு மிக முக்கிய பொருளாதார மையமாக மாறும் வாய்ப்புள்ளது!
அச் சமயம் இப் பகுதியை எந்த நாடு அல்லது எந்த நாடுகளின் கூட்டமைப்பு இதை கட்டுப் பாட்டில் வைத்துள்ளதோ அதுவே அன்றைய வல்லரசா அல்லது வல்லரசுக்கு இணையாக திகழும்!
- இது தான் அந்த அறிக்கை!
இதை மனதில் கொண்டே US தன் காய்களை நகர்த்த துவங்கி இருந்தது! ஆனால், பெரிதாக எதுவும் நிகழவில்லை!
இதற்கு இடையில் Sri Lanka விற்கு சுதந்திரம் வழங்கிய இங்கிலாந்து தன் பிடிப்பு எப்போதும் இவர்கள் மீது இருக்க வேண்டும் என்றே பாராளுமன்றத்தில் 1947 துவங்கி அடுத்த இருபது வருடம் தன் ஆதிக்கத்தை செலுத்தியது British. அதனை இரட்டை ஜனநாயகம் என அப்போது அழைத்தனர்!
தமிழர்களின் மீது சிங்களர்களுக்கு வஞ்சத்தை விதைத்ததில் இங்கிலாந்தின் பங்கு பெரியது!
காரணம், ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடியதில் சிங்களவர்களோடு இணைந்து தமிழர்களும் வலுவாக விடுதலைக்காக போராடியிருந்தனர்! சொல்லப் போனால் 'சிங்களவர் "களை விட தமிழர்களை சமாளிப்பது பெரிய காரியமாகிப் போனது இங்கிலாந்து க்கு!
இரு இனக்குழுவுக்கு இடையிலும் வேற்றுமையை உருவாக்கினால் மட்டுமே நாம் வாணிபம் செய்ய முடியும் என்பதை உணர்ந்திருந்தனர்!
எனவே சிங்களர்களே அதுவரை அறிந்திடாத
பாலி மொழியில் இருந்த 'மஹாவம்சம் ' என்ற புத்தமத நூலை சிங்கள மொழியில் மொழி பெயர்த்து கொடுத்தனர்! அதில் ஆங்காங்கே இன துவேசங்களையும் விதைத்து விட்டிருந்தனர்!
இது ஒரு புறம் பொளத்த மத குருமார் களிடமும், சிங்களர்களிடமும் விசத்தை விதைத்துக் கொண்டிருக்க …„
1944 ல் பிரிட்டன் ஓர் கமிஷனை நியமித்தது! இலங்கைக்கான அரசியலமைப்பை நிர்ணயிப்பதற்காக அமைக்கப் பட்ட கமிஷன் அது!
அப்போது தமிழர்கள் முன் வைத்த கோரிக்கை, 50% அரசியல் மற்றும் இட ஒதுக்கீடு உரிமை சிங்களர்களுக்கும் மீத முள்ள 50% உரிமை பூர்வ குடி தமிழர்கள், இந்தியாவிலிருந்து வந்திருக்கும் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மற்றும் இஸ்லாமியர்களுக்கு மட்டுமே! இதை பிரிட்டன் முற்றிலுமாக நிராகரிப்பு செய்தது!
இது தான் தமிழர்களின் மீதான அடக்குமுறை க்கு பெரிதும் வசதியாகிப் போனது!
1959 செப் 25 அப்போதைய பிரதமர் சாலமன் பண்டார நாயகே ஓர் புத்த பிக்கு வால் சுட்டுக் கொல்லப் பட்டார்!
அதற்கு அவர்கள் சொன்ன காரணம், 2500 வது புத்த ஜெயந்தியில் சிலோனை முழுமையான சிங்கள பௌத்த நாடாக அறிக்க தாங்கள் உத்தரவிட்டதை இந்த பிரதமர் நிறைவேற்றவில்லை என்பது தான்!
இது, அங்கே வளர்த்தெடுக்கப் பட்ட சிங்கள இனவெறி க்கு ஓர் சிறு உதாரணமே!
1961 ஜனவரி 1 முதல் இலங்கை முழுதும் சிங்களம் மட்டுமே ஆட்சி மொழி என்று அரசு ஆணை பிறப்பித்தது! நீதிமன்றங்கள் இனி சிங்களத்தில் இயங்கும், அரசு அலுவலகங்கள் சிங்களத்தில் மட்டுமே முழுதும் செயல் படும் என்று அறிவித்தது!
அடுத்தடுத்து திரு.செல்வநாயகம் (தந்தை செல்வா) நடத்திய சத்தியாகிரகத்தில் பெருந்திரளாக மக்கள் கலந்து கொண்டர்!
ஆனால், அதை இராணுவத்தை வைத்து முடக்கியது அரசு!
ஐக்கிய தேசிய கட்சியும், சிறீலங்கா சுதந்திர கட்சியும் தாங்கள் ஆட்சிக்கு வருவதற்கும் தமிழர்களிடம் ஓட்டு கேட்கும் போது மட்டுமே தமிழர்களின் மீது கரிசனம் காட்டுவது போல நடித்தனர்!
தினமும் அடக்குமுறையும், வன்முறையும் வெறிச்செயலும் கட்டுக்கடங்காமல் கை மீறிப் போனது! தமிழர்கள் கையில் ஆயுதம் ஏந்தகாரணம் என்னவென்பதை வருட வரிசையில் இவ் வரலாற்றை காண்பதுவே சரியாக இருக்கும் :-
1944 - தமிழர்களின் சம உரிமை கோரிக்கையை இங்கிலாந்து நிராகரிப்பு செய்கிறது!
1948 - சுதந்திரம் வழங்கப் படுகிறது!
1954 - ல் அரசு சார்பில் வெளியிடப்படும் அலுவல்கள் ரீதியான தகவல்கள், சுற்றறிக்கைகள் (G.O) முதலானவை சிங்களத்தோடு, தமிழிலும் வேண்டும் என்ற கோரிக்கையோடு பேரணி ஒன்றை நடத்தினார்கள் தமிழர்கள்!
அன்று மாலைப்பொழுது அதைக் கண்ட 'சிங்கள ' வெறியர்கள், கூட்டத்தில் இருந்தவர்களை அடித்து நொறுக்கினர்! மறுநாள் அதிகாலை தமிழர்களின் இல்லங்களை குறி வைத்து வெறியாட்டம் ஆடினர்! பலர் இரத்த வெள்ளத்தில் மிதந்தனர்!
அது மிகப் பெரிய கொந்தளிப்பை வெளியில் ஏற்படுத்தியது!
1956 - இலங்கை அரசு 'தமிழ் வழியில் ' கற்கவும் தமிழ் வழி அலுவல்களுக்கும் அனுமதி வழங்கியது!
அதை அடுத்து நடந்த கொடுமைகள் கொஞ்ச நஞ்சமல்ல!
அப்போதைய எதிர் கட்சிகள் 'சிங்கள பேரின வாதத்தை ' முன்னிறுத்தி கலவரத்தை தூண்ட, பதவியை தக்க வைக்க தான் கையொப்பம் போட்ட செல்லா வுடனான ஒப்பந்தத்தை எடுத்து வந்து தன் வீட்டின் முன் நின்ற கூட்டத்திடம் காட்டி கிழித்துப் போட்டார் பிரதமர்! மீண்டும் தமிழர்களுக்கு ஏமாற்றமே!
1958 - மீண்டும் ஓர் இன கலவரம்! இம்முறை குழந்தைகள் வரை நெருப்பில் தூக்கி வீசப் பட்டனர்! அதில் பெரிதும் தமிழர்களின் உடமைகளும் வீடுகளும் தீ வைத்துக் கொளுத்தப் பட்டன!
ஓர் பெண்மனியின் கண் முன்னாலேயே அவரின் வீடு தீக்கிரையாக்கப் பட்டது! அவரின் கணவர் அடித்தே கொல்லப் பட்டனர்! இவற்றுக்கெல்லாம் ஒரே காரணம் தான் இருந்தது, அது அவர்கள் தமிழர்கள் என்பது மட்டும் தான்!
1961 - அகிம்சை முறையை விட "அடக்குமுறை 'யே வலிமையானது என இலங்கை அரசு நிரூபித்தது!
சிங்கள மயமாக்கலுக்கு எதிராக சத்தியாக்கிரகம் நடத்திய தமிழரசு கட்சி தலைவர்கள் வெகுவாக தாக்கப் பட்டனர்!
இத்தனைக்கும் அவர்கள் கேட்டது இரண்டே கோரிக்கை தான் :-
1.குறைந்த பட்சம் வட கிழக்கு பகுதியில் அரசு நிர்வாகம் தமிழில் இயங்கட்டும் .
2.இப் பகுதியில் நீதி மன்றம் தமிழில் செயல் பட அனுமதியுங்கள்!
திரிகோணமலையில் போராடிய தமிழரசு கட்சி தலைவர்களில் ஒருவரான 'ஏகாம்பரம்' போலீஸா ல் அடித்தே கொல்லப் பட்டார்!
இனி, அகிம்சை வேலைக்கு ஆகாது, அடிக்கு அடி உதைக்கு உதை என 20 இளைஞர்கள் ஒன்று திரண்டு "புலிப் படை " என்ற பெயரில் ஓர் அமைப்பை உருவாக்கினர் . ஆனால் நீண்ட நாள் நிலைக்கவில்லை!
இதில் முக்கிய பங்கு வகித்தவர் 'நவ ரத்தினம் ' ..!
இவர் பின்னாளில் 'உலகையே திரும்பி பார்க்க வைத்த ' விடுதலை புலிகளின் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் ஆசிரியர் என்பது பலருக்கும் தெரியாத ஓர் விடயம்!
1965 - பிரதமர் டட்லி சேனநாயகாவுக்கும் - தந்தை செல்வா வுக்கும் ஓர் ஒப்பந்தம் ஏற்பட்டது! அது தமிழ் மொழியை அலுவல் ரீதியாக அங்கீகரிப்பது குறித்தானது! (தேர்தலுக்கு முன்பாகவே இது பேசப் பட்டு கூட்டணி அமைத்திருந்தனர் ) நிலவுடைமை ரீதியாகவும் தமிழர்களுக்கு உரிமையை பெறுவதும்!
மீண்டும் அதே போன்ற வெறியாட்டங்கள்! இந்த முறை செய்தது புத்த பிக்குகளும், சென்ற முறை ஆட்சியில் இருந்த பண்டார நாயகவும்!
இந்த முறை டட்லி தமிழர்களுக்கு கொடுத்த உரிமைகளையும், வாக்குறிதிகளையும் காற்றில் பறக்க விட்டார்!
தமிழர்களை வெறும் ஓட்டு போடும் எண்ணிக்கையாக மட்டுமே இரு கட்சிகளும் கருதின என்பது "நவரத்தினம் " போன்றோரின் வாதம்!
1967 - அதுவரை பிரிட்டன் வசம் இருந்த துறைமுகங்கள் இலங்கைக்கு திருப்பி தரப் பட்டன! அதையும் தேசிய மயம் என்ற பெயரில் 'சிங்கள " மயமாக்கியது அரசு!
கூட்டணியில் இருந்த தமிழரசு கட்சி நொந்து போனது! பிரதமரை போய் சந்தித்தார் தந்தை செல்வா,
"அட, இதையெல்லாம் கொஞ்ச காலத்தில் மறந்து விடுவீர்கள் என்றல்லவா நினைத்தேன்
தனித்த இறையாண்மை குறித்து பேசியவர்களுக்கு - மாவட்ட அளவில் உரிமை வழங்குகிறோம் எனவும் அதற்கான வரைவு திட்டத்தை எழுதி கொண்டு வரச் சொன்னார்கள்!
அதற்குள் டட்லி நாட்டை பிரித்து தமிழர்களுக்கு பாதியாக கொடுத்தே விட்டார் என எதிர் கட்சிகள் குற்றம் சாட்டின!
அய்யய்யோ ., ஆட்சி போனால் மீண்டும் வரும் ஆனால், சிங்கள துரோகி என பட்டம் கிடைத்தால்,………, அவ்வளவு தான் அரசியல் வாழ்வே அஸ்தமனம் ஆகி விடுமே என யோசித்தார் டட்லி!
மக்களே, நான் அவர்களோடு தேர்தல் கூட்டணி மட்டுமே வைத்தேன் வேறு எதுவுமே இல்லை என பின் வாங்கினார் "டட்லி "
1968 - ல் பிரதமரை சந்தித்து விட்டு வெளியே வந்த தந்தை செல்வா, செய்தியாளர்களிடம் முதலில் எங்களை சாலமன் பண்டார நாயக ஏமாற்றினார், அடுத்து சிரிமாவோ பண்டார நாயகா ஏமாற்றினார் இப்போது டட்லி யும் ஏமாற்றி விட்டார் என சலித்துக் கொண்டார்!
நவ ரத்தினம் கோபத்தின் உச்சத்திற்கே போனார், எத்தனை நாட்கள் தான் ஒப்பந்தம் ஒப்பபந்தம் என ஏமாற்றுவார்கள்! போதும் இதெல்லாம் இனி தனி நாடு மட்டுமே சாத்தியம் என பொங்கினார் ..!
1972 - இங்கிலாந்து - இலங்கை கூட்டு அரசியலமைப்பு திருத்தப் பட்டு முழுமையாக சிங்கள மயத்தை எட்டியது சிறீலங்கா! (சிலோன் - Sri Lanka வாக முழுமையாக மாறியிருந்தது)
1976 - தமிழர்கள் வரலாற்றில் முக்கியமான இரண்டு நிகழ்வுகள் நடந்தேறிய ஆண்டு
அ) வட்டுக்கோட்டை தீர்மானம் ..!
ஆ) விடுதலை புலிகள் துவங்கிய ஆண்டு
…………… தொடரும் ……………
No comments:
Post a Comment