Saturday, 21 July 2018

Rosa Parks

8 வழி சாலை க்காக எத்தனை கைதுகள்...? எத்தனை அடக்குமுறைகள்..? அரச பயங்கர வாதங்கள்!

இன்னொரு பக்கம்,
பொய் பிரச்சாரங்கள்.!?  எத்தனை Digital
பொய் புரட்டு காணொளிகள் ..?  அதன் உண்மை தன்மையை  ஓரிரு நாளில் தோலுரித்துக் காட்டிவிடலாம் !

  ஆனால், போராட்டம் எப்படி நிறுத்தாமல் தொடர வேண்டும் என்பதே நம் இன்றைய அவசியமான ஒன்று!

அதைப் பற்றி தான் இங்கே பார்க்கப் போகிறோம்!

  1955 டிச-1 அலபாமா மாகாணத்தின்     Montgomery  வீதியில் பயணிக்கும் ஓர் பேருந்தில் அமர்ந்திருந்தார் ரோஸா பார்க்-ஸ்.
அவர் அமர்ந்திருந்த இருக்கையில் இருந்து எழுந்து கொள்ளுமாறு ஓர் வெள்ளை இனத்தவர்  அவரை பணிக்கிறார்!

நான் ஏன் எழ வேண்டும்.? நானும் பயணச்சீட்டு பெற்று அதற்கான உரிய பணத்தை கொடுத்து விட்டு தான் பயணிக்கிறேன் என்றார் ரோஸா!

இல்லை, நீ ஓர் ஆப்பிரிக்க அமெரிக்கை  அதனால் நகர வேண்டும் என்கிறார்! அதாவது, நீ கருப்பின பெண் நான் வெள்ளை இனத்தை சேர்ந்தவள் எனவே இடத்தை எனக்கு விட்டுக் கொடு என்கிறார்!

அவர் மறுக்கவே, அந்த பேருந்தின் ஓட்டுனர் மீண்டும் கருப்பர்கள் அனைவரும் பின் பக்கமாக சென்று அமருமாறு பணிக்கிறார்! அனைவரும் சென்ற பின்னரும் ரோஸா எழ வில்லை!
  இத்தனைக்கும் அந்த டிரைவரே ஓர் கருப்பர் தான்!

அவர் டிரைவர் வேலைக்கு வந்ததற்கே 1953 ல் நடந்த Baton Rouge bus boycott போராட்டம் தான் காரணம், என்பது வேறு கதை!

ரோஸா ஓட்டுனரின் பேச்சையும் வெள்ளையர்களையும் அவ மதித்ததாக கைது செய்யப் பட்டு மிகவும் மோசமாக நடத்தப்படுகிறார்!

  அதே ஆண்டு March 2 -ல் 15 வயது சிறுமி -யும்
இதே போல் பேருந்தில் இருந்து வலுக் கட்டாயமாக இறக்கி விடப் படுகிறார்! கையில் காப்பு மாட்டி கைது செய்யப் பட்டார்!  வெள்ளை நிறத்தவருக்கு இடம் தரவில்லை என்பதால்..!
அவர் NAAP - யின் உறுப்பினர்!
   NAAP - National Association for the Advancement of Colored People's. 
  இது, 1909 ல் Maryland மாகாணத்தில் துவங்கப் பட்ட கருப்பின மக்களின் உரிமைக்கான அமைப்பு!
   அதே அமைப்பின் ஆலோசகராக இருப்பவர் ரோஸா பார்க்கர்!

   அதன் கோபம் தான் ரோஸா எழவே முடியாது என்று உறுதியாக இருந்து!

விடயம் மெது மெதுவாக மக்களிடம் பரவியது!

5 - டிச. குற்றவாளி என்று கூறி $ 10 அபராதமும், $4 நீதி மன்ற நேரத்தை வீணடித்ததாகவும் தண்டனை வழங்கப் பட்டது ரோஸா வுக்கு!

அன்று இரவே,
அனைத்து கருப்பின நல அமைப்புகளும் இடது சாரி  இயக்கங்களும் ஒன்றிணைந்து துண்டறிக்கை தயாரித்து வீதி வீதியாக வழங்கினர்!

  ஆங்காங்கே பணியில் இருக்கும் கறுப்பினத்தவர் வேலை நிறுத்தம் செய்யும், ஒத்துழையாமை-யை கடைபிடிக்கவும் வலியுறுத்தல் செய்தது அந்த துண்டறிக்கை!

NAAP-யின் தலைவராக இருந்த E.D.NIXON அனைத்து தேர்தல் சாராத அமைப்புகளின் தலைவர்களையும் கூட்டினார்!
  கூட்டத்தில்

Montgomery Improvement Association என்ற பெயரில் போராட்டம் நடத்துவது எனவும் King என்பவர் அதனை வழி நடத்துபவராகவும் இருந்தார்!

  மக்களிடம் வேகமாக செய்தி பரவியது!
*   Dec-8 முதல், அனைத்து கருப்பின Taxi Driver களும் 10 சென்ட் (பேருந்து கட்டண விலை) க்கே கருப்பின மக்களை அழைத்துச் செல்ல முடிவு செய்து., போராட்டத்திற்கு ஆதரவாக நின்றனர்!

  *  குழந்தைகள் முதல் முதியோர் வரை யாருமே பேருந்தில் ஏறக் கூடாது என்று உறுதியாக நின்றனர்!

* தேவையான இடத்தில், தனியார் Car -களை பங்களித்தனர்!
Car Pooling அங்கு தான் பிரபலமானது!

* பலர் நடந்தே சென்றனர்!

* குதிரை, மாட்டு வண்டி என அனைத்தையும் பயன் படுத்தினார்கள்!

* கணிசமானோர் வெள்ளை நிறத்தவர்களுக்காக உழைப்பதை நிறுத்தினர்!

* மக்கள் கூடும் பொது இடங்களில் நிதி திரட்டப் பட்டது!., நடப்பவர்களுக்கு செருப்பு, போராட்டத்தால் வேலை இழந்தோருக்கு நிதி உதவி என அனைவரும் போராட்டத்தை தாங்கி பிடித்தனர்!

   பிற்காலத்தில் இதை மார்டின் லூதர் கிங் Jr. இவ்வாறு வியந்து எழுதுகிறார்!
   " அது கண் முன்னே நிகழ்ந்த வரலாற்று மாற்றம்!
பல வெள்ளை நிற சீமாட்டிகளே காரை ஓட்டி வந்ததை பார்த்தேன்! "
  ஓர் நூற்றாண்டு கால அடிமைத்தனம் உடைந்து நொறுங்கிக் கொண்டிருந்தது! "

போராட்டம் ஓரிரு நாள் இன்றி மாதக் கணக்கில் தொடர்ந்தது!
நாடு முழுதும் Civil Rights குறித்தான Pressure அதிகரித்ததும் , மாவட்ட நீதி மன்றத்திற்கு வழக்கு வந்தது!
நீதிபதிகளில், 3 -ல் 2 பேர் பேருந்தில் நடத்தப்படும் இன பாகுபாடு ஜனநாயகத்திற்கு எதிரானது என்று தீர்ப்பளித்தனர்!  

   ஆனால் அதை ஏற்காத அலபாமா நீதி மன்றம் Supreme Court of US க்கு போனது! அத்தனை அளவுக்கு வெள்ளையர்கள் Domination இருந்தது குறிப்பிட வேண்டிய ஒன்று!

இந்த இடைப் பட்ட காலத்தில் ஓர் நாள் கூட போராட்டத்தை மக்கள் நிறுத்தவேயில்லை!

இந்த அழுத்தம் நீதி மன்றத்தையும் நெருக்கியது! ஆனாலும் கால தாமதமாகவே டிச., 17 ம் தேதி அலபாமா அரசு செய்த மேல் முறையீட்டை நிராகரிப்பு செய்தும், மக்கள் அனைவரும் சமமே!
  பேருந்தில் எந்த பாகுபாடும் கூடாது என்று உத்தரவிட்டது!

டிச., 20 மாகாண அரசு  நீதிமன்ற உத்தரவை ஏற்று நடைமுறைக்கு கொண்டு வந்தது!

அன்று தான் மக்கள் போராட்டத்தை நிறுத்தினர்!
மறு நாள் 21 -டிச 1956 ரோஸா பார்க்கர் முதல் பக்க இருக்கையில் அமர்ந்து பேருந்து பயணத்தை துவக்கி வைத்தார்!

அப்போராட்டம் நடந்தது மொத்தம் 381 நாட்கள்!  அமெரிக்கா வை புரட்டி போட்ட முக்கியமான ஒன்று!

    நாம் ஓர் போராட்டத்தை தமிழ் நாடு முழுதாக தொடர்ந்து நடத்த வேண்டியது எத்தனை அவசியம் என்பதை உணருங்கள்!

நாம் போராடாமல், நமக்கான உரிமை தானாக கையில் வந்து விழாது!

Sunday, 8 July 2018

தமிழகம் ஏன் எப்போதுமே இந்துத்துவா கருத்தியலை எதிர்க்கிறது?

தமிழகம் எப்போதுமே ஓர் முற்போக்கு தன்மையோடு தான் இயங்கி வருகின்றது!

   அது இந்தியாவிடம் இருந்து முற்றிலுமாக விலகி விட்டது என்று சொன்னால் அது மிகைப் படுத்தலே……!

  யாரை எப்படி கையாள வேண்டும் என்பது உலகின் முதல் இனத்திற்கு நன்றாகவே தெரியும்!

   சென்ற முறை மோடி சென்னை வந்த போது #GoBackModi என்ற வாசகம் உலகின் ஒவ்வொரு மூலையையும் அசைத்துப் பார்த்தது என்பதை யாருமே மறுக்க முடியாது!
   தமிழகத்தில் நடக்ககும் அனைத்து பிரச்சனைகளுக்கும் பாஜக வும், இந்துத்துவா கருத்தியலும் தான் காரணம் என்பதை நாம் சொல்லாமலே மக்கள் உணரத் தொடங்கி பல மாதங்கள் ஆகின்றன!
    காவிரிக்காக பேசாத பிரதமர், மக்கள் போராடுவதை பற்றிக் கவலைப் படாத பிரதமர்………
  ஏகப் பட்ட ஊழல் முறைகேடுகளுக்கு ஆளாகி உள்ளதாக கூறப்படும் பாதுகாப்புத்துறை கண்காட்சியை திறக்க வருகிறார் என்றதும் ஒட்டுமொத்த தமிழகமே தன்னெழுச்சியாக திரண்டு நின்றது தான் தமிழர்களின் தனித்துவமான இயல்பை நமக்கு காட்டியது!

   இன்று அமித்ஷா வரப் போகிறார் என்றதும் அதே அளவில் #GoBackAmitShah என்று Twitter உலகம் தயாராவதை உளவுத்துறையோ, அரசோ, ஊடகங்களோ கவனிக்கிறதா என்பதே கேள்வி!

   எந்த பதவியிலும் இல்லாமல் ஒரு கட்சி தலைவரை தமிழர்கள் ஏன் இப்படி எதிர்க்கிறார்கள் என்ற கேள்வி எழும்..,
   மிக எளிதாக இதை புரிந்து கொள்ளலாம்..,, இந்தியா முழுதும் மனித குலத்தின் மீது நடக்கும் தாக்குதல்களுக்கு பாஜக தான் காரணம் என்பது ஊரறிந்த உண்மை!
  எத்தனை கொலைகள், எத்தனை மிரட்டல்கள், எத்தனை எத்தனை பதவி மாற்றங்கள்..!
   எந்த ஆட்சியும் செய்யாத ஒன்று தான் நீதி மன்றத்தை தனக்கு இசைவாக பாஜக வளைத்தது!

   இலங்கை-யில் ராஜபக்க்ஷே கையாண்ட அதே வழி முறை!
   இதுவரை மணிப்பூர், கோவா என்று அவர்கள் செய்த ஜனநாயக படுகொலைகளை கர்நாடகா-வில் செய்ய முடியாமல் போனதில்…… நாம் மகிழ்ச்சி அடைய ஒன்றும் இல்லை!
  காங்.,ம் இதை முன்னாளில் செய்துள்ளதே!

   ஆனால், தமிழகத்தை ஆள்வதே பாஜக என்பதில் தமிழனுக்கு கிஞ்சித்தும் சந்தேகம் இல்லை!

13 பேர் படுகொலை,

போராடுபவன் தேச துரோகி……

கேள்வி கேட்டால்…… குண்டாஸ்,

போராடினால் NSA

  இப்படி நடக்கும் அனைத்து அரச பயங்கர வாதங்களும் பாஜக வின் கண் அசைவில் தான் நடக்கிறது என்று நன்றாகவே தமிழகம் உணர்ந்து விட்டது!

அதன் வெளிப்பாடு தான் 1 1/2 ஆண்டுகளுக்கு பிறகு தேர்தலை மட்டுமே மனதில் வைத்து தமிழகம் வரும் அமித்ஷா வை விரட்டும் #GoBackAmitShah எனும் அம்புகளும், ஈட்டிகளும்!

   இது வெறும் அமித்ஷா வுக்கானது அல்ல ஒட்டு மொத்த மதெவெறி சக்திகளுக்கு விடுக்கப் படும் எச்சரிக்கை!

 

Friday, 6 July 2018

நெய்மரும் 8 வழிச் சாலையும்!

நெய்மர் துடிப்பதை நடிப்பு எனும் உலகளாவிய ஊடகங்கள், கொலம்பிய Player முள் ஷூ-வால் நெய்மர் காலை மிதித்ததை கிஞ்சித்தும் பேசியதாக தெரிய வில்லை!

சர்வதேச ஊடகங்களிடம் நேர்மை தெரியவில்லை.! நெய்மர் மீது இருக்கும் பொறாமை வன்மமாகவே  வெளிப்படுகிறது!

   8 வழிச்சாலை க்கு போராடும மக்களிடம்  நம்ம ஊர் நீதி மன்றம் சொன்னுச்சே…… "புரிஞ்சிக்கோங்க" யாரோ சொல்றாங்க-ன்னு
திட்டத்தை எதிர்க்காதீங்கன்னு!
 
மேல சொன்ன அதே Category தான்!

  தமிழ்நாட்டு மக்கள் மேல இந்தியாவுக்கு எந்த அக்கறை ம** கிடையாது!
நாம போராடும் போதெல்லாம், ஏம்ப்பா சும்மா…… போராட்டம் போராட்டம்னு எதையாவது தூக்கிட்டு வந்திடுறீங்கன்னு சில Elite சமூக ஆர்வலர்களும், Corporate அரசியல் விமர்சகர்களும் பினாத்துவதை பார்க்கலாம்!

   இந்த எட்டு வழிச்சாலையை ஆதரிக்கும் மைலாப்பூர், தாம்பரம், ஃபோர்ட் கிளப் வாசிகள் கிட்ட உங்க வீட்டு Compound Wall யை கொஞ்சமா இடிச்சிக்குறோமே……
ரெண்டு பக்கமும் ஒரு மீட்டர் மட்டும் அகலப் படுத்துறோம் சாலையை-ன்னு!
       அலறி அடிச்சி கிட்டு ஓடி வந்திடுவாங்க., அத்தனை பேரும்! மொத்த டீ.வி யும் அவங்களுக்கு 24 மணி நேர நேரலை ஒளிபரப்பு செய்ய ஆரம்பித்திருக்கும்!

   இங்கு, இருப்பவனுக்கு ஒன்னு  இல்லாதவனுக்கு ஒன்னு என்பது மாறி ………,
  அதிகார வர்க்கத்திற்கும் So called உயர் சாதிகளுக்குமே அனைத்தும் அசைகிறது!

   ஜல்லிக்கட்டு போராட்டத்திற்-க்கு முன்பு இங்கு நடந்த போராட்டங்களை தமிழ்ச் சமூகம் எப்படி அனுகியது என்பது முக்கியமானது…………

    முல்லைப் பெரியாறு க்காக சென்னையில் பேரணி!

  ஈழ விடுதலை போராட்டம்!

அப்பாவி தமிழர்கள் மூவர் தூக்கினை தடுத்து நிறுத்தி ஜெ. வை-யே தீர்மானம் போட வைத்த அமைதி வழிப் போராட்டங்கள் என எத்தனையோ நிகழ்ந்துள்ளது!

  2013 - மார்ச் -ல்  மாணவர் போராட்டம் இன்று வரை இந்திய உளவுத்துறை  மறக்க முடியாத ஓர் தொடர் போராட்டம்!

இவை எல்லாம் அத்தனை பெரிய அளவில் Paid செய்தி நிறுவனங்களால் கொச்சைப் படுத்தும் வேலையை செய்ய முயன்றதில்லை! செய்தாலும் உடனடியாக முற்போக்கு ஊடகவியலாளர்களே வேகமான பதிலால்  அடித்து நொறுக்கியிருக்கிறார்கள்!

  ஆனால், தற்போது போராடும் மக்களை சமூக விரோதிகள் என்றும் தேச விரோதிகள் என்றும் முத்திரை குத்துவதற்கு என்றே…… நாளிதழ்கள் முதல் நடிகர்கள் வரை ஆட்களை தேர்வு செய்து வைத்திருக்கிறார்கள்!

நெய்மர் வலியால் துடித்தாரா…… அல்லது அதையும் தாண்டி நடித்தாரே என்பதை தாண்டி, காலை காயப் படுத்திய கொலம்பிய வீரரை பற்றி யாருமே பேசாததும் ஓர் அரசியலே!

தலைவலியும் வயிற்று வலியும் தனக்கு வந்தால் தான் தெரியும் என்பார்கள்..,
அது போலவே…… 40 ஆயிரம் வீடுகளை இழக்கப் போகும் மக்களின் வலி  வீட்டு வேலைக்கு கூட ஆட்களை அரசு செலவில் வைத்திருக்கும் நீதிபதிகளுக்கு மக்களின் வலி தெரிய வாய்ப்பில்லை தான்!

போராடுவோம்………, அதைத் தவிர்த்து வேறு எதுவுமே வாய்ப்பாக நம் முன் இல்லை நம்மிடம்!
நாம் போராடுவதை கை விடுவதும் நம் அடுத்த தலைமுறையை சவக் குழி-யில் தள்ளி விடுவதும் ஒன்றே………!

Friday, 6 April 2018

காவிரி யா… கிரிக்கெட்டா… எது தேவை?

IPL -யை தடுக்கலாமா..? காவிரிக்காக இரண்டு ஆண்டுக்கு பிறகு சென்னை அணி வருவதை புறக்கணிக்க முடியாது...,
தண்ணியும் வேண்டும் 2 வருட கண்ணீரும் துடைக்கணும்
போன்ற அரைகுறை வாந்திகளை பரவலாக காண முடிந்தது Twitter - ல் ..!

   சரி..., இது ஒரு பக்கம் இருக்கட்டும் ....!

ஒரு 6 மணி நேரம் கிழக்கில் Queen's Land நோக்கி பயணிப்போம் வாருங்கள் !

Gold Coast - தற்போது நடந்து வரும் Commaon Wealth Games இங்கு தான் நடந்து வருகின்றது !
ஆஸ்திரேலியாவின் Brisban க்கும் New South Wales க்கும் இடைப்பட்ட ஓர் அழகிய கடற்கரை நகரம் தான் கோல்ட் கோஸ்ட்...!
  1788 -ல் ஐரோப்பியர்கள் இங்கே நுழையும் போது 500 க்கும் பக்கமான பழங்குடி இன குழுக்களை சேர்ந்த மக்கள் வாழ்ந்ததாக வரலாறு கூறுகிறது !  Torres Strait Islander என்ற தீவு தான் அவர்களின் பூர்வீக பெயர் கொண்டதாக வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள் !

இன்று அவர்கள் 2.8 % மக்கள் மட்டுமே ஆஸ்திரேலியா முழுக்க வாழ்கின்றனர் !
அவர்களின் முக்கியமான இடமாகவும், பூர்வகுடி மண்ணாகவும் இருக்கும் Queen's Land இன்று முற்றிலும் Corporate களாலும் அரச பயங்கர வாதங்களாலும் ஆக்கிரமிப்பு செய்யப் பட்டது !
அதில் ஒன்று Adani-யின் Coal Port Point உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது ..! அந்த மொத்த மக்களின் வாழ்வாதாரமும் முற்றிலுமாக அழிக்கப் பட்டது !

அதை எதிர்த்து அவர்கள் சில மாதங்கள் முன்பு கடற்கரையில் கூடி Adani Get Out / #StopAdani என்று மனித சங்கிலியாக நின்றது நினைவு இருக்கும் !

நேற்று முன்தினம் 4 ம் தேதி Common Wealth Games நடக்கும் இடத்தை Indigenous Australians என்று அறியப்படும் பூர்வ குடி மக்கள் முற்றுகை இட்டு போராட்டம் நடத்தி உள்ளனர் !
அவர்கள் முற்றுகையிட்டது England இளவரசரும், ஆஸ்திரேலிய அதிபரும் தங்கி இருந்த விடுதியை..!

இதில் கைது செய்யப் பட்டவர்கள் 3 பேர் .., ஆம் ,மூன்று பேர் மட்டுமே காரணம் அங்கே போராடியது மொத்தமே 10 க்கு குறைவானவர்கள் தான் !

53 நாடுகள் கொண்ட Common Wealth Games யை எதிர்த்து சிறு குழு மட்டுமே போராட முடியும் என்று தெரிந்தும் அவர்கள் செய்வது உலகிற்கு தன் பிரச்சனையை வெளிச்சம் போட்டு காட்டுவதற்.காகத் தான் !

அவர்களுக்கும் அமெரிக்க போல மர்லன் பிரண்ட்டோவும் , Leano டிக்காப்ரியோ -வோ கிடைத்திருந்தால் அவர்களின் துயரமும் துடைக்கப் பட்டு இருக்கும் .,
நம்மை போல அப்துல் கலாமும் , ரஹ்மானும் கிடைத்திருக்கும் போல...!

நம்மிடம் இருக்கும் 8 கோடி  பேரில் 3 கோடி பேராவது IPL க்கு எதிர்ப்பு தெரிவிக்கா விட்டால் ..

நம் பேரன்கள் வெறும் 8 பேர் 2050 களில் நடக்கும் உலக கோப்பை Cricket போட்டியை முற்றுகை இடுவார்கள் தமிழகத்தில் 20 வருடம் முன்பாக நடந்து முடிந்த இனப்படுகொலையை கண்டித்து !

#Aboriginal

#Colonisation_is_not_a_game

#IndiaBetraysTamilNadu
#TNExit.

Wednesday, 21 February 2018

எதிர்பார்த்த கமல், எட்டியே நில் என்ற மம்தா தீதி

பலர் கவனிக்காதது தான் நமக்கு பட்டுன்னு கவனத்துக்கு வரும்!
   அதான் நாம் பயின்ற அரசியலின் ஆழம்!

டெல்லியில் இருக்கும் வங்காளிகள் அனைவரும் AAP க்கு வாக்களியுங்கள்!
  -
  இது மம்தா தீதி 2015 டெல்லி தேர்தலுக்கு முந்தைய நாள் பதிந்த ட்வீட்!

   பாஜக ஆட்சிக்கு வந்த சில நாட்களிலேயே அவர்களின் நோக்கத்தை விரைவாக புரிந்து கொண்டவர்களில் முக்கியமானவர் மம்மா பேனர்ஜி!
   அதனால் தான் மிக வேகமாக கெஜ்ரிவாலை அப்போது ஆதரித்தார்!

கமல் கடந்த சில நாட்களாக, பினராயி விஜயன் தொடங்கி அர்விந்த் கெஜ்ரிவால் வரை ஒவ்வொருவராக பார்த்து விட்டு தன்னை மீடியா வெளிச்சத்திலேயே  வைத்திருந்தார்!
அதில் ஒரு பகுதியாக மம்தா அவர்களையும் சந்திப்பதாக கூறினார்!

  அவர் கேட்ட நேரத்தை கடைசி வரை ஒதுக்கவேயில்லை மம்தா தீதி!

அதற்கு காரணமாக நான் பார்ப்பது, கமலின் எத்தனை மறைத்தாலும் வெளியே தள்ளிக் கொண்டு வந்து எட்டிப் பார்க்கும் அந்த RSS / பாஜக கொண்டை தான்!

  * Demonitaization யை ஆதரித்தது

  * 150 நாட்களாக டெல்லியில் போராடிய விவசாயிகள் பற்றி வாயே திறக்காதது!

  * மக்களை இத்தனை வேதனையில் தள்ளிய மோடி க்கு முட்டு கொடுப்பது!

  * GST யை ஆதரித்தது - மாபெரும் பண மதிப்பிழப்பை பார்த்த பிறகும் கூட……

எல்லாவற்றையும் விட தன் சொந்த மாநிலத்துக்காக ஒட்டு மொத்த இந்தியாவையும் எதிர்க்க தயார் என்று சொன்னவர் மம்தா!

தமிழக மக்களின் மீது நெருக்கப்படும் இத்தனை பிரச்சனைகளை பற்றி வாயே திறக்காதவர் கமல்!

அதை தெளிவாகவும் மதவெறி பணியா கும்பலின்  முற்போக்குவாத முகமூடி அணிந்த கைக் கூலிகளில் கமலும் ஒருவர் என்பதை தெளிவாக உணர்ந்து விட்டார் மம்தா!

அதனால் தான் கமலை மதிக்கவும் இல்லை, நேரம் ஒதுக்கவும் இல்லை!

அடுத்த சில நாட்களில் மே.வங்க அரசு நடத்திய சினிமா தொடர்பான விழா ஒன்றில் முதல்வர் என்ற காரணத்தால் கலந்து கொண்ட மம்தா அவர்களோடு ஒட்டி நின்று Photo எடுத்துக் கொண்டார் கமல்!

அதையே மம்தா - கமல் அரசியல் சந்திப்பாக ஊடகங்கள் Marketing செய்கின்றனர் 😂😂

அதற்கு அடுத்து,
  கட்சி துவங்கும் போது மம்தா வருவார் அல்லது வீடியோ அனுப்புவார் என்றெல்லாம் "விகடன் " னை வைத்து  You Tube ல் கதை  விட்டார்கள்!

கடைசில புஸ்ஸு………

சரி, வீடியோ தான் அனுப்பலை Tweet ஏதும் போட்ருக்காரான்னு தேடி பார்த்தேன்!

😂😂😂 அப்டியெல்லாம் ஒரு சம்பவமே நடக்கலை!

தமிழக மக்களே………,

ஒட்டு மொத்த இந்திய துணை கண்டத்திலேயே " தமிழக தலைமைச் செயலகத்தில் " IT யும் துணை இராணுவமும் நுழைந்த போது நமக்கான உரிமைக்குரலாக
  முதலில் சீறிப் பாய்ந்தது " மம்தா " வின் குரல் தான்!
  என்பதை எந்த அரசியல் அமைப்பு அறிந்த தமிழனும் மறக்க மாட்டான்! 

  அவர் ஒருவரை நிராகரிப்பு செய்கிறார் என்று சொன்னால்,  தமிழக மக்களுக்கு அது தேவையில்லாத ஜடம் என்பதை அறிக…!

   "சிலிப்பர் "செருப்போடு மட்டுமே மக்களை      
                      சந்தித்து மக்களை வென்றவர்க்கு தெரியும்

"சிலீப்பர் செல்ஸ் " களுக்கு என்ன மரியாதை தர வேண்டும் என்பது!

Saturday, 17 February 2018

வெல்லும் தமிழீழம்

தமிழர்களின் அன்றாட வாழ்வோடு ஒன்றிப் போன அதே நேரம் பலரும் அதிகம் பேசாத வார்த்தை தமிழீழம்!

எப்படி உருவானது தமிழீழம் என்ற வார்த்தை!?

  தற்போதைய இலங்கையின் முதற் பெயர்  வரலாற்று ரீதியாக தூய தமிழில் ஈழம் தான்! தமிழர்கள் தங்களுக்கான நிலப் பரப்புக்கும் வாழ்வாதாரப் பகுதிக்கு மட்டுமே சுதந்திரம் கேட்டு போராடியதால் அதை தமிழ் ஈழம் என்று அழைத்தனர்!

ஏன் தேவைப் பட்டது சுதந்திர தமிழீழம்!?

  இலங்கை-யில் வேலைக்கு தானே போனார்கள் தமிழர்கள் அங்கே போய் நாடு கேட்கலாமா என்று பலர் என்னை கேட்டது உண்டு!
 
  உண்மையில் அம் மண்ணின் பூர்வ குடிகள் தமிழர்கள் தான்!
அசோகர் மற்றும் அவரின் மகள் சுமத்திரை யின் வருகைக்கு பிறகு தான் அங்கே பௌத்தம் வளர்க்கப் பட்டு பின்னாளில் சிங்கள இனமாக மாற்றம் கண்டது!

ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடியதில் 19-ம் நூற்றாண்டிலும் 20 ம் நூற்றாண்டின் துவக்கத்திலும் தமிழர்களே மிக மூர்க்கமாக எதிர்த்தனர்!
இரு சமூக மக்களும் சமயத்தில் இணைந்து எதிர்த்து நிற்கும் போது தங்களால் நினைத்த வியாபாரத்தை செய்ய இயலாமல் திணறியது குறிப்பிட தக்கது!

அப்போது தான் மக்களை எவ்வாறு பிரித்து ஆள்வது என யோசிக்க துவங்கியது பிரிட்டிஷ்!

   அதன் முதற் படியாக, இரு மக்களுக்கும் இடையே இன வெறுப்பை விதைக்க மஹாவம்சம் என்ற சிங்கள இன வரலாறாக கூறப்படும் நூல் ஒன்றை பாலி மொழியில் இருந்து சிங்களத்திற்கு மொழி பெயர்த்து தந்தது சிங்கள மத குருமார்களையும் மக்களின் மனதில் மெல்ல மெல்ல வன்மத்தை விதைக்க துவங்கினர்!

இதன் தொடர்ச்சியாக சிறு சிறு இனவெறி பிரச்சனைகள் துவங்கி நாடு விடுதலை அடையும் சமயத்தில் " ஆங்கிலேயர்களிடமிருந்து விடுதலை கிடைத்ததும் தமிழர்கள் தமிழ்நாட்டோடு போய் சேர்ந்து விடுவார்கள் " என்று பௌத்த தலைவர்கள் கூறும் அளவுக்கு நிலைமை போனது!

     1944 ல் பிரிட்டன் ஓர் கமிஷனை நியமித்தது! இலங்கைக்கான அரசியலமைப்பை நிர்ணயிப்பதற்காக அமைக்கப் பட்ட கமிஷன் அது!
   அப்போது தமிழர்கள் முன் வைத்த கோரிக்கை, 50% அரசியல் மற்றும் இட ஒதுக்கீடு உரிமை சிங்களர்களுக்கும் மீத முள்ள 50% உரிமை பூர்வ குடி தமிழர்கள், இந்தியாவிலிருந்து வந்திருக்கும் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மற்றும் இஸ்லாமியர்களுக்கு மட்டுமே!  இதை பிரிட்டன் முற்றிலுமாக நிராகரிப்பு செய்தது!

   இது தான் தமிழர்களின் மீதான அடக்குமுறை க்கு பெரிதும் வசதியாகிப் போனது!

1959 செப் 25 அப்போதைய பிரதமர் சாலமன் பண்டார நாயகே ஓர் புத்த பிக்கு வால் சுட்டுக் கொல்லப் பட்டார்!  
அதற்கு அவர்கள் சொன்ன காரணம், 2500 வது புத்த ஜெயந்தியில் சிலோனை முழுமையான சிங்கள பௌத்த நாடாக அறிக்க தாங்கள் உத்தரவிட்டதை இந்த பிரதமர் நிறைவேற்றவில்லை என்பது தான்!

     இது, அங்கே வளர்த்தெடுக்கப் பட்ட சிங்கள இனவெறி க்கு ஓர் சிறு உதாரணமே! 

1951 ல் தொடங்கி சிறு சிறு உரிமைகளுக்காக கோரிக்கை வைத்தவர் போராடியவர்கள் என அனைவரும் தாக்கப் பட்டார்கள்!

தமிழ் தேசிய கூட்டமைப்புகள் ஆளும் கட்சி எதிர் கட்சி என மாறி மாறி கூட்டணி வைத்தும் ஏதேதோ ஒப்பந்தங்கள் போட்டும் தேர்தலில் போட்டி இட்டு ஆயிற்று!
ஆனால் ஒன்றும் பிரயோஜனம் இல்லை!

வெற்றி பெற்று ஆட்சியை பிடித்ததும் தமிழர்கள் வைத்த கோரிக்கையை காற்றில் பறக்க விட்டு விடுவார்கள்!

1958 ல் நடந்த வன்முறை தான் மிகப் பெரிய அளவில் தமிழர்களை பாதிப்புக்கு உள்ளாக்கியது! குழந்தைகள் வரை எரியும் தீக்கு இரையாக்கப் பட்டனர்!
அதே அளவுக்கு 1983 ல் நடந்த கருப்பு ஜூலை தமிழர்கள் வாழ்வை புரட்டி போட்டது!

1970 களின் மத்தியில் ஆசிரியர் நவரத்தினம் உள்ளிட்டோரின் முயற்சியில் தமிழர்களுக்கான தனி நாடு வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப் பட்டது!

அதே கால கட்டங்களில் தான் தமிழர்கள் ஆயுதம் ஏந்த அன்னியம் ஆனார்கள் என்பது வரலாற்று பதிவு!

   ஈழ இனப்படுகொலை-யில் சர்வதேசத்தின் பங்கு ஏன் வந்தது எதற்காக?!

     தமிழீழம் பற்றி பேசும் போது புவிசார் அரசியலை (Geo Politics)  பற்றி பேசியே ஆக வேண்டியது அவசியமாகிறது!

   தமிழர்களை கொன்றதில் அமெரிக்காவின் பங்கு மிக முக்கியமானது! அதை புவிசார் அரசியலோடு ஒப்பிட்டு பார்ப்பது அவசியம்.,  அதைப் பற்றி தான் இங்கே காணப் போகிறோம்!

அமெரிக்காவுக்கு ஏன் இவ்வளவு வஞ்சம் ஈழத்தின் மேல் என்பதை நாம் தெரிந்து கொள்வது அவசியம்  :-

  1950 களின் தொடக்கத்தில் தெற்காசியாவிற்கான அமெரிக்க வெளிவிவகாரத் துறை ஓர் அறிக்கையை வெள்ளை மாளிகைக்கு அளிக்கிறது, அதில்,  
உலகின் 70 % வர்த்தகம் கடல் வழியே தான் நடக்கின்றது! அதில் 45 % வர்த்தகம் தெற்காசியாவின் இலங்கை தீவை ஒட்டி செல்லும் வழித் தடத்தில் இருப்பது  மிக முக்கியமானதாக கருதப் படுகின்றது!   எனவே இதன் அருகில் இருக்கும் திரிகோணமலை உள்ளிட்ட கடற் பகுதி 50 வருடங்களுக்கு பிறகு மிக முக்கிய பொருளாதார மையமாக மாறும் வாய்ப்புள்ளது!
அச் சமயம்  இப் பகுதியை எந்த நாடு அல்லது எந்த நாடுகளின் கூட்டமைப்பு இதை கட்டுப் பாட்டில் வைத்துள்ளதோ அதுவே அன்றைய வல்லரசா அல்லது வல்லரசுக்கு இணையாக திகழும்!
       - இது தான் அந்த அறிக்கை! 
     
    இதை மனதில் கொண்டே US தன் காய்களை நகர்த்த துவங்கி இருந்தது!  ஆனால், பெரிதாக எதுவும் நிகழவில்லை!

இதற்கு இடையில் Sri Lanka விற்கு சுதந்திரம் வழங்கிய இங்கிலாந்து தன் பிடிப்பு எப்போதும் இவர்கள் மீது இருக்க வேண்டும் என்றே பாராளுமன்றத்தில் 1947 துவங்கி அடுத்த இருபது வருடம் தன் ஆதிக்கத்தை செலுத்தியது British.  அதனை இரட்டை ஜனநாயகம் என அப்போது அழைத்தனர்!
   
  இங்கிலாந்து முழுமையாக வெளியேறிய பின்னர் 75-80 களில் அமெரிக்கா தனது வானொலி நிலையமான Voice Of America வை திரிகோணமலையில் அமைக்க Sri Lanka வுடன் ஒப்பந்தம் போட்டது அமெரிக்கா!

அதை மூர்க்கமாக எதிர்த்தவர் இந்தியாவின் இரும்பு பெண்மணி என்று அழைக்கப் பட்ட அப்போதைய பிரதமர்  இந்திரா காந்தி!
தெற்காசியா-வில் இந்தியா தன் இருப்பை தக்க வைக்க மிக தீவிரமாக இருந்த நாட்கள் அவை!
 
   ஆனால்,
பின்னாளில் LTTE யிடம் இருந்து திரிகோணமலை இலங்கை கைக்கு வந்த பிறகு அந்த இடத்தை அமெரிக்கா வுக்கு தாரை வார்த்தது Sri Lanka.,

  ஆனால் அதுவே பின்னாளில் இலங்கை க்கு பிரச்சனையாக மாறவே VoA 2017 ஜனவரியில் வெளியேற்றப் பட்டது குறிப்பிட தக்கது!

   ஏன் தமிழகம் ஈழத்துக்காக நிற்க வேண்டும்!?

   தெற்காசிய பிராந்தியத்தில் உலகின் முதல் தேசிய இனத்தின் ஓர் இராணுவம் வலுவான அரணாக இருந்ததே இந்தியாவின் முக்கியமாக தமிழகத்தின் பாதுகாப்பாக கருதப் பட்டது சர்வதேச அறிஞர்களால்!
  ஆனால்,
ஒரு போதும் அதை தமிழகமும் சரி இந்தியாவும் சரி அதை ஏற்றுக் கொண்டதே இல்லை!

  அந்த பகுதி எவ்வளவு முக்கியமான ஓர் இடமாக நினைத்திருந்தால் அமெரிக்கா தன் முழு பலத்தையும் ஓர் உள் நாட்டு போரில் காட்ட தயாராககும் என்பதை தமிழர்கள் உணர்வது அவசியம்!

   இன்றைய சூழலில் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதையும், இதனால் நமக்கு ஏற்படவிருக்கும் ஆபத்துக்களை பற்றியும் விரிவாக பேச இந்த பிப்.- 18 நமக்கு கிடைத்த ஓர் அறிய வாய்ப்பை பயன் படுத்திக் கொள்வோம்!

    #வெல்லும்_தமிழீழம் மாநாட்டில் சந்திப்போம்!