Sunday, 22 January 2017

இயக்கமாவீர் ……!

டேய் மானாவாரியா சிரிப்பு மூட்டாதீங்கடா!!!!

ஆண்ட  பரம்பரை   வாசிக்கிறது……ம் பாஜக ஆடுறது……… மா……… அட அட அட என்ன ஒரு பொருத்தம்!
என்னங்கடா ஒரே தில்லான்னா மோகனாம்பாள் ரேஞ்சுல முட்டு குடுக்குறீங்க !

   பத்தாததுக்கு இப்போ மே17 இயக்கத்தை உள்ளே விட்ராதீங்க அவங்க போராட்டத்தை சிதைச்சிடுவாங்க…………! அப்டின்னு கூவுறானுக!

அடேய்!  போராட்டம் ஆரம்பிச்ச நாள்ல இருந்தே மே 17 இயக்கம் அங்க தான் இருக்கோம்! 

     மேடை நாடகம், பறை இசை என தோழர்கள் கலக்கி இட்டு தான் இருக்காங்க!  ஓரமா போய் முட்டு குடுங்கடா!  
வந்துட்டானுக சொம்பை தூக்கிட்டு!

மெரினாவை, இது  தமிழர் கடல் நாங்க இங்க தான் எங்கள் போராட்டத்தை நடத்துவோம்ன்னு முதல்ல இறங்குனதே நாங்க தான் 2011 - ஜூன் மனித உரிமைகள் தினத்துல ஈழ இனப்படுகொலைக்கான முதல் நினைவேந்தலை அங்க முதன் முறையா மே 17 இயக்கம் தான் நடத்துச்சு!
அதுல எதிர் பார்த்ததை விட அதிக அளவில் மக்கள் வந்ததால் அடுத்து 2012 மே மாதம் அனுமதி தரலை!  இது தமிழர் கடல் தான் இங்க தான் நடத்துவோம் தமிழர் உரிமையை விட்டு தர மாட்டோம்ன்னு திடமா நின்னு நடத்தி முடிச்சோம்!

  அதுனால அதுல கலந்துகிட்ட பல பேர் மீது வழக்கு போட்டார்கள். தோழர் கவிஞர். தாமரை வரைக்கும்!

  அதை உடைத்து வெளியே வந்த பின்னர் தான் யார் வேண்டுமானாலும்  அங்கு ஒன்று கூடல் நடத்தலாம் என்ற சுதந்திரமான  அனுமதியை உறுதி செய்தோம்!

   தம்பிகளா ……!  இதெல்லாம் உங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை தான் சாதிக்கும்,  மதத்துக்கும் முட்டு குடுத்தே காலத்தை ஓட்டுனா இப்டி தான் பேச தோனும்!

   போராடினால் தான் நமக்கு உரிமையே கிடைக்கும் . தேர்தல் அரசியலில் வெறும் பேச்சு மட்டுமே என்பதை உணர்ந்ததால் வந்த கூட்டம்!  சாதியும் மதமும் சொல்லி அழைத்துவரப் பட்டவர்கள் அல்ல இவர்கள்!  
     இதை உணர்ந்த தேர்தல் கட்சிகள் தான் வேகமாக மே 17 மீது பாய்கின்றன!  காரணம், தேர்தல் கட்சிகளால் நமக்கான உரிமையை பெற்றுத் தரும் அளவுக்கு இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் தேசிய இனங்களுக்கான உரிமை இல்லை என்பதை நாம் மீண்டும் மீண்டும் வலுவாக கடந்த காலங்களில் வழுவாக பதிவு செய்து வருகிறோம்! 

      மக்களே ……!  இயக்கமாக மாறுங்கள் என்பதை நாம் திரும்ப திரும்ப கூறிக் கொண்டே இருக்கிறோம்!

   இந்த போராட்டம் துவங்கியதும் நாம் கூறியது ஜல்லிக்கட்டுக் கான போராட்டம் மட்டுமே இல்லை!  தமிழர் உரிமைக்கான ஒட்டு மொத்த எழுச்சி! 

மீனவர் படுகொலை
மீத்தேன்
காவிரி,
முல்லை பெரியாறு,
நியூட்ரினோ, கெயில் என இத்தனை துரோகங்களுக்கும் ஒன்று சேர்ந்த ஓர் எதிர்ப்பு! 

  என்பதை கூறிக் கொண்டே இருந்தோம்!  இப்போது அவசர சட்டம் வந்ததும் ஆளாளுக்கு தீர்வு கிடைத்து விட்டது! 
இயக்கவாதிகள் மக்களை திசை திருப்புகிறார்கள் என்றெல்லாம் அலறுகிறார்கள் ஓட்டு பொறுக்கும் அரசியல்வாதிகள்!

   தனித் தமிழ்நாடு க்கு இது வழி வகுக்குமாம்! அதுனால இந்தியாவை எதிர்க்க கூடாதாம்!

ஏன்டா, தமிழ் தேசியம் இங்க கேட்காமல் அண்டார்டிகாவுலயா போய் கேட்பாங்க! 

    இவர்கள் எதிர்க்க நினைப்பது மே 17 இயக்கத்தை அல்ல நாங்கள் முன்வைக்கும் மாற்று இயக்க அரசியலை! 
அது தான் இவர்களின் ஓட்டு அரசியல் கட்சிகளின் மாய பிம்பத்தை உடைக்கும் கருவி என்பதை இவர்கள் நன்றாகவே உணர்ந்துள்ளனர்!

அதற்குள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர தங்களை தலைவராக காட்டிக் கொண்டவர்கள் முந்தி தள்ளப் படுகின்றார்கள்! 
இவ்ளோ தான் இந்தியம்.! 
உங்கள் கேட்டால் மட்டுமே கிடைக்கும் சமயத்தில் கத்தி கூப்பாடு போட்டாலும் கிடைக்காது!  காரணம் நாம இன்னும் தமிழ்நாட்டுக்கான தனித்த இறையாண்மையை வாங்கி விட வில்லை என்பதை உணருங்கள்!

     யார் என்ன சொன்னாலும் அழுத்தம் திருத்தமாக மீண்டும் மீண்டும் சொல்வது இதைத்தான்!

இந்திய தேர்தல் ஆணையத்துக்கு உட்பட்ட எந்த அரசியல் கட்சியும் இந்திய அரசியலமைப்பை எதிர்த்து பேச முடியாது! 
பேசாமல் ஓர் தேசிய இனத்துக்கான உரிமையை தர இந்திய அரசியலமைப்புக்கு பெரிய மனது இல்லை!  That's all.

   

Friday, 20 January 2017

Black Flag

இந்தியா முழுதும் நடந்த போராடட்ங்களில் இந்திய கொடியை பார்த்திருப்பீர்கள். காஷ்மீர், வட கிழக்கு மாநில போராட்டங்களை தவிர்த்து! காரணம் அவர்களும் நம்மை போல Corporate இந்திய அரசால் துரோகத்துக்கு ஆளாவனர்கள்தான் .

  இந்தியாவை எதிர்த்து  கேள்வி கேட்ட JNU, அண்ணா ஹசாரே போன்ற மக்கள் போராட்டத்தில் இந்திய கொடி பயன் படுத்த பட்டது! 
ஆனால் தமிழகத்தின் இத்தனை மூலையிலும் போராட்டம் நடக்கும் போதும் ஓரிடத்தில் கூட இந்திய கொடி யை பார்க்க முடியவில்லை!
    காரணம் டெல்லிக்கும் வடக்குக்கும் தான் அது இந்திய 'கொடி '! தமிழனுக்கு தன் வாழ்வாதாரத்தை சுடுகாடாக மாற்றும் 'கோடி 'த்துணி என்பதை பல நிகழ்வுகளில்

என் அறிவுக்கு எட்டிய வரை இந்திய அரசை உள்ளூர ஆட்டம் காண வைத்திருப்பது இந்த  புறக்கணிப்பும் இதுவே 'தனித் தமிழ்நாடு 'க்கான பாதை என்பதையும் சூசகமாக உணர்ந்துள்ளது இந்தியா!

  அதனால் தான் அவசர அவசரமாக இந்த அவசர சட்டம் அதுவும் மக்களை கலைந்து செல்வதற்காக மட்டுமே!

சில விடயங்களை நினைவில் வையுங்கள் :-

1. அனைத்து தேர்தல்  கட்சிகளை பொறுத்தவரையிலும் இந்த தன்னெழுச்சி என்பது அவர்களின் எதிர்கால நலனை கேள்விக்கு உள்ளாக்குவது! எனவே இந்த அவசர சட்டத்தை ஆதாரித்து இன்று மாலைக்குள் பேசுவார்கள்!
    ஆனால் இது வெறும் கண்துடைப்பு மட்டுமே நிரந்தர தீர்வு இல்லை!

2. இது வெறும் ஜல்லிக்கட்டு க்கான போராட்டம் மட்டுமே இல்லை!
தமிழக அரசின் சுயநலம் இந்திய அரசின் மாற்றாந் தாய்  மனப்பான்மை,

விவசாயிகளின் வாழ்வாதாரம் சிதைந்தது,

காவிரி

மீத்தேன்

கெயில்

மீனவர்கள் படுகொலை என எண்ணற்ற துரோகங்களை பார்த்து பார்த்து நொந்து போய் இருந்த மனங்களில் வெடித்து சிதறி வெளிக் கிளம்பி இருக்கும் ஓர் இடம் ஜல்லிக்கட்டு!

இதுவே 2013 ல் ஈழப் பிரச்சனையாக இருந்தது!

   இந்த போராட்டம் ஜல்லிக்கட்டுடன் வீட்டுக்கு திரும்பி போவதற்கு இல்லை! 

காவிரி மேலாண்மை வாரியம், மீத்தேனுக்கான நிரந்தர தடையை சொல்லும் G.O,  மீனவர் பிரச்சனைக்கான தீர்வு என இத்தனையையும் தீர்க்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது!

3.OPS ஸே வாடிவாசலை திறந்து வைக்கிறாராம்ன்னு அதிமுக முதல் திமுக பாஜக வரை  ஏதோ Award கிடைத்தது போல  ஆர்ப்பரிக்கிறார்கள் .
இதற்கு பெயர் நமது வெற்றி அல்ல! 

இந்தியத்தின் துரோகத்தையும் தமிழகத்தின் கையாலாகத் தனத்தையும் எப்படியோ திரை போட்டு மறைத்து விட்டோம் என்ற குரூரமான மகிழ்ச்சி  மட்டுமே!

    இதோடு மக்கள் எழுந்து போய் விடுவார்கள்.  அடுத்த ஒரு மாதம் ஆற போட்டால் பின்னர் மீண்டும் நாட்டை கூறு போட்டு விற்க ஆரம்பிக்கலாம் என்ற நினைப்பு மட்டுமே

   இதற்காகவா  இத்தனை உலக  நாடுகளில் இருந்து தமிழத்தை நோக்கி ஆதரவு கரம் நீள்கிறது!

   இதற்காகவா கொட்டும் பனியில் நம் வீட்டு பெண்கள் தெருவில் அமர்ந்திருக்கிறார்கள்???

மேலும்,
சில இந்துத்துவா கும்பல் இந்திய கொடியுடன் உள்ளே வந்து மோடியை திட்டாதீர்கள் இந்தியாவை கேள்வி கேட்காதீர்கள் என சொல்லி வருகிறார்கள் என தோழர் ஒருவர் கூறினார்.!  அவர்களை எல்லாம் ஒன்றும் பேசாதீர்கள்!  கொடுக்கும் கொடியை வாங்கி பேண்ட் பாக்கெட்டில் வைத்துக் கொள்ளுங்கள்!

தமிழகத்தின் உயிர் நாடி விவசாயி என்று தன் வயிறு நிறைந்த பின் உறங்க செல்கிறானோ அதுவரை………

பறக்கட்டும் கறுப்பு கொடி மட்டுமே !

Wednesday, 18 January 2017

Constitution belongs to Whom

தேர்தல் கட்சிகளை நம்ப கூடாது என நாம் ஏன் தொடர்ந்து சொல்லி வருகிறோம் ………?

சுதந்திரத்துக்கு முன்னர் இது 59 சமஸ்தானங்களை கொண்ட நாடு!
சுதந்திரத்துக்கு முன்னர் இந்தியா என்ற நாட்டுக்கான அரசியலமைப்பு சட்டம் நிறைவேற்றும் வேலை துவங்கியது!

அதில் அப்போதைய உயர் பதவியில் இருந்தவர்களும் காங். இந்துமகா சபா போன்றவற்றை தங்கள் கையில் வைத்திருக்கும் பெரு வணிக பனியாக்களுமே இதில் அதிகாரம் செலுத்தினர்!

அதாவது, தங்களின் விருப்பப் படி சட்டத்தை அப்போ நிறைவேற்றிக் கொள்ளும் வண்ணம் மாற்றி எழுத அல்லது வளைத்துக் கொள்ள முடிவு செய்தனர்.

இதில் உயர் பதவி என்பது ICS படித்தவர்கள் அதில் படிக்க சில நிபந்தனைகளை அரசு வைத்திருந்தது!
   1.பணக்காரனாக இருக்க வேண்டும்
  2. வீட்டில் அனைவரும் படித்திருக்க வேண்டும்!
   3.சிவப்பாக இருக்க வேண்டும் (சிரிக்காதீங்க மெய்யாலுமே இப்டி தான் வச்சிருந்திருக்கானுக)

   மேற்கண்ட மூன்று தகுதியும் அன்றைய தேதியில் யாரு சிலருக்கு மட்டுமே இருந்திருக்கும் என்பதை நீங்களே யூகித்து கொள்ளுங்கள்!

. அடுத்தது பெருவணிக நிறுவனங்கள் அடங்கிய டாடா, பிர்லா போன்ற பணக்கார பிரிவு!

  இவர்கள் யாரிடம் எழுத சொன்னார்களோ அவரின் பெயர் " அல்லாடி கிருஷ்ணய்யர் " .
ஆம் பார்ப்பனர் தான் .,!
இவர் எழுதினால் நமக்கு ஓரளவுக்கு சாதகமாக இருக்கும் என இவரை எழுதச் சொல்லியிருந்தனர்!

அவரும் சில பல மாதங்கள் கடந்தும் எழுதி கொண்டு வந்து சமர்ப்பித்தார்!

   படித்து பார்த்த இவர்கள் அதிர்ச்சியின் உச்சத்துக்கே போனார்கள்! காரணம் இவர் எழுதி கொண்டு வந்து கொடுத்தது சட்ட வரையறை இல்லை!
வர்ணாசிரமத்தை திணிக்கும் மனுஷ்மிரிதியை ஆங்காங்கு பெயர் மாற்றம் செய்து கொண்டு வந்து  கொடுத்திருந்தார்!

' அய்யய்யோ இதை கொடுத்தால் நாட்டில் கலவரம் தான் வரும் ' வேண்டாம் மாற்றுங்கள் என்றனர் அப் பெரு முதலாளிகளே!

   நன்றாக கவனியுங்கள் தன் நலனுக்காக ஓர் நாட்டின் எதிர் காலத்தையே தங்கள் விருப்பப் படி எழுதும் கூட்டத்தில் இருந்தே எதிர்ப்பு குரல் வருகிறது என்றால் அது எவ்வளவு கேவலமாக ஒரு பக்க சார்பாக எழுத பட்டிருக்க வேண்டும்!!!?

அதன் பின்னர் தான் அம்பேத்கரை அழைத்து இதனை சரி செய்து கொடுக்க சொன்னார்கள் இந்துத்துவா கும்பல்!
  
   சில இட ஒதுக்கீடுகள், பெண்கள் உரிமை போன்றவற்றை அவரால் சில இடங்களில் சொருக முடிந்ததே தவிர முழுமையாக மாற்ற இயலவில்லை!
ஓர் பாமரனை வைத்து சட்டம் இயற்றினோம் என பேருக்கு சொல்லிக் கொள்ளத்தான் அவரை பயன் படுத்தினர்!  அவரால் முடிந்த வரை சில நல்லதை நமக்கு அதனுள்ளே வைத்து விட்டு போய் விட்டார்!

    அவரையும் தாண்டி சில கேவலமான அரசியலமைப்பு விதியறைகள் இங்கே :-

  1. மண்ணுக்கு கீழே இருக்கும் அனைத்தும் இந்திய அரசிற்க்கு சொந்தம்! அதை யாருக்கு வேண்டுமானாலும் கொடுப்போம்!
  
        அதாவது 500 வருசமா நம்ம முன்னோர்கள், பாட்டன் முப்பாட்டன் எல்லாம் ஆண்ட நிலத்தின் கீழே இருக்கும் கனிம வளத்தை அவன் இஷ்டத்துக்கு திருடி கொள்வான்! வேண்டியவனுக்கு கொடுப்பான்.

   அப்படித்தான் குஜராத்தி அம்பாணி க்கு டெல்லியில் இருக்கும் அரசு தமிழக டெல்டா வில் பெட்ரோல் எடுக்கும் உரிமையை கொடுத்திருக்கிறது நம்மை கேட்காமலேயே!

2. கிருஸ்தவன், முஸ்லீம் அல்லாத அனைவரும் இந்துக்கள் என அழைக்கப் படுவர்!
 
     அப்படித்தான் தமிழன் இந்துவாக திரிக்கப் பட்டான்!   இன்னும் சீக்கியர்கள் தான் இதில் மிகப் பாவம்!  அப்படி ஒரு மதமே இல்லை என்கின்றது பார்ப்பனியம் எழுதிய இந்திய அரசியலமைப்பு சட்டம்!

3. பல தேசிய இனங்களை கொண்ட நாட்டில் ஒரு குறிப்பிட்ட இனத்திற்கு என ஓர் மாற்று சட்டம் கொண்டு வர வேண்டும் எனில் பாராளுமன்றத்தில் உள்ள 543 பேரில் 272 பேர் வாக்களிக்க வேண்டும்!

   ஆனால், தமிழகத்துக்கு ஒதுக்க பட்டதே 39 MP க்கள் தான்!

  மீதி இருப்பவனுக்கு தமிழனின் பாரம்பரியம் எப்புடி புரியும்??? 
ஒன்று தன் கட்சி சொல்லும் சட்டத்தை ஆதரிப்பான் அல்லது பணம் கொடுப்பவனுக்கு வாக்களிப்பார்கள் இதுதான் நடந்து கொண்டுள்ளது!

   (இதுவே பிரேசில் நாடாளுமன்றத்தில் அந்தந்த மாகாணங்களுக்கான சட்டதிருத்தங்களை அந்த MP களே தேர்வும் ஓட்டெடுப்பும் நடத்தி கொள்ளலாம்!  மற்ற மாநில MP க்கள் தலையிட முடியாது!)

அடுத்தது :-

   IAS
இதுதான் பெரிய வேடிக்கையே, பெயரை கவனியுங்கள், .... Indian Administrative Service

Not Peoples Administrative Service அரசும் விதிகளும் என்ன சொல்கிறதோ அதை கண் என கடமையாய் நிறைவேற்றுவதே இவர்கள் கடமை!

  அதைத் தாண்டி அவர்களால் எதுவுமே செய்ய இயலாது!  ஆனால், இங்கே இந்தியா என்பது இந்திய அரசியலமைப்பு சட்டம், அந்த சட்டத்தை எழுதியவன் பெரு வணிக பணியா கும்பலும் பார்ப்பனர் கூட்டமும் தான்!

   ஒரு தொகுதி இல்லை 234 லும் 30 மாவட்டங்களிலும் கக்கனும், காமராசரும் சட்டமன்ற உறுப்பினர்களாகவும் உதயச் சந்திரனும் சகாயம்ங்களும் கலெக்டராகவே வந்தாலும் இந்தியம் சொல்வதை செய்ய மட்டுமே இவர்களால் முடியும்!

தேர்தல் கட்சிகளும் அப்படித்தான் ,. பணியா கும்பல் இயற்றிய சட்டத்துக்கு அடி பணிந்து தான் கையொப்பம் இட்டு கட்சி தொடங்கி உள்ளார்கள்!

   எதிர்த்து கேள்வி கேட்டால் அவர்களையே இல்லாமல் செய்து விடும் இந்த சட்டம்!

   எங்கே………… ,  நேற்றில் இருந்து "தனித் தமிழ் நாடே தீர்வு " என முழக்கம் இடும் மாணவர்களை போல ஒரே ஒரு வார்த்தை இந்த தேர்தல் கட்சிகளை பேருக்காவது சொல்ல சொல்லுங்களேன் பார்ப்போம்!  அவர்கள் சொல்கிறார்களோ இல்லையோ …!
அத்தோடு உங்களை கட்சியிலிருந்து தூரம் வைத்து விடுவார்கள்! 

      இதற்கான ஒரே தீர்வு உலகின் முதல் தேசிய இனம் தனக்கான தனித்துவமான இறையாண்மையை பெறுவதே ஆகும்!  அதாவது
சமீபத்தில் ஸ்பெயின் -ல் இருந்து CATALONIA தனித்த சுய ஆட்சி பெற்றதோடு ஸ்பெயின் நாட்டுடனே இணைந்து இருப்பது போலவும்!

          இந்திய இறையாண்மையையும் நாம் தொந்தரவு செய்ய வேண்டியதில்லை நமக்கான உரிமைக்காக எவன் பதிலுக்கும் காத்திருக்கவும் தேவை இல்லை!

      அதற்கு நம் போராட்ட களம் மட்டுமே வழி வகுக்கும்! மக்கள் போராட்டம் ஒன்றே எல்லாவற்றிற்கும் தீர்வு …………!

  

Friday, 13 January 2017

Facist Hinduthuva Vs Tamil People's

பொன்னார் மன்னிப்பு கேட்டாராம் ………!

யோவ், இதுக்கெல்லாம் இந்த பீஸை எல்லாம் மன்னிச்சு நல்லவரா மாத்தீடாதீங்க!  அந்த மாட்டோட சாணி கூட நம்மளை மன்னிக்காது!

   ஆரியத்துக்கு நேரெதிர் அல்லது அதனின் பொய்யையும் புரட்டையும் முகத்திரையை கிழிக்கும் ஒரே தேசிய இனம் தமிழினம் தான்!
எனவே இந்தியாவின் ஒவ்வொரு நகர்வும் தமிழனின் வாழ்வையும் வளத்தையும் சிதைக்கும் வேலையாக மட்டுமே இருக்கும்!

2014 மே  துவங்கி இன்றுவரை எந்த ஓர் நாசக்கார திட்டம் வந்தாலும் அது தமிழகத்துக்கே தள்ளப் பட்டுள்ளது! 
ஒரே நல்ல காரியம் என நினைத்த AIMS மருத்துவமனையையும் பறித்து விட்டனர்! 
      ஒரு பேப்பரை எடுத்து BJP ஆட்சிக்கு வந்த பின் தமிழகத்துக்கு செய்த நல்லது என்னென்ன என்று ஒரு பட்டியல் போடுங்களேன் உறுப்படியாக ஒன்னு ரெண்டு கூட தேராது!
  
அதே நேரம் தமிழகத்திற்குள் திணிக்கப் பட்ட, அநீதி இழைக்கப் பட்ட நிகழ்வுகளையும் பட்டியல் போட்டு பாருங்களேன் ……!  அப்போது புரியும் தமிழன் எவ்வளவு கீழ்த்தரமாக நடத்தப் படுகிறான் என்று!

   இவர் மன்னிப்பு கேட்பது ஒன்றும் மனசாட்சி உறுத்தி எல்லாம் இல்லை!

2013 க்கு பிறகு மாணவர்களின் எழுச்சி இந்தியாவை திரும்பி பார்க்க வைத்துள்ளது! 

பாஜகவின் சுயரூபத்தை ஒவ்வொரு பேரணியிலும் ஒன்று கூடலிலும் மாணவர்கள் தோலுரித்து காட்டியிருக்கிறார்கள்!
   அதை எப்படி சமாளிப்பது என தெரியாமல் மன்னிப்பு கேட்பதாக ஜகா வாங்கியிருக்கிறார் ராதா!  இது போன வருசத்துக்கான Script என்பதை மறந்து விட்டார் போல!  வரும் வருடம் (2017) ல் ஜல்லிக்கட்டு நடந்தே தீரும் இந்த வருசம் மட்டும் (2016)  சகித்துக் கொள்ளுங்கள் என்று கேட்ட அதே வாய் தான் இன்று மன்னிப்பு கேட்பதாக மாற்றி பேசுகிறது!
    
     இவற்றையெல்லாம் தாண்டி நாம் கவனிக்க வேண்டியது! பாதுகாக்க வேண்டியது மாணவர்களின் எழுச்சியைத் தான்!

    ஜல்லிக்கட்டு டன் இந்த எழுச்சி நீர்த்து போகாமல்  விவசாயிகளின் தற்கொலை, மீத்தேன், கெயில், கூடங்குளம், Pepsi, Coke, என அனைத்து சமூக சீரழிவு திட்டங்களிலும் மாணவர்கள் இதே தீவிரத்தை காட்டினால் மட்டுமே நம் சந்ததியினரின் எதிர்காலம் கேள்விக்குறியாகுவதை தடுக்க இயலும்!

எல்லாவற்றுக்கும் முன்னதாக பாஜக கொண்டு வர துடிக்கும் மாணவ சமுதாயத்தின் வாழ்வை மீண்டும் வர்ணாசிரம அடிப்படைக்கே கொண்டு செல்லும் "புதிய கல்வி கொள்கையை " எதிர்த்து நிற்பது முக்கியமான ஒன்று!

   மேலும்,
2015 ல் டிச.16,17,18&19 தேதிகளில் கென்ய தலைநகர் நைரோபியில் நடந்த WTO வின் கல்வியை வணிக மயமாக்கும் ஒப்பந்தத்தில் கையொப்பம் இட்டு ஒட்டு மொத்த இந்திய மாணவ சமுதாயத்தின் உயர்கல்வி -யில் மண்ணை போட்டது பாஜக என்பதே இந்த நிமிசம் வரை தமிழக மாணவர்கள் பலருக்கும் தெரியாது!

   இதை எதிர்த்து ஓர் முழு பல்கலைக்கழகமே போராட்டத்தில் அன்றே குதித்ததது!
ஆனால், அடுத்த சில நாட்களில் அவர்கள் தீவிரவாதிகளாக சித்தரிக்கப் பட்டது குறிப்பிட்ட தக்கது!
அந்த கல்லூரி டெல்லி JNU ………!

இத்தனை விடயங்களையும் மாணவர்ளிடம் பொது சமூகத்திடமும் கொண்டு போய் சேர்ப்பதே நம் ஒவ்வொருவரின்  கடமை!

2013 ல் எழுந்த மாணவர் எழுச்சியை தேர்தல் அரசியலில் நிறுத்தியதால் தான் அடுத்த வருடமே (2014) ல் ஏன் என்று கேட்க கூட நாதியில்லாமல் வெறும் நூறு பேர் மட்டுமே ஈழத்துக்காக தெருவில் நின்றோம் என்பதை மறவாதீர்கள்! 

போராட்டம் மட்டுமே நமக்கான உரிமையை பெற்றுத் தரும் .! மாறாக எந்த பதவியும் அல்ல! 
பதிவியை வைத்து காரியம் சாதிக்க நாம் ஒன்றும் நமக்கான தனி இறையாண்மையை வாங்கி விட வில்லை என்பதை உணருங்கள்!

Assam Youth Festival ம் பாஜக வின் பயமும் 13/01/17

தமிழ்நாடு மட்டும் தான்  தனியாக பிரியும் என  நாம் உற்று நோக்கினால், இல்லையில்லை வட கிழக்கும் உங்களோட வர காத்திருக்கிறது என இந்துத்துவா சொல்லாமல் சொல்கிறது!

The Metropolis Urban Winter Festival - அஸ்ஸாம் மற்றும் வட கிழக்கு மாநிலங்களின் காலாச்சார பண்பாட்டை உயர்த்தி பிடிக்கும் ஓர் நிகழ்வு தான் இது!
ஓவியம், இசை, சமூகம் சார்ந்த விழிப்புணர்வு மேடை நாடகங்கள் என இளைஞர்களால் களை கட்டும் அஸ்ஸாம் தலைநகர் கவுகாத்தி! உலக நாடுகளின் அறிவுஜீவிகளும் முற்போக்கு சிந்தனாவாதிகளும்
Assam Tourism, வட -கிழக்கு பண்பாடு மற்றும் காலாச்சார மையம் போன்ற அரசு துறைகளே  இதனை Sponsor செய்யும் அளவுக்கு பிரச்சித்தியானது!
5 வருடங்களாக Youth Festival என்ற அடை மொழியோடு இது நடந்து வருவது குறித்து வட - கிழக்கு மாநிலங்கள் பெருமிதமாக பார்க்கும் ஓர் ஒன்று கூடல்  இது!

   இப்போ இதுக்கு என்ன பிரச்சனை என்கிறீர்களா???

நமக்கு இருக்கும் அதே பிற்போக்கு மதவாதிகள் தான் பிரச்சனை! கடந்த மே மாதம் தமிழகத்தோடு சேர்ந்து அஸ்ஸாமுக்கும் தேர்தல் நடந்தது நினைவிருக்கிறதா ………!?

அங்கே ஓர் மாநில கட்சியுடன் இணைந்து ஆட்சிக்கு வந்தது பாஜக!
முதல்வராக பாஜகவை சேர்ந்த ஒருவர் தேர்ந்தெடுக்கப் பட்டார்!

முதல் வேலையாக பாபா ராம் தேவ்-க்கு சில ஆயிரம் ஏக்கர் நிலங்களை  பதஞ்சலி நிறுவன வளர்ச்சிக்கு என தாரை வார்த்தனர்!
அதே நாட்களில் தான் மணிப்பூரில் பெண்கள் தெருவில் இறங்கி தங்கள் காடுகளையும் மலைகளையும் Corporate க்கு இந்தியா தாரை வார்ப்பதை எதிர்த்து (Inter Line Permit)  போராடிக் கொண்டிருந்தனர்!

  இந்தியா முழுக்க பண மதிப்பு நீக்கத்தில் தத்தளிக்க அஸ்ஸாமில் குறிப்பிட்ட பகுதியில் மட்டும் அந்த விதி தளர்த்தப் பட்டு இருந்தது!
அடடே அருமையான விடயம் என உள்ளே சென்று விசாரித்தால், வரப் போகிற ஓர் குறிப்பிட்ட தேர்தலுக்கு பயந்தே பாஜக அப் பகுதிக்கு De monitaization ல் இருந்து விலக்கு அளித்தது வெளிச்சத்துக்கு வந்தது!

   இப்போது,
மேலே கூறிய Youth festival லை தடை செய்துள்ளது பார்ப்பனிய பாஜக அரசு!

காரணம் என்னவென்று தீர ஆராய்ந்தால், அங்கே நடக்கும் சமூக விழிப்புணர்வு பிரச்சாரங்கள், இந்துத்துவா -வின் தோலை உரிக்கும் ஓவியங்கள், மற்றும் முற்போக்கு உலகளாவிய சிந்தனையாளர்களின் அறிவார்ந்த உரையாடல்களும் தான்!

ஏன் இதை போய் யாராவது தடுப்பார்களா என்றால் ………?  அது தான் உண்மை!
இந்துத்துவா வின் பிற்போக்கு சிந்தனைகளாலும் சிந்தனையாளர்களாலும் தான் இத்தனை நாள் மோடி போன்ற இனப்படுகொலையாளன் எல்லாம் தமிழகத்துக்கு அவ்வப்போதேனும் வந்து போக முடிகிறது!  (அதற்கே கருப்பு கொடி காட்டி அதிர வைத்தவர்கள் நாம் தான் என்பது வேறு கதை)

அப்படி பட்ட பிற்போக்கு சிந்தனைகள் மெல்ல மெல்ல இது  போன்ற அறிவார்ந்த முற்போக்கு சிந்தனையாளர்களால் உடைக்கப் படும் என்பதையும், முகமூடிகள் கிழிக்கப் படுவதயும் எப்படி பாஜக /RSS ஜீரணிக்கும்!

அதனால் தான் தடை ……!

கடந்த 8 ம் தேதி ஞாயிறு மாலையில் விழா அரங்கு உள்ளே நுழைந்த காவல்துறை, நிகழ்ச்சியை உடனே நிறுத்துங்கள் இது முதல்வரின் உத்தரவு என தடை போட்டுள்ளனர்!

அடுத்த சில மணிகளில், மின்சாரம் குடிநீர் என அனைத்தும் தடை பட்டுள்ளது!
வெளிநாடுகளில் இருந்து வந்திருந்த 700 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் இருட்டிலேயே தத்தமது Stall களில்  அமர்ந்திருந்தனர் . குழுமியிருந்த 6000 க்கும் மேற்பட்ட மக்களும் கலைஞர்களும் அவதிக்குள்ளாயினர்!

அதற்கு இவர்கள் சொன்ன காரணம் தான் மிகப் பெரிய நகைச்சுவை!

மாநில பாஜகவின் நிதி அமைச்சர் தனது Tweet -ல் :-

அந்த இடம் சிறுவர்களுக்கானது அதில் எப்படி நீங்கள் நிகழ்ச்சி நடத்தலாம்!?  குப்பை போடுவதை நான் அனுமதிக்க மாட்டேன்!

   இது சிறுவர் பூங்கா என கடந்த சில வருடமாக நிகழ்ச்சிக்கு Sponsor செய்யும் Assam Tourism of Department க்கு தெரியாதா??

கலாச்சார பங்குதாரரான North East Cultural Forum க்கு தெரியாதா???

அவ்வளவு ஏன் 6-ம் தேதி விழாவை துவங்கி வைத்த கவுகாத்தி மாநகர் காவல் துறை தலைமை அதிகாரி அங்கமுத்து விற்கு தெரியாதா???

      ஆடத்தெரியாவன் தெருக் கோணல் என்ற கதை நான் நினைவுக்கு வருகிறது!

   பாஜகவே அந்தந்த தேசிய இனங்கள் இந்தியத்தை எட்டி உதைத்து தங்களுக்கான தனி தேசத்தை வாங்கும் வழியை திறம்பட காட்டி வருகின்றது!