Wednesday, 18 January 2017

Constitution belongs to Whom

தேர்தல் கட்சிகளை நம்ப கூடாது என நாம் ஏன் தொடர்ந்து சொல்லி வருகிறோம் ………?

சுதந்திரத்துக்கு முன்னர் இது 59 சமஸ்தானங்களை கொண்ட நாடு!
சுதந்திரத்துக்கு முன்னர் இந்தியா என்ற நாட்டுக்கான அரசியலமைப்பு சட்டம் நிறைவேற்றும் வேலை துவங்கியது!

அதில் அப்போதைய உயர் பதவியில் இருந்தவர்களும் காங். இந்துமகா சபா போன்றவற்றை தங்கள் கையில் வைத்திருக்கும் பெரு வணிக பனியாக்களுமே இதில் அதிகாரம் செலுத்தினர்!

அதாவது, தங்களின் விருப்பப் படி சட்டத்தை அப்போ நிறைவேற்றிக் கொள்ளும் வண்ணம் மாற்றி எழுத அல்லது வளைத்துக் கொள்ள முடிவு செய்தனர்.

இதில் உயர் பதவி என்பது ICS படித்தவர்கள் அதில் படிக்க சில நிபந்தனைகளை அரசு வைத்திருந்தது!
   1.பணக்காரனாக இருக்க வேண்டும்
  2. வீட்டில் அனைவரும் படித்திருக்க வேண்டும்!
   3.சிவப்பாக இருக்க வேண்டும் (சிரிக்காதீங்க மெய்யாலுமே இப்டி தான் வச்சிருந்திருக்கானுக)

   மேற்கண்ட மூன்று தகுதியும் அன்றைய தேதியில் யாரு சிலருக்கு மட்டுமே இருந்திருக்கும் என்பதை நீங்களே யூகித்து கொள்ளுங்கள்!

. அடுத்தது பெருவணிக நிறுவனங்கள் அடங்கிய டாடா, பிர்லா போன்ற பணக்கார பிரிவு!

  இவர்கள் யாரிடம் எழுத சொன்னார்களோ அவரின் பெயர் " அல்லாடி கிருஷ்ணய்யர் " .
ஆம் பார்ப்பனர் தான் .,!
இவர் எழுதினால் நமக்கு ஓரளவுக்கு சாதகமாக இருக்கும் என இவரை எழுதச் சொல்லியிருந்தனர்!

அவரும் சில பல மாதங்கள் கடந்தும் எழுதி கொண்டு வந்து சமர்ப்பித்தார்!

   படித்து பார்த்த இவர்கள் அதிர்ச்சியின் உச்சத்துக்கே போனார்கள்! காரணம் இவர் எழுதி கொண்டு வந்து கொடுத்தது சட்ட வரையறை இல்லை!
வர்ணாசிரமத்தை திணிக்கும் மனுஷ்மிரிதியை ஆங்காங்கு பெயர் மாற்றம் செய்து கொண்டு வந்து  கொடுத்திருந்தார்!

' அய்யய்யோ இதை கொடுத்தால் நாட்டில் கலவரம் தான் வரும் ' வேண்டாம் மாற்றுங்கள் என்றனர் அப் பெரு முதலாளிகளே!

   நன்றாக கவனியுங்கள் தன் நலனுக்காக ஓர் நாட்டின் எதிர் காலத்தையே தங்கள் விருப்பப் படி எழுதும் கூட்டத்தில் இருந்தே எதிர்ப்பு குரல் வருகிறது என்றால் அது எவ்வளவு கேவலமாக ஒரு பக்க சார்பாக எழுத பட்டிருக்க வேண்டும்!!!?

அதன் பின்னர் தான் அம்பேத்கரை அழைத்து இதனை சரி செய்து கொடுக்க சொன்னார்கள் இந்துத்துவா கும்பல்!
  
   சில இட ஒதுக்கீடுகள், பெண்கள் உரிமை போன்றவற்றை அவரால் சில இடங்களில் சொருக முடிந்ததே தவிர முழுமையாக மாற்ற இயலவில்லை!
ஓர் பாமரனை வைத்து சட்டம் இயற்றினோம் என பேருக்கு சொல்லிக் கொள்ளத்தான் அவரை பயன் படுத்தினர்!  அவரால் முடிந்த வரை சில நல்லதை நமக்கு அதனுள்ளே வைத்து விட்டு போய் விட்டார்!

    அவரையும் தாண்டி சில கேவலமான அரசியலமைப்பு விதியறைகள் இங்கே :-

  1. மண்ணுக்கு கீழே இருக்கும் அனைத்தும் இந்திய அரசிற்க்கு சொந்தம்! அதை யாருக்கு வேண்டுமானாலும் கொடுப்போம்!
  
        அதாவது 500 வருசமா நம்ம முன்னோர்கள், பாட்டன் முப்பாட்டன் எல்லாம் ஆண்ட நிலத்தின் கீழே இருக்கும் கனிம வளத்தை அவன் இஷ்டத்துக்கு திருடி கொள்வான்! வேண்டியவனுக்கு கொடுப்பான்.

   அப்படித்தான் குஜராத்தி அம்பாணி க்கு டெல்லியில் இருக்கும் அரசு தமிழக டெல்டா வில் பெட்ரோல் எடுக்கும் உரிமையை கொடுத்திருக்கிறது நம்மை கேட்காமலேயே!

2. கிருஸ்தவன், முஸ்லீம் அல்லாத அனைவரும் இந்துக்கள் என அழைக்கப் படுவர்!
 
     அப்படித்தான் தமிழன் இந்துவாக திரிக்கப் பட்டான்!   இன்னும் சீக்கியர்கள் தான் இதில் மிகப் பாவம்!  அப்படி ஒரு மதமே இல்லை என்கின்றது பார்ப்பனியம் எழுதிய இந்திய அரசியலமைப்பு சட்டம்!

3. பல தேசிய இனங்களை கொண்ட நாட்டில் ஒரு குறிப்பிட்ட இனத்திற்கு என ஓர் மாற்று சட்டம் கொண்டு வர வேண்டும் எனில் பாராளுமன்றத்தில் உள்ள 543 பேரில் 272 பேர் வாக்களிக்க வேண்டும்!

   ஆனால், தமிழகத்துக்கு ஒதுக்க பட்டதே 39 MP க்கள் தான்!

  மீதி இருப்பவனுக்கு தமிழனின் பாரம்பரியம் எப்புடி புரியும்??? 
ஒன்று தன் கட்சி சொல்லும் சட்டத்தை ஆதரிப்பான் அல்லது பணம் கொடுப்பவனுக்கு வாக்களிப்பார்கள் இதுதான் நடந்து கொண்டுள்ளது!

   (இதுவே பிரேசில் நாடாளுமன்றத்தில் அந்தந்த மாகாணங்களுக்கான சட்டதிருத்தங்களை அந்த MP களே தேர்வும் ஓட்டெடுப்பும் நடத்தி கொள்ளலாம்!  மற்ற மாநில MP க்கள் தலையிட முடியாது!)

அடுத்தது :-

   IAS
இதுதான் பெரிய வேடிக்கையே, பெயரை கவனியுங்கள், .... Indian Administrative Service

Not Peoples Administrative Service அரசும் விதிகளும் என்ன சொல்கிறதோ அதை கண் என கடமையாய் நிறைவேற்றுவதே இவர்கள் கடமை!

  அதைத் தாண்டி அவர்களால் எதுவுமே செய்ய இயலாது!  ஆனால், இங்கே இந்தியா என்பது இந்திய அரசியலமைப்பு சட்டம், அந்த சட்டத்தை எழுதியவன் பெரு வணிக பணியா கும்பலும் பார்ப்பனர் கூட்டமும் தான்!

   ஒரு தொகுதி இல்லை 234 லும் 30 மாவட்டங்களிலும் கக்கனும், காமராசரும் சட்டமன்ற உறுப்பினர்களாகவும் உதயச் சந்திரனும் சகாயம்ங்களும் கலெக்டராகவே வந்தாலும் இந்தியம் சொல்வதை செய்ய மட்டுமே இவர்களால் முடியும்!

தேர்தல் கட்சிகளும் அப்படித்தான் ,. பணியா கும்பல் இயற்றிய சட்டத்துக்கு அடி பணிந்து தான் கையொப்பம் இட்டு கட்சி தொடங்கி உள்ளார்கள்!

   எதிர்த்து கேள்வி கேட்டால் அவர்களையே இல்லாமல் செய்து விடும் இந்த சட்டம்!

   எங்கே………… ,  நேற்றில் இருந்து "தனித் தமிழ் நாடே தீர்வு " என முழக்கம் இடும் மாணவர்களை போல ஒரே ஒரு வார்த்தை இந்த தேர்தல் கட்சிகளை பேருக்காவது சொல்ல சொல்லுங்களேன் பார்ப்போம்!  அவர்கள் சொல்கிறார்களோ இல்லையோ …!
அத்தோடு உங்களை கட்சியிலிருந்து தூரம் வைத்து விடுவார்கள்! 

      இதற்கான ஒரே தீர்வு உலகின் முதல் தேசிய இனம் தனக்கான தனித்துவமான இறையாண்மையை பெறுவதே ஆகும்!  அதாவது
சமீபத்தில் ஸ்பெயின் -ல் இருந்து CATALONIA தனித்த சுய ஆட்சி பெற்றதோடு ஸ்பெயின் நாட்டுடனே இணைந்து இருப்பது போலவும்!

          இந்திய இறையாண்மையையும் நாம் தொந்தரவு செய்ய வேண்டியதில்லை நமக்கான உரிமைக்காக எவன் பதிலுக்கும் காத்திருக்கவும் தேவை இல்லை!

      அதற்கு நம் போராட்ட களம் மட்டுமே வழி வகுக்கும்! மக்கள் போராட்டம் ஒன்றே எல்லாவற்றிற்கும் தீர்வு …………!

  

1 comment:

  1. Harrah's Philadelphia Casino & Racetrack - Mapyro
    The Harrah's Philadelphia Casino & Racetrack 군포 출장안마 in Chester, PA features slots, table games, live entertainment, a wide 영주 출장안마 variety of table 용인 출장안마 games and a 24-hour poker 충청남도 출장안마 room. 순천 출장샵

    ReplyDelete