Friday, 13 January 2017

Assam Youth Festival ம் பாஜக வின் பயமும் 13/01/17

தமிழ்நாடு மட்டும் தான்  தனியாக பிரியும் என  நாம் உற்று நோக்கினால், இல்லையில்லை வட கிழக்கும் உங்களோட வர காத்திருக்கிறது என இந்துத்துவா சொல்லாமல் சொல்கிறது!

The Metropolis Urban Winter Festival - அஸ்ஸாம் மற்றும் வட கிழக்கு மாநிலங்களின் காலாச்சார பண்பாட்டை உயர்த்தி பிடிக்கும் ஓர் நிகழ்வு தான் இது!
ஓவியம், இசை, சமூகம் சார்ந்த விழிப்புணர்வு மேடை நாடகங்கள் என இளைஞர்களால் களை கட்டும் அஸ்ஸாம் தலைநகர் கவுகாத்தி! உலக நாடுகளின் அறிவுஜீவிகளும் முற்போக்கு சிந்தனாவாதிகளும்
Assam Tourism, வட -கிழக்கு பண்பாடு மற்றும் காலாச்சார மையம் போன்ற அரசு துறைகளே  இதனை Sponsor செய்யும் அளவுக்கு பிரச்சித்தியானது!
5 வருடங்களாக Youth Festival என்ற அடை மொழியோடு இது நடந்து வருவது குறித்து வட - கிழக்கு மாநிலங்கள் பெருமிதமாக பார்க்கும் ஓர் ஒன்று கூடல்  இது!

   இப்போ இதுக்கு என்ன பிரச்சனை என்கிறீர்களா???

நமக்கு இருக்கும் அதே பிற்போக்கு மதவாதிகள் தான் பிரச்சனை! கடந்த மே மாதம் தமிழகத்தோடு சேர்ந்து அஸ்ஸாமுக்கும் தேர்தல் நடந்தது நினைவிருக்கிறதா ………!?

அங்கே ஓர் மாநில கட்சியுடன் இணைந்து ஆட்சிக்கு வந்தது பாஜக!
முதல்வராக பாஜகவை சேர்ந்த ஒருவர் தேர்ந்தெடுக்கப் பட்டார்!

முதல் வேலையாக பாபா ராம் தேவ்-க்கு சில ஆயிரம் ஏக்கர் நிலங்களை  பதஞ்சலி நிறுவன வளர்ச்சிக்கு என தாரை வார்த்தனர்!
அதே நாட்களில் தான் மணிப்பூரில் பெண்கள் தெருவில் இறங்கி தங்கள் காடுகளையும் மலைகளையும் Corporate க்கு இந்தியா தாரை வார்ப்பதை எதிர்த்து (Inter Line Permit)  போராடிக் கொண்டிருந்தனர்!

  இந்தியா முழுக்க பண மதிப்பு நீக்கத்தில் தத்தளிக்க அஸ்ஸாமில் குறிப்பிட்ட பகுதியில் மட்டும் அந்த விதி தளர்த்தப் பட்டு இருந்தது!
அடடே அருமையான விடயம் என உள்ளே சென்று விசாரித்தால், வரப் போகிற ஓர் குறிப்பிட்ட தேர்தலுக்கு பயந்தே பாஜக அப் பகுதிக்கு De monitaization ல் இருந்து விலக்கு அளித்தது வெளிச்சத்துக்கு வந்தது!

   இப்போது,
மேலே கூறிய Youth festival லை தடை செய்துள்ளது பார்ப்பனிய பாஜக அரசு!

காரணம் என்னவென்று தீர ஆராய்ந்தால், அங்கே நடக்கும் சமூக விழிப்புணர்வு பிரச்சாரங்கள், இந்துத்துவா -வின் தோலை உரிக்கும் ஓவியங்கள், மற்றும் முற்போக்கு உலகளாவிய சிந்தனையாளர்களின் அறிவார்ந்த உரையாடல்களும் தான்!

ஏன் இதை போய் யாராவது தடுப்பார்களா என்றால் ………?  அது தான் உண்மை!
இந்துத்துவா வின் பிற்போக்கு சிந்தனைகளாலும் சிந்தனையாளர்களாலும் தான் இத்தனை நாள் மோடி போன்ற இனப்படுகொலையாளன் எல்லாம் தமிழகத்துக்கு அவ்வப்போதேனும் வந்து போக முடிகிறது!  (அதற்கே கருப்பு கொடி காட்டி அதிர வைத்தவர்கள் நாம் தான் என்பது வேறு கதை)

அப்படி பட்ட பிற்போக்கு சிந்தனைகள் மெல்ல மெல்ல இது  போன்ற அறிவார்ந்த முற்போக்கு சிந்தனையாளர்களால் உடைக்கப் படும் என்பதையும், முகமூடிகள் கிழிக்கப் படுவதயும் எப்படி பாஜக /RSS ஜீரணிக்கும்!

அதனால் தான் தடை ……!

கடந்த 8 ம் தேதி ஞாயிறு மாலையில் விழா அரங்கு உள்ளே நுழைந்த காவல்துறை, நிகழ்ச்சியை உடனே நிறுத்துங்கள் இது முதல்வரின் உத்தரவு என தடை போட்டுள்ளனர்!

அடுத்த சில மணிகளில், மின்சாரம் குடிநீர் என அனைத்தும் தடை பட்டுள்ளது!
வெளிநாடுகளில் இருந்து வந்திருந்த 700 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் இருட்டிலேயே தத்தமது Stall களில்  அமர்ந்திருந்தனர் . குழுமியிருந்த 6000 க்கும் மேற்பட்ட மக்களும் கலைஞர்களும் அவதிக்குள்ளாயினர்!

அதற்கு இவர்கள் சொன்ன காரணம் தான் மிகப் பெரிய நகைச்சுவை!

மாநில பாஜகவின் நிதி அமைச்சர் தனது Tweet -ல் :-

அந்த இடம் சிறுவர்களுக்கானது அதில் எப்படி நீங்கள் நிகழ்ச்சி நடத்தலாம்!?  குப்பை போடுவதை நான் அனுமதிக்க மாட்டேன்!

   இது சிறுவர் பூங்கா என கடந்த சில வருடமாக நிகழ்ச்சிக்கு Sponsor செய்யும் Assam Tourism of Department க்கு தெரியாதா??

கலாச்சார பங்குதாரரான North East Cultural Forum க்கு தெரியாதா???

அவ்வளவு ஏன் 6-ம் தேதி விழாவை துவங்கி வைத்த கவுகாத்தி மாநகர் காவல் துறை தலைமை அதிகாரி அங்கமுத்து விற்கு தெரியாதா???

      ஆடத்தெரியாவன் தெருக் கோணல் என்ற கதை நான் நினைவுக்கு வருகிறது!

   பாஜகவே அந்தந்த தேசிய இனங்கள் இந்தியத்தை எட்டி உதைத்து தங்களுக்கான தனி தேசத்தை வாங்கும் வழியை திறம்பட காட்டி வருகின்றது!

No comments:

Post a Comment