Wednesday, 11 January 2017

சிரிய நண்பன்


How do you know about Kurdish...!  - அந்த சிரியா நாட்டு நண்பர் என்னை பார்த்து நேற்று கண்கள் விரிய ஆச்சரியமாக கேட்டார்!

    நான் இங்கு வந்த ஒரு மாதத்தில் என் அலுவலகத்தில் அவ்வப்போது அவரை பார்த்திருக்கிறேன்!
    போருக்கும் இடிபாடுகளுக்கும் இடையே காலம் விரட்டியதில் அலைக்கழிந்து போயிருக்க வேண்டும் அவரின் வாழ்க்கை பயணம்!

நான் அவரை கவனித்த வரை, அவர் ஓர் முன்னாள் சிரியா நாட்டு அரசு ஊழியர்! . சில பிரச்சனையினால் ஓமன் வந்து சேர்ந்து விட்டார்.!  ஐந்து வருடங்கள் முடியப் போகின்றன!  இனி சிரியா திரும்பினால் தன்னால் மீண்டும் வெளியே வரவே முடியாது என கூறிக் கொண்டிருந்தார்!

நேற்று எனது Senior கள் அங்கே நடக்கும் போரை பற்றியும் தற்போதைய நிலமை பற்றியும் பேச்சு வந்த போது நான், 
குர்தீஸ் தேசிய இன மக்களே தங்களின் சுயாதீன இராஜ்யமாக அறிவித்த (Federal State for Kurdistan) பகுதி இப்போது எப்படி உள்ளது..!!!? Is there everything fine???

அப்போது தான் அவர் உங்களுக்கு எப்படி குர்தீஸ் இன மக்களை பற்றி தெரியும் என கேட்டார் என்னிடம்! 
உடனே என் சீனியர், 'எங்காவது செய்தித்தாளில் படித்திருப்பார் அதை வைத்து கேட்கிறார், என்றார்!

  ஹ ஹ ஹா!  நான் மௌனமாக சிரித்துக் கொண்டேன்!

வெறும் செய்தித்தாளில் மட்டுமே படித்து விட்டு நகரும் சாதாரண போராட்டமா குர்திஸ்தான் விடுதலை யுத்தம்!

    இன்றைய நம் சம காலத்தில் சர்வதேசத்தை எதிர்த்து சமீப நாட்களில் தங்களுக்கான சுதந்திர தனி தேசத்தை பிரகடம் செய்திருக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஓர் தேசிய இனம் குர்தீஸ்!

   நான் அவ்வாறு கேட்டதும், I am too Kurdish என பேசத் துவங்கினார் அந்த நண்பர், அவை அப்படியே இங்கே :-

நாங்கள் 200 வருடங்களாக நிம்மதியகத்தான் வாழ்ந்து வந்தோம்!

அமெரிக்காவும் - இங்கிலாந்தும் உள்ளே வந்த பிறகு தான் எங்களின் நிம்மதி தொலைந்தது!

அதுவரை அனைத்து மக்களும் மத வேறு பாடு இன்றி ஒரே நாடாகவே வாழ்ந்து வந்தோம்!  இவர்கள் வந்த பின் பெரும்பான்மை மாதவாதிகள் தூண்டிவிடப் பட்டு அடுத்த மதத்தினரை  தாக்கும் நிலை துவங்கியது!

ஒரு கட்டத்தில் முஸ்லீம் மக்களுக்கு தலைவர் தான் தான் தலைவர் என ஒருவர் கூறிக் கொண்டு அரசியல் செய்ய அங்கு தான் பிரச்சனை வேறு திசைக்கு மாறியது! பலரை இழந்து விட்டோம்!

இனி ஊருக்கு திரும்புவதில்லை என்பது அவரின் பேச்சில் தெரிந்தது!
 
   அமெரிக்கா - இங்கிலாந்து போன்ற மேற்குலக நாடுகள் சிரியாவின் கனிம - பெட்ரோலியத்துக்காக உள் நாட்டு கலவரத்தை தூண்டியது குறிப்பிட தக்கது!

ISIS க்கு அமெரிக்கா உதவுவது ஊருக்கே தெரியும்!

ஆனாலும், நீயா நானா என அடித்துக் கொள்வதில் தொலைந்து போனது குர்தீஸ் இன மக்களின் அமைதி!

மக்கள் குர்தீஸ் தேசிய இன  மக்களாக இருந்தவரை எல்லாம் சரியாக இருந்தது!  மத ஏற்றத் தாழ்வுகள் உட்புகுந்து பலரின் வாழ்வை சீரழித்தது! 
தற்போது இந்திய தேசியம் என்ற பெயரில் இந்துத்துவா வை பாஜக - RSS திணிக்க நினைப்பதைப் போல!
அதை பயன் படுத்தி நம் வளங்களை மேற்குலகும் Corporate களும் எளிதில் சுரண்டும்!  நாம் அது தெரியாமல் சாதி மத சண்டை போட்டுக் கொண்டிருந்திருப்போம்!

இந்திய கூட்டமைப்பின் தேசிய இனங்களில் தமிழினம் எப்போதுமே முற்போக்கு சிந்தனை உடையது! 
அதனால் தான் நாம் எத்தனையோ சாதி ரீதியான மத ரீதியான சர்ச்சைகளையும் தூண்டுதல்களையும் இலகுவாக கடந்து விட்டோம்! 
அந்த முற்போக்கு நிதானத்தையே இந்தியம் தவறாக கணித்து நம்மை அடிக்கடி சீண்டுவது குறிப்பிட தக்கது!
அதற்கு அவ்வப் போது செவிட்டில் அறைந்தாற் போல சில பதில்களை தந்தே ஆக வேண்டியது அவசியம்!

தமிழனுக்கு பல எதிரிகள் அதில் கண்ணுக்கு தெரியாத முதல் எதிரி அமெரிக்கா!

கண்ணுக்கு தெரிந்த முதல் எதிரி சாதியும் - மதமும்!






No comments:

Post a Comment