Friday, 20 January 2017

Black Flag

இந்தியா முழுதும் நடந்த போராடட்ங்களில் இந்திய கொடியை பார்த்திருப்பீர்கள். காஷ்மீர், வட கிழக்கு மாநில போராட்டங்களை தவிர்த்து! காரணம் அவர்களும் நம்மை போல Corporate இந்திய அரசால் துரோகத்துக்கு ஆளாவனர்கள்தான் .

  இந்தியாவை எதிர்த்து  கேள்வி கேட்ட JNU, அண்ணா ஹசாரே போன்ற மக்கள் போராட்டத்தில் இந்திய கொடி பயன் படுத்த பட்டது! 
ஆனால் தமிழகத்தின் இத்தனை மூலையிலும் போராட்டம் நடக்கும் போதும் ஓரிடத்தில் கூட இந்திய கொடி யை பார்க்க முடியவில்லை!
    காரணம் டெல்லிக்கும் வடக்குக்கும் தான் அது இந்திய 'கொடி '! தமிழனுக்கு தன் வாழ்வாதாரத்தை சுடுகாடாக மாற்றும் 'கோடி 'த்துணி என்பதை பல நிகழ்வுகளில்

என் அறிவுக்கு எட்டிய வரை இந்திய அரசை உள்ளூர ஆட்டம் காண வைத்திருப்பது இந்த  புறக்கணிப்பும் இதுவே 'தனித் தமிழ்நாடு 'க்கான பாதை என்பதையும் சூசகமாக உணர்ந்துள்ளது இந்தியா!

  அதனால் தான் அவசர அவசரமாக இந்த அவசர சட்டம் அதுவும் மக்களை கலைந்து செல்வதற்காக மட்டுமே!

சில விடயங்களை நினைவில் வையுங்கள் :-

1. அனைத்து தேர்தல்  கட்சிகளை பொறுத்தவரையிலும் இந்த தன்னெழுச்சி என்பது அவர்களின் எதிர்கால நலனை கேள்விக்கு உள்ளாக்குவது! எனவே இந்த அவசர சட்டத்தை ஆதாரித்து இன்று மாலைக்குள் பேசுவார்கள்!
    ஆனால் இது வெறும் கண்துடைப்பு மட்டுமே நிரந்தர தீர்வு இல்லை!

2. இது வெறும் ஜல்லிக்கட்டு க்கான போராட்டம் மட்டுமே இல்லை!
தமிழக அரசின் சுயநலம் இந்திய அரசின் மாற்றாந் தாய்  மனப்பான்மை,

விவசாயிகளின் வாழ்வாதாரம் சிதைந்தது,

காவிரி

மீத்தேன்

கெயில்

மீனவர்கள் படுகொலை என எண்ணற்ற துரோகங்களை பார்த்து பார்த்து நொந்து போய் இருந்த மனங்களில் வெடித்து சிதறி வெளிக் கிளம்பி இருக்கும் ஓர் இடம் ஜல்லிக்கட்டு!

இதுவே 2013 ல் ஈழப் பிரச்சனையாக இருந்தது!

   இந்த போராட்டம் ஜல்லிக்கட்டுடன் வீட்டுக்கு திரும்பி போவதற்கு இல்லை! 

காவிரி மேலாண்மை வாரியம், மீத்தேனுக்கான நிரந்தர தடையை சொல்லும் G.O,  மீனவர் பிரச்சனைக்கான தீர்வு என இத்தனையையும் தீர்க்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது!

3.OPS ஸே வாடிவாசலை திறந்து வைக்கிறாராம்ன்னு அதிமுக முதல் திமுக பாஜக வரை  ஏதோ Award கிடைத்தது போல  ஆர்ப்பரிக்கிறார்கள் .
இதற்கு பெயர் நமது வெற்றி அல்ல! 

இந்தியத்தின் துரோகத்தையும் தமிழகத்தின் கையாலாகத் தனத்தையும் எப்படியோ திரை போட்டு மறைத்து விட்டோம் என்ற குரூரமான மகிழ்ச்சி  மட்டுமே!

    இதோடு மக்கள் எழுந்து போய் விடுவார்கள்.  அடுத்த ஒரு மாதம் ஆற போட்டால் பின்னர் மீண்டும் நாட்டை கூறு போட்டு விற்க ஆரம்பிக்கலாம் என்ற நினைப்பு மட்டுமே

   இதற்காகவா  இத்தனை உலக  நாடுகளில் இருந்து தமிழத்தை நோக்கி ஆதரவு கரம் நீள்கிறது!

   இதற்காகவா கொட்டும் பனியில் நம் வீட்டு பெண்கள் தெருவில் அமர்ந்திருக்கிறார்கள்???

மேலும்,
சில இந்துத்துவா கும்பல் இந்திய கொடியுடன் உள்ளே வந்து மோடியை திட்டாதீர்கள் இந்தியாவை கேள்வி கேட்காதீர்கள் என சொல்லி வருகிறார்கள் என தோழர் ஒருவர் கூறினார்.!  அவர்களை எல்லாம் ஒன்றும் பேசாதீர்கள்!  கொடுக்கும் கொடியை வாங்கி பேண்ட் பாக்கெட்டில் வைத்துக் கொள்ளுங்கள்!

தமிழகத்தின் உயிர் நாடி விவசாயி என்று தன் வயிறு நிறைந்த பின் உறங்க செல்கிறானோ அதுவரை………

பறக்கட்டும் கறுப்பு கொடி மட்டுமே !

No comments:

Post a Comment