இரண்டு நாள் முன்பு நாம் கூறியது போலவே NATO படைகள் மூலம் தன் படைகளை ரஷ்யாவுக்கு எதிராக நிறுத்த துவங்கி விட்டது அமெரிக்கா!
ஜெர்மனியில் இருக்கும் தன் படைதளத்தில் இருந்து 2000 பீரங்கி டேங்கர் களை கிழக்கு ஐரோப்போ நோக்கி அடுத்த இரு நாட்களில் நகர்த்த US முடிவே எடுத்து விட்டது! மேலும் 1600 பீரங்கி வாகனங்களை முன்னெச்செரிக்கையாக சேமித்து வைக்க நெதர்லாந்தை தேர்வு செய்துள்ளனர்.
இந்த நடவடிக்கைக்கு Operational Atlantic Resolve - என பெயர் சூட்டியுள்ளனர். நேட்டோ படைகளின் பெயரை சொல்லியே தனக்கு வேண்டிய இடங்களில் எல்லாம் கப்பல் நிறைய இராணுவத்தையும் ஆயுதங்களையும் அடுத்த வார இறுதிக்குள் நிரப்ப முடிவு செய்து விட்டது அமெரிக்கா!
அதே நேரத்தில் நேட்டோ படைகளின் ஆயிரக்கணக்கான படை வீரர்கள் ரஷ்ய எல்லையை நோக்கி நகர்ந்து கொண்டுள்ளனர். இதை நீங்கள் படிக்கும் போது அவர்கள் எல்லையில் முகாம் அமைத்து விட்டிருக்கலாம்!
ஐரோப்பாவுக்கான அமெரிக்க இராணுவ அதிகாரி Frederick "Ben" Hodges கூறுகையில்,
போர் நடந்தே ஆக வேண்டும் என்ற அவசியம் இல்லை! "ஆனாலும் மூன்று வருடம் முன்பு ஐரோப்பா கண்டத்தை விட்டு வெளியேற்றிய கடைசி டாங்கிகள் வரை நாங்கள் மீண்டும் வரவழைக்கும் நிலையில் உள்ளோம் "
இங்கே நாங்கள் ஜெர்மனியின் உதவியின்றி எங்குமே நகர முடியாது என்பதை நன்றாகவே உணர்ந்துள்ளோம், ஆனால் அவர்கள் நேட்டோ படை என்பதால் உதவிதான் ஆக வேண்டும்!
மூன்று கப்பல்களில் 4000 துருப்புகளும் 2 ஆயிரம் டாங்கிகளும் அமெரிக்காவிலிருந்து ஜெர்மனியை வந்தடையும்.
அங்கிருந்து போலந்துக்கும் EU ன் கிழக்கு, மத்திய நாடுகளுக்கு ரயில் மூலம் அனுப்ப படும்!
உலக அரசியல் ஆய்வாளர்கள் கிட்ட தட்ட அதிகாரப்பூர்வ போர் அறிவிப்பாக பார்ப்பது அமெரிக்காவின் 3 வது Brigade ன் 4th Infinity Division ரஷ்ய எல்லைக்கு அனுப்பட்டதைத் தான்!
இதுவே இப்போது சர்வதேச அரசியலில் மீண்டும் சூட்டை கிளப்பியுள்ளது!
ஒட்டுமொத்தமாக சிறு சிறு சரக்கு கப்பல்களில் 6-8 ம் தேதிக்குள் குறைந்தபட்சம் 2500 சரக்கு பெட்டகங்கள் துப்பாக்கிகள், கையெறி குண்டுகள் என உயிரைக் கொல்லும் விதவிதமான வஸ்துக்கள் ஜெர்மனி யை வந்தடையும்!
மேலும்,
900 - கார்கள்
600 - நடமாடும் ஆயுத கிடங்குகள் இவை இருப்பு பாதை வழியே!
மேலும் 40 வாகனங்கள் சாலை வழியே இவை அனைத்தும் சென்று சேரப் போகும் இடம் போலந்து!
இதில் கொடுமையே Departure செய்ப்படும் இடம் தான் . அது - ஜெர்மனியின் ப்ரேமன்!
ஈழ விடயத்தை உண்மையில் உற்று நோக்குபவர்களுக்கு இந்த இடத்தின் அருமை புரியும்!
இந்த விடயத்தில் தன் பெயரை கெடுத்துக்கொள்ள கூடாது என்று ஜெர்மனி மெல்ல ரஷ்யா அணு ஆயுதத்தை பயன் படுத்த முயல்கிறது இது கண்டிக்க தக்கது என மையமாக வாயை அசைத்து விட்டு அமைதியாகி விட்டது !
ஆனாலும் தன் பங்குக்கு 26 டாங்கிகள், 100 மாற்றுவகை வாகனங்கள் மற்றும் 120 கன்டெய்னர்களையும் லூதியானா நோக்கி அனுப்பு ஒப்புக் கொண்டுள்ளனர்!
ஆனால், இத்தனை Scene களையும் அமைதியாக வேடிக்கை பார்க்கிறது மாஸ்கோ என்கிறன ஊடகங்கள்.
Frederick Hodge ஜோ, ரஷ்யா முழுமையான 100% தயாரிப்புகளுடன் அமைதிகாக்க கூடியவர்கள் . யார் முதல் குழலை (Pistol) திறக்க போகிறோம் என்பதில் தான் இருக்கிறது மூன்றாம் உலகப் போரா இல்லை பனிப் போர் மட்டுமேவா என்ற முடிவு என்கிறார்!
ஏற்கனவே Eygelshoven எனும் கிராமத்தில் போரில் முதன் ஆளாய் நிற்கும் 1,600 காலாட்படையை அமெரிக்கா நிறுத்தி விட்டது குறிப்பிட்ட தக்கது! இது பெல்ஜியம் - ஜெர்மனியின் கடைசி எல்லை கிராமம் ஆகும்!
இந்த ஊரை இதற்கு முன்பும் அமெரிக்கா பயன் படுத்தியுள்ளது, அது 1985 ல் ரஷ்யா - US பனிப் போர் துவங்கிய காலகட்டம் அது!
இந்த போரின் பெயரை வைத்து எந்த இனப்படுகொலைக்கு அச்சாரம் போடுகிறார்கள் இந்த பண்ணாடைகள் என நினைத்தாலே பகீர் என்கிறது மனசு!
No comments:
Post a Comment